என் மலர்tooltip icon

    திண்டுக்கல்

    • கூட்ட நெரிசலை பயன்படுத்தியும், தனியாக நடந்து செல்லும் பெண்கள், மூதாட்டிகளை குறிவைக்கும் வழிப்பறி சம்பவங்களும் நடந்து வருகின்றன.
    • இதனை தடுக்க போலீசார் தகுந்த முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

    திண்டுக்கல்:

    தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 2 வாரங்களே உள்ள நிலையில் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான ஜவுளி மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் ஆகியவற்றை வாங்குவதில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    இதனால் கடைவீதி, பஸ்நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. வருகிற 1ம் தேதிக்கு பிறகு மக்கள் கூட்டம் மேலும் அதிகரிக்கும். இதனிடையே கூட்ட நெரிசலை பயன்படுத்தியும், தனியாக நடந்து செல்லும் பெண்கள், மூதாட்டிகளை குறிவைக்கும் வழிப்பறி சம்பவங்களும் நடந்து வருகின்றன. எனவே இதனை தடுக்க போலீசார் தகுந்த முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

    திண்டுக்கல் ஜி.டி.என். சாலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணை பின்தொடர்ந்து வந்த ஒரு மர்ம கும்பல் கண்ணிமைக்கும் நேரத்தில் அவர் கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலியை பறித்துச் சென்றனர். இதேபோல் கலெக்டர் அலுவலக சாலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அடுத்தடுத்து 2 பேரிடம் வழிப்பறி செய்யப்பட்டது.

    பண்டிகை நெருங்கும் சமயங்களில் வேலை முடித்து தாமதமாக வீட்டிற்கு வரும் நபர்கள், வெளியூர் சென்று வரும் நபர்கள் ஆகியோரை குறிவைத்து இதுபோன்ற திருட்டு, வழிப்பறி சம்பவங்கள் நடத்தப்பட்டு வருகின்றனர். இதுதவிர புறநகர் பகுதிகளில் பூட்டியிருக்கும் வீடுகளை நோட்டமிட்டும் கொள்ளையடிக்க வாய்ப்புள்ளது. பண்டிகை சமயங்களில் வடமாநில தொழிலாளர்கள் அதிக அளவு நகர் பகுதியில் சுற்றி வருவதை பார்க்க முடிகிறது.

    குறைந்த அளவு முதலீடு கொண்டு சில பொருட்களை பைக்கில் வைத்து வியாபாரம் செய்வது போல பல்வேறு பகுதிகளில் சுற்றி வருகின்றனர். இவர்களின் இருப்பிடம், பெயர் விவரம் போன்றவற்றை போலீசார் கண்டறிய வேண்டும். வியாபாரிகள் போல சுற்றிக்கொண்டு திருட்டு, வழிப்பறியில் ஈடுபடும் வாய்ப்பு உள்ளது. இதுமட்டுமின்றி பஸ்நிலையம் உள்பட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கண்காணிப்பு காமிராக்கள் குறைவாகவே உள்ளது. இதனை சரியாக அறிந்து அதுபோன்ற இடங்களில் தங்கள் கைவரிசையை காட்டும் சம்பவமும் நடந்து வருகிறது.

    எனவே இதுபோன்ற குற்றச்சம்பவங்களை தடுத்து நிறுத்த போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    • ஒரு வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக எஸ்.பி தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • அவரிடம் இருந்து 25 கிலோ கஞ்சா, மோட்டார் சைக்கிள் மற்றும் செல்போனை பறிமுதல் செய்தனர்.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் அருகே நந்தவனப்பட்டி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக எஸ்.பி தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.அதன் பேரில் தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெ க்டர் அழகு பாண்டி தலை மையிலான தனிப்படை போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினர்.

    அதில் சின்ன அய்யன்குளத்தைச் சேர்ந்த முருகன் மகன் ஜீவானந்தம் (37) தனது வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரிய வந்தது.இதையடுத்து அவரை மடக்கி பிடித்து தாடி க்கொம்பு போலீஸ் நிலை யத்தில் ஒப்படைத்தனர்.இதுகுறித்து தாடிக்கொம்பு போலீசார் வழக்கு பதிவு செய்து,அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 25 கிலோ கஞ்சா, மோட்டார் சைக்கிள் மற்றும் செல்போனை பறிமுதல் செய்தனர்.

    • விழாவினை முன்னிட்டு சுத்தி புண்யாக வாசனம், பிரவேசபலி, வாஸ்த்து சாந்தி பூஜை, அஷ்டதிக் பாலகர்கள் பூஜைகள் நடைபெற்றது.
    • தொடர்ந்து பல்வேறு பூஜைகள் செய்யப்பட்ட புனித நீரை கோவில் கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர்.

    செம்பட்டி:

    திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே ஆத்தூர் நந்தனார் தெருவில் உள்ள வண்டிகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவினை முன்னிட்டு சுத்தி புண்யாக வாசனம், பிரவேசபலி, வாஸ்த்து சாந்தி பூஜை, அஷ்டதிக் பாலகர்கள் பூஜைகள் நடைபெற்றது.

    நேற்று மாலை 7.30 மணிக்கு மேல் யாக சாலையில் தோரண பூஜை. சிவசக்தி வழிபாடு, யாகசாலை பரிவார தேவதைகள் பூஜை, வேதிகை, ரக்சாபந்தனம், காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. 2-வது நாளாக சின்ன வண்டி காளியம்மன் மற்றும் சிம்ம வாகனத்திற்கும் யந்திர பிரதிஷ்ட்டை மற்றும் அஷ்டபந்தன சாற்று நிகழ்ச்சி நடைபெற்றது.

    அதனை தொடர்ந்து பல்வேறு பூஜைகள் செய்யப்பட்ட புனித நீரை கோவில் கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். தொடர்ந்து கோவில் வளாகம் முழுவதும் கூடிருந்த பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக வந்து சாமி தரிசனம் செய்தனர்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை நந்தனார் தெரு கிழக்குப் பகுதியில் உள்ள ஊர்பொதுமக்கள் மற்றும் நந்தனார் கிழக்குத் தெரு இளைஞர் அணியினர் செய்திருந்தனர். விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    • ஆத்திரமடைந்த மாணவர்கள் ஆசிரியரையும் தகாத வார்த்தைகளால் திட்டினர்.
    • விசாரிக்கப்படும் என கல்விஅலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    பெரும்பாறை:

    கொடைக்கானல் கீழ்மலை பெரும்பாறை அருகே உள்ள பண்ணைக்காடு அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 மாணவர்கள் 2 கோஷ்டியாக பிரிந்து தகராறு செய்தனர். இதில் இருதரப்பு மாணவர்களும் மதுபோதையில் கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் பள்ளி வளாகத்திலேயே சுற்றி திரிந்தனர்.

    இதைபார்த்த ஒரு ஆசிரியர் மாணவர்களை கண்டித்தார். இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் ஆசிரியரையும் தகாத வார்த்தைகளால் திட்டினர். இதுகுறித்து ஆசிரியர் தாண்டிக்குடி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது மாணவர்களின் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கப்படும் என ஆசிரியரிடம் முறையிட்டதால் அவர் புகாரை வாபஸ் பெற்றார்.

    இருப்பினும் போலீசார் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட மாணவர்களை எச்சரித்து விடுவித்தனர். இதுகுறித்து விசாரிக்கப்படும் என கல்விஅலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • திண்டுக்கல் வழியாக நாள் ஒன்றுக்கு ஒரு ரெயில் மட்டுமே பெங்களூரு செல்கிறது.
    • மேலும் பகல் நேரத்தில் செல்லக்கூடிய பாசஞ்சர் விரைவு ரெயில் ஒன்றும் இயக்க அறிவிப்பு வெளியிட வேண்டும்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் வர்த்தகர் சங்கம் சார்பில் தென்னக ரெயில்வே பொதுமேலாளர் மற்றும் டிவிஷனல் மேனேஜர் ஆகியோருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது,

    திண்டுக்கல் மாவட்டம் தென் தமிழகத்தின் வளர்ந்து வரும் தொழில் நகரமாக உள்ளது. திண்டுக்கல்லை சுற்றி 30 கி.மீ. சுற்றளவில் உள்ள பகுதிகளில் தொழி ல்துறை, ஐ.டி. நிறுவனங்கள் சம்மந்தமாக வேலை வாய்ப்புகள் அதிகமாக உருவாகி வருகிறது. திண்டுக்கல் வழியாக நாள் ஒன்றுக்கு ஒரு ரெயில் மட்டுமே பெங்களூரு செல்கிறது. அதிலும் 95 சதவீதம் 1 சீட் கூட கிடைப்ப தில்லை.

    இதனால் பெரும்பாலானோர் அதிக பணம் கொடுத்து பஸ்சில் செல்ல வேண்டியுள்ளது. இதனால் தேவையற்ற வீண் செலவும், கால விரையமும் ஏற்படு கிறது. எனவே திண்டுக்கல் வழியாக பெங்களூரு செல்ல வந்தேபாரத் ரெயிலை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பகல் நேரத்தில் செல்லக்கூடிய பாசஞ்சர் விரைவு ரெயில் ஒன்றும் இயக்க அறிவிப்பு வெளியிட வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

    • வேளாண்மை துறையின் கீழ் செயல்படும் அட்மா திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு பண்ணை பள்ளி பயிற்சி ஒரு தோட்டத்தில் நடைபெற்றது.
    • இந்த பயிற்சியில் விவசாயிகளுக்கு நிலக்கடலை பயிரில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை குறித்து விளக்கமாகவும் தெளிவாகவும் எடுத்துக் கூறினார்.

    வேடசந்தூர்:

    வேடசந்தூர் வட்டாரம் வேளாண்மை துறையின் கீழ் செயல்படும் அட்மா திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு பண்ணை பள்ளி பயிற்சி மாரம்பாடி ஆரோக்கியம் தோட்டத்தில் நடைபெற்றது. இந்த பயிற்சியில் புகையிலை ஆராய்ச்சி நிலைய முதன்மை விஞ்ஞானி மணிவேல் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு நிலக்கடலை பயிரில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை குறித்து விளக்கமாகவும் தெளிவாகவும் எடுத்துக் கூறினார்.

    பயிற்சி ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் ராமசாமி. அட்மா திட்ட உதவி தொழில்நுட்ப மேலாளர் உதயகுமார் செய்திருந்தார். இப்பயிற்சியில் 25க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் ராஜேந்திரன் நன்றி கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
    • ஞாயிறுக்கிழமை காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டு சந்திர கிரகண தோஷ நிவர்த்திக்கு பின் வழக்கம் போல் பூஜைகள் நடைபெறும்.

    திண்டுக்கல்:

    அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவில் தினமும் காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டு 6 கால பூஜைகள் நடக்கிறது. மாத கிருத்திகை உள்ளிட்ட விசேஷ நாட்களில் மட்டும் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்படுகிறது.

    மேலும் சூரிய கிரகணம், சந்திர கிரகணம் நிகழும் நாட்களின்போது பழனி முருகன் கோவில் மற்றும் அதன் உபகோவில்களில் பூஜை நேரம் மாற்றப்படுவது வழக்கம்.

    அதன்படி நாளை (28-ந்தேதி) நள்ளிரவு 1.05 மணி முதல் 2.23 மணி வரை சந்திர கிரகணம் நிகழ்கிறது. இதனால் அன்றைய தினம் பழனி முருகன் கோவில் உள்பட அனைத்து உபகோவில்களிலும் இரவு 8 மணிக்கு அர்த்தஜாம பூஜை செய்து நடை சாத்தப்படும். சந்திர கிரகணம் முடிந்ததும் அனைத்து கோவில்களிலும் சுத்தம் செய்யப்படும். பின்னர் மறுநாள் (29-ந்தேதி) அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு கலச பூஜை, கலச அபிஷேகம், நைவேத்தியம், தீபாராதனை மற்றும் நித்ய பூஜைகள் நடைபெறும் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    இதே போல் திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் நாளை மாலை 6.45 மணிக்கு நடை சாத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து கோவில் நிர்வாகம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் சந்திர கிரகணத்தை முன்னிட்டு 28-ந்தேதி மாலை 6.45 மணிக்கு நடை சாத்தப்படும். மறுநாள் 29-ந்தேதி ஞாயிறுக்கிழமை காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டு சந்திர கிரகண தோஷ நிவர்த்திக்கு பின் வழக்கம் போல் பூஜைகள் நடைபெறும்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • திண்டுக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் வட்டார நகர நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கொடைக்கானல் நாயுடுபுரம் பகுதியில் நடந்தது.
    • கூட்டத்தில் தேர்தலை எதிர்கொள்வதற்கு பூத் கமிட்டி அமைப்பது, வரும் கூட்டுறவு தேர்தலில் காங்கிரஸ் கட்சியினர் போட்டியிடுவது உள்ளிட்ட ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது.

    கொடைக்கானல்:

    திண்டுக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் வட்டார நகர நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கொடைக்கானல் நாயுடுபுரம் பகுதியில் நடந்தது. கூட்டத்திற்கு திண்டுக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் அப்துல் கனி ராஜா தலைமை தாங்கினார்.

    கூட்டத்தில் தேர்தலை எதிர்கொள்வதற்கு பூத் கமிட்டி அமைப்பது, எவ்வாறு வழிநடத்துவது, எந்தெந்த பகுதியில் பூத் கமிட்டியினர் எவ்வாறு பணி செய்வது, வரும் கூட்டுறவு தேர்தலில் காங்கிரஸ் கட்சியினர் போட்டியிடுவது உள்ளிட்ட ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது.

    மேலும் எம்.பி தேர்தலில் திண்டுக்கல் தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க வேண்டும் என்றும் ஆலோசனை செய்யப்பட்டது. மாவட்ட நிர்வாகிகள் முருகானந்தம், பழனியப்பன், ராஜ்கபூர், பாலு, முகமது யாசின், அப்பாஸ், முபாரக், தனலட்சுமி, ஹைருல்லா, அரபு முகமது, ராஜாஜி, காமாட்சி, உள்ளிட்ட திண்டுக்கல் கிழக்கு மாவட்டம் முழுவதும் இருந்தும் நூற்றுக்கும் அதிகமாேனார் கலந்து கொண்டனர்.

    • நத்தம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார்.
    • இந்நிலையில் நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சிறுமி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    நத்தம்:

    நத்தம்- மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் செந்தில்குமார்(43). ஓட்டல் தொழிலாளி. இவரது மகள் தர்ஷினிபிரியா (16). இவர் நத்தம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சிறுமி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற நத்தம் போலீசார் இறந்த சிறுமியின் உடலை கைப்பற்றி நத்தம் அரசு ஆஸ்பத்திரிக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி, சப்-இன்ஸ்பெக்டர் ஜெய்கணேஷ் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆத்தூர் ஒன்றிய குழு கூட்டம் செம்பட்டியில் உள்ள ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது.
    • கூட்டத்தில் 17 தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

    செம்பட்டி:

    திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஒன்றிய குழு கூட்டம் செம்பட்டியில் உள்ள ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய குழு தலைவர் மகேஸ்வரி முருகேசன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் ஹேமலதா மணிகண்டன், வட்டார வளர்ச்சி அலுவலர் தட்சிணாமூர்த்தி (கி.ஊ) முன்னிலை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ) லாரன்ஸ் வரவேற்று பேசினார்.

    கூட்டத்தில், மின் இணைப்பு கட்டணம் செலுத்துதல், மோட்டார் பழுது நீக்குதல், அரசு வாகனங்களுக்கு எரிபொருள் வாங்கியதற்கான தொகையினை வழங்குதல், புதிய ஒப்பந்தகாரர்களுக்கு மன்ற அங்கீகாரம் வழங்குதல், ஜெராக்ஸ் மெஷின் பழுது நீக்குதல், பொதுநிதியில் செய்ய வேண்டிய பணிகள் உட்பட 17 தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

    கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கும் போது, ஒன்றிய குழு தலைவர் மகேஸ்வரி முருகேசன், ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கிராம ஊராட்சிகளுக்கு முதலமைச்சரின் கிராம சாலை திட்டத்தில் 56 சாலைகளுக்கு ரூ.26 கோடி நிதி ஒதுக்கியதற்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி ஆகியோருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் கொண்டு வந்தார். அந்த தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. மேலாளர் முருகன் நன்றி கூறினார்.

    • இக்கலைச் செயல்பாடு கள், மாணவ- மாணவி களின் உள்ளார்ந்த திறமை களை வெளிக்கொண்டு வரக்கூ டி ய சூழலை உருவாக்குவதோடு, பிற கல்விச்சாரா திறன் பயிற்சிகளில் மிகவும் சுறுசுறுப்புடனும், ஆழமாகவும் ஈடுபட உதவுகிறது.
    • கவின்கலை, இசை, நடனம், நாடகம், மொழித்திறன் என்ற பெரும் தலைப்புகளின் கீழ் 188 வகையான போட்டிகளில் 5,571 மாணவர்கள் பங்கு பெறுகின்றனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அண்ணா மலையார் மில்ஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அரசு பள்ளி மாணவ- மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான கலைத் திரு விழாவினை மாவட்ட கலெக்டர் பூங்கொடி தலைமை தாங்கி இன்று தொடங்கி வைத்தார்.மேயர் இளமதி ஜோதி பிரகாஷ் முன்னிலை வகித்தார். விழாவில் கலெக்டர் பேசியதாவது:-

    திண்டுக்கல் மாவட்ட த்தில் கடந்த ஆண்டு 370 அரசு பள்ளிகளிலிருந்து 80,670 மாணவ-மாணவிகள் கலைத்திருவிழாவில் பங்குப் பெற்றனர். இது மொத்த எண்ணிக்கையில் 61 சதவீதம் ஆகும். மாவட்ட அளவில் வெற்றி பெற்று, மாநில அளவிலான போட்டிகளில் 52 மாணவ-மாணவிகள் பரிசுகளை வென்றனர். இதில் செங்கட்டாம்பட்டி அரசு நடுநிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவி சிவஹரிதா வெளிநாட்டுச் சுற்றுலா செல்வதற்கு தேர்வாகி சிங்கப்பூருக்குச் சென்று வந்துள்ளார்.

    இக்கலைச் செயல்பாடு கள், மாணவ- மாணவி களின் உள்ளார்ந்த திறமை களை வெளிக்கொண்டு வரக்கூ டி ய சூழலை உருவாக்குவதோடு, பிற கல்விச்சாரா திறன் பயிற்சிகளில் மிகவும் சுறுசுறுப்புடனும், ஆழமாகவும் ஈடுபட உதவுகிறது. மேலும், இவை மாணவ- மாணவிகள் துரிதமாக செயல்பட்டு உடனடியாக முடிவெடுக்கும் திறனை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல் அவர்களை தன்னம்பிக்கை கொண்ட வர்களாக மாற்றுகிறது. இதன் நீட்சியாக, இடைநின்ற மாணவர்களை மீண்டும் பள்ளிக்கு ஈர்க்கும் முயற்சி யில் கலைத் திருவிழா போட்டிகள் முக்கியத்துவம் பெறுகின்றன.

    இத்தனை சிறப்பம்சங்கள் பெற்ற இக்கலைத் திருவிழா போட்டிகளில் இந்தாண்டும் பள்ளி அளவில் 61,557 மாணவர்களும், வட்டார அளவில் 16,732 மாணவர்களும், இன்றும், நாளையும் நடைபெறும் மாவட்ட அளவிலான போட்டிகளில் கவின்கலை, இசை, நடனம், நாடகம், மொழித்திறன் என்ற பெரும் தலைப்புகளின் கீழ் 188 வகையான போட்டிகளில் 5,571 மாணவர்கள் பங்கு பெறுகின்றனர்.

    மாணவ- மாணவிகள் தங்களின் தனித்திறமையை வெளிக்கொண்டுவர தக்க வாய்ப்பாக இதனைப் பயன்படுத்தி மாநில அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்று, மாவட்ட த்திற்கும், பள்ளிக்கும், பெற்றோர்களுக்கும் பெருமை சேர்த்திட வேண்டும் என பேசினார்.

    விழாவில் வேடசந்தூர் எம்.எல்.ஏ காந்திராஜன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்நாசருதீன், மாவட்ட கல்வி அலுவலர் (பொ) சுதாகர், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • திண்டுக்கல் மார்க்கெட்டில் பெட்டி ரூ.500 வரை ஏலம் போனது. சில்லறை கடைகளில் கிலோ ரூ. 25க்கு விற்கப்படுகிறது.
    • இந்த திடீர் விலை உயர்வால் இல்லத்தரசிகள் வேதனை அடைந்தனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் சுற்று வட்டாரத்தில் வடமதுரை, அய்யலூர், வேடசந்தூர், ரெட்டியார்சத்திரம், கன்னிவாடி, எம்.எம். கோவிலூர், ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட பல்வேறு பகுதி களில் தக்காளி அதிகளவு சாகுபடி செய்யப்படுகிறது. இவை திண்டுக்கல் காந்தி காய்கறி மார்க்கெட்டிற்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

    கடந்த வாரத்தில் தக்காளி கிலோ ரூ.12க்கு விற்கப்பட்டது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக பருவமழை அவ்வப்போது மாவட்டத்தில் பரவலாக பெய்தது. இதனால் தக்காளி வரத்து பாதிக்கப்பட்டது. செடியில் இருந்து கீழே விழுந்து அடிபட்டு காய்கள் வருகிறது. இதனால் வரத்து குறைந்து விலை உயர்ந்துள்ளது. திண்டுக்கல் மார்க்கெட்டில் பெட்டி ரூ.500 வரை ஏலம் போனது. சில்லறை கடைகளில் கிலோ ரூ. 25க்கு விற்கப்படுகிறது.

    திண்டுக்கல் உழவர் சந்தையில் இன்று 2 டன் தக்காளி வரத்து வந்துள்ளது. ஒரு கிலோ ரூ.20க்கு விற்கப்படுகிறது. இது குறித்து விவசாயி ராஜேந்திரன் கூறுகையில், பந்தல் அமைத்து தக்காளி சாகுபடி செய்யப்பட்ட காய்கள் மட்டுமே வரத்து வந்துள்ளது. மழை கார ணமாக தக்காளி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தொடர் மழை நீடித்தால் இன்னும் விலை உயரும் என்று தெரிவித்தார்.

    இந்த திடீர் விலை உயர்வால் இல்லத்தரசிகள் வேதனை அடைந்தனர். மேலும் தக்காளி வாங்கும் அளவை குறைத்துக் கொண்டனர்.

    ×