என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திண்டுக்கல்லில் கிரிக்கெட் போட்டியில் கங்குலி பாய்ஸ் அணி முதலிடம்
    X

    வெற்றி பெற்ற கங்குலி பாய்ஸ் அணியினரை படத்தில் காணலாம்.



    திண்டுக்கல்லில் கிரிக்கெட் போட்டியில் கங்குலி பாய்ஸ் அணி முதலிடம்

    • அடியனூத்து ஊராட்சியில் கங்குலி பாய்ஸ் கிரிக்கெட் கிளப்பின் சார்பில் 4ம் ஆண்டு கிரிக்கெட் திருவிழா நடந்தது.
    • இதில் அடியனூத்து கங்குலி பாய்ஸ் அணியினர் வெற்றி பெற்றனர்.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் மாவட்டம் அடியனூத்து ஊராட்சியில் கங்குலி பாய்ஸ் கிரிக்கெட் கிளப்பின் சார்பில் 4ம் ஆண்டு கிரிக்கெட் திருவிழா நடந்தது. இதில் திண்டுக்கல், வத்தலகுண்டு, பழனி, தேனி, திருச்சி, மதுரை என மொத்தம் 36 அணிகள் கலந்து கொண்டன. இதில் அடியனூத்து கங்குலி பாய்ஸ் அணியினரும் ஆர்.எம்.காலனி ஏ.எம்.சி.சி.அணியினரும் இறுதிப்போட்டியில் மோதினர்.

    இதில் அடியனூத்து கங்குலி பாய்ஸ் அணியினர் வெற்றி பெற்றனர். நிகழ்ச்சியில் அடியனூத்து ஊராட்சி மன்றத்தலைவர் ஜீவானந்தம், துணைத் தலைவர் ஜெயராமன், அ.தி.மு.க ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் யூசுப் அன்சாரி, விஜய் மக்கள் இயக்கத்தின் வர்த்தக அணியின் மாவட்டத்தலைவர் மகராஜ் விக்கி, அடியனூத்து ஊராட்சி மன்ற உறுப்பினர் சதிஸ்குமார் ஆகியோர் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினர்.போட்டிக்கான ஏற்பாடுகளை கங்குலி பாய்ஸ் அணியினர் செய்திருந்தனர்.

    Next Story
    ×