என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    மாநகராட்சி தற்காலிக பணியாளர் திடீர் சாவு
    X

    மாநகராட்சி தற்காலிக பணியாளர் திடீர் சாவு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • காலை தூங்கி எழுந்தவுடன் நெஞ்சில் எரிச்சல் இருப்பதாக தவசிமணி கூறியுள்ளார்.
    • சிறிது நேரத்தில் தவசி மணியால் எழுந்து நிற்ககூட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு அருகே உள்ள வள்ளிபுரத்தான்பாளையம், கள்ளியங்காட்டு வலசு, வெற்றி நகரை சேர்ந்தவர் தவசிமணி (38). ஈரோடு மாநகராட்சியில் தற்காலிக பணியாளராக பணியாற்றி வந்தார்.

    இவரது மனைவி தமிழ்செல்வி. சம்பவத்தன்று காலை தூங்கி எழுந்தவுடன் நெஞ்சில் எரிச்சல் இருப்பதாக தவசிமணி கூறியுள்ளார்.உடனடியாக தமிழ்செல்வி அவருக்கு மோர் கொடுத்துள்ளார்.

    இருப்பினும் சிறிது நேரத்தில் தவசி மணியால் எழுந்து நிற்ககூட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.உடனடியாக தமிழ்செல்வி அருகில் இருந்தவர்களின் உதவியுடன் தவசிமணியை ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே தவசிமணி இறந்து விட்டதாக தெரிவித்தார்.

    இது குறித்து வெள்ளோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×