என் மலர்
ஈரோடு
- கிருஷ்ணமூர்த்தி தனது மகனை கல்லூரிக்கு அனுப்பி விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டு இருந்தார்.
- அப்போது அந்த வழியாக வந்த ஒரு கார் மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதியது.
பு.புளியம்பட்டி:
ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 52). இவர் கோவை கோர்ட்டில் குமஸ்தாவாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு கவுரி என்ற மனைவியும், ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
இந்த நிலையில் இன்று காலை கிருஷ்ணமூர்த்தி தனது மகனை கல்லூரிக்கு அனுப்பி விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டு இருந்தார். அவர் பு.புளியம்பட்டி சத்திய மங்கலம் மெயின் ரோட்டில் வந்து கொண்டு இருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த ஒரு கார் மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதியது. இதில் கிருஷ்ண மூர்த்தி தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த அடிப்பட்டு படுகாயம் அடைந்தார்.
இது பற்றி தகவல் கிடை த்ததும் பு.புளியம்பட்டி போலீசார் சம்பவ இடத்து க்கு வந்து அவரை மீட்டு சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து புஞ்சை புளியம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகி றார்கள்.
- ஈரோடு மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் 3 மருத்துவர்கள் கொண்ட மருத்துவ குழுவினர் ஆய்வு செய்தனர்.
- இங்கு சுகாதாரம், சுத்தம், மருத்துவ கழிவு மேலாண்மை போன்றவைகளின் அடிப்படையில் மதிப்பெண் வழங்குகிறோம்.
ஈரோடு:
மத்திய அரசின் காயகல்ப திட்டத்தில் அரசு மருத்துவ மனைகளின் தூய்மை மற்றும் தரமான மருத்துவ சேவை வழங்கப்படுவதை நேரடியாக ஆய்வு செய்து மதிப்பெண் மூலம் தேர்வு செய்கின்றனர்.
அதிக மதிப்பெண் பெறும் மாவட்ட தலைமை மருத்துவமனைகள், தாலுகா மருத்துவகனைகளுக்கு தேசிய விருதும், ரொக்க பரிசும் வழங்கப்படுகிறது.
இதன்படி ஈரோடு மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் அரூர் அரசு மருத்துவமனை டாக்டர். ராஜேஷ்கண்ணா தலைமையிலான 3 மருத்துவர்கள் கொண்ட மருத்துவ குழுவினர் ஆய்வு செய்தனர்.
அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை, மருத்துவ சேவை, சிகிச்சை நுணுக்கங்கள், குடிநீர் வசதி, சுற்றுப்புற சுகாதாரம், கழிப்பறை வசதி, தூய்மை பணி, மருத்துவ கழிவுகள் சேகரிப்பு மற்றும் அகற்றம், மின் சிக்கனம், டாக்டர்கள், செவிலியர் வருகை பதிவு போன்றவற்றை ஆய்வு செய்தனர்.
பின் கொரோனா சிகிச்சைக்கான ஆக்சிஜன் சிலிண்டர், படுக்கை வசதிகள், ஆர்.டி.பி.சி.ஆர். சோதனை கூடம் தயார் நிலையில் உள்ளதா என பார்வையிட்டனர்.
இதுபற்றி மருத்துவ குழுவினர் கூறியதாவது:
தேசிய காயகல்ப விருதுக்கு தமிழகத்தில் 32 அரசு மருத்துவமனைகள், 132 தாலுகா மருத்துவமனைகள் ஆய்வு செய்யப்படுகிறது. இதில் ஈரோடு அரசு மருத்துவமனையும் ஒன்றாகும்.
இங்கு சுகாதாரம், சுத்தம், மருத்துவ கழிவு மேலாண்மை போன்றவைகளின் அடிப்படையில் மதிப்பெண் வழங்குகிறோம்.
அதிக மதிப்பெண் பெறும் மருத்துவமனைக்கு தேசிய விருது கிடைக்கும். முதலிடம் பெறும் மருத்துவமனைக்கு, ரூ.30 லட்சம், 2-ம் இடம் பெறும் மருத்துவமனைக்கு ரூ.20 லட்சம் வழங்கப்படும்.
இதுதவிர சுற்றுப்புற சூழல், மின் சிக்கனம் தொடர்பாக நடப்பாண்டு புதிய விருதும் அறிவிக்க உள்ளனர். இதில் முதலிடம் பெறும் மருத்துவமனைக்கு ரூ.10 லட்சம் வழங்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
ஆய்வின் போது ஈரோடு அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் வெங்கடேஷ், ஆர்.எம்.ஓ. கவிதா ஆகியோர் உடனிருந்தனர்.
+2
- கடைக்குள் தங்க நகைகள் வைக்கப்பட்டிருக்கும் லாக்கரை திறக்க முயற்சி செய்துள்ளனர்.
- நகைக்கடையில் பொருத்தப்பட்டிருந்த அலாரம் திடீரென அடிக்க தொடங்கியது.
பெருந்துறை:
ஈரோடு மாவட்டம் பெருந்துறை, குன்னத்தூர் சாலை பிரிவில் பரமசிவம் என்பவருக்கு சொந்தமான தங்க நகை கடை செயல்பட்டு வருகிறது. 50 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் இந்த நகைக்கடையில் 10-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று காலை வழக்கம் போல் கடை திறக்கப்பட்டு வியாபாரம் நடந்தது. பின்னர் வியாபாரம் முடிந்ததும் இரவு ஊழியர்கள் கடையை பூட்டி விட்டு சென்று விட்டனர். கடையின் முன் பகுதியில் இரவு நேர காவலாளி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.
இந்த நகைக்கடையையொட்டி பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. பள்ளிக்கும், நகை கடைக்கும் இடையே சுமார் 10 அடி இடைவெளியில் மரச்செடி, கொடிகள் வளர்ந்துள்ளன.
இந்நிலையில் இன்று அதிகாலை சுமார் 2.30 மணி அளவில் மர்மநபர்கள் அரசு ஆண்கள் பள்ளிக்குள் சென்று நகை கடையின் பின்பகுதிக்கு வந்துள்ளனர். சுமார் 3 அடி அகலத்துக்கு சுவற்றைத் துளையிட்டுள்ளனர். பின்னர் மர்மநபர்கள் நகைக்கடைக்குள் சென்று உள்ளனர்.
கடைக்குள் தங்க நகைகள் வைக்கப்பட்டிருக்கும் லாக்கரை திறக்க முயற்சி செய்துள்ளனர். அப்போது நகைக்கடையில் பொருத்தப்பட்டிருந்த அலாரம் திடீரென அடிக்க தொடங்கியது.
இதனால் அதிர்ச்சி அடைந்த மர்மநபர்கள் தங்களது கொள்ளை முயற்சியை கைவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
திடீரென அலாரம் ஒலித்ததால் அதிர்ச்சி அடைந்த கடையின் இரவு நேர காவலாளி மற்றும் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர்.
அப்போது கடையின் பின்பகுதி சுவற்றில் துளையிட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக இது குறித்து கடையின் உரிமையாளருக்கும் பெருந்துறை போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. கடையின் உரிமையாளர் பரமசிவம் கடைக்குள் சென்று பார்த்த போது கொள்ளை முயற்சி நடந்திருப்பது தெரியவந்தது. நல்ல வேளையாக அலாரம் ஒலித்ததால் கொள்ளை முயற்சி தடுக்கப்பட்டுள்ளது. இதனால் பல லட்சம் மதிப்பிலான தங்க, வைர நகைகள் தப்பியது.
சம்பவ இடத்திற்கு பெருந்துறை ஏ.எஸ்.பி. கவுதம் கோயல், டி.எஸ்.பி. ஆனந்தகுமார், பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் மற்றும் போலீசார் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.
இதைத்தொடர்ந்து கைரேகை நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு வந்து தடயங்களை சேகரித்தனர். மோப்பநாயும் வரவழைக்கப்பட்டது. அது சிறிது தூரம் ஓடி யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.
இது குறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடை மற்றும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
மேலும் கடையை பற்றி நன்கு தெரிந்தவர்கள் இந்த கொள்ளை முயற்சியில் ஈடுபட்டு இருக்கலாம் என்ற சந்தேகத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சத்துணவு ஊழியர்களின் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
- காலிபணியிடங்களை போர்க்கால அடிப்படையில் நிரப்ப வேண்டும்.
ஈரோடு:
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி தமிழகத்தில் இன்று சத்துணவு ஊழியர்களின் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
ஈரோடு காளை மாட்டு சிலை அருகில் நடந்த போராட்டத்திற்கு சங்க மாவட்ட தலைவர் தனுஷ்கோடி தலைமை தாங்கினார். துணைத்தலைவர்கள் சுப்புலட்சுமி, செல்வி, கவுரி, சாந்தி ஆகியோர் முன்னிலை வைத்தனர்.
இந்த போராட்டத்தில் காலை சிற்றுண்டியை சத்துணவு ஊழியர்களை கொண்டு செயல்படுத்த வேண்டும். சத்துணவு ஊழியர்களுக்கு முறையான காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.
சத்துணவு ஊழியர்களுக்கு அகவிலை படியுடன் கூடிய குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஓய்வு பெறும் வயதை 60-ல் இருந்து 62 ஆக உயர்த்த வேண்டும்.
காலிபணியிடங்களை போர்க்கால அடிப்படையில் நிரப்ப வேண்டும். விலைவாசி உயர்வுக்கு ஏற்ப உணவு மானியத்தை உயர்த்தி வழங்க வேண்டும்.
மணிக்கொடை அமைப்பாளர்களுக்கு ரூ.5 லட்சம்மும், உதவியாள ர்களுக்கு ரூ.3 லட்சமும் உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
ஈரோடு:
ஈரோடு துணை மின் நிலையத்திலிருந்து செல்லும் மார்க்கெட் மின்பாதையில் பராமரிப்பு பணி காரணமாக நாளை (புதன்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பவர் ஹவுஸ் ரோடு, எஸ்.கே.சி.ரோடு, முத்துவேலப்பாவீதி, மீனாட்சிசுந்தரனார் ரோடு பகுதி, கைகோளன்தோட்டம், வாமலை வீதி, டி.வி.எஸ். வீதி, என்.எம்.எஸ். காம்பவுண்ட் மற்றும் ஈஸ்வரன் கோவில் வீதி ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
இந்த தகவலை ஈரோடு மின்வாரிய செயற்பொறியாளர் ராமசந்திரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
- வனப்பகுதியில் இருந்து வந்த சிறுத்தை ஒன்று தனது கரும்புக்காட்டுக்குள் நுழைவதை கண்டு அச்சமடைந்தார்.
- வனத்துறை ஊழியர்கள் சிறு த்தையை வனப்பகுதிக்குள் 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு விரட்டினர்.
தாளவாடி:
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சாரங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் புலி, சிறுத்தை, யானை, கரடி, மான், காட்டெருமை உள்பட ஏராளமான வன விலங்குகள் வசித்து வருகின்றன.
வனவிலங்கு அவ்வ போது ஊருக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்வதும், கால்நடைகளை வேட்டையாடுவதும் தொடர்கதையாகி வருகிறது.
இந்த நிலையில் தாளவாடி வனச்சரகத்திற்கு உட்பட்ட மல்குத்தி புரம்தொட்டி கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி குருசாமி (45). இவர் தனது விவசாய தோட்டத்தில் கரும்பு, மஞ்சள் சாகுபடி செய்துள்ளார்.
நேற்று வழக்கம் போல் தனது விவசாய தோட்டத்தில் பணி செய்து கொண்டி ருந்தார். அப்பொழுது வனப்பகுதியில் இருந்து வந்த சிறுத்தை ஒன்று தனது கரும்புக்காட்டுக்குள் நுழைவதை கண்டு அச்சமடைந்தார்.
இது குறித்து உடனடியாக தாளவாடி வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார். வனச்சரகர் சதீஷ் தலைமை யிலான வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து கால் தடங்களை ஆய்வு செய்தார்.
பின்னர் சிறுத்தை கரும்பு காட்டுக்குள் நுளை ந்தது உறுதி செய்யப்பட்டது.
பின்னர் வனத்துறை ஊழியர்கள் பாதுகாப்பு கவசம் அணிந்து கரும்பு காட்டுக்குள் புகுந்து சிறு த்தையை வனப்பகுதிக்குள் 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு விரட்டினர்.
தொடர்ந்து ஆடு, மாடுகளை வேட்டையாடி வரும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து வனத்து றையினர் கூறியதாவது:
சிறுத்தையை கூண்டு வைக்க பிடிக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இங்கு கால்நடைகள் அதிக அளவில் இருப்பதால் சிறுத்தை மீண்டும் வர வாய்ப்புள்ளது. எனவே சிறுத்தையை கூண்டு வைத்து படிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
விவசாயிகள், கால்நடைகளை வளர்ப்ப வர்கள் கவனமுடன் இருக்க வேண்டும். தனியாக வனப் பகுதிக்குள் செல்வதை தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- இன்று அதிகாலை பல சரக்கு கடையில் தீப்பிடித்து எறிய தொடங்கியுள்ளது.
- விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் பல சரக்கு கடையில் ஏற்பட்ட தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
பவானி:
பவானி அருகில் உள்ள சித்தோடு தெலுங்கு செட்டியார் வீதியை சேர்ந்தவர் அண்ணாதுரை (55).
இவர் தனது வீட்டின் அருகில் தகர செட் அமைத்து அங்கு மிச்சர், முறுக்கு உள்பட பல்வேறு பொருட்கள் தயாரித்து விற்பனை செய்து வரும் பல சரக்கு கடை ஒன்று நடத்தி வந்தார்.
இந்நிலையில் நேற்று இரவு வழக்கம் போல் பணியை முடித்துக்கொண்டு பிரிட்ஜ் மட்டும் ஆன் செய்து வீட்டிற்கு வந்துள்ளதாக தெரிகிறது. இன்று அதிகாலை சுமார் 6 மணி அளவில் அந்த கடையில் தீப்பிடித்து எறிய தொடங்கியுள்ளது.
இது குறித்து அவ்வழியாக சென்றவர்கள் பவானி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனைத்தொடர்ந்து பவானி தீயணைப்பு நிலைய அலுவலர் போக்குவரத்து ஆறுமுகம் தலைமையில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் பல சரக்கு கடையில் ஏற்பட்ட தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இருப்பினும் கடையில் உள்ளே இருந்த அனைத்து பொருட்களும் எரிந்து சேதம் அடைந்தது. இது குறித்து சித்தோடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 983 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
- அணையில் இருந்து 2,600 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானி சாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.
நீர் பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வந்ததால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வந்தது. இதனால் அணையின் பாதுகாப்பு கருதி பவானிசாகர் அணையில் இருந்து பவானி ஆற்றுக்கு உபரி நீர் திறந்து விடப்பட்டது.
இதனால் பவானி ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இந்நிலையில் நீர் பிடிப்பு பகுதியில் மழை பொழிவு இல்லாததாலும், அணைக்கு வரும் நீர் வரத்தை காட்டிலும் பாசனத்திற்கு அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்படுவதாலும் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.
இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 104.41 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 983 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலுக்கு 2 ஆயிரம் கன அடி, பவானி ஆற்றுக்கு 100 கன அடி, தடப்பள்ளி- அரக்கன் கோட்டை பாசனத்திற்கு 500 கனஅடி என மொத்தம் 2,600 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
- இன்று நடைபெற்ற ஜவுளி சந்தையில் வியாபாரம் அமோகமாக நடைபெற்றதாக வியாபாரிகள் கூறினர்.
- மேலும் கர்நாடகா, ஆந்திரா, கேரளா போன்ற வெளிமாநிலங்களில் இருந்து வெளி மாநில வியாபாரிகள் அதிக அளவில் வந்திருந்தனர்.
ஈரோடு:
ஈரோடு பன்னீர்செல்வம் பார்க்கில் உள்ள மாநகரா ட்சிக்கு சொந்தமான ஜவுளி சந்தை வாரம் தோறும் செவ்வாய்கிழமை நடைபெறுவது வழக்கம். கடந்த 2 வாரங்களுக்கு முன்பு கிறிஸ்துமஸ் மற்றும் பொங்கல் வியாபாரம் தொடங்கப்பட்டது.
ஆனால் தொடர் மழை, வெளிமாநில மொத்த வியாபாரிகள் வருகை குறைவு உள்ளிட்ட காரணங்களால் ஜவுளி சந்தையில் வியாபாரம் மந்தமாக நடைபெற்றது. ஆனாலும் சில்லரை வியாபாரம் ஓரளவு நடைபெற்று வந்தது.
இந்நிலையில் இன்று நடைபெற்ற ஜவுளி சந்தையில் வியாபாரம் அமோகமாக நடைபெற்றதாக வியாபாரிகள் கூறினர். கிறிஸ்மஸ் பண்டிகையை தொடர்ந்து புத்தாண்டு, பொங்கல் என தொடர்ந்து பண்டிகைகள் வருவதால் இன்று ஜவுளி சந்தை களை கட்டியது.
மேலும் கர்நாடகா, ஆந்திரா, கேரளா போன்ற வெளிமாநிலங்களில் இருந்து வெளி மாநில வியாபாரிகள் அதிக அளவில் வந்திருந்தனர்.
இதேபோல் தமிழகத்தில் பிற மாவட்டங்களில் இருந்தும் அதிக அளவில் மொத்த வியாபாரிகள் ஜவுளிகளை கொள்முதல் செய்ததாகவும், வழக்கம் போல சில்லரை விற்பனை எதிர்பார்த்த அளவில் நடைபெற்றதாக ஜவுளி சந்தை வியாபாரிகள் கூறினர்.
சில்லரை வியாபாரம் மட்டும் இன்று 45 சதவீதம் நடைபெற்றது. இதுபோல் மொத்த விற்பனை 40 சதவீதம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
இனி வரக்கூடிய நாட்களில் விற்பனை மேலும் அதிகரிக்கும் என வியாபாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.
- துாத்துக்குடியில் இருந்து ஸ்பிக் நிறுவனம் மூலம் 720 டன் பாரத் யூரியா உரம் ரெயில் மூலம் ஈரோட்டுக்கு வந்தடைந்தது.
- மேலும் திரவ உயிர் உரங்களும், வட்டார வேளாண் விரிவாக்க மையங்களில் விற்பனைக்கு உள்ளன.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் தட ப்பள்ளி அரக்கன்கோட்டை, காளிங்கராயன் பாசன பகுதியில் சம்பா பாசனத்து க்காகவும், கீழ்பவானி, மேட்டூர் வலது கரை கால்வாயிலும் தண்ணீர் திறக்கப்பட்டு நெல் சாகுபடி பணிகள் நடக்கிறது.
மேலும் கரும்பு, வாழை, மஞ்சள், மரவள்ளி, நிலக் கடலை, மக்காசோளம், எள் ஆகிய பயிர்களும் சாகுபடி செய்யப்படுகிறது.
இந்நிலையில் துாத்து க்குடியில் இருந்து ஸ்பிக் நிறுவனம் மூலம் 720 டன் பாரத் யூரியா உரம், 195 டன் டி.ஏ.பி. உரம், 64 டன் சூப்பர் பாஸ்பேட் உரம் ஆகியவை ெரயில் மூலம் ஈரோட்டுக்கு வந்தடைந்தது.
இதுபற்றி ஈரோடு மாவட்ட வேளாண் இணை இயக்குனர் சி.சின்னசாமி கூறியதாவது:- ஈரோடு மாவட்டத்தில் யூரியா உரம் 4,438 டன், டி.ஏ.பி. 1,820 டன், பொட்டாஷ், 1,228 டன், காம்ப்ளக்ஸ், 10,364 டன், சூப்பர் பாஸ்பேட், 906 டன், தொடக்க வேளாண் கூட்டு றவு சங்கங்கள் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
மேலும் திரவ உயிர் உரங்களும், வட்டார வேளாண் விரிவாக்க மையங்களில் விற்பனைக்கு உள்ளன.
ஈரோடு திண்டலில் உள்ள வேளாண்மை துறை யின் மண் பரிசோதனை நிலையத்தில் விவசாயிகள் மண் பரிசோதனை செய்து அவர்களது பரிந்துரைப்படி உரங்களை பயன்படுத்து வதன் மூலம் தேவையற்ற உரச்செலவை குறைக்கலாம்.
இவ்வாறு கூறினார்.
- தாளவாடி, ஆசனுார், கெத்தேசால் மலைவாழ் மக்களுக்கான சிறப்பு சட்ட ஆலோசனை முகாம் கூட்டம் நடந்தது.
- முன்னதாக தாளவாடி, அரேபாளையம் வேளாண் அறிவியல் நிலைய கூட்ட அரங்கில் கலந்தாலோசனை கூட்டம் நடந்தது.
ஈரோடு:
சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி, ஆசனுார், கெத்தேசால் அரசு உண்டு உறைவிட உயர் நிலைப் பள்ளியில் பழங்குடியின மலைவாழ் மக்களுக்கான சிறப்பு சட்ட ஆலோசனை முகாம் மற்றும் கலந்தா லோசனை கூட்டம் நடந்தது.
இதில் மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி முன்னி லை வகித்தார். மேலும் மாநில மனித உரிமைகள் ஆணைய தலைவர் நீதிபதி பாஸ்கரன் கலந்து கொண்டு தலைமை தாங்கி பேசியதாவது:
பழங்குடியின மக்கள் குறைகளை கேட்டு அதன் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள நாங்கள் இங்கு வந்துள்ளோம். கல்வி என்பது மக்களின் வாழ்வில் முக்கியமான ஒன்றாகும். கல்வி இல்லாமை என்பது நம்முடன் போகட்டும்.
நம்முடைய குழந்தைகளை தொடர்ந்து படிக்க வைக்க வேண்டும். தமிழக அரசின் சார்பில் கல்வியற்றவர்களுக்கு கல்வி அறிவு அளிக்கும் வகையில் பல்வேறு திட்டங்கள், ந டவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு வருகிறது.
இதனை அனைவரும் முழு மையாக பயன்படுத்தி கொள்ள வேண்டும். அரசின் திட்டங்கள், கல்வி நடவடிக்கைகளை முழுமையாக பயன்படுத்தி, கல்வி, உயர்கல்வி கற்க வேண்டும்.
கல்வி போலவே சுகா தாரம் என்பதும் முக்கிய மானது. இப்பகுதி மக்கள் யாருக்காவது காய்ச்சல், தொடர் உடல் நலக்குறைவு, உடல் உபாதைகள் ஏற்பட்டால், உடனடியாக டாக்டரை அணுகி அவர்களின் வழிகாட்டுதலை முழுமையாக பின்பற்ற வேண்டும்.
இப்பகுதி மக்கள் பட்டா வேண்டியும், மாதாந்திர உதவித்தொகை கேட்டு மனு அளித்துள்ளனர். அவற்றின் மீது உரிய விசாரணை மேற்கொண்டு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.
தங்கள் பகுதியில் உள்ள பிரச்னைகளை பொது மக்கள் தொடர்ந்து அலு வலர்களிடம் முறையாக மனு வழங்கி தெரிவிக்க வேண்டும்.
பயிர் கடன் பெறுவதில் பல்வேறு சிர மங்கள் உள்ளதாக சிலர் கூறினர். உரிய வழிகாட்டு தல்படி பயிர் கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் தெரிவித்து உள்ளார்.
இப்பகுதி மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் மாவட்ட நிர்வா கம் சார்பில் பல நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பழங்குடியின மக்கள், அரசு வேலைவாய்ப்பில் அதிகப்படியான இடத்தை ஒதுக்கி தர வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது. இந்த கோரிக்கை அரசுக்கு பரிந்துரைக்க ப்படும்.
இவ்வாறு பேசினார்.
முன்னதாக தாளவாடி, அரேபாளையம் வேளாண் அறிவியல் நிலைய கூட்ட அரங்கில் கலந்தாலோசனை கூட்டம் நடந்தது.
இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன், மாவட்ட வன அலுவலர் கிருபாசங்கர், பழங்குடி யினர் நல அலுவலர் மீனா ட்சி, தாளவாடி தாசில்தார் உமாமகேஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- கொடுமுடி அருகே ரெயில்வே கேட் பகுதியில் முதியோர் ஒருவர் ரெயிலில் இருந்து தவறி விழுந்து பலத்த காயம் ஏற்பட்டது.
- ரெயிலில் இருந்து தவறி விழுந்து இறந்த முதியவர் குறித்து ஈரோடு ரெயில்வே போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே ரெயில்வே கேட் பகுதியில் முதியோர் ஒருவர் ரெயிலில் இருந்து தவறி விழுந்து பலத்த காயம் ஏற்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதாக கடந்த 23ஆம் தேதி ஈரோடு ரெயில்வே போலீசாருக்கு தகவல் வந்தது.
அதன் பேரில் ஈரோடு ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உயிருக்கு போராடிய முதியவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக கரூரில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் அனுமதித்தனர்.
எனினும் சிகிச்சை பலனின்றி அந்த முதியவர் சிறிது நேரத்தில் பரிதாபமாக இறந்தார். இறந்த முதியவர் ரோஸ் கலர் அறிக்கை சட்டை, ரோஸ் கலர் வேட்டி அணிந்திருந்தார். மேலும் வலது முன் கையில் கருப்பு மச்சமும், இடது கால் முட்டியில் ஒரு காயத்தழும்பும் இருந்தது.
இது குறித்து ஈரோடு ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் இறந்த முதியவர் கரூர் மாவட்டம் வெங்கமேடு பகுதி சேர்ந்த ஆறுமுகம் (69) என தெரிய வந்தது.
இவர் கடந்த 23ஆம் தேதி பாலக்காடு - திருச்சி செல்லும் பயணிகள் ரெயிலில் பயணம் செய்து கொண்டிருந்த போது கொடுமுடி தாண்டி சென்ற போது ரெயிலில் இருந்து தவறி கீழே விழுந்தது தெரிய வந்தது.
இதன் பின்னர் ரயில்வே போலீசார் கரூரில் உள்ள முகவரியில் சென்று விசாரித்தபோது அப்படி ஒரு நபர் இல்லை என தெரிய வந்தது.
இந்நிலையில் ரெயிலில் இருந்து தவறி விழுந்து இறந்த முதியவர் குறித்து ஈரோடு ரெயில்வே போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






