என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தமிழகத்தில்  பூரண மதுவிலக்கு கோரி முதல்-அமைச்சருக்கு மனு
    X

    முதல்-அமைச்சருக்கு வள்ளலார் அமைப்பினர் மனு அனுப்புவதற்கு நிர்வாகிகளிடம் வழங்கினர்.

    தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கோரி முதல்-அமைச்சருக்கு மனு

    • தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்த நடவடிக்கை எடுக்க கோரியும், தமிழ் கலாச்சாரம் பள்ளி மாணவ- மாணவி கள் மத்தியில் மது போதை மோகத்தை தடுப்பதற்கும் வள்ளலாரின் பிறந்த தினத்திற்கு அரசு விடுமுறை மட்டும் வள்ளலாரின் போதனையை வளர்க்காது.
    • ஆகவே வள்ளலாரின் கொள்கையை மாணவ மாணவிகள் பின்பற்ற சீரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்

    நிலக்கோட்டை:

    நிலக்கோட்டையில் வள்ளலார் சிந்தனை பாசறை அமைப்பு நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தலைவர் இளங்கோ தலைமையில் நடைபெற்றது. தேனி மாவட்ட தலைவர் முருகன், திண்டுக்கல் மாவட்ட தலைவர் ராஜா ராம், அமைப்புச் செயலாளர் வடிவேல் முருகன், துணைத் தலைவர் முருகன் ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர். துணைச் செயலாளர் சசிகுமார் வரவேற்று பேசினார்.

    கூட்டத்தில் தமிழகத்தில் மது போதையால் ஏராள மான விபத்துக்கள் நட ப்பதை தடுக்க வலியுறுத்தி யும், தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்த நடவடிக்கை எடுக்க கோரியும், தமிழ் கலாச்சாரம் பள்ளி மாணவ- மாணவி கள் மத்தியில் மது போதை மோகத்தை தடுப்பதற்கு பள்ளிக்கல்வி மேலாண்மை குழுவை வலுப்படுத்தி மாணவர்களின் எதிர்கா லத்தை பாதுகாத்திடவும், வள்ளலாரின் பிறந்த தினத்திற்கு அரசு விடுமுறை மட்டும் வள்ளலாரின் போதனையை வளர்க்காது.

    ஆகவே வள்ளலாரின் கொள்கையை மாணவ மாணவிகள் பின்பற்ற சீரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    மேலும் இது குறித்து தமிழக முதல்வருக்கு மனு அனுப்புவது என தீர்மானி க்கப்பட்டது. இக்கூட்டத்தில் தேனி மாவட்ட பொறு ப்பாளர்கள் அனஞ்சி, ஜெயராஜ், மோகன், திண்டு க்கல் மாவட்ட செயலாளர் ராஜா, நிலக்கோட்டை ஒன்றிய தலைவர் பாஸ்கரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×