நத்தம் அருகே மாந்ேதாப்பில் கள்ளச்சாராயம் காய்ச்சிய முதியவர் கைது

நத்தம் இன்ஸ்பெக்டர் தங்கமுனி யசாமி தலைமையிலான போலீசார் கிராமப்பகுதி களில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அப்போது குமரப்பட்டி புதூர் பகுதியில் உள்ள மாந்தோப்பில் கள்ளச்சாரா யம் காய்ச்சி விற்பனை செய்தவரை கைது செய்தனர்.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

நத்தம்:

நத்தம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்யப்படு வதாக போலீ சாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து நத்தம் இன்ஸ்பெக்டர் தங்கமுனி யசாமி தலைமையிலான போலீசார் கிராமப்பகுதி களில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது குமரப்பட்டி புதூர் பகுதியில் உள்ள மாந்தோப்பில் கள்ளச்சாரா யம் காய்ச்சி விற்பனை செய்த ராஜேந்திரன் (55) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து கள்ளச்சாராய ஊரல் 5 லிட்டர் மற்றும் மண் பானை, பாத்திரங்கள் உள்ளிட்ட உபகரணங்களையும் பறிமுதல் செய்தனர். ராஜேந்திரன் மட்டும் இதில் ஈடுபட்டாரா வேறு யாருக்கும் இதில் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com