பவானி ஆற்றில் மூழ்கி வாலிபர் பலி

ஆற்றில் இறங்கி சிலையை கரைக்கும் பொழுது சங்கரநாராயணன் எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கினார்.போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பவானி ஆற்றில் மூழ்கி வாலிபர் பலி
Published on

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் அந்தி யூர் பொதியமூப்பனூர் பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 52). இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். இவரது மூத்த மகன் சங்கரநாராயணன் (20) அந்தப் பகுதியில் உள்ள சர்க்கரை ஆலையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில் சம்பவத்தன்று விநாயகர் சிலை கரைப்பதற்காக தனது நண்பர்களுடன் ஆப்பக்கூடல் ஈஸ்வரன் கோவில் அருகே உள்ள பவானி ஆற்றிற்கு சென்றனர்.

ஆற்றில் தண்ணீரின் வேகம் அதிகமாக இருந்துள்ளது. ஆற்றில் இறங்கி சிலையை கரைக்கும் பொழுது சங்கரநாராயணன் எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கினார்.

பின்னர் அங்கிருந்தவர்கள் தேடிப் பார்த்தனர். ஆனால் சங்கரநாராயணன் கிடைக்கவில்லை. இந்நிலையில் அப்பகுதியில் இருந்து சிறிது தொலைவில் சங்க ரநாராயணன் உடல் கிடப்பதாக தகவல் கிடைத்தது.

பின்னர் இது குறித்து அவரது தந்தை பெரியசாமி கவுந்தப்பாடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்ப டையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com