என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சத்தியமங்கலத்தில் அரசு பஸ்சுக்கு கிடாய் வெட்டி கொண்டாடிய பயணிகள்
    X

    அரசு பஸ் முன்பு கிடாயுடன் நின்ற பயணிகளை படத்தில் காணலாம்.

    சத்தியமங்கலத்தில் அரசு பஸ்சுக்கு கிடாய் வெட்டி கொண்டாடிய பயணிகள்

    • சரியான நேரத்திற்கு இந்தப் பஸ் தினமும் வருவதால் இவர்கள் அனைவருக்கும் திருப்பூருக்கு சரியான நேரத்தில் வேலைக்கு சென்று வருகின்றனர்.
    • கொரோனா தாக்கம் காரணமாக சில வருடங்களாக இந்த கடாய் வெட்டி கொண்டாடும் நிகழ்ச்சி நடைபெறவில்லை.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இருந்து தினமும் காலை 6:40 மணி க்கு திருப்பூர் வழியாக தேனி வரை அரசு பஸ் ஒன்று செல்லும். இந்த பஸ்சில் தினமும் பண்ணாரி, ராஜநகர் ஆகிய ஊர்களில் இருந்து சுமார் 36 பயணிகள் தங்களது வாழ்வாதாரத்திற்காக கடந்த 10 ஆண்டுகளாக இந்த பஸ்சில் பயணம் செய்து திருப்பூர் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வருகின்றனர்.

    சரியான நேரத்திற்கு இந்தப் பஸ் தினமும் வருவதால் இவர்கள் அனை வருக்கும் திருப்பூருக்கு சரியான நேரத்தில் வேலைக்கு சென்று வருகின்றனர். இதனால் இந்த 36 பயணிகளும் சேர்ந்து ஆண்டு தோறும் இந்த அரசு பஸ்சிற்காக ஆடி மாதம் கிடாய் வெட்டி கொண்டாடி வந்தனர். ஆனால் கொரோனா தாக்கம் காரணமாக சில வருடங்களாக இந்த கடாய் வெட்டி கொண்டாடும் நிகழ்ச்சி நடைபெறவில்லை.

    இதையடுத்து இந்த வருடம் கிடாய் வெட்டி கொண்டாட பயணிகள் முடிவு செய்தனர். அதன்படி இன்று 36 பயணிகளும் சேர்ந்து கிடாய் ஒன்றை வாங்கினர். அரசு பஸ்சுக்கு மாலை அணிவித்து, சந்தனமிட்டு பஸ் முன்பு பூஜை நடத்தி பின்பு கிடாய் வெட்டினர். இதனை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

    இந்த பஸ்சானது தினமும் காலை 6.40 மணிக்கு சத்தியமங்கலத்தில் இருந்து புறப்பட்டு 7.10 மணிக்கு பண்ணாரி சென்றடைகிறது. அங்கிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு திருப்பூர் செல்கிறது. பின்னர் அங்கிருந்து தேனிக்கு மதியம் 2.45 மணிக்கு செல்கிறது. இதைப்போல் தேனியில் 3 மணிக்கு கிள ம்பும் அரசு பஸ் திருப்பூருக்கு 7.40 மணிக்கு வருகிறது. அங்கிருந்து வேலையை முடித்து இந்த 36 பயணிகள் இந்த பஸ்சில் ஏறி இரவு 10 மணி அளவில் சத்தியம ங்கலத்துக்கு வருகின்றனர்.

    Next Story
    ×