வடமதுரை அருகே கான்கிரீட் சுவர் இடிந்து விழுந்து பெண் காயம்

வீட்டின் கீழ்தளத்தில் 5 வீடுகளும், மேல்தளத்தில் 4 வீடுகளும் வாடகைக்கு விட்டுள்ளார்.இந்த வீட்டில் திடீரென மேல்தள வீடுகளுக்கு முன்பிருந்த கான்கிரீட் சிலாப் உடைந்து கீழேவிழுந்தது.
சுவர் இடிந்துவிழுந்துகிடக்கும் காட்சி.
சுவர் இடிந்துவிழுந்துகிடக்கும் காட்சி.
Published on

வடமதுரை:

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் அருகே வசித்து வருபவர் திருப்பதி. இவர் வீட்டின் கீழ்தளத்தில் 5 வீடுகளும், மேல்தளத்தில் 4 வீடுகளும் வாடகைக்கு விட்டுள்ளார்.

இந்த வீட்டில் திடீரென மேல்தள வீடுகளுக்கு முன்பிருந்த கான்கிரீட் சிலாப் உடைந்து கீழேவிழுந்தது. அப்போது அந்த வழியாக நடந்து சென்ற விஜயா என்பவர் காயமடைந்தார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

கான்கிரீட் சுவர் விழுந்ததால் மாடியில் குடியிருந்த 2 குடும்பத்தினர் வெளியே வரமுடியாமல் தவித்தனர். உடனடியாக வேடசந்தூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் அங்கு வந்து 2 குடும்பத்தினரையும் மீட்டு வெளியே கொண்டு வந்தனர். இந்த விபத்துகுறித்து வடமதுரை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com