என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
மோட்டார்சைக்கிள்கள் மோதி வெல்டிங் பட்டறை தொழிலாளி சாவு
- மோட்டார்சைக்கிளும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதியது.
- சிகிச்சையில் இருந்த மணிகண்டன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அம்மாபேட்டை:
அம்மாபேட்டை அருகே நெரிஞ்சிப்பேட்டை வேடிச்சி வீதியை சேர்ந்தவர் மணிகண்டன் (28). வெல்டிங் பட்டறை தொழிலாளி.
இவர் சம்பவத்தன்று மாலை நெரிஞ்சிப் பேட்டையில் இருந்து பூனாச்சிக்கு மோட்டார் சைக்கிளில் தனது நண்பர்களான நெரிஞ்சிப்பேட்டையை சேர்ந்த கேசவன் (24), பாரதி (19) ஆகியோரை பின்னால் அமர வைத்துக்கொண்டு சென்று கொண்டிருந்தார்.
அந்தியூர் ரோட்டில் அம்மாபேட்டையை அடுத்து செலம்பனூர் பிரிவு அருகில் சென்ற பொழுது எதிரே வந்த மோட்டார்சைக்கிளும் மணிகண்டன் ஓட்டி சென்ற மோட்டார்சைக்கிளும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதியது.
இதில் மணிகண்டன் பலத்த காயமடைந்து ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மற்றவர்கள் லேசான காயத்துடன் தப்பித்தனர்.
இந்நிலையில் சிகிச்சையில் இருந்த மணிகண்டன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இறந்து போன மணிகண்டனுக்கு சம்பூர்ணம் என்ற மனைவியும், 2 வயதில் குழந்தையும் உள்ளனர். இச்சம்பவம் குறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.