என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஒன்றியக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்.
ஆத்தூர் ஒன்றியத்தில் ரூ.26 கோடி மதிப்பில் 56 சாலைகள்
- ஆத்தூர் ஒன்றிய குழு கூட்டம் செம்பட்டியில் உள்ள ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது.
- கூட்டத்தில் 17 தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
செம்பட்டி:
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஒன்றிய குழு கூட்டம் செம்பட்டியில் உள்ள ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய குழு தலைவர் மகேஸ்வரி முருகேசன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் ஹேமலதா மணிகண்டன், வட்டார வளர்ச்சி அலுவலர் தட்சிணாமூர்த்தி (கி.ஊ) முன்னிலை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ) லாரன்ஸ் வரவேற்று பேசினார்.
கூட்டத்தில், மின் இணைப்பு கட்டணம் செலுத்துதல், மோட்டார் பழுது நீக்குதல், அரசு வாகனங்களுக்கு எரிபொருள் வாங்கியதற்கான தொகையினை வழங்குதல், புதிய ஒப்பந்தகாரர்களுக்கு மன்ற அங்கீகாரம் வழங்குதல், ஜெராக்ஸ் மெஷின் பழுது நீக்குதல், பொதுநிதியில் செய்ய வேண்டிய பணிகள் உட்பட 17 தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கும் போது, ஒன்றிய குழு தலைவர் மகேஸ்வரி முருகேசன், ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கிராம ஊராட்சிகளுக்கு முதலமைச்சரின் கிராம சாலை திட்டத்தில் 56 சாலைகளுக்கு ரூ.26 கோடி நிதி ஒதுக்கியதற்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி ஆகியோருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் கொண்டு வந்தார். அந்த தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. மேலாளர் முருகன் நன்றி கூறினார்.






