என் மலர்tooltip icon

    திண்டுக்கல்

    • அடியனூத்து ஊராட்சியில் கங்குலி பாய்ஸ் கிரிக்கெட் கிளப்பின் சார்பில் 4ம் ஆண்டு கிரிக்கெட் திருவிழா நடந்தது.
    • இதில் அடியனூத்து கங்குலி பாய்ஸ் அணியினர் வெற்றி பெற்றனர்.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் மாவட்டம் அடியனூத்து ஊராட்சியில் கங்குலி பாய்ஸ் கிரிக்கெட் கிளப்பின் சார்பில் 4ம் ஆண்டு கிரிக்கெட் திருவிழா நடந்தது. இதில் திண்டுக்கல், வத்தலகுண்டு, பழனி, தேனி, திருச்சி, மதுரை என மொத்தம் 36 அணிகள் கலந்து கொண்டன. இதில் அடியனூத்து கங்குலி பாய்ஸ் அணியினரும் ஆர்.எம்.காலனி ஏ.எம்.சி.சி.அணியினரும் இறுதிப்போட்டியில் மோதினர்.

    இதில் அடியனூத்து கங்குலி பாய்ஸ் அணியினர் வெற்றி பெற்றனர். நிகழ்ச்சியில் அடியனூத்து ஊராட்சி மன்றத்தலைவர் ஜீவானந்தம், துணைத் தலைவர் ஜெயராமன், அ.தி.மு.க ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் யூசுப் அன்சாரி, விஜய் மக்கள் இயக்கத்தின் வர்த்தக அணியின் மாவட்டத்தலைவர் மகராஜ் விக்கி, அடியனூத்து ஊராட்சி மன்ற உறுப்பினர் சதிஸ்குமார் ஆகியோர் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினர்.போட்டிக்கான ஏற்பாடுகளை கங்குலி பாய்ஸ் அணியினர் செய்திருந்தனர்.

    • 50 முதல் 80 கிலோ எடை வரை உள்ள பிரிவுகளில் நடைபெற்ற ஆணழகன் போட்டியில் பலர் கலந்து கொண்டனர்.
    • முதல் பரிசு ரூ.10 ஆயிரம், கேடயம், பதக்கம் மற்றும் சான்றிதழ்களை வெற்றியாளருக்கு வழங்கப்பட்டது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல்லில் தென்னிந்திய அளவிலான ஆணழகன் போட்டி நடைபெற்றது. இதில் 50 முதல் 80 கிலோ எடை வரை உள்ள பிரிவுகளில் நடைபெற்ற ஆணழகன் போட்டியில் பலர் கலந்து கொண்டனர்.

    முதல் பரிசு ரூ.10 ஆயிரம், கேடயம், பதக்கம் மற்றும் சான்றிதழ்களை வெற்றியாளருக்கு மாவட்ட ஹாக்கி சங்கத் தலைவர் நாட்டாண்மை காஜாமைதீன் வழங்கினார். இந்நிகழ்வில் லயன்ஸ் முஜிப்ரகுமான், சமூக ஆர்வலர்கள் கணேசன், முத்துகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இப்போட்டியை சுரேஷ்குமார், ஜெகநாதன், முகமது உஸ்மான் ஆகியோர் செய்திருந்தனர்.

    • படுகாயங்களுடன் ஜாய் களஞ்சியம் மதுரை தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
    • கைதான ஏசுராஜா திண்டுக்கல் சிறையிலும், பத்மினி நிலக்கோட்டை சிறையிலும் அடைக்கப்பட்டனர்.

    வத்தலக்குண்டு:

    சென்னையை சேர்ந்தவர் செல்வராஜ். இவர் திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டுவில் முதியோர் இல்லம் நடத்தி வந்தார். கடந்த மாதம் தனது மனைவி ஜாய் களஞ்சியத்துடன் (வயது 55) வத்தலக்குண்டு வந்தார். முதியோர் இல்லத்தில் மனைவியை விட்டுவிட்டு செல்வராஜ் சென்னை சென்று விட்டார்.

    இந்நிலையில் கடந்த 16ம் தேதி அவரை தாக்கி கொல்ல முயற்சி நடந்தது. படுகாயங்களுடன் ஜாய் களஞ்சியம் மதுரை தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். விசாரணையில் முதியோர் இல்லத்தில் காவலாளியாக இருந்த ஏசுராஜா (36) என்பவர்தான் ஜாய் களஞ்சியத்தை அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயன்றது தெரியவந்தது.

    மேலும் அவரது காரில் இருந்து தப்ப முயன்றபோது திண்டுக்கல் ரெயில் நிலையம் அருகே டீசல் தீர்ந்ததால் அங்கேயே நிறுத்திவிட்டு ஏசுராஜா தப்பி ஓடினார். அவரை வத்தலக்குண்டு சப்-இன்ஸ்பெக்டர்கள் கர்ணா காந்தி, சேக்அப்துல்லா தலைமையில் போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடிவந்தனர்.

    இதற்கிடையே ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வந்த ஜாய் களஞ்சியம் உயிரிழந்தார்.

    இந்நிலையில் போலீசார் ஏசுராஜாவின் செல்போன் எண்ணை வைத்து தேடி வந்த நிலையில் பல்லடத்தில் அவர் தனது கள்ளக்காதலியுடன் பதுங்கியிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அங்கு சென்று ஏசுராஜா மற்றும் அவரது கள்ளக்காதலி பத்மினி(34) ஆகியோரை கைது செய்தனர். இதுகுறித்து போலீசார் தெரிவிக்கையில், திருவாரூரை சேர்ந்த ஏசுராஜா என்பவருக்கு திருமணமாகி மனைவியை பிரிந்து சென்னையில் வாழ்ந்து வந்தார்.

    அப்போது சென்னையை சேர்ந்த பத்மினி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இவருக்கும் ஏற்கனவே திருமணமாகி கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்தார். இருவரும் வசதியாக வாழ வேண்டும் என்பதற்காக பல்வேறு ஊர்களுக்கு சென்று திருட்டு தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளனர். குறிப்பாக வசதியான வீட்டில் வேலைக்கு சேர்ந்த அங்கு சம்பளம் வாங்கும் வரை இருந்து பின்னர் அங்கேயே கொள்ளையடித்து வேறு ஊருக்கு செல்வது வழக்கம்.

    அதன்படி வத்தலக்குண்டுவில் முதியோர் இல்லம் நடத்தி வந்த ஜாய் களஞ்சியத்தை தீர்த்துவிட்டு அவரிடம் நகை மற்றும் பணத்தை கொள்ளையடிக்க முடிவு செய்தனர். ஆனால் பணம் இல்லாததால் அவர் அணிந்திருந்த நகைகளை மட்டும் எடுத்துக்கொண்டு தப்பி ஓடினர். பல்லடத்தில் தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்த ஏசுராஜா தனது முகவரி மற்றும் செல்போன் எண்ணை கொடுத்துள்ளார். கடந்த சில நாட்களாக அணைத்து வைக்கப்பட்டிருந்த செல்போன் மீண்டும் இயங்கியதால் அவரை சுற்றிவளைத்து கைது செய்தனர்.

    கைதான ஏசுராஜா திண்டுக்கல் சிறையிலும், பத்மினி நிலக்கோட்டை சிறையிலும் அடைக்கப்பட்டனர். 

    • அய்யலூர் அருகே உள்ள கோம்பை மலை கிராமத்தைச் சேர்ந்த பட்டதாரி வாலிபர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாயமானார்.
    • மேலும் சமூக வலைதளங்களில் தகவல் பரிமாறி தேடி வந்தனர்.

    வடமதுரை:

    வடமதுரை அய்யலூர் அருகே உள்ள கோம்பை மலை கிராமத்தைச் சேர்ந்த சின்னத்தம்பி (22). பி.ஏ படித்துள்ளார். இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாயமானார்.

    இதுகுறித்து அவரது உறவினர்கள் வடமதுரை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். மேலும் சமூக வலைதளங்களில் தகவல் பரிமாறி தேடி வந்தனர். மாயமான வாலிபரை போலீசார் தேடி வந்த நிலையில் இன்று அவரது வீட்டின் அருகே சில அடி தூரம் உள்ள கிணற்றில் இறந்து கிடந்தார்.

    இது குறித்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போலீசார் உடலை கைப்பற்றி திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விழாவையொட்டி தினமும் முத்துக்குமாரசுவாமி வள்ளி-தெய்வானை, பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. மேலும் மாலையில் சிறப்பு கலை நிகழ்ச்சிகளும் நடந்து வருகிறது.
    • நவராத்திரி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான வில்-அம்பு போடுதல், மகிஷாசூர வதம் நிகழ்ச்சி நேற்று பழனி கோதைமங்கலத்தில் நடைபெற்றது.

    பழனி:

    அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலில் ஆண்டுதோறும் நவராத்திரி விழா சிறப்புடன் கொண்டா டப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு நவராத்திரி விழா கடந்த 15-ந்தேதி பழனி முருகன் கோவில் மற்றும் பெரியநாயகி அம்மன் கோவிலில் காப்பு க்கட்டு தலுடன் தொட ங்கியது. விழாவையொட்டி தினமும் முத்துக்குமாரசுவாமி வள்ளி-தெய்வானை, பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. மேலும் மாலையில் சிறப்பு கலை நிகழ்ச்சிகளும் நடந்து வருகிறது.

    நவராத்திரி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான வில்-அம்பு போடுதல், மகிஷாசூர வதம் நிகழ்ச்சி நேற்று பழனி கோதைமங்கலத்தில் நடைபெற்றது. இதை யொட்டி பழனி முருகன் கோவிலில் பூஜை முறைகள் மாற்றப்பட்டன. பகல் 12 மணிக்கு உச்சிக்கால பூஜை நடந்தது. அதையடுத்து 5.30 மணிக்கு நடைபெறும் சாயர ட்சை பூஜை மதியம் 1.30 மணிக்கே நடத்தப்பட்டது. பின்னர் மாலை 3 மணிக்கு மலைக்கோவிலில் இருந்து பராசக்திவேல் பெரியநாயகி அம்மன் கோவிலுக்கு புறப்பாடாகி சென்றது. அதையடுத்து கோவில் நடை அடைக்கப்பட்டது. இதனால் பகல் 11 மணிக்கு பிறகு பக்தர்கள் மலை க்கோ விலுக்கு செல்ல அனுமதி வழங்கப்படவில்லை.

    பெரியநாயகி அம்மன் கோவிலில் இருந்து மாலை 5 மணிக்கு முத்துக்கு மாரசுவாமி தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளி கோதைமங்கலம் செல்லும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் மாலை 6 மணிக்கு மேல் வில்-அம்பு போடும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது முத்துக்குமார சுவாமி வில்-அம்பை எய்து மகிஷாசூரனை வதம் செய்தார். பின்னர் மீண்டும் முத்துக்குமாரசுவாமி பெரியநாயகி அம்மன் கோவிலுக்கு திரும்ப வந்த பின்பு அர்த்தஜாம பூஜை நடைபெற்றது. தொடர்ந்து பராசக்திவேல் மீண்டும் பழனி முருகன் கோவிலைவந்தடைந்தது.

    இன்று வழக்கம்போல் முருகன் கோவில் நடை திறக்க ப்பட்டு 6 கால பூஜை கள் நடைபெற்று வருகிறது. மேலும் நவராத்திரி விழாவை யொட்டி நிறுத்தப்பட்ட தங்கரத புறப்பாடும் இன்று முதல் மீண்டும் தொடங்குகிறது.

    • இங்கு தமிழகம் மட்டுமன்றி பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளும் தற்போது வருகை புரிந்துள்ளனர்.
    • பல்வேறு சாலைகளில் வாகனங்கள் அணிவகுத்து கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது

    கொடைக்கானல்:

    கொடைக்கானலில் வார விடுமுறை மற்றும் தொடர் விடுமுறை ஆகிய நாட்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படும். தற்போது தொடர் விடுமுறை என்பதால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. இங்கு தமிழகம் மட்டுமன்றி பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளும் தற்போது வருகை புரிந்துள்ளனர்.

    சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரி த்துள்ளதால் பிரதான சாலைகளான அப்ச ர்வேட்டரி சாலை , ஏரிச் சாலை, வத்தலக்குண்டு பிரதான சாலை உள்ளிட்ட பல்வேறு சாலைகளில் வாகனங்கள் அணிவகுத்து கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது . மேலும் சுற்றுலாத் தலங்களுக்கு செல்லும் பிரதான சாலையில் சுமார் 5 கிலோமீட்டர் தூரம் வரையில் வாகனங்கள் அணிவகுத்ததால் சுற்றுலாப் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

    மேலும் மோயர் சதுக்கம், குணா குகை, பைன் மரக்காடுகள் , தூண் பாறை, பிரையண்ட் பூங்கா, உள்ளிட்ட இட ங்களை கண்டு ரசித்தும் சில சுற்றுலாப் பயணிகள் போக்குவரத்து நெரிசல் காரணமாக சுற்று லாப் பகுதிக்கு செல்ல முடியாமல் திணறல் அடை ந்தனர். தொ டர்ந்து கொடைக்கானலுக்கு வந்த சில சுற்றுலா பயணிகள் சுற்றுலா த்தலங்கள் அல்லாத வனப்பகுதிக்குள் சென்று வருகின்றனர் .

    இதனை முறைப்படுத்த வனத்துறை யினர் எந்த ஒரு நடவடி க்கையும் எடுக்கவில்லை என்ற குற்ற ச்சாட்டும் எழுந்து ள்ளது. எனவே வனப்பகுதியில் அமை ந்துள்ள சுற்றுலா பகுதி களில் தற்காலிக பணியாள ர்களை நியமித்து க ண்காணிக்க வேண்டும் எனவும் போக்குவரத்து நெரிசலை குறைக்க கூடுதலாக போக்குவரத்து காவலர்களை ஈடுபடுத்த வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • நாள்தோறும் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
    • கேரளா செண்டை மேளம் உடன் நான்கு ரத வீதிகளில் மின் தேரில் உலா வந்து, கோவில் முன்பு சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மலைக்கோட்டை அடிவாரத்தில் அமைந்துள்ள பத்ரகாளியம்மன் கோவிலில் பல்வேறு திருவிழாக்கள் வருடந்தோறும் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. முக்கிய திருவிழாவான நவராத்திரி உற்சவ விழா கடந்த 15ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாள்தோறும் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி இன்று மாலை நடைபெறுகிறது. காலை பவ கணபதி ஹோமம், சூழினி துர்க்கா ஹோமம் மற்றும் லலிதா சஹஸ்ரநாமம் பாராயணம் நடைபெற்றது.

    தொடர்ந்து மாலை சிம்ம வாகனத்தில் மகிசாசூரவர்த்தினி அலங்காரத்தில், கேரளா செண்டை மேளம் உடன் நான்கு ரத வீதிகளில் மின் தேரில் உலா வந்து, கோவில் முன்பு சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. தொடர்ந்து வாண வேடிக்கை நிகழ்ச்சியும், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக தலைவர் எஸ்.டி.சி பாண்டி, செயலாளர் மகேந்திரன், பொருளாளர் சம்பத்ராஜன், உப தலைவர் வாசுதேவன் மற்றும் திரிசூலம் குழுவினர் செய்து வருகின்றனர்.

    • அந்த நிலத்தின் உரிமையாளர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தனது தோட்டத்தை விற்பதாக கூறி கம்பி வேலி அமைத்தார்.
    • இந்நிலையில் இறந்தவர் உடலை எடுத்துச் செல்ல எதிர்ப்பு தெரிவித்ததால் தாசில்தார் மற்றும் வடமதுரை இன்ஸ்பெக்டரிடம் புகார் அளிக்கப்பட்டது.

    வடமதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள புச்சம்பட்டியைச் சேர்ந்தவர் ஆண்டி (வயது 85). இவர் வயது மூப்பின் காரணமாக இறந்து விட்டார். இவரது உடலை பக்கத்து தோட்டத்தின் வழியாக எடுத்துச் செல்ல ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அந்த நிலத்தின் உரிமையாளர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தனது தோட்டத்தை விற்பதாக கூறி கம்பி வேலி அமைத்தார்.

    இதனால் அப்போதே பொதுமக்கள் கம்பி வேலியை அடித்து நொறுக்கினர். இந்நிலையில் இறந்தவர் உடலை எடுத்துச் செல்ல எதிர்ப்பு தெரிவித்ததால் தாசில்தார் மற்றும் வடமதுரை இன்ஸ்பெக்டர் ஜோதிமுருகனிடம் புகார் அளிக்கப்பட்டது.

    அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து இரு தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்ைத நடந்து கொண்டு இருந்தபோதே இறந்தவர் குடும்பத்தினர் கம்பி வேலியை தாண்டி உடலை எடுத்துச் ெசன்றனர். மேலும் அவரது உடலையும் மயானத்தில் அடக்கம் செய்தனர்.

    இதனால் கடும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் நிலத்தின் உரிமையாளர் புகார் அளித்தால் அரசின் உத்தரவுப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • வத்தலக்குண்டு முத்துமாரியம்மன் கோவிலில் துர்காஷ்டமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
    • கோவில் உற்சவ கமிட்டியாளர்கள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

    வத்தலக்குண்டு:

    வத்தலக்குண்டு முத்துமாரியம்மன் கோவிலில் துர்காஷ்டமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அரசு மருத்துவமனை செவிலியர் வீருசின்னம்மாள் அண்ணாமலை குடும்பத்தார் சார்பில் நடந்த அன்னதானத்தை திருப்பணி குழு தலைவர் அன்பு, ஊராட்சி மன்ற கூட்டமைப்பு சங்கத் தலைவர் ரமேஷ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    இவ்விழாவில் திருவண்ணாமலை ரெப்கோ வங்கி மேலாளர் கனகராஜ், பூசாரி கண்ணன், முத்துமாரியம்மன் கோவில் உற்சவ கமிட்டியாளர்கள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

    • முதல் நாள் காலை 5 மணிக்கு பெண்கள் மாவிளக்கு, முைளப்பாரி, எடுத்தல், காலை 9 மணிக்கு பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகளும், பொதுமக்களும் செய்திருந்தனர்.

    பெரும்பாறை:

    கொடைக்கானல் கீழ்மலை பெரியூர் ஊராட்சி நடுபட்டி கிராமத்தில் வனதுர்க்கையம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலிy; 2 நாள் திருவிழா நடந்தது. முதல் நாள் காலை 5 மணிக்கு பெண்கள் மாவிளக்கு, முைளப்பாரி, எடுத்தல், காலை 9 மணிக்கு பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதைத் தொடர்ந்து பக்தர்கள் தங்களது நேர்த்திக் கடன்களை செலுத்தினர்.

    பின்னர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பகல் 12 மணியளவில் அன்னதானம் நடைபெற்றது. 2-வது நாள் நிகழ்ச்சியாக கொடைக்கானல் யூனியன் சேர்மன் சுவேதா ராணி கணேசன் குத்து விளக்கை ஏற்றி திருவிளக்கு பூஜையை தொடங்கி வைத்தனர்.

    பின்னர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதன் பின்னர் அன்னதானம் நடைபெற்றது. இதில் மலைக்கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகளும், பொதுமக்களும் செய்திருந்தனர்.

    • ஆணிக்காலணி அணிந்த கோவில் பூசாரி ஆசி வழங்கினார்.
    • சிறப்பு வழிபாட்டில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

    வேடசந்தூர்:

    திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள நாகம்பட்டியில் ஸ்ரீ மகாலட்சுமி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆயுத பூஜை, நவராத்திரி விழா கடந்த 10 நாட்களாக நடைபெற்றது. இதையொட்டி பக்தர்கள் தங்கள் கையில் காப்பு கட்டி விரதம் இருந்து வந்தனர்.

    கோயில்களில் தீர்த்தம் தெளிக்கப்பட்டு, ஆற்றுக்குச் சென்று கரகம் பாலித்து சேர்வை ஆட்டத்துடன் சுவாமிகளை ஊர்வலமாக கோயிலுக்கு அழைத்து வந்தனர்.

    அதைத் தொடர்ந்து சாமிகளுக்கு அபிஷேக ஆராதனை மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக விரதம் இருந்த ஆண்கள் மற்றும் பெண்கள் உள்பட ஏராளமான பக்தர்கள் கோவில் முன்பாக அமர்ந்தனர்.

    அப்போது ஆணிக்காலணி அணிந்த கோவில் பூசாரி ஆசி வழங்கினார். பின்னர் கோவில் முன்பாக வரிசையாக உட்கார்ந்திருந்த பக்தர்களின் தலையில் பூசாரி ஒவ்வொரு தேங்காயாக உடைத்தார்.

    அதனைத்தொடர்ந்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள் கோயிலுக்கு சென்று சாமியை வழிபாடு செய்தனர். இந்த சிறப்பு வழிபாட்டில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

    • ஆயுதபூஜை பண்டிகை நாளை நாடுமுழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கோவில்களில் மட்டுமின்றி வீடுகளிலும் மக்கள் பூஜை செய்து வழிபடுவார்கள்.
    • எனவே விவசாயிகள் கிராமங்களில் இருந்து வாழை கன்றுகள், மாவிலைகள் விற்பனை செய்யப்பட்டது.

    திண்டுக்கல்:

    ஆயுதபூஜை பண்டிகை நாளை நாடுமுழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கோவில்களில் மட்டுமின்றி வீடுகளிலும் மக்கள் பூஜை செய்து வழிபடுவார்கள். வீடுகளில் விவசாய கருவிகள், பிற வேலைக்காக பயன்ப டுத்தப்படும் உபகரணங்களை வைத்து பூஜை செய்வது வழக்கம்.

    அதேபோல் கடைகளில் தராசு, எடைக்கற்கள் மற்றும் அளத்தல் கருவிகள் உள்ளிட்டவற்றை சாமி படத்தின் முன்பு வைத்து வழிபாடுகள்நடக்கும். இதுதவிர தனியார் நிறுவனங்களில் அனைத்து வகை எந்திரங்கள், கருவிகளுக்கும் பூஜை செய்வார்கள். இதில் அனைத்து பணியாளர்களும் பங்கேற்பார்கள். இதுதவிர ஒர்க்ஷாப், ஆட்டோ நிறுத்தம் உள்ளிட்டவற்றில் ஆயுதபூஜை வழிபாடு உற்சாகமாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆயுதபூஜை வழிபாட்டில் முக்கிய இடம் பெறுவது அவல், பொரி, கடலை ஆகியவை ஆகும்.

    இதை முன்னிட்டு திண்டுக்கல் உழவர் சந்தை, நாகல்நகர், மெயின்ரோடு, கடைவீதி, மேற்கு ரதவீதி, ஏ.எம்.சி. சாலை, காட்டாஸ்பத்திரி உள்ளிட்ட பகுதிகளில் சாலையோரத்தில் பூஜை பொருட்கள் விற்பனை விறுவிறுப்பாக விற்பனை நடந்தது. இதற்கு அடுத்து பூஜையில் பழங்களுக்கு முக்கிய இடம் பெறுகின்றன.

    இதனால் பல இடங்களில் தற்காலிக பழக்கடைகள் அமைக்கப்பட்டு இருந்தன. அவற்றில் ஆப்பிள், மாதுளை, கொய்யா, விளாம்பழம், ஆரஞ்சு, சாத்துக்குடி உள்பட அனைத்து வகையான பழங்களும் நேற்று விற்பனை செய்யப்பட்டன. இதுதவிர ஆயுதபூஜையில் வாழை கன்றுகள், மாவிலைகள் தோரணம் கட்டப்படும். எனவே விவசாயிகள் கிராமங்களில் இருந்து வாழை கன்றுகள், மாவிலைகள் விற்பனை செய்யப்பட்டது. பொரி படி ரூ. 10க்கும், நிலக்கடலை படி ரூ. 100க்கும் விற்கப்பட்டது. அதேபோல் வாழை மரம் ஜோடி ரூ.50, அவல் படி ரூ.80க்கும் விற்கப்பட்டது.

    இதனை வாங்க மக்கள் கடை வீதிகளில் குவிந்தனர். இதனால் விற்பனை களைகட்டியது . கடந்த புரட்டாசி மாதம் முழுவதும் மந்தமாக இருந்த வியாபாரம் இன்று சூடு பிடித்து விற்பனை நடைபெற்றது.

    ×