என் மலர்
ஈரோடு
- உடலில் தீ எரிந்த படி கீர்த்தனா அலறி துடித்துள்ளார்.
- சென்னிமலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னிமலை:
சென்னிமலையில் உள்ள பி.ஆர்.எஸ். ரோட்டை சேர்ந்தவர் கைலாசநாதன். இவருடைய மகள் கீர்த்தனா (30). இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
கீர்த்தனா கடந்த 10 ஆண்டுகளாக தோல் வியாதியால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்தார். மேலும் இதற்கான சிகிச்சை அளித்தும் சரி ஆகாததால் மன உளைச்சலில் இருந்து வந்தார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு வழக்கம் போல் கைலாசநாதனும் அவரது மகன் சேதுராமனும் படுக்கையறையில் தூங்கியுள்ளனர்.
கீர்த்தனா ஹாலில் படுத்து தூங்கியுள்ளார். அப்போது நள்ளிரவு நேரத்தில் கீர்த்தனாவின் அலறல் சத்தம் கேட்டுள்ளது.
உடனடியாக கைலா சநாதனும், அவரது மகன் சேதுராமனும் எழுந்து சென்று பார்த்த போது அங்கு உடலில் தீ எரிந்தபடி கீர்த்தனா அலறி துடித்துள்ளார்.
இதுகுறித்து கீர்த்தனாவிடம் கைலாசநாதன் கேட்டபோது, எறும்பு மருந்தை தின்றுவிட்டு பின்னர் மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீ வைத்து கொண்டதாக கூறியுள்ளார்.
பின்னர் உடனடியாக கீர்த்தனாவை 108 ஆம்புலன்ஸ் மூலம் பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி கீர்த்தனா இறந்து விட்டார். இது குறித்து சென்னிமலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- புலிகள், சிறுத்தைகள், கரடிகள், யானைகள், மான்கள் உள்ளிட்ட ஏராளமான விலங்குகள் வசிக்கின்றன.
- புலிகள் காப்பகத்தின் வெளிப்புற பகுதிகளில் அடிக்கடி புலியின் நடமாட்டத்தை பொதுமக்கள் பார்த்து வருகின்றனர்.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில் "சத்தியமங்கலம் புலிகள் காப்பக" வனப்பகுதி உள்ளது.
இங்கு புலிகள், சிறுத்தைகள், கரடிகள், யானைகள், மான்கள் உள்ளிட்ட ஏராளமான விலங்குகள் வசிக்கின்றன. குறிப்பாக இந்த பகுதி புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்ட பிறகு புலிகளின் எண்ணிக்கை வனப்பகுதியில் கணிசமாக அதிகரித்து வருகிறது.
இதனால் புலிகள் காப்பகத்தின் வெளிப்புற பகுதிகளில் அடிக்கடி புலியின் நடமாட்டத்தை பொதுமக்கள் பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் கடம்பூரில் இருந்து மலைப்பகுதியில் உள்ள குன்றிவனம் கிராமத்திற்கு அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது சாலையில் 2 புலிக்குட்டிகள் சாவகாசமாக நடந்து சென்று கொண்டிருந்தது. இந்த புலிக்குட்டிகள் தங்களுக்குள் விளையாடிக்கொண்டே ஜாலியாக சென்றது.
உடனடியாக பஸ்சின் வேகத்தை குறைத்த டிரைவர் புலிக்குட்டிகள் வனப்பகுதிக்குள் செல்லும் வரை மிதமான வேகத்தில் பஸ்சை இயக்கியுள்ளார். தாய் புலி அருகில் இல்லாமல் குட்டிகள் அப்பகுதியில் சுற்றி திரிந்த சம்பவம் பொது மக்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பஸ்சில் இருந்தவர்கள் எடுத்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
- நகுலை கவுந்தப்பாடியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
- புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் திங்களூர் அருகே நிச்சாம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் (வயது 41). இவரது மகன் நகுல் (14). இவர் வெள்ளாளங்கோயில் அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில் சம்பவத்தன்று நகுலை சரியாக வீட்டுப்பாடம் செய்யவில்லை என ரமேஷ் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த நகுல் வீட்டில் தோட்டத்திற்காக வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்து குடித்து விட்டார்.
இதையடுத்து அருகில் இருந்தவர்கள் நகுலை கவுந்தப்பாடியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு முதலுதவி பெற்று பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்நிலையில் அங்கு சிகிச்சை பெற்று வந்த நகுல் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து ரமேஷ் திங்களூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நாய்கள் கூட்டமாக சேர்ந்து பட்டிகளில் உள்ள ஆடுகளை கடித்து குதறி வருகின்றன.
- ஆடுகளை கடிக்கும் நாய்களை பிடிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சென்னிமலை:
சென்னிமலை யூனியன், வடமுகம் வெள்ளோடு ஊராட்சிக்குட்பட்ட கொம்மக்கோயில், கும்மாக்காளி பாளையம், உருமாண்டம் பாளையம், கூனம்பட்டி ஆகிய பகுதிகளில் நாய்கள் கூட்டமாக சேர்ந்து பட்டிகளில் உள்ள ஆடுகளை கடித்து குதறி வருகின்றன. இது வரை பல ஆடுகள் இறந்துள்ளன.
இதனால் விவசாயிகளுக்கு லட்சக்கண க்கான ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நாய்கள் பெருந்துறை, பணிக்கம் பாளையத்தில் உள்ள குப்பை கிடங்கு அருகே கூட்டமாக தங்கி இருப்பதாக தெரிய வருகிறது.
கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக இது போன்ற பல சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இதனை உடனடியாக தடுத்து நிறுத்தாவிட்டால், ஆடு, மாட்டை கடித்து, மனிதனை கடித்த கதையாக மாறும் அபாயம் உள்ளது.
எனவே ஆடுகளை கடிக்கும் நாய்களை பிடிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொம்மக்கோயில் கொல்லங்காடு, கிருஷ்ணமூர்த்தி என்பவரின் ஆடுகளை காலை நாய்கள் கடித்து குதறியதில் 5 ஆடுகள் இறந்து விட்டது. மேலும் 6 ஆடுகள் உயிருக்கு போராடி வருகிறது.
- சிவகிரி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நிலக்கடலைக்காய் விற்பனைக்கான ஏலம் நடைபெற்றது.
- மொத்தம் ரூ.12 லட்சத்து 61 ஆயிரத்து 445-க்கு விற்பனையானது.
சிவகிரி:
சிவகிரி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நிலக்கடலைக்காய் விற்பனைக்கான ஏலம் நடைபெற்றது.
இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 583 மூட்டைகளில் 17 ஆயிரத்து 706 கிலோ எடையுள்ள நிலக்கடலைக்காயை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
இது கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்ச விலையாக ரூ.64.14 காசுகள், அதிகபட்ச விலையாக ரூ.87.30 காசுகள், சராசரி விலையாக ரூ.75.50 காசுகள் என்ற விலைகளில் மொத்தம் ரூ.12 லட்சத்து 61 ஆயிரத்து 445-க்கு விற்பனையானது.
- இன்று காலை பவானிசாகர் அணைக்க நீர்வரத்து அதிகரித்துள்ளது.
- அணையின் நீர்மட்டம் 68.41 அடியாக சரிந்து உள்ளது.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.
கடந்த சில நாட்களாக அணைக்கு வரும் நீர் வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக அதிக அளவில் நீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது.
அதே நேரம் மழை பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்தும் குறைந்து வருகிறது.
இந்நிலையில் நேற்று நீர் பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்ததால் இன்று காலை பவானிசாகர் அணைக்க நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 68.41 அடியாக சரிந்து உள்ளது. அணை க்கு வினா டிக்கு 3,768 கனஅடியாக நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
அணையில் இருந்து கீழ்ப வானி வா ய்க்கால் பாச னத்தி ற்காக 2,300 கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது. காளி ங்கராயன் பாசனத்திற்கு 500 கனஅடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 150 கன அடி என மொத்தம் பவானிசாகர் அணையில் இருந்து 2,950 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
குண்டேரி பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 24.56 அடியாகவும், பெரு ம்பள்ளம் அணையின் நீர்ம ட்டம் 9.71 அடியாகவும், வரட்டுப்பள்ளம் அணை யின் நீர்மட்டம் 21.95 அடி யாகவும் உள்ளது.
- குட்கா பொருட்களை விற்பனை செய்தது போலீசார் சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது.
- 2 கடைகளுக்கு சீல் வைத்தனர்.
பெருந்துறை-கோவை ரோடு சிப்காட் நுழைவாயில் எதிரில் உள்ள ஒரு பேக்கரி மற்றும் பெருந்துறை பணிக்கம்பாளையத்தில் உள்ள ஒரு மளிகை கடையில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்தது போலீசார் சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது.
இது தொடர்பாக பேக்கரி உரிமையாளர் வேணுகோபால் மற்றும் மளிகை கடை உரிமையாளர் ஈஸ்வரமூரத்தி ஆகியோர் மீது பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
மேலும் 2 கடைகளுக்கு பெருந்துறை தாசில்தார் பூபதி உத்தரவின்படி கிராம நிர்வாக அலுவலர்கள் கவுதமன், பிரேம்குமார், சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் ஆகியோர் சென்று சீல் வைத்தனர்.
- மொடக்குறிச்சி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய்கள் விற்பனைக்கான ஏலம் நடைபெற்றது.
- தேங்காய்கள் மற்றும் தேங்காய் பருப்பு சேர்த்து ரூ.3 லட்சத்து 79 ஆயிரத்து 179-க்கு விற்பனையானது.
மொடக்குறிச்சி:
மொடக்குறிச்சி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய்கள் விற்பனைக்கான ஏலம் நடைபெற்றது. இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 14 ஆயிரத்து 280 எண்ணிக்கையிலான 5 ஆயிரத்து 662 கிலோ எடையுள்ள தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
இவை கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்ச விலையாக ரூ.23.20 காசுகள், அதிகபட்ச விலையாக ரூ.26.19 காசுகள், சராசரி விலையாக ரூ.25.80 காசுகள் என்ற விலைகளில் மொத்தம் ரூ.1 லட்சத்து 43 ஆயிரத்து 568-க்கு விற்பனையானது.
இதனையடுத்து தேங்காய் பருப்பு விற்பனை க்கான ஏலம் நடந்தது. இதில் 99 மூட்டைகள் கொண்ட 3 ஆயிரத்து 101 கிலோ எடையுள்ள தேங்கா ய் பருப்பு விற்பனையானது.
விற்பனையான பருப்பில் முதல் தர பருப்பு கிலோ ஒன்றுக்கு குறைந்த பட்ச விலையாக ரூ.74.29 காசுகள், அதிகபட்ச விலையாக ரூ.78.89 காசுகள், சராசரி விலையாக ரூ.77.85 காசுகள் என்ற விலைகளிலும்,
2-ம்தர பருப்பு குறைந்தபட்ச விலையாக ரூ.58.89 காசுகள், அதிகபட்ச விலையாக ரூ.72.49 காசுகள், சராசரி விலையாக ரூ.68.10 காசுகள் என்ற விலைகளில் மொத்தம் ரூ.1 லட்சத்து 83 ஆயிரத்து 707-க்கு விற்பனைது.
மொத்தம் தேங்காய்கள் மற்றும் தேங்காய் பருப்பு சேர்த்து ரூ.3 லட்சத்து 79 ஆயிரத்து 179-க்கு விற்பனையானது.
- வேன் ஒன்று மொபட்டின் மீது மோதியது.
- சிகிச்சை பெற்று வந்த ராமாயி சிகிச்சை பயனின்றி இறந்தார்.
சிவகிரி:
கொடுமுடியை அடுத்த முத்தையன்வலசை சேர்ந்தவர் தங்கமணி (38) கூலி்தொழிலாளி. இவர் தனது மாமியார்கள் பாப்பாள் (75), ராமாயி (70) ஆகியோரை மொபட்டில் அமரவைத்து கொண்டு சிவகிரி அருகே உள்ள வேலாயுதம்பாளையத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது முத்தையன்வலசில் இருந்து வேலாயுதம்பாளையம் ரோட்டில் வந்த வேன் ஒன்று இவர்கள் சென்று கொண்டிருந்த மொபட்டின் மீது மோதியது.
இந்த சம்பவத்தில் மொபட்டில் சென்று கொண்டிருந்த 3 பேர்களும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அவர்களை அக்கம் பக்கம் இருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இதனையடுத்து ராமாயி மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த ராமாயி சிகிச்சை பயனின்றி இறந்தார்.
இச்சம்பவம் குறித்து தங்கமணி அளித்த புகாரின்பேரி்ல் சிவகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஈர விதைகளை விதை நேர்த்தி செய்ய வேண்டும்.
- நாற்றுக்களை சுமார் 40 நாட்களுக்கு குலை நோய் வராமல் பாதுகாக்கலாம்.
கொடுமுடி:
கொடுமுடி வேளாண்மை உதவி இயக்குனர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
காய்ந்த விதைகளை விதை நேர்த்தி செய்வதை விட ஈர விதைகளை விதை நேர்த்தி செய்ய வேண்டும். முதலில் பூஞ்சானக் கொல்லி விதை நேர்த்தி செய்ய வேண்டும்.
ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் கார்பன்டை சிம் மருந்தின் ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து 24 மணி நேரம் விதைகளுடன் ஊறவைத்து முளை கட்டி வைக்க வேண்டும்.
இவ்வாறு செய்வதால் நாற்றுக்களை சுமார் 40 நாட்களுக்கு குலை நோய் வராமல் பாதுகாக்கலாம்.
ரசாயன பூச்சிகொல்லி மருந்துக்கு பதிலாக உயிர் எதிர் பூசனக்கொல்லி மருந்தான சூடோமோனாஸ் புளுரோசன்ஸ் பாக்டீரியா வை ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் என்ற அளவில் விதை நேர்த்தி செய்யலாம்.
பூஞ்சானக் கொல்லி விதை நேர்த்தி செய்த 24 மணி நேரத்திற்கு பிறகு அசோஸ்பைரில்லம் விதை நேர்த்தி செய்ய வேண்டும். ஒரு ஏக்கருக்கு தேவையான விதையுடன் (2 பாக்கெட்) 400 கிராம் அசோஸ் பைரில்லத்துடன் கலந்து விதை நேர்த்தி செய்யவேண்டும்.
பூஞ்சானக் கொல்லி மருந்து களான கார்பென்டா சிம், திரம் அல்லது கேப்டான் இதில் ஏதேனும் ஒன்றை ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் என்ற அளவில் நெல் விதைகளுடன் கலந்து 24 மணி நேரம் வைத்திருந்து பின்பு ஊறவைக்க வேண்டும்.
இதற்காக விதைகளை நீரில் ஊற வைத்து (சுமார் 24 மணி நேரம்) கோணிச்சாக்கில் 1 முதல் 2 நாட்கள் ஈரம் காயமல் கட்டி வைத்து முளைகட்டவேண்டும்.
முளை வந்துள்ள விதையில் முளையின் நீள்ம் 3 மி.மீ. முதல் 5 மி.மீ. வரை இருக்கலாம். விதைகள் சீராக முளைப்பதற்கு தேவைப்பட்டால் முளை க்கப்பட்ட விதைளை கலக்க வேண்டும்.
கடைசி உலவிற்கு முன்பாக 8 சென்ட் நாற்றங்காலுக்கு 16 கிலோடை அம்மோனியம் பாஸ்பேட் உரம் இட வேண்டும். (அல்லது 6.3 கிலோ யூரியா, 48 கிலோ சூப்பர் பாஸ்பேட் உரம் இடலாம்).
உரிய வயதில் நாற்றுக்களை பறிப்பதாக இருந்தால் டி.ஏ.பி.யை நாற்றங்காலில் அடியுரமாக இடலாம். நாற்று பறிப்பதற்கு தாமதம் ஆகும் பட்சத்தில் நாற்று பறிப்பதற்கு 10 நாட்களுக்கு முன்பு இடலாம்.
நாற்றங்கால் செழுமை யாக இல்லாத நிலையில் டி.ஏ.பி. இடாத பட்சத்தில் நாற்று பறிப்பதற்கு 10 நாட்களுக்கு முன்பு 8 சென்டுக்கு 4 கிலோ யூரியா அல்லது 8 கிலோ அம்மோனி யம் சல்பேட் உரம் இடலாம். நாற்றின் வளர்ச்சி போது மானதாக இல்லாதிருந்தால் சென்டிற்கு 2 கிலோ டிஏபியை நாற்றுக்கள் பறிப்பதற்கு 10 நாட்களுக்கு முன்பு இடவேண்டும்.
வேர்கள் அறுபடும் நிலை இருந்தால் டி.ஏ.பி. இடாத நாற்றங்காலில் நாற்றுக்கள் பறிப்பதற்கு 1-2 நாட்களுக்கு முன்பு 16 கிலோ ஜிப்சம் இடவேண்டும்.
நடவு வயலை நன்றாக வளர்த்து உயர்விளைச்சல் தரும். எனவே, நிலத்தை பண்படுத்த வேண்டும் நடவு வயல் தயாரிப்பதை எளிதாக கோடை காலத்தில் கோடை மழை கிடைத்த உடன் நிலத்தை 2 அல்லது 3 முறை உழுவது அவசியமாகும்.
கோடை மழை பெய்வதனால் மண்ணின் ஈரப்பதம் காக்கப்படுவதுடன் நடவு வயல் தாயார் செய்ய தேவையான பாசன நீரின் அளவும் குறைகிறது. களைகளும் நீக்கப்படுகிறது.
நெல் நடவு வயலில் தண்ணீர் விடுவதற்கு முன்பாக ஒரு எக்டருக்கு 12.5 டன்கள் நன்றாக மக்கிய தொழு உரம் அல்லது குப்பை உரம் இட்டு வயல் முழுவதும் நன்றாக தூவிப்பரப்ப வேண்டும். பிறகு தண்ணீர் விட்டு உழுது உரத்தை மண்ணுடன் கலக்க வேண்டும்.
பசுந்தால் உரமிட வேண்டிய வயலில் 2.5 செ.மீ. உயரத்திற்கு தண்ணீர் கட்டி எக்டருக்கு 6.25 டன்கள் பசுந்தால் உரம் இட்டு ஒரு வாரம் மக்கவிட வேண்டும்.
அதாவது சணப்பை போன்ற விரைவில் அழுகி மக்கக்கூடிய பசுந்தாள் உரத்தை உழுவதற்கு 7 நாட்கள் முன்பும் மற்ற பசுந்தாள் உரங்களை உழுவதற்கு 15 நாட்கள் முன்பும் இட்டு 2.5 செ.மீ. ஆழம் தண்ணீர் நிறுத்தி அழுகி மக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- 2 மர்ம நபர்கள் மூகமூடி அணிந்து கொண்டு வீட்டிற்குள் நுழைந்தனர்.
- இதுகுறித்து அம்மா பேட்டை போலீசில் புகார் அளித்தார்.
ஈரோடு:
ஈரோடு அம்மாபேட்டை மாருதி நகரை சேர்ந்தவர் லெட்சுமணன் (வயது 65). இவர் ஓய்வு பெற்ற அரசு பஸ் டிரைவர் ஆவார். இவரது மனைவி சாந்தி (55). இவர்களுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர்.
மகள் திருமணமாகி பெங்களூரில் கணவருடன் வசித்து வருகிறார். மகன் மதுரை மாவட்டம் வத்தல குண்டில் ஜவுளி கடை நடத்தி வருகிறார். லெட்சுமணன் தற்காலிகமாக பள்ளி வாகனங்களில் டிரைவராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் சாந்தி அவரது மகனை பார்ப தற்காக வத்தலகுண்டிற்கு சென்றுள்ளார். லெட்சுமணன் மட்டும் தனியாக வீட்டில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று லெட்சுமணன் சாப்பிட்டு விட்டு ஒரு அறையில் தூங்க சென்றார்.
அப்போது லுங்கி அணிந்த 2 மர்ம நபர்கள் மூகமூடி அணிந்து கொண்டு வீட்டிற்குள் நுழைந்தனர். பின்னர் ஒவ்வொரு அறையாக சென்று பணம், நகை ஏதே னும் உள்ளதா என சோதனையிட்டனர்.
இதையடுத்து லெட்சுமணன் தங்கியிருந்த அறைக்குள் சென்ற மர்ம நபர்கள் அவரை எழுப்பி மிரட்டியு ள்ளனர். பின்னர் லெட்சுமணன் அவரிடமிருந்த ரூ.50 ஆயிரம் பணத்தை அந்த மர்ம நபர்களிடம் கொடுத்துள்ளார். இதையடுத்து மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பித்து சென்றனர்.
பின்னர் லெட்சுமணன் இதுகுறித்து அம்மா பேட்டை போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குபதிவு செய்து மூகமூடி அணிந்து மிரட்டி பணம் பறித்த கொள்ளையர்கள் யார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இல்லந்தேடி நேரடியாக முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
- தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் மூலம் விண்ணப்பிக்கலாம்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் விவசாய கடன் அட்டை பெறுவது தொட ர்பாக அனைத்து வட்டாரங்களிலும் வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் முன்னோடி வங்கி அலுவ லர்கள் இணைந்து சிறப்பு முகாம்கள் மற்றும் இல்லந்தேடி நேரடியாகவும் முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த முகாம்களில் இது வரை விவசாய கடன் அட்டை பெறாத விவசாயிகள் அனைவரும் விண்ண ப்பிக்கலாம். விவசாயகடன் அட்டை திட்டத்தின்கீழ் விவசாயிகள் பயிர் கடன்க ளுக்கும் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில் செய்வோர் நடைமுறை கடன்களுக்கும் ரூ.3 லட்சம் வரையிலும் வங்கிக்கடன் பெற முடியும். விவசாயகடன் அட்டை மூலம் விவசாயிகள் 7 சதவீத வட்டி விகிதத்தில் கடன் பெறலாம்.
மேலும் இக்கடன் பெற்ற விவசாயிகள் நிர்ணயிக்க ப்பட்ட காலக்கெடுவிற்குள் முறையாக தவணை தவறாமல் திரும்ப செலுத்தினால் 3 சதவீதம் வரை வட்டி மானியம் பெற வாய்ப்பு உள்ளது. விவசாய கடன் அட்டை திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ரூ.1.60 லட்சம் வரை எவ்வித பிணையமும் இன்றி கடன் வழங்கப்படும்.
விவசாய கடன் அட்டை கடன் பெற விவசாயிகள் தங்களின் நிலஆவணங்கள் (பட்டா, சிட்டா மற்றும் அடங்கல்), ஆதார் அட்டை, பான்கார்டு, குடும்ப அட்டை அல்லது வாக்காளர் அடை யாள அட்டை போன்ற ஆவணங்களுடன் பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் வங்கி கிளைகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் மூலம் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பதாரரின் கடன் மனுக்கள் தகுதியின் அடிப்படையில் பரிசீலி க்கப்பட்டு விவசாயிகளின் விவரம் மற்றும் வங்கிகளின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு நிலம், பயிர் கடன் அளவீடு பொறுத்து கடன் வழங்கப்படும்.
எனவே இது வரை விவசாயகடன் அட்டை பெறாத விவசாயிகள் அனைவரும் வரும் டிசம்பர் மாதம் 31-ந் தேதி வரை நடைபெறவுள்ள சிறப்பு முகாம் நடைபெறும் விபரங்கள் குறித்து வட்டார வேளாண்மை உதவி இயக்குர்களை தொடர்பு கொண்டு விவசாயகடன் அட்டை பெற்று பயன்பெறு மாறு கேட்டுக்கொண்டு ள்ளனர்.






