என் மலர்
ஈரோடு
- சரக்கு வேன் சரஸ்வதி மீது மோதியது.
- டாக்டர் வரும் வழியிலேயே சரஸ்வதி இறந்து விட்டதாக தெரிவித்தார்.
சென்னிமலை:
சென்னிமலையில் உள்ள ஈங்கூர் ரோடு டி.எம்.எம்.புரத்தை சேர்ந்தவர் சண்முகம். இவரது மனைவி சரஸ்வதி (வயது 65). இவர் சம்பவத்தன்று இரவு சுமார் 8 மணி அளவில் ஈங்கூர் ரோட்டில் உள்ள மாரியப்பா நகர் ஆஞ்சநேயர் கோவில் அருகில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது பெருந்துறை சிப்காட்டில் இருந்து கால்நடை தீவனங்களை ஏற்றிக்கொண்டு ஒட்டன்சத்திரத்திற்கு சென்று கொண்டிருந்த ஒரு சரக்கு வேன் சரஸ்வதி மீது மோதியது.
இதில் பலத்த காயம் அடைந்த சரஸ்வதியை அக்கம் பக்கத்தினர் மீட்டு பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் வரும் வழியிலேயே சரஸ்வதி இறந்து விட்டதாக தெரிவித்தார்.
இது குறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- கலைஞர் உரிமைத்தொகைக்காக விண்ணப்பித்த சிலருக்கு இன்னமும் பணம் அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படவில்லை.
- எங்கள் வங்கி கணக்கில் பணமும் வரவு வைக்கப்படவில்லை. நாங்கள் சாதாரண கூலி வேலை செய்பவர்கள்.
ஈரோடு:
தமிழகம் முழுவதும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடங்கப்பட்டு பயனாளிகளுக்கு அவர்களது வங்கி கணக்கில் ஆயிரம் வரவு வைக்கப்பட்டது. சிலருக்கு கடந்த 14-ந் தேதி முதலே அவர்களது வங்கி கணக்கில் கலைஞர் உரிமைத் தொகையான ரூ.1000 வரவு வைக்கப்பட்டது.
இந்நிலையில் கலைஞர் உரிமைத்தொகைக்காக விண்ணப்பித்த சிலருக்கு இன்னமும் பணம் அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படவில்லை. இதையடுத்து அவர்களுக்கு ஒரு வாய்ப்பாக மேல்முறையீடு செய்து உரிமைத் தொகையை பெற்றுக் கொள்ளலாம் என அரசு தெரிவித்து இருந்தது.
இதையடுத்து இன்று காலை முதலே ஈரோடு தாலுகா அலுவலகத்தில் உரிமைத்தொகை கிடைக்காத பெண்கள் ஏராளமானோர் திரண்டு வந்தனர். அதில் சில பெண்கள் திடீரென தாலுகா அலுவலகத்தில் எதிரே உள்ள திருமகன் ஈவேரா சாலையில் இன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்ததும் ஈரோடு டவுன் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். இதேபோல் தாசில்தார் ஜெயக்குமாரும் சம்பவ இடத்துக்கு வந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
நாங்கள் கலைஞர் மகளிர் உரிமை தொகைக்காக விண்ணப்பித்திருந்தோம். இதுவரை எங்களுக்கு எந்த ஒரு எஸ்.எம்.எஸ்.வரவில்லை. எங்கள் வங்கி கணக்கில் பணமும் வரவு வைக்கப்படவில்லை. நாங்கள் சாதாரண கூலி வேலை செய்பவர்கள்.
எங்கள் பகுதியில் பலருக்கும் உரிமைத் தொகை அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து கேட்டபோது இன்று தாலுகா அலுவலகத்திற்கு வந்து விசாரித்து கொள்ளலாம் என்று கூறியிருந்தனர்.
அதன் அடிப்படையில் நாங்கள் வேலையை விட்டு விட்டு தாலுகா அலுவலகத்திற்கு வந்தோம். இங்கு ஆன்லைன் செயல்படவில்லை என்கிறார்கள். நாங்கள் என்ன செய்யட்டும் என்றனர்.
இதற்கு பதில் அளித்து பேசிய தாசில்தார் ஜெயக்குமார்,
விண்ணப்பித்த அனைத்து பெண்களுக்கும் கலைஞர் உரிமைத் தொகை கண்டிப்பாக கிடைக்கும். உங்களுக்கு என்ன காரணத்துக்காக இதுவரை கிடைக்கவில்லை என்று பார்க்கலாம். உங்களுக்கு உரிமைத் தொகை கிடைக்க வழிவகை செயல்படும்.
உங்களுக்காகவே தாலுகா அலுவலகத்தில் 3 அதிகாரிகள் கொண்ட உதவி மையம் செயல்பட்டு வருகிறது. அவர்களிடம் உங்களுக்கு என்ன சந்தேகம் உள்ளதோ அதை கேட்டு தெளிவுபடுத்திக் கொள்ளலாம். இதுவரை பணம் ஏறாதவர்களுக்கு வரும் 23-ந் தேதிக்குள் பணம் அவர்களது வங்கி கணக்கில் ஏறிவிடும். உங்கள் பிரச்சினையை சரி செய்து கொள்ளலாம் என்றார்.
இதனை ஏற்று பெண்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலந்து சென்றனர். இதனால் தாலுகா அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
- சிலையை கரைத்து விட்டு பொதுமக்கள் கரையேறிய நிலையில் சங்கர் மட்டும் காணவில்லை.
- போலீசார் மற்றும் தீயணைப்புத்துறை வீரர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர்.
ஆப்பக்கூடல்:
ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் பகுதியில் பொதுமக்கள் சார்பில் 3.5 அடி கொண்ட விநாயகர் சிலை ஒன்று வைக்கப்பட்டு பூஜை செய்யப்பட்டது.
அதன் பிறகு இந்த விநாயகர் சிலையை பொதுமக்கள் இரவு ஊர்வலமாக எடுத்து வந்து ஆப்பக்கூடல் தண்ணீர் டேங்க் ஈஸ்வரன் கோவில் அருகே உள்ள பவானி ஆற்றில் இறங்கி கரைத்து உள்ளனர்.
இந்த விநாயகர் சிலையை கரைக்க அந்தியூர் தாலுகா, வேம்பத்தி பொதிய மூப்பனூரை சேர்ந்த பெரியசாமி என்பவரது மகன் சங்கர் (18) என்பவரும், அவருடன் மேகநாதன், தம்பிராஜ், வேங்கைராஜ், ராஜா, ரமேஷ் உள்ளிட்ட நண்பர்களும் சிலை ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் சிலையை கரைத்து விட்டு பொதுமக்கள் கரையேறிய நிலையில் சங்கர் மட்டும் காணவில்லை. உடன் வந்த நண்பர்கள் மற்றும் பொதுமக்கள் தேடி பார்த்து உள்ளனர்.
ஆனால் எங்கு தேடியும் சங்கர் கிடைக்காததால் பவானி ஆற்றில் நீரில் மூழ்கி இருக்கலாம்? என்று கருதி உடன் வந்தவர்கள் ஆப்பக்கூடல் போலீசார் மற்றும் பவானி தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தன் பேரில் இரவு முழுவதும் சங்கரை தேடியுள்ளனர்.
பின்னர் இன்று காலை முதல் ஆப்பக்கூடல், பெருந்துறை, கவுந்தப்பாடி வழியாக செல்லும் பவானி ஆற்றங்கரையோர பகுதிகளில் சங்கரை போலீசார் மற்றும் தீயணைப்புத்துறை வீரர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர்.
விநாயகர் சிலைகளை ஆற்றங்கரையில் இறங்கி கரைக்கும் போது பொதுமக்கள் மிகுந்த பாதுகாப்புடனும் கவனத்துடனும் இருக்க வேண்டும் என்று போலீசார் தெரிவித்தனர்.
- ஒரு சில இடங்களில் பலத்த மழையும் பெய்து வருகிறது.
- மழை நின்ற பிறகு அந்த மரத்தின் கிளைகள் வெட்டி அப்புறப்படுத்தப்பட்டது.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டததில் கடந்த சில நாட்களாக பகல் நேரங்களில் கடும் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. ஆனால் மாலை மற்றும் இரவு நேரங்களில் பல்வேறு இடங்களில் சாரல் மலை பெய்து வருகிறது. ஒரு சில இடங்களில் பலத்த மழையும் பெய்து வருகிறது.
இந்த நிலையில் அந்தியூர் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று காலை வழக்கம் போல் வெயில் அடித்து வந்தது. இதை தொடர்ந்து மதியம் வெயிலின் தாக்கம் குறைந்து வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.
இதையடுத்து சிறிது நேரத்தில் லேசாக சாரல் மழை பெய்தது. இதை தொடர்ந்து பலத்த காற்றுடன் மழை பெய்தது. சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக மழை கொட்டி தீர்த்தது. இதில் அந்தியூர்- அத்தாணி சாலையில் கெட்டி விநாயகர் கோவில் அருகே ரோட்டோரமாக இருந்த வேப்ப மரம் பலத்த காற்றால் முறிந்து ரோட்டில் விழுந்தது.
அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் செல்பவர்களும், நடந்து செல்பவர்களும், வாகன ஓட்டிகள் அதிகளவில் செல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
இதனால் அந்தியூர்- அத்தாணி ரோட்டில் கடும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அந்தியூர் பஸ் நிலையத்தில் இருந்து அத்தாணி செல்லக்கூடிய பஸ்கள், அத்தாணியில் இருந்து அந்தியூர் பஸ் நிலையத்திற்கு வரக்கூடிய பஸ்கள், இரு சக்கர வாகனத்தில் சென்றவர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் தவித்தனர். சுமார்1 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதையடுத்து மழை நின்ற பிறகு அந்த மரத்தின் கிளைகள் வெட்டி அப்புறப்படுத்தப்பட்டது. இதையடுத்து அந்த பகுதியில் போக்குவரத்து சீரானது.
- முத்து கவுண்டம்பாளையம் பஸ் நிலையம் அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு களைந்து சென்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அடுத்த முத்துகவுண்டம் பாளையத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இந்த பகுதி மக்களுக்கு கடந்த 2 மாதமாக சீரான குடிநீர் விநியோகிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து அப்போது மக்கள் பலமுறை ஊராட்சி ஒன்றிய அலுவலகம், முத்துகவுண்டம் ஊராட்சியில் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இதையடுத்து இன்று காலை இந்த பகுதியை சேர்ந்த 60-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காலி குடங்களுடன் திரண்டு வந்து ஈரோடு-வெள்ளக்கோவில் ரோடு, முத்து கவுண்டம்பாளையம் பஸ் நிலையம் அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. வாகனங்கள் நீண்ட தூரம் அணிவகுத்து நின்றன.
இது குறித்து தகவல் கிடைத்ததும் மொடக்குறிச்சி போலீசார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் குடிநீர் இன்றி மிகவும் சிரமப்படுவதாக தெரிவித்தனர்.
இதற்கு பதில் அளித்த அதிகாரிகள் இன்னும் ஓரிரு நாட்களில் சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதனையேற்று பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு களைந்து சென்றனர். இதன் பிறகு போக்குவரத்து சீரானது.
- புதுச்சேரியில் இருந்து வந்த 2 சொகுசு காரை மடக்கி சோதனை செய்தனர் .
- மதிப்பு சுமார் 15 லட்சம் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர்.
வானூர்:
புதுச்சேரியில் இருந்து தமிழகத்திற்கு காரில் அதிக அளவு மது பாட்டில் கடத்தி வருவதாக மத்திய புலனாய்வு நுண்ணறிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில் இன்ஸ்பெக்டர் சின்னகா மணன், சப்-இன்ஸ்பெக்டர் இனயத் பாஷா தலைமையில் கோட்டக்குப்பம் மது விலக்கு சோதனை சாவடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக புதுச்சேரியில் இருந்து வந்த 2 சொகுசு காரை மடக்கி சோதனை செய்தனர் .
அதில் உயர் ரக புதுச்சேரி மதுபாட்டில்கள் 650 இருந்தது தெரியவந்தது. மேலும் காரில்வந்தவர்களிடம் விசாரணை செய்ததில் புதுச்சேரியில் இருந்து சென்னையில் உள்ள நட்சத்திர விடுதிகளுக்கு கடத்தி சென்றது தெரியவந்தது.
இதனையடுத்து மது பாட்டில்களை கடத்திய கோட்டக்குப்பம் பகுதியை சேர்ந்த செல்வராஜ் மற்றும் சார்லஸ் ஆகிய இருவரை கைது செய்து அவர்களிடம் இருந்த 650 உயர்ரக மது பாட்டில்களையும் சொகுசு காரையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் மதிப்பு சுமார் 15 லட்சம் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர். கைதான செல்வராஜ் மீது விழுப்புரம் மாவட்டத்தில் போலி மது பாட்டில்கள் கடத்தல் உள்ளிட்ட ஏராளமான வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
- கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனது தந்தை வீட்டில் 8 மாதமாக குழந்தையுடன் ஜோதி வசித்து வந்தார்.
- மின்சாரம் தாக்கி தூக்கி வீசி மயக்கம் அடைந்துள்ளார்.
தாளவாடி:
தாளவாடி அடுத்த பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் நாராயணன் (50) கூலித்தொழிலாளி. இவரது மகள் ஜோதி (26). இவருக்கும் கர்நாடக மாநிலம் சிக்கமங்களூர் மாவட்டம் எம்சள்ளி கிராமத்தை சேர்ந்த சிவராஜ் (33) என்பவருக்கும் கடந்த 6 வருடத்திற்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.
இவர்களுக்கு 4 வயதில் பெண் குழந்தை உள்ளது. கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தாளவாடி அடுத்த பாளையம் கிராமத்தில் தனது தந்தை வீட்டில் 8 மாதமாக குழந்தையுடன் ஜோதி வசித்து வந்தார்.
இந்நிலையில் சம்பவத்தன்று மதியம் ஜோதி துணி துவைத்து விட்டு துணியை அங்கு வழக்கம் போல் காய வைக்கும் கம்பியில் போட்டுள்ளார். அப்போது மின்சாரம் தாக்கி தூக்கி வீசி மயக்கம் அடைந்துள்ளார். உறவினர்கள் அவரை மீட்டு தாளவாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே ஜோதி இறந்து விட்டதாக தெரிவித்தார். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதுகுறித்து தாளவாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- காலிங்கராயன் பாசனத்திற்கு நீர் திறப்பு அதிகரித்துள்ளது
- பவானிசாகர் அணையை தொடர்ந்து மற்ற அணைகளின் நீர்மட்டமும் தொடர்ந்து சரிந்து வருகிறது.
ஈரோடு,
ஈரோடு மாவட்ட மக்க ளின் முக்கிய குடிநீர் ஆதார மாக உள்ளது பவானி சாகர் அணை. 105 அடி கொள்ள ளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது. கடந்த சில நாட்களாக அணைக்கு வரும் நீர் வரத்தை காட்டிலும் பாசன த்திற்காக அதிக அளவில் நீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது. அதே நேரம் மழை பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்து வருகிறது.
இன்று காலை நிலவர ப்படி பவானிசாகர் அணை யின் நீர்மட்டம் 74.33 அடியாக சரிந்துள்ளது. அணைக்கு வினாடி 1,534 கன அடி நீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கா ல் பாசனத்திற்காக 2,300 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது. காளிங்கரா யன் பாசனத்திற்கு 500 கனஅடி திறந்து விடப்பட்ட நிலையில் இன்று முதல் 550 கன அடியாக அதிகரித்து திறக்கப்பட்டு உள்ளது.
குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கன அடி என மொத்தம் பவானிசாகர் அணையில் இருந்து 2,950 கன அடி நீர் வெளியேற்ற ப்பட்டு வருகிறது. குண்டேரி ப்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 24.80 அடியா கவும், பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் 13.28 அடியாகவும், வரட்டு பள்ளம் அணையின் நீர்மட்டம் 21.19 அடியாகவும் உள்ளது.பவானிசாகர் அணையை தொடர்ந்து மற்ற அணைகளின் நீர்மட்டமும் தொடர்ந்து சரிந்து வருகிறது.
- வாய்க்காலில் நீச்சல் பழகிய பள்ளி மாணவன் உயிரிழந்தார்
- இதுகுறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
பெருந்துறை,
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த கருமாண்டிசெல்லிபாளையத்தைச் சேர்ந்தவர் திருமூர்த்தி மகன் சஞ்சை (வயது 17). இவர் பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று பெருந்துறை ஈரோடு ரோடு கீழ்பவானி வாய்க்காலில் தனது தந்தை உறவினர் கோபால் உதவியுடன் இடுப்பில் கயிறு கட்டிக் கொண்டு நீச்சல் பழகினார். அப்போது இடுப்பில் இருந்த கயிறு திடீரென்று அவிழ்ந்ததால் தண்ணீரில் முழ்கி உயிரிழந்தார். இதையடுத்து பெருந்துறை தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து சஞ்சையின் உடலை மீட்டனர். பின்னர் இதுகுறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- சிவகிரி அருகே மது விற்றவர் கைது செய்யப்பட்டார்
- போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகிரி,
ஈரோடு மாவட்டம் சிவகிரி காவல் எல்லைக்குட்பட்ட காகம் கொளத்துப்பாளையம் வாய்க்கால்கரை அருகே எல்லக்கடை செல்லும் சாலையில் அரசு அனுமதி பெறாமல் மதுவிற்பனை நடைபெறுவதாக சிவகிரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு சென்ற சிவகிரி போலீசார் அங்கு மது விற்பனையில் ஈடுபட்டிருந்த திருப்பூர் செல்லம் நகரை சேர்ந்த செல்லப்பன் மகன் பழனிசாமி (வயது 42) என்பவரை கைது செய்தனர். பின்னர் அவரிடமிருந்து 8 மதுப்பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் இது சம்பந்தமாக பழனிசாமி மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சென்ட்ரிங் தொழிலாளி நீரில் மூழ்கி உயிரிழந்தார்
- புகா ரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
ஈரோடு,
கோவை மாவட்டம் வெள்ள க்கிணறு பகுதியைச் சேர்ந்தவர் பொன்னுச்சாமி. இவரது மகன் சிவராமன் (வயது 42). இவர் சென்ட்ரிங் வேலை செய்து வந்தார்.இவருக்கு திருமணம் ஆகவில்லை. இவர் சம்பவத்தன்று சென்னிமலை முதலைமடை எல்.பி.பி வாய்க்கால் பாலம் அருகே நீரில் மூழ்கி பிணமாக கிடந்தார். இதையடுத்து அவரை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து அவரது சகோதரி சிவ லட்சுமி சென்னிமலை போலீஸ் நிலை யத்தில் புகார் அளித்தார். புகா ரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கோபி அருகே விவசாயி வீட்டில் நகை-பணம் கொள்ளை போனது
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசார ணை நடத்தி வருகிறார்கள்.
கோபி,
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள வெள்ளாங் கோவில் பகுதியை சேர்ந்த வர் ராமசாமி (வயது 64). விவசாயி. இவர் வீட்டை பூட்டி விட்டு சாவியை அருகே உள்ள மாடி படி கட்டின் அருகே வைத்து விட்டு நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் பகுதிக்கு துக்க நிகழ்ச்சிக்கு சென்றார். இதையடுத்து அவர் மறு நாள் வீட்டுக்கு வந்து பார்த்தார். அப்போது வீட்டின் பீரோவில் வைத்து இருந்த ரூ.3 ஆயிரம் பணம் மற்றும் 20 பவுன் நகையை காணாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
மர்ம நபர்கள் மாடி படியில் வைத்து இருந்த சாவியை எடுத்து வீட்டை திறந்து பீரோ வில் இருந்த பணம் மற்றும் நகையை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது. மேலும் கொள்ளையர்கள் வீட்டின் சாவியை பக்கத்து மாடியில் எரிந்து விட்டு சென்று உள்ளனர். இது குறித்து ராமசாமி சிறுவலூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசார ணை நடத்தி வருகிறார்கள்.






