அப்பா திட்டியதால் 10-ம் வகுப்பு மாணவன் பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலை

நகுலை கவுந்தப்பாடியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அப்பா திட்டியதால் 10-ம் வகுப்பு மாணவன் பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலை
Published on

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் திங்களூர் அருகே நிச்சாம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் (வயது 41). இவரது மகன் நகுல் (14). இவர் வெள்ளாளங்கோயில் அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில் சம்பவத்தன்று நகுலை சரியாக வீட்டுப்பாடம் செய்யவில்லை என ரமேஷ் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த நகுல் வீட்டில் தோட்டத்திற்காக வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்து குடித்து விட்டார்.

இதையடுத்து அருகில் இருந்தவர்கள் நகுலை கவுந்தப்பாடியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு முதலுதவி பெற்று பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்நிலையில் அங்கு சிகிச்சை பெற்று வந்த நகுல் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து ரமேஷ் திங்களூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com