என் மலர்tooltip icon

    திண்டுக்கல்

    • தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்ட இயக்குனர் அறிவுறுத்தலின் படி இல்லம் தேடி எய்ட்ஸ் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
    • ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் தொடங்கிய பேரணி முக்கிய வீதிகள் வழியாக வந்தது.

    ஆத்தூர்:

    ஆத்தூரில் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்ட இயக்குனர் அறிவுறுத்தலின் படி இல்லம் தேடி எய்ட்ஸ் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரி முதன்மை மருத்துவ அலுவலர் அரவிந்த் நாராயணன் தலைமையேற்று தொடங்கி வைத்தார்.

    திண்டுக்கல் மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலகு மேற்பார்வையாளர் ஜெசிந்தா, சுகாதார ஆய்வாளர் சந்திர மோகன், அச்சாணி தன்னார்வ அமைப்பு ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் ராமு, நம்பிக்கை மைய ஆற்றுநர் கண்ணன், ஸ்வஸ்திக் தொண்டு நிறுவன மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அசோக்குமார், தாய் விழுதுகள் அறக்கட்டளை திட்ட மேலாளர் வினிஸ் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் தொடங்கிய பேரணி முக்கிய வீதிகள் வழியாக வந்தது. இதில் பதாகை ஏந்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை அரசு ஆஸ்பத்திரி ஐ.சி.டி.சி. ஆற்றுனர் கண்ணன் செய்திருந்தார்.

    • திண்டுக்கல் பூ மார்க்கெட்டிற்கு குறைந்தது 10 டன் பூக்களும் விஷேச தினங்களில் 40 டன் பூக்கள் வரையும் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.
    • இன்று மார்க்கெட்டிற்கு 15 டன் பூக்கள் வரத்து வந்துள்ளது. முகூர்த்தம் மற்றும் விஷேச தினங்கள் குறைவு எதிரொலியால் மார்க்கெட் வெறிச்சோடி, விற்பனை மந்தமாக காணப்பட்டது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அண்ணா வணிக வளாகத்தில் செயல்பட்டு வரும் பூ மார்க்கெட்டிற்கு நிலக்கோட்டை, செம்பட்டி, வெள்ளோடு, மைலாப்பூர், ரெட்டியார் சத்திரம், ஜம்புலியம்பட்டி, ஆத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பூக்கள் அதிகளவு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

    பெண்கள் தலைக்கு வைக்கும் மல்லிகை, முல்லை, ஜாதி பூ, காக்கரட்டான் ஆகியவையும், மாலைக்கு பயன்படுத்தும் கோழிக்கொண்டை, சம்பங்கி, ரோஸ், வாடா மல்லி, செண்டு மல்லி உள்ளிட்ட பூக்களும் தினந்தோறும் விற்பனைக்கு வருகிறது.

    இங்கிருந்து கேரளா, கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. திண்டுக்கல் பூ மார்க்கெட்டிற்கு குறைந்தது 10 டன் பூக்களும் விஷேச தினங்களில் 40 டன் பூக்கள் வரையும் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

    கடந்த 2 நாட்கள் முன்பு ஆயுதபூஜை முன்னிட்டு பூக்கள் விலை கிடுகிடு உயர்ந்து மல்லிகை கிலோ ரூ.1200க்கு விற்கப்பட்டது. அதேபோல் மாலைக்கு பயன்படுத்தும் பூக்களும் விலை உயர்ந்தது. மாலை ரூ.150 முதல் ரூ.2500 வரை விற்கப்பட்டது. இன்று மார்க்கெட்டிற்கு 15 டன் பூக்கள் வரத்து வந்துள்ளது. முகூர்த்தம் மற்றும் விஷேச தினங்கள் குறைவு எதிரொலியால் மார்க்கெட் வெறிச்சோடி, விற்பனை மந்தமாக காணப்பட்டது.

    இதனையடுத்து கோழிக்கொண்டை ஒரு கிலோ ரூ. 60, செண்டு மல்லி கிலோ ரூ.15, அரளி ரூ. 40, வாடாமல்லி ரூ. 20, செண்டு மல்லி ரூ. 40, பன்னீர் ரோஸ் ரூ. 120, சம்மங்கி ரூ.30, செவ்வந்தி ரூ.30, அரளி ரூ.120க்கும் விற்கப்பட்டது.

    அதேபோல் தொடர் மழை, பனிப்பொழிவு காரணமாக மல்லிகை வரத்து பாதிக்கப்பட்டது. இதனால் கிலோ ரூ. 800க்கு விற்கப்பட்டது. கனகாம்பரம் ரூ.500, காக்கரட்டான் ரூ.200, முல்லை ரூ. 250, கனகாம்பரம் ரூ.300, ஜாதி பூ ரூ.250 விலைபோனது.

    இதுகுறித்து பூ வியாபாரிகள் கூறுகையில், கடந்த ஞாயிறு மற்றும் திங்கட்கிழமை ஆயுத பூஜையை முன்னிட்டு மார்க்கெட் விறுவிறுப்பாக இருந்தது. பூக்களின் விலை அதிகரித்து காணப்பட்டது. தற்போது விஷேச தினங்கள் இல்லாததால் விற்பனை மந்தமாகவே உள்ளது. மல்லிகை, கனகாம்பரம் வரத்து குறைவால் விலை உயர்ந்துள்ளது. தீபாவளி வரை இதே நிலைதான் நீடிக்கும் என்றனர்.

    • 24 மணிநேரமும் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வந்த நிலையில் பணிகள் முழுவதும் நிறைவுபெற்று 3, 4-வது பிளாட்பாரங்களில் ரெயில்கள் இயக்க அனுமதிக்கப்பட்டன.
    • 3 மற்றும் 4-வது பிளாட்பாரத்தில் இந்த சோதனை ஓட்டம் நடத்தப்பட்டதன்மூலம் தண்டவாளத்தின் உறுதி தன்மையும் ஆய்வு செய்யப்பட்டது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் ரெயில்நி லையம் வழியாக தினமும் 70-க்கும் மேற்பட்ட ரெயில்கள் கடந்து செல்கின்றன. இங்கு 5 பிளாட்பாரங்கள் உள்ளன. இதில் 3 மற்றும் 4-வது பிளாட்பாரங்களில் கடந்த மாதம் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற்றது.

    இதனால் இந்த வழித்தடத்தில் சென்ற ரெயில்கள் 2 மற்றும் 5-வது பிளாட்பாரங்கள் வழியாக செல்லும் வகையில் மாற்றியமைக்கப்பட்டது. இதனால் பயணிகள் மிகுந்த குழப்பம் அடைந்ததுடன் ரெயிலை தவறவிடும் நிலைக்கும் தள்ளப்பட்டனர்.

    தொடர்ந்து 24 மணிநேரமும் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வந்த நிலையில் பணிகள் முழுவதும் நிறைவுபெற்று 3, 4-வது பிளாட்பாரங்களில் ரெயில்கள் இயக்க அனுமதிக்கப்பட்டன.

    இதனிடையே சென்னை யில் இருந்து நெல்லை வரை இயக்கப்படும் வந்தேபாரத் ரெயிலின் வேகத்தை குறைக்க வேண்டும் என பயணிகள் ஒரு தரப்பினர் வலியுறுத்தினர். வந்தேபாரத் ரெயிலுக்காக மற்ற ரெயில்களின் நேரத்தை மாற்றி அமைக்கவும் ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்தது.

    இதற்கு பயணிகள் அதிருப்தி தெரிவித்து வந்தனர். இந்நிலையில் இன்று காலை மதுரையில் இருந்து தாமரைப்பாடி வரை அதிவேகத்தில் வந்தேபாரத் ரெயிலை இயக்கி சோதனை நடத்த ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்தது.

    அதன்படி மதுரையில் காலை 10 மணிக்கு புறப்பட்ட வந்தேபாரத் 11.30 மணிக்கு தாமரைப்பாடியை வந்தடைந்தது. மீண்டும் தாமரைப்பாடியில் இருந்து 12.30 க்கு புறப்பட்டு மதியம் 2 மணிக்கு மதுரை ரெயில்நிலையத்தை சென்றடைந்தது. 55 கி.மீ வேகத்தில் இயக்கப்பட்ட இந்த ரெயில் எந்த ரெயில்வே ஸ்டேசனிலும் நிற்காமல் சென்றது.

    திண்டுக்கல் ரெயில்நிலை யத்தில் 3 மற்றும் 4-வது பிளாட்பாரத்தில் இந்த சோதனை ஓட்டம் நடத்தப்பட்டதன்மூலம் தண்டவாளத்தின் உறுதி தன்மையும் ஆய்வு செய்யப்பட்டது.

    • ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வை ரத்து செய்வதாக கூறிவிட்டு, தற்போது 50 லட்சம் பேரிடம் கையெழுத்து வாங்கி வருகின்றனர்.
    • இவர்கள் கையெழுத்து வாங்கும் கோப்புகளை யாருக்கு அனுப்புவார்கள். மக்களை ஏமாற்ற இதுபோல ஏமாற்று வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட எரியோட்டில் அ.தி.மு.க. 52ம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் எரியோடு பேரூர் செயலாளர் அறிவாளி தலைமையில் நடைபெற்றது.

    மாநில பாசறை செயலாளர் பரமசிவம், முன்னாள் எம்.எல்.ஏ. பழனிச்சாமி, தலைமைக் கழக பேச்சாளர் அம்புஜம் ஆகியோர் பேசினர். கூட்டத்தில் அ.தி.மு.க. பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சி.சீனிவாசன் பேசியதாவது,

    தி.மு.க. 100 சதவீத தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டதாக பொய் பிரசாரம் செய்து வருகின்றனர். ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வை ரத்து செய்வதாக கூறிவிட்டு, தற்போது 50 லட்சம் பேரிடம் கையெழுத்து வாங்கி வருகின்றனர். இவர்கள் கையெழுத்து வாங்கும் கோப்புகளை யாருக்கு அனுப்புவார்கள். மக்களை ஏமாற்ற இதுபோல ஏமாற்று வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அ.தி.மு.க. ஆட்சியில் ஒரே ஆண்டில் தமிழகத்திற்கு 11 மருத்துவக்கல்லூரிகள் கொண்டு வரப்பட்டது. அ.தி.மு.க. ஆட்சியில் கட்டி முடிக்கப்பட்ட திட்டங்களுக்கு முதல்-அமைச்சரும், அவரது மகனும் திறப்பு விழா நடத்தி வருகின்றனர். தி.மு.க. எம்.பி. ஜெகத்ரட்சகன் வீட்டில் சோதனை நடத்தியதில் ரூ.1300 கோடி சொத்து ஆவணங்கள் கைப்பற்றப் பட்டன. இலாகா இல்லாத அமைச்சருக்கு இன்னும் ஜாமின் கிடைக்கவில்லை.

    ஆரியம், திராவிடம் பற்றி கவர்னர் பேசியதில் எந்த தவறும் இல்லை. தற்போது கவர்னர் வீட்டு முன்பே பெட்ரோல் குண்டு வீசும் அளவுக்கு சட்டம் ஒழுங்கு சீரழிந்துள்ளது. வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றிபெற்று பிரதமரை தேர்ந்தெடுக்கும் சக்தியாக இருப்போம். இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் குஜிலிய ம்பாறை ஒன்றிய செயலாளர் மலர்வண்ணன், மேற்கு ஒன்றிய செயலாளர் பெருமாள், வடமதுரை ஒன்றிய செயலாளர் லட்சுமணன், தண்டாயுதம், வடமதுரை நகர செயலாளர் பாலசுப்பிரமணி, பாளையம் பேரூர் செயலாளர் மணிமாறன், தகவல் தொழில்நுட்ப செயலாளர் கார்த்திக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • நத்தம் இன்ஸ்பெக்டர் தங்கமுனி யசாமி தலைமையிலான போலீசார் கிராமப்பகுதி களில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
    • அப்போது குமரப்பட்டி புதூர் பகுதியில் உள்ள மாந்தோப்பில் கள்ளச்சாரா யம் காய்ச்சி விற்பனை செய்தவரை கைது செய்தனர்.

    நத்தம்:

    நத்தம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்யப்படு வதாக போலீ சாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து நத்தம் இன்ஸ்பெக்டர் தங்கமுனி யசாமி தலைமையிலான போலீசார் கிராமப்பகுதி களில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது குமரப்பட்டி புதூர் பகுதியில் உள்ள மாந்தோப்பில் கள்ளச்சாரா யம் காய்ச்சி விற்பனை செய்த ராஜேந்திரன் (55) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து கள்ளச்சாராய ஊரல் 5 லிட்டர் மற்றும் மண் பானை, பாத்திரங்கள் உள்ளிட்ட உபகரணங்களையும் பறிமுதல் செய்தனர். ராஜேந்திரன் மட்டும் இதில் ஈடுபட்டாரா வேறு யாருக்கும் இதில் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் விசாரித்து வருகின்றனர்.

    • கடந்த 10 மாதங்களாக ரேசன் கார்டுக்கு விண்ண ப்பிக்கும் பொது மக்கள் அலைக்கழிக்கப்படுவதாக குற்றம் சாட்டி வருகின்றனர்.
    • இதனால் ரேசன் பொருட்கள் வாங்க முடியாமலும், மாணவ-மாணவிகள் அசு சலுகை பெற முடியாமலும் தவித்து வருகின்றனர்.

    நிலக்கோட்ைட:

    திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை, ஆத்தூர், பழனி, ஒட்டன்சத்திரம், நத்தம், வேடசந்தூர், கொடைக்கானல் ஆகிய தாலுகாக்களில் பொதுமக்களுக்கு ரேசன் கார்டுகள் வழங்கப்பட்டு வருகிறது. புதிதாக திருமணம் செய்தவர்கள், திருநங்கைகள் உள்ளிட்டோர் தங்களுக்கு தனியாக ரேசன் கார்டு கேட்டு விண்ணப்பித்து வருகின்றனர்.

    கடந்த 10 மாதங்களாக ரேசன் கார்டுக்கு விண்ண ப்பிக்கும் பொது மக்கள் அலைக்கழிக்கப்படுவதாக குற்றம் சாட்டி வருகின்றனர். இதனால் ரேசன் பொருட்கள் வாங்க முடியாமலும், மாணவ-மாணவிகள் அசு சலுகை பெற முடியாமலும் தவித்து வருகின்றனர்.

    இது குறித்து அதிகாரிகளிடம் கேட்ட போது ரேசன் கார்டுகள் சில பிரச்சினை யால் வரவில்லை. விலைவில் அனைவருக்கும் வழங்கப்படும் என தெரி வித்தனர். ஆனால் பொது மக்கள் கூறுகையில், அதிகாரிகள் முறையான பதில் கூறாமல் தங்களை தொடர்ந்து அலைக்கழி ப்பதாக தெரிவித்தனர்.

    • இந்த வழித்தடத்தில் பழனிக்கு செல்வதற்கும், பழனியில் இருந்து கொடைக்கானல் வருவதற்கும் குறித்த நேரத்தில் மட்டுமே பஸ்கள் இயக்கப்படுவதால் பொதுமக்களும், வியாபாரி களும் பல்வேறு நிலைகளில் பாதிப்படைந்து வரு கின்றனர்.
    • வேறு வழியில்லாமல் தனியார் வாகனங்களை நாடும் நிலைக்கு அனைவரும் தள்ளப்பட்டு வருகின்றனர்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானலில் இருந்து திண்டுக்கல், மதுரை, வத்தலக்குண்டு போன்ற ஊர்களுக்கு செல்ல அடிக்கடி பஸ் வசதி உள்ள நிலையில் கொடைக்கா னலில் இருந்து பழனிக்கும், பழனியில் இருந்து கொடை க்கானல் வருவதற்கும் குறித்த நேரத்தில் மட்டுமே பஸ்கள் உள்ளது.

    கொடைக்கானலில் இருந்து திண்டுக்கல் 100 கி.மீ. தூரமும், கொடை க்கானலில் இருந்து மதுரை செல்வதற்கு 123 கி.மீ. தூரமாகவும் உள்ளது. கொடைக்கானலில் இருந்து பழனி செல்வதற்கு 64 கி.மீ. தூரம் மட்டுமே உள்ளது.ஆனால் குறைவான தூரத்தில் உள்ள இந்த வழித்தடத்தில் பழனிக்கு செல்வதற்கும், பழனியில் இருந்து கொடைக்கானல் வருவதற்கும் குறித்த நேரத்தில் மட்டுமே பஸ்கள் இயக்கப்படுகிறது. இதனால் பொதுமக்களும், வியாபாரி களும் பல்வேறு நிலைகளில் பாதிப்படைந்து வரு கின்றனர்.

    அவசர தேவைகளுக்கும், வியாபாரத் தேவை களுக்காகவும் பழனியில் நடைபெறும் திருவிழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்க செல்வதற்கும் குறித்த நேரத்தில் மட்டுமே பஸ்கள் உள்ளதால் பொது மக்களும், வியாபாரிகளும் தனியார் வாகனங்களை நாடிச் செல்லும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். பழனியில் இருந்து கொடைக்கானல் வருவதற்கு மதியம் 2.15 மணிக்குப் பிறகு மாலை 6 மணிக்குத்தான் கடைசிப் பஸ் உள்ளது. இடைப்பட்ட நேரத்தில் பழனிக்கு சென்று திரும்புபவர்கள் மாலை 6 மணி வரை காத்திருக்கும் நிலை உள்ளது.இதனால் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

    மேலும் வியாபாரிகள் தங்கள் வியாபார தேவைக்கு வாங்கிய பொருட்களை இடைப்பட்ட 4 மணி நேரம் பஸ் நிலையத்திலேயே வைத்து பத்திரப்படுத்துவ திலும் சிரமம் ஏற்படுகிறது. இதேபோல் பொதுமக்க ளுக்கும் அதே நிலை தான் ஏற்படுகிறது. வேறு வழியில்லாமல் தனியார் வாகனங்களை நாடும் நிலைக்கு அனைவரும் தள்ளப்பட்டு வருகின்றனர்.

    இதனால் பொதுமக்கள் நலம் கருதி 2 மணிக்கும் 6 மணிக்கும் இடையே அரசு பஸ் ஒன்றை இயக்க வேண்டும். மேலும் மாற்றுச்சாலை திட்டத்தை அமல்படுத்தியும், பழனியை தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டத்தை யும் உருவாக்கினால் மட்டுமே கொடைக்கானல் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளின் இந்த பிரச்சினைக்கு தீர்வு ஏற்படும் என்றும் தெரி விக்கின்றனர். வாகனப் பதிவு முக்கிய ஆவணங்களை சரி பார்க்கும் நிலை போன்ற காரணங்களுக்காக 100 கி.மீ.க்கு மேல் பயணித்து அல்லல் படும் சூழல் உள்ளது என்றும், தமிழக அரசு விரைவில் பழனியை தலைமையிடமாகக் கொண்ட மாவட்டத்தை உருவாக்க விரைவான நட வடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளனர்.

    கோவில் நகரான பழனி, சுற்றுலா நகரான கொடைக்கானல் ஆகிய 2 நகரங்களுக்கும் இடையே போக்குவரத்து சீராக இருந்தால் வர்த்தகம் பெருகுவதுடன் அதிக வருவாய் ஈட்டவும் வியா பாரிகளுக்கு துணையாக இருககும் என்றும் தெரிவித்துள்ளனர்.

    • தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்த நடவடிக்கை எடுக்க கோரியும், தமிழ் கலாச்சாரம் பள்ளி மாணவ- மாணவி கள் மத்தியில் மது போதை மோகத்தை தடுப்பதற்கும் வள்ளலாரின் பிறந்த தினத்திற்கு அரசு விடுமுறை மட்டும் வள்ளலாரின் போதனையை வளர்க்காது.
    • ஆகவே வள்ளலாரின் கொள்கையை மாணவ மாணவிகள் பின்பற்ற சீரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்

    நிலக்கோட்டை:

    நிலக்கோட்டையில் வள்ளலார் சிந்தனை பாசறை அமைப்பு நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தலைவர் இளங்கோ தலைமையில் நடைபெற்றது. தேனி மாவட்ட தலைவர் முருகன், திண்டுக்கல் மாவட்ட தலைவர் ராஜா ராம், அமைப்புச் செயலாளர் வடிவேல் முருகன், துணைத் தலைவர் முருகன் ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர். துணைச் செயலாளர் சசிகுமார் வரவேற்று பேசினார்.

    கூட்டத்தில் தமிழகத்தில் மது போதையால் ஏராள மான விபத்துக்கள் நட ப்பதை தடுக்க வலியுறுத்தி யும், தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்த நடவடிக்கை எடுக்க கோரியும், தமிழ் கலாச்சாரம் பள்ளி மாணவ- மாணவி கள் மத்தியில் மது போதை மோகத்தை தடுப்பதற்கு பள்ளிக்கல்வி மேலாண்மை குழுவை வலுப்படுத்தி மாணவர்களின் எதிர்கா லத்தை பாதுகாத்திடவும், வள்ளலாரின் பிறந்த தினத்திற்கு அரசு விடுமுறை மட்டும் வள்ளலாரின் போதனையை வளர்க்காது.

    ஆகவே வள்ளலாரின் கொள்கையை மாணவ மாணவிகள் பின்பற்ற சீரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    மேலும் இது குறித்து தமிழக முதல்வருக்கு மனு அனுப்புவது என தீர்மானி க்கப்பட்டது. இக்கூட்டத்தில் தேனி மாவட்ட பொறு ப்பாளர்கள் அனஞ்சி, ஜெயராஜ், மோகன், திண்டு க்கல் மாவட்ட செயலாளர் ராஜா, நிலக்கோட்டை ஒன்றிய தலைவர் பாஸ்கரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தமிழகத்தில் ஒரு ஆட்சி எப்படி நடத்தக்கூடாது என்பதற்கு உதாரணம் சொல்ல வேண்டுமானால் அது தி.மு.க. தான்.
    • அதில் 99 சதவீத வாக்கு றுதிகளை நிறைவேற்றி விட்டோம் என்று கொஞ்சம் கூட கூசாமல் ஒரு பொ ய்யான தகவலை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசி வருகிறார்.

    நிலக்கோட்டை:

    நிலக்கோட்டையில் அ.தி.மு.க.வின் 52-ம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூ ட்டம் நிலக்கோட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் யாகப்பன் தலைமையில் நடைபெற்றது. தேன்மொழி எம்.எல்.ஏ., மேற்கு ஒன்றிய செயலாளர் நல்லதம்பி, முன்னாள் எம்.பி. உதயகுமார், நகர செயலாளர் தண்டபாணி, நிலக்கோட்டை நகர செயலாளர் சேகர், மாநில பொதுக்குழு உறுப்பினர் ரேவதி தங்கபாண்டியன் ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சரும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளரு மான நத்தம் விசுவநாதன் கலந்து கொண்டு பேசிய தாவது:-

    தமிழகத்தில் ஒரு ஆட்சி எப்படி நடத்தக்கூடாது என்பதற்கு உதாரணம் சொல்ல வேண்டுமானால் அது தி.மு.க. தான். தேர்தல் பரப்புரையில் பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து ஏமாற்றி வாக்குகளை திமு.க.வினர் பெற்றனர்.

    அதில் 99 சதவீத வாக்கு றுதிகளை நிறைவேற்றி விட்டோம் என்று கொஞ்சம் கூட கூசாமல் ஒரு பொ ய்யான தகவலை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசி வருகிறார். தேர்தல் வாக்குறுதியில் அனைத்து குடும்ப அட்டைதாரர்க ளுக்கும் ரூ.1000 மாதம் தோறும் வழங்குவோம் என்று சொல்லிவிட்டு இப்பொழுது மகளிர் உரிமைத்தொகை தகுதியின் அடிப்படையில் ஒரு கோடி பேருக்கு வழங்கிவிட்டு மற்ற ஒரு கோடி குடும்பத்தார்களை ஏமாற்றி விட்டனர்

    தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. எங்கு பார்த்தாலும் எது கிடைக்கிறதோ இல்லையோ மதுபாட்டில் தெருவுக்கு தெரு எங்கே போனாலும் கிடைக்கிறது. பெட்டி கடைக்கு கள்ள சந்தை மார்க்கெட்டில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரம் இப்படி சமூக விரோதச் செயல்கள் அன்றாடம் நடந்து கொண்டிருக்கிறது என்று சொன்னால் அதற்கெல்லாம் கஞ்சா, மது போதை தான் காரணம்.

    மக்களுடைய வாழ்வா தாரங்களை பறித்து தி.மு.க. வினர் மக்களை போதையி லேயே வாழ வைத்திருப்பது தான் திராவிட மாடலா? இப்படிப்பட்ட மக்கள் விரோத தி.மு.க. ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப காலம் வந்துவிட்டது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர் நடிகர் சிங்கமுத்து கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். கிழக்கு ஒன்றிய அவை த்தலைவர் தவமணி, முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மூர்த்தி, முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவர் சீனிவாசன், மேற்கு ஒன்றிய துணை செயலாளர் ஜெயசீலன், ஜெயலலிதா பேரவை ஒன்றிய செயலாளர் செல்வராஜ், நகரப் பொருளாளர் பூக்கடை சரவணன், முன்னாள் மாநில பொதுக்குழு உறுப்பினர் சரவணன், மாவட்ட பிரதிநிதி சேசுராஜ், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளர் புரட்சிமணி, ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் முனியப்பன், சிறுபான்மையினர் பிரிவு மாவட்ட செயலாளர் சிமியோன் ராஜ், முன்னாள் நகர எம்.ஜி.ஆர். மன்ற பொறுப்பாளர் சுப்பையா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் 18-ந்தேதி நடைபெறுகிறது.
    • சூரசம்ஹாரத்தையொட்டி 18-ந்தேதி மலைக்கோவிலில் தங்க ரத புறப்பாடு நிறுத்தப்படும்.

    பழனி:

    பழனி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோவிலில் கந்த சஷ்டி விழா வருடந்தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் ஏராளமான பக்தர்கள் பல்வேறு பகுதிகளில் இருந்து கலந்து கொள்வார்கள். அதன்படி இந்த ஆண்டுக்கான கந்த சஷ்டி விழா வருகிற நவம்பர் 13-ந்தேதி பகல் 12 மணிக்கு காப்பு கட்டுதலுடன் தொடங்க உள்ளது.

    சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் 18-ந்தேதி நடைபெறுகிறது. அன்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனம், 4.30 மணிக்கு விளாபூஜை, படையல் நெய்வேத்திய நிகழ்ச்சி நடைபெறும். மதியம் 12 மணிக்கு உச்சிகாலபூஜை, 1.30 மணிக்கு சாயரட்சை பூஜை நடைபெறும்.

    மதியம் 3.15 மணிக்கு மலைக்கோவிலில் சின்னகுமாரசாமி அசுரர்களை வதம் புரிவதற்காக மலைக்கோவிலில் இருந்து அம்மனிடம் வேல் வாங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதனைதொடர்ந்து சன்னதி நடை அடைக்கப்படும். மாலை 6 மணிக்கு வடக்குகிரிவீதியில் தாரகாசூரன் வதமும், கிழக்கு கிரிவீதியில் பானுகோபசூரன் வதமும், தெற்கு கிரிவீதியில் சிங்கமுகாசூரன் வதமும், மேற்கு கிரிவீதியில் சூரபத்மன் வதமும் நடைபெறுகிறது. இரவு 9 மணிக்கு ஆரியர் மண்டபத்தில் வெற்றி விழா நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    இதனைதொடர்ந்து 19-ந்தேதி திருக்கல்யாணம் நடைபெறுகிறது. அன்று காலை 9.30 மணிக்குமேல் 10.30 மணிக்குள் தனுர்லக்கினத்தில் மலைக்கோவிலில் வள்ளி-தெய்வானை சமேதராக சண்முகர் திருக்கல்யாணம் நடைபெறும். மாலை 6.30 மணிமுதல் 7.30 மணிவரை பெரியநாயகி அம்மன் கோவிலில் ரிஷப லக்கினத்தில் திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

    சூரசம்ஹாரத்தையொட்டி 18-ந்தேதி மலைக்கோவிலில் தங்க ரத புறப்பாடு நிறுத்தப்படும். விழாவிற்கான ஏற்பாடுகளை பழனி கோவில் ஆணையர் மாரிமுத்து தலைமையில் அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

    • அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும், வங்கி கடன் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் நிறைவேற்றப்படவும் உள்ளது.
    • 5 விதமான தொழில்களில் ஈடுபடக் கூடியவர்களின் சுய விபரங்கள் கணக்கெடுப்பு பணி நடைபெற்றது.

    திண்டுக்கல்:

    தமிழகத்தில் தூய்மை பணியாளர்கள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பணியாளர்கள் கணக்கெடுப்பு பணி தொடங்கி உள்ளது. இதன் மூலம் அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும், வங்கி கடன் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் நிறைவேற்றப்படவும் உள்ளது.

    திண்டுக்கல் மாநகராட்சி உட்பட்ட பி.வி.தாஸ். காலனி, செல்லாண்டியம்மன் கோவில் வடக்கு தெரு, முனிசிபல் காலனி நெட்டுத்தெரு , சாமியார் தோட்டம், சாஸ்திரி நகர் பகுதிகளில் தூய்மை பணியாளர்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர். மாநகராட்சியில் 150 நிரந்தர பணியாளர்களும், தனியார் மற்றும் ஒப்பந்தம் அடிப்படையில் 500க்கும் மேற்பட்டோரும் பணிபுரிந்து வருகின்றனர்.

    இந்நிலையில் தூய்மை பணியாளர்கள் தொடர்பான விபரங்கள் கணக்கெடுப்பு பணிகளை மேயர் இளமதி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் துணை மேயர் ராஜப்பா, கமிஷனர் ரவிச்சந்திரன், மாநகர் நல அலுவலர் செபாஸ்டின், கவுன்சிலர் கிருபாகரன், சுகாதார ஆய்வாளர்கள் தட்சிணாமூர்த்தி, பாலமுருகன், தங்கவேல், கீதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    பாதாள சாக்கடை திட்டத்தில் பணி புரியும் பணியாளர்கள், கழிவு நீர் வாய்க்கால் சுத்தம் செய்யும் பணியாளர்கள், பொது மற்றும் சமுதாய கழிப்பறைகள் சுத்தம் செய்யும் பணியாளர்கள், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களில் பணிபுரியும் பணியாளர்கள், செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும் பணியாளர்கள் என 5 விதமான தொழில்களில் ஈடுபடக் கூடியவர்களின் சுய விபரங்கள் கணக்கெடுப்பு பணி நடைபெற்றது.

    அதன்பின் கணக்கெடுப்பு விளக்க கூட்டம் நடைபெற்றது. இதில் தூய்மை பணியாளர்கள் திரளானோர் கலந்து கொண்டனர். இவர்களுக்கு திரவ கழிவுகளை அப்புறப்படுத்தும் போது நச்சு வாயு தாக்கி ஏற்படும் உயிரிழப்பை தடுக்கும் முறைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

    • தீவனப்புல் அதிகமாக தேவைப்படுவதால் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ளவர்கள் தங்கள் நிலங்களில் தீவனப்புல்லை சாகுபடி செய்து வருகின்றனர்.
    • மேலும் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ளவர்கள் தீவனப்புல்லை தேடி வந்து வாங்கி செல்வதால் நல்ல வருவாய் கிடைப்பதாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் அருகே நொச்சி ஓடைப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் தீவனப்புல் சாகுபடியில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் கால்நடைகளுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த தீவனப்புல் அதிகமாக தேவைப்படுவதால் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ளவர்கள் தங்கள் நிலங்களில் தீவனப்புல்லை சாகுபடி செய்து வருகின்றனர்.

    மேலும் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ளவர்கள் தீவனப்புல்லை தேடி வந்து வாங்கி செல்வதால் நல்ல வருவாய் கிடைப்பதாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இங்கு உரங்கள் இயற்கையான முறையில் பயன்படுத்தப்படுவதால் இந்த பகுதியில் சாகுபடி செய்யப்படும் தீவனப்புல்லை உண்ணும் மாடுகளிடம் நல்ல சுகாதாரமான சத்தான பால் அதிகமாக கிடைக்கிறது. இதனால் கால்நடை வளர்ப்பில் ஈடுபடுபவர்கள் தீவனப் புல்லை ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.

    ×