என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சட்ட ஆலோசனை முகாம்"

    • தாளவாடி, ஆசனுார், கெத்தேசால் மலைவாழ் மக்களுக்கான சிறப்பு சட்ட ஆலோசனை முகாம் கூட்டம் நடந்தது.
    • முன்னதாக தாளவாடி, அரேபாளையம் வேளாண் அறிவியல் நிலைய கூட்ட அரங்கில் கலந்தாலோசனை கூட்டம் நடந்தது.

    ஈரோடு:

    சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி, ஆசனுார், கெத்தேசால் அரசு உண்டு உறைவிட உயர் நிலைப் பள்ளியில் பழங்குடியின மலைவாழ் மக்களுக்கான சிறப்பு சட்ட ஆலோசனை முகாம் மற்றும் கலந்தா லோசனை கூட்டம் நடந்தது.

    இதில் மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி முன்னி லை வகித்தார். மேலும் மாநில மனித உரிமைகள் ஆணைய தலைவர் நீதிபதி பாஸ்கரன் கலந்து கொண்டு தலைமை தாங்கி பேசியதாவது:

    பழங்குடியின மக்கள் குறைகளை கேட்டு அதன் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள நாங்கள் இங்கு வந்துள்ளோம். கல்வி என்பது மக்களின் வாழ்வில் முக்கியமான ஒன்றாகும். கல்வி இல்லாமை என்பது நம்முடன் போகட்டும்.

    நம்முடைய குழந்தைகளை தொடர்ந்து படிக்க வைக்க வேண்டும். தமிழக அரசின் சார்பில் கல்வியற்றவர்களுக்கு கல்வி அறிவு அளிக்கும் வகையில் பல்வேறு திட்டங்கள், ந டவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு வருகிறது.

    இதனை அனைவரும் முழு மையாக பயன்படுத்தி கொள்ள வேண்டும். அரசின் திட்டங்கள், கல்வி நடவடிக்கைகளை முழுமையாக பயன்படுத்தி, கல்வி, உயர்கல்வி கற்க வேண்டும்.

    கல்வி போலவே சுகா தாரம் என்பதும் முக்கிய மானது. இப்பகுதி மக்கள் யாருக்காவது காய்ச்சல், தொடர் உடல் நலக்குறைவு, உடல் உபாதைகள் ஏற்பட்டால், உடனடியாக டாக்டரை அணுகி அவர்களின் வழிகாட்டுதலை முழுமையாக பின்பற்ற வேண்டும்.

    இப்பகுதி மக்கள் பட்டா வேண்டியும், மாதாந்திர உதவித்தொகை கேட்டு மனு அளித்துள்ளனர். அவற்றின் மீது உரிய விசாரணை மேற்கொண்டு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.

    தங்கள் பகுதியில் உள்ள பிரச்னைகளை பொது மக்கள் தொடர்ந்து அலு வலர்களிடம் முறையாக மனு வழங்கி தெரிவிக்க வேண்டும்.

    பயிர் கடன் பெறுவதில் பல்வேறு சிர மங்கள் உள்ளதாக சிலர் கூறினர். உரிய வழிகாட்டு தல்படி பயிர் கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் தெரிவித்து உள்ளார்.

    இப்பகுதி மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் மாவட்ட நிர்வா கம் சார்பில் பல நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    பழங்குடியின மக்கள், அரசு வேலைவாய்ப்பில் அதிகப்படியான இடத்தை ஒதுக்கி தர வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது. இந்த கோரிக்கை அரசுக்கு பரிந்துரைக்க ப்படும்.

    இவ்வாறு பேசினார்.

    முன்னதாக தாளவாடி, அரேபாளையம் வேளாண் அறிவியல் நிலைய கூட்ட அரங்கில் கலந்தாலோசனை கூட்டம் நடந்தது.

    இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன், மாவட்ட வன அலுவலர் கிருபாசங்கர், பழங்குடி யினர் நல அலுவலர் மீனா ட்சி, தாளவாடி தாசில்தார் உமாமகேஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×