என் மலர்tooltip icon

    ஈரோடு

    • மாடுகள் சாலையில் படுத்துக்கொள்வதும் தொடர்கதையாகி வருகிறது.
    • இதனால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் தாள வாடி பகுதியில் 80-க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன. இந்த மலை கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் சத்திய மங்க லம், கோவை, ஈரோடு மற்றும் கர்நாடகா மாநிலம் மைசூர், சாம்ராஜ்நகர் செல்வதற்கு தாளவாடி வந்து செல்வது வழக்கம்.

    அதேபோல மலைக் கிராமத்தை சேர்ந்த பொது மக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க தினந்தோறும் தாளவாடி சென்று வருவது வழக்கம்.

    இதனால் எப்பொழுதும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் நடமாட்டம் இருந்து கொண்டே இருக்கும். கிராமப் பகுதிகளில் வசிக்கும் சிலர் தங்களது கால்நடைகளான மாடுகளை பகல் நேரங்களில் தாளவாடியில் உள்ள முக்கிய பகுதிகளுக்கு மேய்ச்சலுக்கு அனுப்பி விடுகின்றனர்.

    எப்போதும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த இந்த சாலைகளில் 20-க்கும் மேற்பட்ட மாடுகள் பகல் நேரங்களில் முக்கிய சாலையில் உலா வருவதும் சாலையில் படுத்துக்கொள்வதும் தொடர்கதையாகி வருகிறது. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவ துடன் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    அவ்வழியாக நடந்து செல்லும் பள்ளி மாணவ-மாணவிகள் அச்சத்துடனே சென்று வருகின்றனர். சில மாடுகள் ஒன்றுடன் ஒன்று சண்டை போட்டுக் கொண்டு பேருந்துக்காக காத்து நிற்கும் பயணிகள் மீது விழுகிறது.

    இதனால் பயணிகள் அச்சத்துடனே பேருந்து நிலையத்தில் இருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. இது குறித்து ஊரா ட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

    இந்நிலையில் தாளவாடி ஊராட்சி மற்றும் காவல் துறை சார்பில் ஒலிபெருக்கி மூலம் தாளவாடி பேருந்து நிலையம், ஓசூர் சாலை, சாம்ராஜ்நகர் சாலை, தலமலை சாலை, தொட்ட காஜனூர் பகுதியில் தங்களது மாடுகளை வீட்டுக்கு பிடித்து செல்ல வேண்டும் எனவும் மீறி சாலையில் சுற்றித்திரிந்தால் மாடுகளை பறிமுதல் செய்து மாட்டின் உரிமையாளர்க்கு அபராதம் விதிக்கப்படும் என ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சாலையில் நடந்த சென்ற சிறுமியை மாடு ஒன்று முட்டி தாக்கும் வீடியோ சமூகங்களில் வைரல் ஆனது.

    இதைத்தொடர்ந்து மாடுகளை வீதியில் திரிய விடும் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    • இன்று காலை பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
    • அணையின் நீர்மட்டம் 83.48 அடியாக உள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்க ளின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் மழைப்பொழிவு இல்லாததால் கடந்த சில நாட்களாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்து வந்தது.

    இதனால் அணையின் நீர்மட்டமும் குறைந்து வந்தது. இந்நிலையில் நேற்று இரவு அணையின் நீர்பிடிப்பு பகுதியான நீல கிரி மலைப்பகுதியில் பரவலாக மழை பெய்ததால் இன்று காலை பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 83.48 அடியாக உள்ளது. அணை க்கு நேற்று வினாடிக்கு 669 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலை யில் இன்று 2,294 கன அடியாக அதிகரித்துள்ளது.

    அணையில் இருந்து காலிங்கராயன் பாசன த்திற்கு 500 கன அடியும், தடப்பள்ளி-அரக்கன் கோட்டை பாசனத்திற்கு 300 கன அடியும், குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கன அடியும்,

    கீழ்பவானி வாய்க்காலுக்கு 5 கன அடியும் என மொத்தம் அணையில் இருந்து 905 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்ப ட்டு வருகிறது.

    அதே சமயம் மற்ற அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது. குண்டேரி பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 25.90 அடியாகவும்,

    பெரும்பள்ளம் அணையின் நீர்ம ட்டம் இன்று காலை நிலவரப்படி 18.99 அடியாகவும், வரட்டு பள்ளம் அணையின் நீர்மட்டம் 21.78 அடியாகவும் உள்ளது.

    • பலத்த காற்றுடன் மழை பெய்ததால் அறுவடைக்கு தயாராக செவ்வாழை, நேந்திரன், கதளி உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சாய்ந்து சேதமானது.
    • சென்னிமலை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. சென்னமலை பகுதியில் சுமார் 2 மி.மீட்டர் மழை பெய்தது.

    கோபி:

    ஈரோடு மாவட்டத்தில் காலை மற்றும் மதிய நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டு வருகிறது. வெயிலின் தாக்கத்தால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மாவட்டத்தின் பல பகுதிகளில் மாலை மற்றும் இரவு நேரங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதே போல் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஈரோட்டில் இரவில் பலத்த சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. இதனால் பல இடங்களில் மரங்கள் சாய்ந்தன. 10-க்கும் மேற்பட்ட இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன.

    இதே போல் கோபிசெட்டிபாளையம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களாக மாலை நேரங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது.

    கோபி செட்டிபாளையம்அருகே உள்ள பொலவகாளி பாளையம், நாதிபாளையம், கல்லுக்குழி, தோட்டக்காட்டூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கதளி, செவ்வாழை, நேந்திரன், மொந்தன் உள்ளிட்ட ரகங்களில் வாழை சாகுபடி செய்து வருகின்றனர்.

    கோபிசெட்டிபாளையம் பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்ததால் அறுவடைக்கு தயாராக செவ்வாழை, நேந்திரன், கதளி உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சாய்ந்து சேதமானது.

    வாழை சாகுபடியில் ஒருவாழை நடவு செய்ய சுமார் ரூ.15 முதல் ரூ.150 வரை செலவு செய்யப்படுகிறது. இன்னும் சில தினங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த வாழை மரங்கள் சூறாவளி காற்றினால் முறிந்தும் சாய்ந்தும் சேதமானதால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.

    மேலும் சாய்ந்த வாழைகளை வேளாண்துறை அதிகாரிகள் கணக்கிட்டு உரிய இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    மேலும் பெரும்பாலும் இயற்கை சீற்றத்தின் போது காற்றினால் வாழை மரங்கள் சேதம் ஆவதாகவும் அவ்வாறு காற்றினால் சேதம் அடைந்த வாழை மரங்களுக்கும் காப்பீட்டு தொகையை அரசு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாய நிலத்தில் சாய்ந்த வாழை மரங்களை அப்புறப்படுத்த கூடுதல் செலவாகும் என்பதால் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதே போல் நேற்று இரவு கோபிசெட்டிபாளையம், டி.என்.பாளையம், நம்பியூர், ஆப்பக்கூடல், அத்தாணி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 30 நிமிடத்துக்கும் மேலாக பலத்த மழை பெய்தது. அதன் பிறகு இரவு முழுவதும் மழை தூறி கொண்டே இருந்தது.

    மேலும் குண்டேரி பள்ளம் வனப்பகுதியில் நேற்று இரவு பரவலாக மழை பெய்தது. அந்த பகுதியில் 1.2 மி.மீட்டர் மழை பெய்தது. இதனால் வனப்பகுதி முழுவதும் பசுமையாக காட்சி அளித்தது.

    சென்னிமலை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. சென்னமலை பகுதியில் சுமார் 2 மி.மீட்டர் மழை பெய்தது.

    இதே போல் இன்று காலையும் மாவட்டத்தின் பல பகுதிகளில் சாரல் மழை பெய்தது. தொடர்ந்து மேகமூட்டத்துடனேயே காணப்பட்டு வருகிறது.

    • விவசாயிகள் வந்து அலுவலகத்தை முற்று கையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • நிர்வாகிகள் நீர்வளத்துறை அலுவலகத்திற்கு சென்று தங்களது கோரிக்கைகளை மனுவாக வழங்கினர்.

    ஈரோடு:

    ஈரோடு வெண்டிபா ளையத்தில் உள்ள நீர்வ ளத்துறை செயற்பொ றியாளர் அலுவ லகத்திற்கு இன்று காலை கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்க த்தை சேர்ந்த ஒருங்கிணை ப்பாளர் ரவி தலைமையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் வந்து அலுவலகத்தை முற்று கையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    கீழ்பவானி கால்வாயில் ஆகஸ்ட் 15-ம் தேதி பாசனத்திற்காக தண்ணீர் திறக்கவும், அதற்கான அரசாணையை உட னடியாக வெளியிடவும் வலியுறுத்தி கோஷமிட்டனர்.

    கீழ்பவானி கால்வாயில் கான்கிரீட் சீரமைப்பு திட்டத்தை கைவிடவும், அதற்கான அரசாணை எண் 276-ஐ ரத்து செய்ய வும் கோரிக்கை விடுத்தனர். மேலும் தற்போது நடை பெற்று வரும் கால்வாய் சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்கவும்,

    விவசாயிகளிடம் கருத்து கேட்காமல் தயாரிக்கப்பட்ட மோகன கிருஷ்ணன் அறிக்கையை ரத்து செய்ய வேண்டும். காலிங்கராயன், தடபள்ளி-அரக்கன் கோட்டை, கீழ்பவானி கால்வாய்களில் ஒரே சமயத்தில் தண்ணீர் திறக்க வேண்டும். பவானி ஆற்றில் கூடுதலாக தண்ணீர் திறப்ப தை நிறுத்த வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

    ஆகஸ்ட் 15ஆம் தேதி பாசனத்துற்காக தண்ணீர் திறக்கப்படவில்லை என்றால், சுதந்திர தினத்தை கருப்பு தினமாக அனுசரித்து கீழ்பவானி பாசன பகுதி களான ஈரோடு, திருப்பூர், கரூர் மாவ ட்டங்களில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கால்நடைகள் மற்றும் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என்றும் தெரிவித்தனர்.

    இதைத்தொடர்ந்து முக்கிய நிர்வாகிகள் நீர்வளத்துறை அலுவலகத்திற்கு சென்று தங்களது கோரிக்கைகளை மனுவாக வழங்கினர். இந்த ஆர்ப்பா ட்டத்தில் ஆற்றல் அசோ க்குமார் உள்பட பல்வேறு விவசாய பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    • புஞ்சை புளியம்பட்டியில் நகராட்சி வாரச்சந்தை புதன் மற்றும் வியாழன் அன்று கூடுகிறது.
    • மொத்தம் கால்நடைகள் ரூ.1 கோடிக்கு விற்பனை ஆனது என வியாபாரிகள் தெரிவித்தனர்.

    பு.புளியம்பட்டி:

    புஞ்சை புளியம்பட்டியில் நகராட்சி வாரச்சந்தை புதன் மற்றும் வியாழன் அன்று கூடுகிறது. இது தமிழ்நாட்டின் 2-வது மிகப்பெரிய சந்தையாகும்.

    இந்த சந்தையில் கர்நாடகா, கேரளா ஆகிய வெளிமாநிலங்களில் இருந்தும், வெளி மாவட்டங்களான திருப்பூர், நாமக்கல், கரூர், கோவை மற்றும் புளியம்பட்டி சுற்று வட்டார பகுதியை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்தும் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் வந்து கால்நடைகளை விற்பதும், வாங்கி செல்வதும் வழக்கம்.

    இந்நிலையில் புதன் மற்றும் வியாழன் ஆகிய 2 நாட்களில் கூடிய மாட்டு சந்தையில் ஜெர்சி இன மாடுகள் ரூ.52 ஆயிரம், சிந்து இன மாடுகள் ரூ.42 ஆயிரம், எருமைகள் ரூ.15 முதல் 30 ஆயிரம் வரை விற்பனையானது.

    இதில் நாட்டு மாடுகள் ரூ.57 ஆயிரம் மற்றும் வளர்ப்பு கன்றுகள் ரூ.5 முதல் 12 ஆயிரம் வரை விற்பனையானது. எடைக்கேற்ப வெள்ளாடு ரூ.15 ஆயிரம் மற்றும் செம்மறியாடு ரூ.12 ஆயிரம் வரை விற்றது.

    இதில் மொத்தம் கால்நடைகள் ரூ.1 கோடிக்கு விற்பனை ஆனது என வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • அரசு பஸ் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
    • விஜயகுமார் பஸ் சக்கரத்துக்கு அடியில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.

    அம்மாபேட்டை:

    அம்மாபேட்டை அருகே சிங்கம்பேட்டை கேட், விநாயகா நகரை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகன் விஜயகுமார் (29) பி.எஸ்சி. அக்ரி படித்துள்ளார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. தற்போது வெல்டிங் பட்டறை வேலை செய்து வருகிறார்.

    இந்நிலையில் இன்று காலை 7.45 மணியளவில் வீட்டில் இருந்து தனது மோட்டார் சைக்கிளில் மொண்டிபாளையம்-சிங்கம்பேட்டை ரோட்டில் சென்று கொண்டிருந்தார்.

    மேட்டூர் மெயின் ரோட்டில் இணைய முயன்ற போது மேட்டூரில் இருந்து பவானி நோக்கி வந்த அரசு பஸ் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் விஜயகுமார் பஸ் சக்கரத்துக்கு அடியில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இதுகுறித்து அம்மாபேட்டை போலீஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். விஜயகுமார் உடலை அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    • இடியுடன் கூடிய கனமழை பெய்தது.
    • நம்பியூரில் அதிகபட்சமாக 46 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருந்து வந்தது. அனல் காற்றுடன் வெயில் தாக்கத்தால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வந்தனர்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் ஈரோடு மாநகர பகுதியில் 45 நிமிடம் சூறாவளி காற்றுடன் பரவலாக மழை பெய்தது. இதேபோல் கோபி மற்றும் சுற்று வட்டார பகுதிகளும் பரவலாக மழை பெய்தது. இந்நிலையில் நேற்று காலை வணக்கம் போல் வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருந்தது. ஆனால் மதியம் 3 மணி பிறகு ஈரோடு புறநகர் பகுதியில் பரவலாக மழை பெய்ய தொடங்கியது.

    குறிப்பாக நம்பியூரில் மதியம் 2 மணி நேரம் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதுபோல் கோபிசெட்டிபாளையம் பகுதிகளிலும் 2 மணி நேரத்திற்கு மேலாக இடியுடன் கூடிய கனமழை பெய்தது. மாவட்டத்தில் நம்பியூரில் அதிகபட்சமாக 46 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது.

    இதேபோல் கோபிசெட்டிபாளையம், பெருந்துறை, அம்மாபேட்டை, பவானிசாகர், சென்னிமலை, பவானி போன்ற புறநகர் பகுதியில் பரவலாக மழை கொட்டி தீர்த்தது. ஆனால் அதேநேரம் ஈரோடு மாநகர் பகுதியில் நேற்று மாலை மழை பெய்யவில்லை.

    ஈரோடு மாவட்டத்தில் நேற்று பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:

    நம்பியூர்-46, கோபி-29, பெருந்துறை-16, எலந்தகுட்டை மேடு-13, அம்மாபேட்டை-6, பவானிசாகர்-3.20, சென்னிமலை-3, பவானி-3.30.

    • விஜய் தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண் டார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

     ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கரு ங்கல்பாளையம் கக்கன் நக ரைச் சேர்ந்தவர் விஜய் (வயது 28). இவர் கட்டிட வேலை செய்து வந்தார். இவரது மனைவி தீபா (23). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

    விஜய்க்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்து ள்ளது. இதனால் அடிக்கடி மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்து மனைவியிடம் தகரா றில் ஈடுபடுவார்.இதனால் தீபா கணவரிடம் கோபி த்துக் கொண்டு கரூரிலுள்ள அவரது பெற்றோர் வீட்டி ற்கு குழந்தைகளை அழை த்துக் கொண்டு சென்று விட்டார்.

    இதையடுத்து மன உளை ச்சலில் இருந்த விஜய் மனைவி தீபாவிற்கு போன் மூலம் தொடர்பு கொண்டு குழந்தைகளை அழைத்துக் கொண்டு வீட்டுக்கு வரு மாறு அழைத்தார். அதற்கு தீபா குடிப்பழக்கத்தை விட் டால் தான் நான் வீட்டுக்கு வருவேன் என்று கூறினார்.

    இந்நிலையில் சம்பவ த்தன்று மன வேதனையில் இருந்த விஜய் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண் டார். இதையடுத்து உறவின ர்கள் விஜயின் உடலை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு மருத்துவம னைக்கு அனுப்பிவைத்த னர்.

    பின்னர் இதுகு றித்து தீபா கருங்கல்பாளை யம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கங்காபுரம், சூரியம்பாளையம், வில்லரசம்பட்டி ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
    • காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்நினியோகம் இருக்காது

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கங்காபுரம், சூரியம்பாளையம், வில்லரசம்பட்டி ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் இத்துணை மின் நிலையங்களில் இருந்து மின்விநியோகம் பெறும் வேட்டைபெரியம்பாளையம், தயிர்பாளையம், ஆட்டையம்பாளையம், கொளத்துப்பாளையம், தொட்டம்பட்டி, மேட்டையன்காடு, கங்காபுரம், குமிளம்பரப்பு ரோடு, அல் அமீன்நகர், சூரிப்பாறை மற்றும் இந்திரா நகர், தாய் நகர், செல்லப்பம்பாளையம், பாலாஜி நகர், எஸ்.எஸ்.பி. நகர், முத்துமாணிக்கம் நகர், இராசாம்பாளையம், தென்றல் நகர், சீனாங்காடு, எல்.வி.ஆர். காலனி, ஈ.பி.பி. நகர் மற்றும் கள்ளன்கரடு ஆகிய பகுதிகளுக்கு நாளை (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்நினியோகம் இருக்காது என செயற்பொறியாளர் சாந்தி தெரிவித்துள்ளார்.

    • போலீசார் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
    • 16 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சென்னிமலை, பவானி, கோபி பகுதிகளில் அரசு அனுமதியின்றி சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக ஈரோடு டவுண், கோபி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன் அடிப்படையில் போலீசார் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கு அரசு அனுமதியின்றி மது விற்றுக்கொண்டிருந்த சென்னிமலை கே.ஜி.வலசை சேர்ந்த தங்கவேல் (வயது 60), பவானி வரதநல்லூரை சேர்ந்த மாதேஸ்வரன் (53), கோபி மல்லிபாளையத்தை சேர்ந்த காந்தி வேல் (43) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    பின்னர் அவர்களிடமிருந்த 16 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • எதிர்பா ராத விதமாக நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார்.
    • இதில் சேவியருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கோபி பெரியகொடிவேரி பகுதியைச் சேர்ந்தவர் செல்வமேரி (வயது 71). இவரது மகன் சேவியர் (49). இவர் டைல்ஸ் ஒட்டும் வேலை செய்து வந்தார். இந்நிலையில் சேவியர் வழக்கம் போல் நல்ல கவு ண்டன் பாளையம் மலர் நக ரில் புதிதாக கட்டி வரும் ஒரு கட்டிடத்திற்கு டைல்ஸ் ஒட்டும் வேலைக்கு சென்று ள்ளார்.

    அங்கு சேவியர் வேலை பார்த்து கொண்டிருக்கும் போது மேல்தளத்திற்கு செல்வதற்காக படியில் ஏறினார். அப்போது எதிர்பா ராத விதமாக நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார். இதில் சேவியருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அங்கிரு ந்தவர்கள் சேவியரை கோபி அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.

    பின்னர் மேல் சிகிச்சை க்காக கோவை அரசு மரு த்துவக்கல்லூரி மருத்துவ மனைக்கு கொண்டு சென்ற னர். இந்நிலையில் அங்கு சிகிச்சை பெற்று வந்த சேவியர் சிகிச்சை பலனி ன்றி உயிரிழந்தார். இதைய டுத்து சேவியரின் தாய் செ ல்வமேரி இது குறித்து கோபி போலீஸ் நிலைய த்தில் புகார் அளித்தார். புகாரியின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கரும்பு பாரம் ஏற்றி வந்த 2 லாரிகளை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • விவசாயிகளிடம் ஊழியர்கள் கூடுதலாக வெட்டுக் கூலி தர வேண்டாம்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள தாளவாடி மலை பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயிகள் அதிக அளவில் கரும்புகளை பயிரிட்டு உள்ளனர்.

    இந்த கரும்புகள் வெட்டப்பட்டு சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் சர்க்கரை ஆலை க்கு கொண்டு செல்லப்ப டுகிறது. தற்போது கரும்பு வெட்டு கூலியாக டன் ஒன்றுக்கு விவசாயிகளிடம் இருந்து ரூ.750 ஆலை நிர்வாகம் சார்பில் கரும்பு பணத்தில் பிடித்தம் செய்ய ப்படுகிறது. கர்நாடக மாநிலத்தில் கரும்பு வெட்டு க்கூலி ரூ.480 மட்டுமே பிடித்தம் செய்யப்படுகிறது.

    எனவே கர்நாடகா மாநிலத்தை போல் கரும்பு வெட்டுக்கூலியை குறைக்க வேண்டும் உள்பட கோரி க்கைகளை வலியுறுத்தி தாளவாடி மலைப்பகுதியை சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தாளவாடியில் இருந்து கரும்பு பாரம் ஏற்றி வந்த 2 லாரிகளை தமிழக- கர்நாடகா எல்லையில் உள்ள காரப்பள்ளம் சோதனை சாவடி அருகே தடுத்து நிறுத்தி சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கு வந்த லாரி உரிமை யாளர்கள் மற்றும் போலீ சார் உங்களது கோரிக்கை கள் சம்பந்தமாக ஆலை நிர்வாகம் மற்றும் சம்பந்த ப்பட்ட அரசு அதிகாரி களிடம் பேசி முடிவு செய்து கொள்ளுங்கள். லாரிகளை தடுத்து நிறுத்தக்கூடாது என அறிவுறுத்தினர்.

    இதையடுத்து தாளவாடி தாசில்தார் ரவிசங்கர், இன்ஸ்பெக்டர் செல்வன் மற்றும் தனியார் சர்க்கரை ஆலை அதிகாரிகள் விவ சாயிகள் போராட்டத்தில் ஈடுபட்ட சோதனைசாவடி பகுதிக்கு சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது கரும்பு விவசாயிகள் தங்களது விவசாயத் தோட்ட ங்களில் கரும்பு வெட்ட டன் ஒன்றுக்கு கூலி ரூ.750 நிர்ணயத்துள்ள நிலையில் தாளவாடியில் உள்ள தனியார் சர்க்கரை ஆலை கிளை அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் கூடுதலாக கரும்பு வெட்டு க்கூலியை ஆலை நிர்வாக த்திற்கு தெரியாமல் நிர்ண யித்து வசூலிப்பதாகவும், இதனால் தங்களுக்கு மிகு ந்த நஷ்டம் ஏற்படுவதாகும் அவர்களிடம் தெரிவித்த னர்.

    இதையடுத்து விவசாயி களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அதிகாரிகள் ஆலை நிர்ணத்துள்ள வெட்டு க்கூலி மட்டும் ஆலை தரப்பில் பிடித்தம் செய்யப்படுகிறது.

    எனவே விவசாயிகளிடம் ஊழியர்கள் கூடுதலாக வெட்டுக் கூலி தர வேண்டாம். இதுபோ ன்று நடந்து கொள்ளும் ஊழியர்கள் மீது ஆலை நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்கும் என விவசாயி களிடம் உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டம் முடிவுக்கு வந்தது. 

    ×