என் மலர்
நீங்கள் தேடியது "missing graduate youth recovered"
- அய்யலூர் அருகே உள்ள கோம்பை மலை கிராமத்தைச் சேர்ந்த பட்டதாரி வாலிபர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாயமானார்.
- மேலும் சமூக வலைதளங்களில் தகவல் பரிமாறி தேடி வந்தனர்.
வடமதுரை:
வடமதுரை அய்யலூர் அருகே உள்ள கோம்பை மலை கிராமத்தைச் சேர்ந்த சின்னத்தம்பி (22). பி.ஏ படித்துள்ளார். இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாயமானார்.
இதுகுறித்து அவரது உறவினர்கள் வடமதுரை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். மேலும் சமூக வலைதளங்களில் தகவல் பரிமாறி தேடி வந்தனர். மாயமான வாலிபரை போலீசார் தேடி வந்த நிலையில் இன்று அவரது வீட்டின் அருகே சில அடி தூரம் உள்ள கிணற்றில் இறந்து கிடந்தார்.
இது குறித்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போலீசார் உடலை கைப்பற்றி திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






