என் மலர்
திண்டுக்கல்
- கடந்த சில நாட்களாக டிரான்ஸ்பார்மர் முறையாக பராமரிக்கப்படாததால் அதனை சுற்றி முட்புதர்கள் சூழ்ந்துள்ளது.
- போலீசார் மட்டுமல்லாது புகார் அளிக்கவரும் பொது மக்களும் இதனால் பாதிக்கப்படுகின்றனர்.
நிலக்கோட்டை:
நிலக்கோட்டை-பெரியகுளம் சாலையில் டி.எஸ்.பி அலுவலகம், அனைத்து மகளிர் போலீஸ் நிலையம், நிலக்கோட்டை போலீஸ் நிலையம் அமை ந்துள்ளது. இப்பகுதியில் மின்வினியோகம் செய்ய ப்படு வதற்காக டிரான்ஸ்பார்மர் அமைக்க ப்பட்டது.
இதையொட்டி ஜார்ஜ்பு ரம் பகுதியில் இருந்து நால்ரோடு வரை சாக்கடை கால்வாய் உள்ளது. கடந்த சில நாட்களாக டிரான்ஸ்பார்மர் முறையாக பராமரிக்கப்படாததால் அதனை சுற்றி முட்புதர்கள் சூழ்ந்துள்ளது. இந்த புதர்கள் பாம்பு, விஷஜந்துகளின் கூடாரமாக உள்ளது.
சாக்கடை கால்வாய் முறையாக தூர்வாரப்படவி ல்லை. இதனால் மழை பெய்யும்போது சாக்கடை நீர் அலுவலகத்திற்குள் புகுந்துவிடுகிறது. போலீசார் மட்டுமல்லாது புகார் அளிக்கவரும் பொது மக்களும் இதனால் பாதிக்கப்படுகின்றனர். எனவே டிரான்ஸ்பார்மரை சுற்றியுள்ள முட்புதர்களை அகற்றவேண்டும். சாக்கடை கால்வாயை முறையாக தூர்வார வேண்டும் என சமூகஆர்வலர்கள் கோரி க்கை விடுத்துள்ளனர்.
- வீட்டில் நல்லபாம்பு புகுந்ததை பார்த்த அவர் நத்தம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
- ன்னர் அந்த பாம்பு நத்தம் வனத்துறையினரிடம் ஒப்படைக்கபட்டு வனப்பகுதிக்குள் விடப்பட்டது.
நத்தம்:
நத்தம் அண்ணாநகரை சேர்ந்தவர் முகமது யூசுப்.(45) மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது வீட்டில் நல்லபாம்பு புகுந்தது. இதை பார்த்த அவர் நத்தம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற நத்தம் தீயணைப்பு நிலைய அலுவலர் லெட்சுமணன் உள்ளிட்ட தீயணைப்பு வீரர்கள் வீட்டில் ஊர்ந்து சென்று கொண்டிருந்த 6 அடி நீளமுள்ள நல்லபாம்பை லாவகமாக கருவி மூலம் பிடித்தனர். பின்னர் அந்த பாம்பு நத்தம் வனத்துறையினரிடம் ஒப்படைக்கபட்டு வனப்பகுதிக்குள் விடப்பட்டது.
- சுதந்திரம் பெற்றபோது திருவாவடுதுறை ஆதீனத்திடம் இருந்துதான் செங்கோல் பெறப்பட்டது.
- புதிய பாராளுமன்ற வளாகத்தில் செங்கோல் நிறுவப்பட்டுள்ளது தமிழர்கள் பெருமைப்படும் விஷயமாகும்.
திண்டுக்கல்:
திண்டுக்கல்-பழனி ரோட்டில் அமைந்துள்ள செல்லாண்டி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நாளை (27-ந் தேதி) நடைபெற உள்ளது. இதற்காக யாக சாலை பூஜைகள் நடைபெற்று வருகிறது. இதில் திருவாவடுதுறை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பராமாச்சாரியர் சுவாமிகள் கலந்து கொண்டார். பின்னர் அவர் பக்தர்களிடையே சொற்பொழிவாற்றினார். பின்னர் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
சுதந்திரம் பெற்றபோது திருவாவடுதுறை ஆதீனத்திடம் இருந்துதான் செங்கோல் பெறப்பட்டது. 75 ஆண்டுகளுக்கு பின் பிரதமர் மோடியின் பெரும் முயற்சிக்கு பின் மீண்டும் அந்த செங்கோலுக்கு புத்துயிர் கிடைத்துள்ளது.
புதிய பாராளுமன்ற வளாகத்தில் செங்கோல் நிறுவப்பட்டுள்ளது தமிழர்கள் பெருமைப்படும் விஷயமாகும். இதன் காரணமாக செங்கோல் ஆட்சி மீண்டும் வந்துள்ளது. 3-வது முறையாக மோடி பிரதமர் ஆவது நிச்சயம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- திண்டுக்கல் மாவட்ட த்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் வருகிற 1-ந்தேதி உள்ளாட்சிகள் தினத்தன்று கிராம சபைக் கூட்டம் காலை 11 மணி அளவில் நடைபெற உள்ளது.
- கிராம சபைக் கூட்டத்தில் வழக்கமான விவாதப் பொருட்கள் தவிர இதர பொருட்கள் குறித்து விவாதிக்கப்படும்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்ட த்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் வருகிற 1-ந்தேதி உள்ளாட்சிகள் தினத்தன்று கிராம சபைக் கூட்டம் காலை 11 மணி அளவில் நடைபெற உள்ளது.
கிராம சபைக் கூட்டத்தில் வழக்கமான விவாதப் பொருட்கள் தவிர, கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம், கிராம ஊராட்சியின் தணி க்கை அறிக்கை, சுத்தமான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்வது, இணையவழி மனைப்பிரிவு மற்றும் கட்டிட அனுமதி வழங்குதல், அயோடின் கலந்த உப்பை பயன்படுத்துதல், கிராம வளர்ச்சி திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், பிரதம மந்திரி ஊரகக் குடியிருப்புத் திட்டம், அனைவருக்கும் வீடு கணக்கெடுப்பு, தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), திறந்த வெளியில் மலம் கழித்தலற்ற நிலையை தக்க வைத்தல், திடக்கழிவு மேலாண்மை நடவடிக்கை கள், பிளாஸ்டிக்கை தவிர்த்து பொருட்கள் பயன்படுத்து வதை ஊக்குவித்தல், பிளாஸ்டிக் கழிவு மேலா ண்மை குறித்த விழிப்பு ணர்வு, பொது அறிவிப்புகள், ஜல் ஜீவன் இயக்கம், மாற்றுத் திறனாளிகளுக்கான கணக்கெடுப்பு உரிமைகள் திட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் குறித்து விவாதித்தல் மற்றும் இதர பொருட்கள் குறித்து விவாதிக்கப்படும்.
எனவே, ஊராட்சிப் பகுதியில் உள்ள மக்கள் கிராம சபைகளில் தவறாது கலந்து கொண்டு விவாத த்தில், தங்களது கருத்து க்களை தெரிவிக்கலாம் என மாவட்ட கலெக்டர் பூங்கொடி தெரிவித்து ள்ளார்.
- ரூ.6.06 கோடி மதிப்பீட்டில் தடுப்புச்சு வருடன் கூடிய மழைநீர் வடிகால் மற்றும் பாலம் அமைக்கும் பணிகளை அமைச்சர் அர.சக்கரபாணி தொடங்கி வைத்தார்.
- மரங்களை வளர்ப்ப தால் சுற்றுசூழல் பாதிப்புகள் அகற்றப்பட்டு நமது வரு ங்கால சந்ததிகள் சுகாதார மான காற்றை சுவாசிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஒட்டன்சத்திரம்:
ஒட்டன்சத்திரம் நகராட்சி குழந்தை வேலப்பர் கோவில் மலைப்பாதையில் ரூ.8.68 கோடி மதிப்பீட்டில் அனைத்து வசதிகளுடன் கூடிய கிரிவலப்பாதை அமைக்கும் பணி நகராட்சி காந்திநகர் கிறிஸ்தவ ஆலயம் முதல் காமாட்சி யம்மன் கோவில் வழியாக சின்னக்குளம் வரை உள்ள ஓடையில் ரூ.6.06 கோடி மதிப்பீட்டில் தடுப்புச்சு வருடன் கூடிய மழைநீர் வடிகால் மற்றும் பாலம் அமைக்கும் பணிகளை அமைச்சர் அர.சக்கரபாணி தொடங்கி வைத்தார்.
மேலும் ஒட்டன்சத்திரம் உட்கோட்ட போலீஸ் அலுவலகத்தையும் திறந்து வைத்து அவர் பேசிய தாவது:-
தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டம் பெண்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று ள்ளது. இதில் விடுபட்ட பெண்கள் உரிய ஆவணங்க ளுடன் விண்ணப்பித்தால் அவர்களுக்கு அந்த தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
ஏற்கனவே மகளிருக்காக அரசு பஸ்களில் கட்டணம் இல்லா பயண சேவை வழங்கப்பட்டு வருகிறது. தமிழக அரசு 2 லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்க அனுமதி அளித்துள்ளது. அதில் 1.50 லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்க ப்பட்டு விட்டது. ஒட்ட ன்சத்திரத்தில் விவசாயிகள் உற்பத்தி செய்த பொரு ட்களை சேமித்து வைக்க ரூ.5 கோடி மதிப்பீட்டில் குளிர்சாதன கிடங்கு கட்டுமானப்பணிகள் முடிவடைந்துள்ளது. விரைவில் இது பயன்பாட்டு க்கு வரும். திண்டுக்கல் மாவட்டத்தில் நடப்பு ஆண்டி ல் 35 லட்சம் மரக்க ன்றுகள் நடவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு ள்ளது. மரங்களை வளர்ப்ப தால் சுற்றுசூழல் பாதிப்புகள் அகற்றப்பட்டு நமது வரு ங்கால சந்ததிகள் சுகாதார மான காற்றை சுவாசிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட எஸ்.பி. பாஸ்கரன், ஒட்டன்சத்திரம் நகர்மன்ற தலைவர் திருமலைசாமி, துணைத் தலைவர் வெள்ளைச்சாமி, ஆணை யாளர் மீனா, பொறியாளர் சக்திவேல் மற்றும் உள்ளா ட்சி அமைப்புகளின் பிரதி நிதிகள் கலந்து கொண்டனர்.
- பா.ஜ.க வின் கொள்கைகளால் அ.தி.மு.க.வுக்கு பாதிப்பு ஏற்பட்டதால் கூட்டணியை விட்டு வெளியே வந்து நாடாளுமன்றத் தேர்தலில் தனித்து 40 தொகுதிகளிலும் வெற்றி பெற தயாராகி வருகிறோம்.
- எதற்கெடுத்தாலும் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் திராவிட மாடல் என வார்த்தை ஜாலத்தால் ஏமாற்றுகிறார்.
நத்தம்:
நத்தம் அருகே கோபால்பட்டியில் உள்ள எம்.ஜி.ஆர்.திடலில் அ.தி.மு.க. 52-ம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நடந்தது. சாணார்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் ராமராசு தலைமை தாங்கினார். மாநில ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளர் கண்ணன் வரவேற்று பேசினார்.
இதில் ஒன்றிய செயலாளர்கள் சின்னு, சுப்பிரமணி, மணிகண்டன், முருகன், பொதுக்குழு உறுப்பினர் மேட்டுக்கடை செல்வராஜ், மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளர்கள் சுப்பிரமணி, ஜெயபாலன், மாவட்ட இளைஞரணி இணைச் செயலாளர் இளம்வழுதி, ஒன்றிய கவுன்சிலர்கள் ஹரிஹரன், ரமேஷ்பாபு, ஒன்றிய ஜெ. பேரவை செயலாளர் ராஜேந்திரன், இணைச் செயலாளர்கள் விஜயன், சேகர், நகர பேரவை செயலாளர் சேக்தாவூது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அ.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான நத்தம் விஸ்வநாதன் பேசியதாவது:-
கடந்த சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. வைத்த கூட்டணி தேர்தல் கூட்டணி மட்டுமே. கொள்கை கூட்டணி அல்ல. பா.ஜ.க வின் கொள்கைகளால் அ.தி.மு.க.வுக்கு பாதிப்பு ஏற்பட்டதால் கூட்டணியை விட்டு வெளியே வந்து நாடாளுமன்றத் தேர்தலில் தனித்து 40 தொகுதிகளிலும் வெற்றி பெற தயாராகி வருகிறோம்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. இதற்கு கவர்னர் மாளிகை முன்பு வீசப்பட்ட பெட்ரோல் வெடிகுண்டே சாட்சி. கவர்னரின் செயல்பாட்டில் மாற்று கருத்து இருந்தாலும் இத்தகைய நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாது. இதற்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். எதற்கெடுத்தாலும் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் திராவிட மாடல் என வார்த்தை ஜாலத்தால் ஏமாற்றுகிறார்.
தி.மு.க.தேர்தல் நேரத்தில் 520- க்கும் மேற்பட்ட வாக்குறுதிகள் கூறி அதில் 99 சதவீதத்தை நிறைவேற்றியதாக மக்களை ஏமாற்றி வருகிறது. இது போன்ற பித்தலாட்ட அரசியல் செய்வதற்கு பெயர் தான் தி.மு.க. திராவிட மாடல் ஆட்சியா? எண்ணற்ற வாக்குறுதிகளை கூறி அதனை நிறைவேற்றாமல் நம்பிக்கை துரோகம் செய்து விட்டதாக அரசு ஊழியர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பு மக்களும் இன்று ஆளும் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த ஆட்சியினால் பயன்பெற்றவர்கள் செல்லிங் எனும் சட்ட விரோத சாராயம் விற்பவர்களும், கட்டப்பஞ்சாயத்து செய்பவர்களும் மட்டுமே. இது போன்ற மக்கள் விரோத ஆட்சிதான் தமிழகத்தில் நடந்து வருகிறது. இதனால் மக்கள் தற்போது கடும் கோபத்தில் இந்த ஆட்சி மீது உள்ளனர். தேர்தல் வாக்குறுதியில் ஒரே கையெழுத்தில் நீட் தேர்வை ஒழிப்போம் என சொல்லிவிட்டு இப்போது 50 லட்சம் கையெழுத்து இயக்கம் என தமிழ்நாட்டை ஏமாற்றுகின்றனர்.
தி.மு.க.வும் அதன் கூட்டணி கட்சியான காங்கிரசும் சேர்ந்து தான் இந்த நீட் தேர்வையே கொண்டு வந்தனர். ஆனால் தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் ஒரே நாளில் நீட் தேர்வை ரத்து செய்வதாக கூறிவிட்டு, தற்போது நீட் தேர்வுக்கு எதிராக கையெழுத்து இயக்கம் நடத்துகிறோம் என்று மக்களை ஏமாற்றி வருகின்றனர். இதுபோன்று மக்களை பாதிக்கும் திட்டங்களை கொண்டு வந்து விட்டு, பின் அவர்களே இந்தத் திட்டத்தை ரத்து செய்வதாக கூறி ஏமாற்றுவதுதான் திராவிட மாடலா? இதே போல் கச்சத்தீவை தாரை வார்த்துவிட்டு, மீண்டும் அதனை மீட்பதாக கூறுகின்றனர். இது போல் பொய்யான வாக்குறுதிகளை கூறி வாயிலேயே வடை சுட்டு அதை காசாக்குவதுதான் தி.மு.க.வின் வேலை. இந்தத் திறமை யாருக்கும் வராது.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் பேச்சாளர்கள் அழகு, நடராஜன், சேகர், ஒன்றிய அவைத்தலைவர் பிறவிக் கவுண்டர், மாவட்ட கவுன்சிலர்கள் சின்னாக் கவுண்டர், பார்வதி, நகர அவைத்தலைவர் சேக்ஒலி, ஒன்றிய அவைத் தலைவர் அப்துல்ரஷீது, எம்.ஜி.ஆர். மன்ற துணைத்தலைவர் ஆசை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி துணைச்செயலாளர் சவரிமுத்து, நத்தம் வார்டு கவுன்சிலர்கள் சிவா, உமா மகேஸ்வரி, சுமதி செந்தில் குமார், விஜயவீரன், விவசாயப்பிரிவு இணைச்செயலாளர் ராஜேந்திரன், வழக்கறிஞர் பிரிவு இணைச்செயலாளர் துணைச் செயலாளர் ராமநாதன், அம்சவள்ளி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் சந்தானகிருஷ்ணன் நன்றி கூறினார்.
- கொசவபட்டி மற்றும் செங்குறிச்சி துணைமின்நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
- மாதாந்திர பராமரிப்புகள் நடைபெற உள்ளதால் நாளை காலை 9 மணிமுதல் மதியம் 2 மணிவரை மின்வினியோகம் இருக்காது.
திண்டுக்கல்:
கொசவபட்டி துணைமின்நிலையத்தில் நாளை (26-ந்தேதி) காலை 9 மணிமுதல் மதியம் 2 மணிவரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே கொசவபட்டி, செம்மடைப்பட்டி, கொழுஞ்சிபட்டி, தொட்டியபட்டி, சட்டகாரன்பட்டி, எமக்கலாபுரம், கைலாசம்பட்டி, வேலாம்பட்டி, சாணார்பட்டி, ராமன்செட்டியபட்டி, கோணப்பட்டி, நத்தமாடிப்பட்டி, பஞ்சம்பட்டி, ராகலாபுரம், வீரசின்னம்பட்டி, கல்லுப்பட்டி, தவசிமடை, விராலிபட்டி, நொச்சிஓடைப்பட்டி, வடகாட்டுபட்டி, குரும்பபட்டி, கவராயபட்டி, கூவனூத்து மற்றும் அதன்சுற்றுவட்டார பகுதிகளில் மின்வினியோகம் நிறுத்தப்படுகிறது.
இதேபோல் செங்குறிச்சி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புகள் நடைபெற உள்ளதால் நாளை காலை 9 மணிமுதல் மதியம் 2 மணிவரை செங்குறிச்சி, சிலுவத்தூர், ராஜக்காபட்டி, புகையிலைப்பட்டி, வி.எஸ்.கோட்டை, மார்க்கம்பட்டி, வி.மேட்டுப்பட்டி, தேத்தாம்பட்டி, கம்பிளியம்பட்டி, காட்டுப்பட்டி, எஸ்.குரும்பபட்டி மற்றும் அதன்சுற்றுவட்டார பகுதிகளில் மின்வினியோகம் நிறுத்தப்படும் என உதவிசெயற்பொறியாளர் மணிகண்டன் தெரிவித்துள்ளார்.
- மானாவாரிப் பயிர்கள் விளையும் அளவுக்கு கூட மழை பெய்யுமா? என்ற வகையில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது.
- இந்த நிலையில் அவ்வபோது பரவலாக மழை பெய்ததால் கம்பு, சோளம் உள்ளிட்ட பயிர்கள் நன்றாக வளர்ச்சி அடைந்தது.
நிலக்கோட்டை:
நிலக்கோட்டை பகுதியில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சாரல் மழை பெய்தது. இந்த மழையை பயன்படுத்தி விவசாயிகள் மற்றும் கால்நடை வைத்திருப்போர் தங்களது நிலங்களில் கம்பு, சோளம்,எள்ளு, தட்டாம் பயிறு, பாசிப்பயிறு, துவரம் பயறு உள்ளிட்ட மானாவாரி பயிர்களை சாகுபடி செய்தனர்.
அவ்வாறு செய்த மானாவாரிப் பயிர்கள் விளையும் அளவுக்கு கூட மழை பெய்யுமா? என்ற வகையில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது. இந்த நிலையில் அவ்வபோது பரவலாக மழை பெய்ததால் கம்பு, சோளம் உள்ளிட்ட பயிர்கள் நன்றாக வளர்ச்சி அடைந்தது.
இதன் காரணமாக கால்நடைகளுக்கு தேவையான கம்பு, சோளம்,புல் உள்ளிட்ட பல்வேறு தீவனங்கள் நன்றாக வளர்ந்ததால் விவசாயிகள், கால்நடை வளர்ப்பவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- மேளதாளம் முழங்க வாகனத்தில் இறந்த கோவில் காளை எடுத்து செல்லப்பட்டு கோவில் மந்தை அருகில் அடக்கம் செய்யப்பட்டது.
- கிராமத்திற்கு பெருமை சேர்த்த கோவில்காளை இறந்ததால் கிராம மக்கள் சோகத்தில் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
நத்தம்:
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சிறுகுடி ஊராட்சிக்குட்பட்ட நல்லகண்டம் சின்ன அய்யனார்சுவாமி கோவில் ஜல்லிக்கட்டு காளை உடல் நலக்குறைவால் உயிரிழந்தது. அதற்கு கிராம மக்கள் ஒன்றுகூடி இறுதி அஞ்சலி செலுத்தினர்.
நல்லகண்டம் கோவில்மாடு கிராமத்தின் சார்பாக ஜல்லிக்கட்டுகாளையாக வளர்க்கப்பட்டு வந்தது. இந்த காளைக்கு வயது 22. அலங்காநல்லூர், பாலமேடு, சிவகங்கை, கொசவபட்டி, தவசிமடை, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் பங்கேற்று தங்கம், வெள்ளி, காசுகள் மற்றும் பல்வேறு பரிசுகளையும் பெற்று வீரர்களுக்கு சவால் விட்டு பெயர், புகழ் பெற்று கிராமத்திற்கு பெருமை சேர்த்து தந்தது.
கோவில் காளை உடல்நிலை குறைவால் உயிரிழந்ததை தொடர்ந்து சின்ன அய்யனார் கோவில் காளைக்கு சிறுகுடி ஊராட்சி சுற்றுவட்டார கிராமமக்கள் ஒன்றுகூடி வேஷ்டி, துண்டுகள், மாலைகள் அணிவித்து சந்தனம் பூசி இறுதி அஞ்சலி செலுத்தினர். பின்னர் மேளதாளம் முழங்க வாகனத்தில் இறந்த கோவில் காளை எடுத்து செல்லப்பட்டு கோவில் மந்தை அருகில் அடக்கம் செய்யப்பட்டது. கிராமத்திற்கு பெருமை சேர்த்த கோவில்காளை இறந்ததால் கிராம மக்கள் சோகத்தில் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
- விஜயதசமி நாளில் குழந்தைகளை பள்ளியில் சேர்த்தால் அவர்களது கல்வி, ஞானம் சிறக்கும் என்பது ஐதீகம்.
- பின்னர் குழந்தையின் நாக்கில் தேனை தடவி நெல்மணிகளில் பிள்ளையார் சுழி போட்டு பின்னர் அகர வரிசை எழுத்துக்களை எழுத வைத்தனர்.
திண்டுக்கல்:
விஜயதசமி நாளில் குழந்தைகளை பள்ளியில் சேர்த்தால் அவர்களது கல்வி, ஞானம் சிறக்கும் என்பது ஐதீகம்.
அதன்படி இன்று பெரும்பாலான ஆரம்ப பள்ளிகளில் குழந்தைகளை பள்ளியில் சேர்த்து வித்யாரம்பத்தை பெற்றோர்கள் தொடங்கினர்.
கல்விக்கடவுளான சரஸ்வதி தேவிக்கு சிறப்பு பூஜைகள் செய்து குழந்தைகளை அதன்முன் அமரவைத்தனர். பின்னர் குழந்தையின் நாக்கில் தேனை தடவி நெல்மணிகளில் பிள்ளையார் சுழி போட்டு பின்னர் அகர வரிசை எழுத்துக்களை எழுத வைத்தனர். தாடிக்கொம்பு சாலையில் உள்ள காமராஜர் வித்யாலயா பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைவர் சவுந்திர பாண்டியன், தாளாளர் ஹரிகரன் என்ற மணி கண்டன், பொருளாளர் ஈஸ்வரன், முதல்வர் ஜெர்த் நவநீதம் மற்றும் உறவின்முறை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தாடிக்கொம்பு நேருவித்யாலயா நர்சரி பள்ளியில் தாளாளர் சேசுதாஸ் முன்னிலையில் மாணவர் சேர்க்கை நடைபெற்றது. இதேபோல் எஸ்.எல்.வி பள்ளியில் தாளாளர் சந்திரசேகரன், செயலாளர் சரண்யா, ஸ்ரீராம், முதல்வர் ரேவதி ஆகியோர் முன்னிலையில் மாணவர் சேர்க்கை நடைபெற்றது.
இதுமட்டுமின்றி திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் உள்பட பல்வேறு கோவில்களிலும் நெல்மணிகளில் தங்கள் குழந்தைகளை அகர வரிசை எழுத்துக்களை எழுத வைத்தனர்.
- சாய்பாபாவின் 105வது மகா சமாதி தினம், விஜயதசமி விழா நடந்தது.
- கோவிலுக்கு வந்த அனைத்து பக்தர்களும் சாய்பாபாவிற்கு விபூதி அபிஷேகமும், பாலாபிஷேகமும் செய்து சாமி தரிசனம் செய்தனர்.
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் நாகல் நகர் பாரதிபுரத்தில் சீரடி சாய்பாபா கோவில் உள்ளது. இங்கு சாய்பாபாவின் 105வது மகா சமாதி தினம், விஜயதசமி விழா நடந்தது. கோவிலுக்கு வந்த அனைத்து பக்தர்களும் சாய்பாபாவிற்கு விபூதி அபிஷேகமும், பாலாபிஷேகமும் செய்து சாமி தரிசனம் செய்தனர்.
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சாய்பாபா கோவில் நிர்வாகி சாய் முருகன் மற்றும் நிர்வாகத்தினர் செய்திருந்தனர். பாட்ஷா,குமார், கோகு லகிருஷ்ணன் உள்பட சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அன்ன தானம் வழங்கப்பட்டது.
- வீட்டின் கீழ்தளத்தில் 5 வீடுகளும், மேல்தளத்தில் 4 வீடுகளும் வாடகைக்கு விட்டுள்ளார்.
- இந்த வீட்டில் திடீரென மேல்தள வீடுகளுக்கு முன்பிருந்த கான்கிரீட் சிலாப் உடைந்து கீழேவிழுந்தது.
வடமதுரை:
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் அருகே வசித்து வருபவர் திருப்பதி. இவர் வீட்டின் கீழ்தளத்தில் 5 வீடுகளும், மேல்தளத்தில் 4 வீடுகளும் வாடகைக்கு விட்டுள்ளார்.
இந்த வீட்டில் திடீரென மேல்தள வீடுகளுக்கு முன்பிருந்த கான்கிரீட் சிலாப் உடைந்து கீழேவிழுந்தது. அப்போது அந்த வழியாக நடந்து சென்ற விஜயா என்பவர் காயமடைந்தார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
கான்கிரீட் சுவர் விழுந்ததால் மாடியில் குடியிருந்த 2 குடும்பத்தினர் வெளியே வரமுடியாமல் தவித்தனர். உடனடியாக வேடசந்தூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் அங்கு வந்து 2 குடும்பத்தினரையும் மீட்டு வெளியே கொண்டு வந்தனர். இந்த விபத்துகுறித்து வடமதுரை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.






