search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Grivala road with all facilities"

    • ரூ.6.06 கோடி மதிப்பீட்டில் தடுப்புச்சு வருடன் கூடிய மழைநீர் வடிகால் மற்றும் பாலம் அமைக்கும் பணிகளை அமைச்சர் அர.சக்கரபாணி தொடங்கி வைத்தார்.
    • மரங்களை வளர்ப்ப தால் சுற்றுசூழல் பாதிப்புகள் அகற்றப்பட்டு நமது வரு ங்கால சந்ததிகள் சுகாதார மான காற்றை சுவாசிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    ஒட்டன்சத்திரம்:

    ஒட்டன்சத்திரம் நகராட்சி குழந்தை வேலப்பர் கோவில் மலைப்பாதையில் ரூ.8.68 கோடி மதிப்பீட்டில் அனைத்து வசதிகளுடன் கூடிய கிரிவலப்பாதை அமைக்கும் பணி நகராட்சி காந்திநகர் கிறிஸ்தவ ஆலயம் முதல் காமாட்சி யம்மன் கோவில் வழியாக சின்னக்குளம் வரை உள்ள ஓடையில் ரூ.6.06 கோடி மதிப்பீட்டில் தடுப்புச்சு வருடன் கூடிய மழைநீர் வடிகால் மற்றும் பாலம் அமைக்கும் பணிகளை அமைச்சர் அர.சக்கரபாணி தொடங்கி வைத்தார்.

    மேலும் ஒட்டன்சத்திரம் உட்கோட்ட போலீஸ் அலுவலகத்தையும் திறந்து வைத்து அவர் பேசிய தாவது:-

    தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டம் பெண்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று ள்ளது. இதில் விடுபட்ட பெண்கள் உரிய ஆவணங்க ளுடன் விண்ணப்பித்தால் அவர்களுக்கு அந்த தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    ஏற்கனவே மகளிருக்காக அரசு பஸ்களில் கட்டணம் இல்லா பயண சேவை வழங்கப்பட்டு வருகிறது. தமிழக அரசு 2 லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்க அனுமதி அளித்துள்ளது. அதில் 1.50 லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்க ப்பட்டு விட்டது. ஒட்ட ன்சத்திரத்தில் விவசாயிகள் உற்பத்தி செய்த பொரு ட்களை சேமித்து வைக்க ரூ.5 கோடி மதிப்பீட்டில் குளிர்சாதன கிடங்கு கட்டுமானப்பணிகள் முடிவடைந்துள்ளது. விரைவில் இது பயன்பாட்டு க்கு வரும். திண்டுக்கல் மாவட்டத்தில் நடப்பு ஆண்டி ல் 35 லட்சம் மரக்க ன்றுகள் நடவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு ள்ளது. மரங்களை வளர்ப்ப தால் சுற்றுசூழல் பாதிப்புகள் அகற்றப்பட்டு நமது வரு ங்கால சந்ததிகள் சுகாதார மான காற்றை சுவாசிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் மாவட்ட எஸ்.பி. பாஸ்கரன், ஒட்டன்சத்திரம் நகர்மன்ற தலைவர் திருமலைசாமி, துணைத் தலைவர் வெள்ளைச்சாமி, ஆணை யாளர் மீனா, பொறியாளர் சக்திவேல் மற்றும் உள்ளா ட்சி அமைப்புகளின் பிரதி நிதிகள் கலந்து கொண்டனர்.

    ×