என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "3 people involved in illegal alcohol sales"

    • சட்டவிரோத மதுவிற்பனையைத் தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
    • பவானி காவல் துறையினர் அவர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

    ஈரோடு:

    சட்டவிரோத மதுவிற்பனையைத் தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

    அதன்படி, புளியம்பட்டி போலீசார் காவிலிபாளையம் சாலையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது, தில்லை நகர் அருகில் சந்தேகத்துக்கிடமாக நின்று கொண்டிருந்த அதே பகுதியைச் சேர்ந்த ராஜன் மனைவி சம்பூர்ணம் (39) என்பவரை பிடித்து விசாரித்ததில், அவர் அதிக விலைக்கு விற்பதற்காக அப்பகுதியில் உள்ள ஒரு புதர் மறைவில் 8 மதுபாட்டில்களை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.

    இதையடுத்து,போலீசார் அவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் . மேலும் அவரிடமிருந்து ரூ. 800 பறிமுதல் செய்யப்பட்டது.

    இதேபோல, கொடுமுடி பேருந்து நிலையம், டாஸ்மாக் அருகே சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட வடிவேல் (37) என்பவரை கொடுமுடி போலீசார் கைது செய்தனர்.

    மேலும், பவானி மேற்கு வீதி, ஜோதிபிள்ளையார் கோயில் வீதியில், வேலுசாமி (52) என்பவர் தனது பெட்டிக் கடையில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்தது தெரியவந்தது.

    இதையடுத்து, பவானி காவல் துறையினர் அவர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். அவரிட–மிருந்த 4 மதுபாட்டில்கள், ரூ. 300 ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.

    ×