என் மலர்tooltip icon

    திண்டுக்கல்

    • குழந்தைகளுக்கு கழுதை பாலை கொடுத்தால் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். மேலும் கழுதை பால் சளி, இருமல், மஞ்சள் காமாலைக்கு சிறந்த மருந்தாகும்.
    • சாணார்பட்டி, கோபால்பட்டி ஆகிய பகுதிகளில் கழுதையில் இருந்து பாலை கறந்து விற்பனை செய்யப்பட்டது.

    குள்ளனம்பட்டி:

    கடலூர் மாவட்டம் திட்டக்குடியை சேர்ந்தவர் மகாலிங்கம் (வயது 50). இவர் கழுதைகளை பராமரித்து அதில் இருந்து பால் கறந்து விற்பனை செய்து வருகிறார்.குழந்தைகளுக்கு கழுதை பாலை கொடுத்தால் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். மேலும் கழுதை பால் சளி, இருமல், மஞ்சள் காமாலைக்கு சிறந்த மருந்தாகும். இந்த நிலையில் இவர் திருச்சி, மணப்பாறை வழியாக திண்டுக்கல் வந்தார்.

    பின்னர் அங்கிருந்து சாணார்பட்டி, கோபால்பட்டி ஆகிய பகுதிகளில் மகாலிங்கம் கழுதையில் இருந்து பாலை கறந்து விற்பனை செய்தார். இதை பொதுமக்கள் போட்டி போட்டு வாங்கி சென்றனர்.

    இது குறித்து மகாலிங்கம் கூறுகையில்,

    நான் 25 வருடத்திற்கும் மேலாக கழுதை பால் வியாபாரத்தில் ஈடுபட்டு வருகிறேன். பொதுவாக கழுதை பால் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளதாக இருப்பதால் மக்கள் அதனை விரும்பி வாங்கி அருந்துகின்றனர். ஒரு சின்ன சங்கு பால் ரூ.100க்கு விற்பனை செய்கிறேன் என்றார்.

    • வேடசந்தூர் உமா டைப் ரைட்டிங் இன்ஸ்டிடியூட்டில் பயின்ற குட்டம் கிராமம் சுக்காம்பட்டியை சேர்ந்த மாணவி கலைச்செல்வி என்பவர் மாநிலத்தில் முதலிடம் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார்.
    • எனது வெற்றிக்கு பயிற்சியாளர்களின் பயிற்சியே காரணம் என தெரிவித்தார்.

    வேடசந்தூர்:

    தமிழ்நாடு அரசு தொழில்நுட்பக் கல்வி இயக்கம் ஆண்டுக்கு இருமுறை பிப்ரவரி மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் தட்டச்சு சுருக்கெழுத்து மற்றும் சி.ஒ.எ. ஆகிய தேர்வுகளை நடத்துகிறது.

    2023 ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற தட்டச்சு தேர்வில் தமிழ் தட்டச்சு இளநிலையில் முதல் தாள் 100 மதிப்பெண்கள் இரண்டாம் தாள் 100 மதிப்பெண்கள் என மொத்தம் 200 மதிப்பெண்களுக்கு நடத்தப்பட்ட தேர்வில் முழு மதிப்பெண்கள் பெற்று வேடசந்தூர் உமா டைப் ரைட்டிங் இன்ஸ்டிடியூட்டில் பயின்ற குட்டம் கிராமம் சுக்காம்பட்டியை சேர்ந்த மாணவி கலைச்செல்வி என்பவர் மாநிலத்தில் முதலிடம் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார்.

    இவர் கூறுகையில், எனது வெற்றிக்கு பயிற்சியாளர்கள் முனியப்பன் மற்றும் புவனேஸ்வரி ஆகியோரின் பயிற்சியே காரணம் என தெரிவித்தார்.

    • எழுவனம்பட்டி ஊராட்சி எழுவனம்பட்டி அம்பேத்கார்நகர், வி.உச்சப்பட்டி ஆகிய ஊர்களிலுள்ள மயானங்களை மேம்படுத்த நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான பூமி பூஜை நடந்தது.

    வத்தலக்குண்டு:

    ஆதிதிராவிடர் நலத்துறை குக்கிராம மயான மேம்பாட்டு அயோத்திதாஸ் திட்டத்தின் மூலம் ரூ.23 லட்சம் மதிப்பில் வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றியம் எழுவனம்பட்டி ஊராட்சி எழுவனம்பட்டி அம்பேத்கார்நகர், வி.உச்சப்பட்டி ஆகிய ஊர்களிலுள்ள மயானங்களை மேம்படுத்த நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான பூமி பூஜை நடந்தது.

    நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் வசந்தா மணிவண்ணன் தலைமை வகித்தார்.ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவர் முத்து, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் லதாஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலாளர் மணிகண்டன் வரவேற்றார்.வத்தலக்குண்டு தி.மு.க. ஒன்றிய செயலாளர் முருகன்பூமி பூஜை நடத்திபணிகளை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் தி.மு.க. ஒன்றிய துணைச் செயலாளர் பரமன், ஒன்றிய சிறுபான்மை பிரிவு நிர்வாகி ராஜ்குமார், நிர்வாகிகள் நரசிம்மன், சதிஷ், பெருமாள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

    • சமுதாய சீர்கேடுகளால் தி.மு.க.ஆட்சி முடிவிற்கு கவுண்டவுன் ஸ்டார்ட் ஆகிவிட்டது.
    • அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்ட மாணவர்களுக்கு லேப்டாப், தாலிக்கு தங்கம்,அம்மா மினி கிளினிக் போன்ற எண்ணற்ற மக்கள் நலத் திட்டங்கள் இந்த ஆட்சியில் நிறுத்தப்பட்டுள்ளது.

    குள்ளனம்பட்டி:

    சாணார்பட்டியில் அ.தி.மு.க., 52 ஆம் ஆண்டு தொடக்க விழா மற்றும் கட்சி கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.இதற்கு சாணார்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் ராமராஜ் தலைமை தாங்கினார்.

    இதில் அ.தி.மு.க துணை பொதுச்செயலாளரும் முன்னாள் அமைச்சருமான நத்தம் விசுவநாதன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு அ.தி.மு.க. கொடியேற்றி வைத்து பேசியதாவது:-

    அ.தி.மு.க. தொடங்கப்பட்டு 52 ஆண்டுகள் ஆன நிலையில் அதை கொண்டாடும் விதமாக பொதுக் கூட்டங்கள் மற்றும் புதிய கட்சி கொடிகள் ஏற்றும் விழா சிறப்பாக நடந்து வருகிறது.இயக்கம் தொடங்கப்பட்ட காலத்தில் இருந்து கட்சியை அழித்து விட வேண்டும்,ஒழித்து விட வேண்டும் என தி.மு.க.வினர் முன்னாள் முதல்வர் கருணாநிதி முதல் தற்போது அவரது வாரிசுகளும் முயற்சித்து. முடியாமல் அசைக்க முடியாத எஃகு கோட்டையாக அ.தி.மு.க.திகழ்கிறது.

    தி.மு.க. தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிக்கு மாறாக பெரும்பாலான மகளிருக்கு ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை வழங்காததால் இந்தத் திட்டமே தி.மு.க. ஆட்சிக்கு முடிவு கட்டும்.இதுபோன்று செய்ய முடியாத வாக்குறுதிகளை கூறி மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்ததால் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

    மேலும் தமிழ்நாட்டில் எங்கு பார்த்தாலும் சட்ட ஒழுங்கு பிரச்சினை சீர்கேடு,தங்கு தடை இன்றி 24 மணி நேரமும் கிடைக்கும் சாராய சாம்ராஜ்யம்,அபின்,கஞ்சா ,லாட்டரி விற்பனை போன்ற விஷயங்களால் நாட்டையே போதை மாநிலமாக மாற்றி வைத்துள்ளனர்.

    இது போன்ற சமுதாய சீர்கேடுகளால் தி.மு.க.ஆட்சி முடிவிற்கு நாட்கள் எண்ணப்பட்டு கொண்டிருக்கின்றன. ஆட்சி முடிவிற்கு கவுண்டவுன் ஸ்டார்ட் ஆகிவிட்டது. அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்ட மாணவர்களுக்கு லேப்டாப், தாலிக்கு தங்கம்,அம்மா மினி கிளினிக் போன்ற எண்ணற்ற மக்கள் நலத் திட்டங்கள் இந்த ஆட்சியில் நிறுத்தப்பட்டுள்ளது.

    அதுமட்டுமல்லாமல் கல்விக்கடன் ரத்து செய்வதாக கூறியதால் மாணவர்களும்,பழைய பென்ஷன் திட்டம் அமல்படுத்தப்படும் என்று கூறியதால் அரசு ஊழியர்கள்,பொதுமக்கள் என அனைத்து தரப்பு மக்களும் தற்போது போராடி வருகின்றனர் என்றார்.

    இதில் மாநில ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளர் ஆர்.வி.என்.கண்ணன்,வடக்கு ஒன்றிய செயலாளர் சுப்பிரமணி,பொதுக்குழு உறுப்பினர் மேட்டுக்கடை செல்வராஜ், மாவட்ட ஜெ.பேரவை இணைச் செயலாளர்கள் சுப்பிரமணி, ஜெயபாலன், மாவட்ட வர்த்தக அணி பொருளாளர் ஹரிஹரன், ஒன்றிய கவுன்சிலர் ரமேஷ்பாபு, சிறுபான்மை பிரிவு இணைச் செயலாளர் அந்தோணி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் சிறுகுடி தினேஷ், ஒன்றிய இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் பொன் மணிகண்டன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.இதேபோல் ஒத்தக்கடை,கணவாய்ப்பட்டி பங்களா, கொரசின்னம்பட்டி,அஞ்சுகுழிபட்டி,மேட்டுக்கடை,சாணார்பட்டி, நொச்சிஓடைப்பட்டி, விராலிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் புதிய கொடிக்கம்பங்களில் அ.தி.மு.க.கொடியை ஏற்றி வைத்து,இனிப்புகள் வழங்கப்பட்டது

    • ஹச்.என்.யூ.பி.ஆர். மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி சிறப்பு முகாம் நடைபெற்றது.
    • அறிவியல் கருவிகள் மற்றும் அறிவியல் செய்முறைகள் குறித்து மற்ற பள்ளிகளில் இருந்து வந்த மாணவ- மாணவிகளுக்கு விளக்கப்பட்டது.

    நிலக்கோட்டை:

    நிலக்கோட்டை ஹச்.என்.யூ.பி.ஆர். மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி சிறப்பு முகாம் நிலக்கோட்டை இந்து நாடார் உறவின்முறை தலைவரும், பள்ளி தலைவருமான சுசீந்திரன் தலைமையில் நடைபெற்றது.

    பள்ளி தாளாளர் உதயசூரியன் ,பள்ளி முதல்வர் குமரேசன் ஆகியோர் முன்னிலை வைத்தனர். முகாமில் பள்ளி மாணவர்கள் சார்பாக வைக்கப்பட்டிருந்த அறிவியல் கருவிகள் மற்றும் அறிவியல் செய்முறைகள் குறித்து மற்ற பள்ளிகளில் இருந்து வந்த மாணவ- மாணவிகளுக்கு விளக்கப்பட்டது. கண்காட்சியில் நிலக்கோட்டை, நிலக்கோட்டை சுற்று வட்டார பகுதியில் இருந்து ஏராளமான கிராம பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    • மாங்கரை பிரிவு அருகே உள்ள டாஸ்மாக் கடையில் நண்பர்களுடன் மது குடித்துக் கொண்டு இருந்தார்.
    • அப்போது அவர்களுக்கு இடையே திடீர் தகராறு ஏற்பட்டது

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அடுத்த கதிரையன் குளம் பகுதியைச் சேர்ந்தவர் தமிழ்ராஜ். இவரது மகன் ரகுபதி (வயது30). மாங்கரை பிரிவு அருகே உள்ள டாஸ்மாக் கடையில் நண்பர்களுடன் ரகுபதி மது குடித்துக் கொண்டு இருந்தார்.

    அப்போது அவர்களுக்கு இடையே திடீர் தகராறு ஏற்பட்டது. இதில் இரும்பு கம்பியால் தாக்கியதில் ரகுபதி படுகாயமடைந்தார். இதனை அடுத்து திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச் சம்பவம் குறித்து ரெட்டியார் சத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இன்று அதிகாலை கணவன் - மனைவிக்கு இடையே குடும்ப தகராறு காரணமாக வாக்குவாதம் ஏற்பட்டது.
    • அப்போது ஆத்திரத்தில் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து மனைவியின் கழுத்தை அறுத்தார்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் ஜின்னா நகரை சேர்ந்தவர் இஸ்மாயில். புரோட்டா மாஸ்டர். இவரது மனைவி ஜனா பேகம் (30). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

    இந்நிலையில் இன்று அதிகாலை கணவன் - மனைவிக்கு இடையே குடும்ப தகராறு காரணமாக வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரத்தில் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து மனைவியின் கழுத்தை அறுத்தார்.

    இதனால் வலி தாங்காமல் ஜனாபேகம் ரத்த வெள்ளத்தில் கதறினார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். ஜனா பேகத்தை மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடம் சென்று அங்கிருந்த இஸ்மாயிலை கைது செய்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து நகர் தெற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குடும்ப தகராறில் கணவன்- மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • தனிப்படை போலீசார் தட்டாரபட்டி பகுதியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
    • அப்பொழுது ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.

    திண்டுக்கல்:

    வேடசந்தூர் அருகே தட்டாரப்பட்டியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீஸ் துணை சூப்பிரண்டுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதனைத்தொடர்ந்து தனிப்படை போலீசார் தட்டாரபட்டி பகுதியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்பொழுது ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் தட்டாரபட்டியை சேர்ந்த சசிகுமார் (வயது 30), திண்டுக்கல் அருகே உள்ள செட்டிநாயக்கன்பட்டியை சேர்ந்த பிரவீன்குமார் (20) என்பதும் மோட்டார் சைக்கிளில் கஞ்சாவை மறைத்து வைத்து விற்பனை செய்ததும் தெரிய வந்தது.

    அதனைத் தொடர்ந்து தனிப்படை போலீசார் அவர்களை கைது செய்து வேடசந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் அவர்களிடமிருந்து 1½ கிலோ கஞ்சா, செல்போன் மற்றும் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.

    • வத்தலக்குண்டு முத்துமாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு வருடமும் நவராத்திரி கொலு சீரும் சிறப்புமாக நடைபெறுவது வழக்கம்
    • கோதை மங்கலத்தில் மேல் அம்பு எய்தல் நிகழ்வில் சூரன் வதம் நடக்கும். அம்பு எய்தல் நிகழ்ச்சிக்கு பின் முத்து மாரியம்மன் கோவில் வளாகத்தை சுற்றி வந்து கோவிலுக்குள் வந்தடைந்தது.

    வத்தலக்குண்டு:

    வத்தலக்குண்டு முத்துமாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு வருடமும் நவராத்திரி கொலு சீரும் சிறப்புமாக நடைபெறுவது வழக்கம். அதேபோன்று இந்த ஆண்டும் நவராத்திரி கொலு வைத்து ஒவ்வொரு நாளும் முத்துமாரியம்மன், காமாட்சியம்மன், வெங்கடாஜலபதி, முருகன், வள்ளி-தெய்வானை, சரஸ்வதி, அர்த்தநாரீஸ்வரர் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    நவராத்திரி கொலு நிறைவு நாளன்று குதிரை வாகனத்தில் முத்துமாரியம்மன் புறப்பட்டு கோதை மங்கலத்தில் மேல் அம்பு எய்தல் நிகழ்வில் சூரன் வதம் நடக்கும். அம்பு எய்தல் நிகழ்ச்சிக்கு பின் முத்து மாரியம்மன் கோவில் வளாகத்தை சுற்றி வந்து கோவிலுக்குள் வந்தடைந்தது.

    நிகழ்ச்சியில் முத்துமாரியம்மன் கோவில் திருப்பணி குழு தலைவர் அன்பு, கணவாய்ப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ரமேஷ், திருவண்ணாமலை ரெப்போ பேங்க் மேலாளர் கனகராஜ், பூசாரி கண்ணன், சக்தி, ஜெகதீஸ்வரன் மற்றும் திருப்பணிக்குழு நிர்வாகிகள், முத்துமாரியம்மன் கோவில் உற்சவ கமிட்டியாளர்கள், ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்து அருள் பிரசாதத்தை பெற்று சென்றனர்.

    • அறுவை சிகிச்சையின் போது பொதுவாக 3 வகையான முறைகளில் மயக்க மருந்து கொடுக்கப்படுகிறது.
    • பொதுவாக மக்கள் பயப்படும் விஷயம் என்னவென்றால் அளவுக்கு அதிகமான மருந்து செலுத்தப்பட்டு உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு விடுமோ என்பதாகும்.

    நத்தம்:

    நத்தம் என்.பி.ஆர். செவிலியர் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் 'உலக மயக்கவியல் தின விழா' நடந்தது. செவிலியர் கல்லூரி முதல்வர் அன்னலெட்சுமி தலைமை தாங்கினார். 2-ம் ஆண்டு இதயவியல் தொழில்நுட்ப மாணவி ஹாஷியா வரவேற்று பேசினார்.சிறப்பு விருந்தினராக திண்டுக்கல் புனித வளனார் ஆஸ்பத்திரியின் மயக்கவியல் நிபுணர் டாக்டர் பெரியசாமி கலந்து கொண்டு பேசியதாவது:-

    அறுவை சிகிச்சையின் போது பொதுவாக 3 வகையான முறைகளில் மயக்க மருந்து கொடுக்கப்படுகிறது.

    செயற்கை சுவாசம் தொடரப்படும். இந்த முறையில் நோயாளிக்கு சுயநினைவு இருக்காது. மயக்க மருத்துவத்தில் பொதுவாக மக்கள் பயப்படும் விஷயம் என்னவென்றால் அளவுக்கு அதிகமான மருந்து செலுத்தப்பட்டு உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு விடுமோ என்பதாகும்.அவ்வாறு பயப்பட தேவையில்லை. ஏனென்றால் மயக்க டாக்டர் உங்கள் அருகிலேயே இருந்து உங்கள் மருந்தின் அளவு, நாடித்துடிப்பு, ரத்த அழுத்தம் மற்றும் இன்ன பிற உயிர் அளவீடுகளை விழிப்புடனும், ஜாக்கிரதையாகவும் ஒவ்வொரு நொடியும் கவனித்துக் கொண்டிருப்போம் என்றார்.

    மேலும் மயக்கவியல் மருத்துவம் தொடர்பான கருத்துக்களை மாணவர்களிடம் கலந்துரையாடி அவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கமளித்தார். செவிலியர் கல்லூரி 2-ம் ஆண்டு இதயவியல் தொழில்நுட்ப மாணவி ஹிபா நன்றியுரையாற்றினார்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை என்.பி.ஆர். கல்லூரி நிர்வாகத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்.

    • மாத கிருத்திகை உள்ளிட்ட விசேஷ நாட்களில் மட்டும் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்படுகிறது.
    • விடுமுறை தினம் என்பதால் ஏராளமான பக்தர்கள் பழனிக்கு வந்திருந்தனர்.

    பழனி:

    அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். தினமும் காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டு 6 கால பூஜைகள் நடக்கிறது. மாத கிருத்திகை உள்ளிட்ட விசேஷ நாட்களில் மட்டும் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்படுகிறது.

    மேலும் சூரிய கிரகணம், சந்திர கிரகணம் நிகழும் நாட்களின்போது பழனி முருகன் கோவில் மற்றும் அதன் உபகோவில்களில் பூஜை நேரம் மாற்றப்படுவது வழக்கம்.

    அதன்படி இன்று அதிகாலை 1.05 மணிக்கு தொடங்கிய சந்திர கிரகணம் 2.23 மணி வரை நீடித்தது. இதையொட்டி பழனி முருகன் கோவில் உள்பட அனைத்து உபகோவில்களிலும் நேற்று இரவு 8 மணிக்கு அர்த்தஜாம பூஜை செய்து நடை சாத்தப்பட்டது. சந்திரகிரகணம் முடிந்ததும் அனைத்து கோவில்களிலும் சுத்தம் செய்யப்பட்டு பரிகார பூஜை நடைபெற்றது. அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு கலசபூஜை, கலச அபிஷேகம், நைவேத்தியம், தீபாராதனை மற்றும் நித்ய பூஜைகள் நடைபெற்றது. இன்று விடுமுறை தினம் என்பதால் ஏராளமான பக்தர்கள் பழனிக்கு வந்திருந்தனர். இதனால் அடிவாரம் ரோப்கார் நிலையம், மின்இழுவை ரெயில்நிலையம், கிரிவீதி, யானைப்பாதை, படிப்பாதைகளில் ஏராளமான பக்தர்கள் கூட்டம் தென்பட்டது.

    மேலும் மலைக்கோவிலில் நீண்ட நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    இதே போல் திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் நேற்று மாலை 6.45 மணிக்கு நடை சாத்தப்பட்டது. சந்திர கிரகணம் முடிந்த பின்னர் பரிகார பூஜை செய்யப்பட்டு மீண்டும் நடை திறக்கப்பட்டது. இதேபோல் அபிராமி அம்மன் கோவில், தேனி மாவட்டத்தில் உள்ள கோவில்களும் பரிகார பூஜைக்குப் பின்னர் மீண்டும் நடை திறக்கப்பட்டது.

    • கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.
    • பல்கலைக்கழகத்திற்கு உரிய திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடுகள், செலவினங்கள், செயல்படுத்தப்பட வேண்டிய திட்டங்கள், மாணவ மாணவிகளின் குறைகள் பற்றியும் பல்கலைக்கழக பதிவாளரிடம் கேட்டறிந்தனர்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானலில் சட்டப்பேரவை பொது கணக்கு குழு அதன் தலைவர் செல்வப் பெருந்தகை தலைமையில் ஆய்வு மேற்கொண்டது. இதில் எம்.எல்.ஏ.க்கள் கிருஷ்ணமூர்த்தி, சரஸ்வதி, உதய சூரியன், தேன்மொழி, அக்ரி கிருஷ்ணமூர்த்தி, சேகர், பாலாஜி மற்றும் சட்டமன்ற பேரவை இணைச் செயலாளர் தேன்மொழி, சார்பு செயலாளர் பாலசீனிவாசன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். மாவட்ட கலெக்டர் பூங்கொடி முன்னிலை வகித்தார். கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.

    அங்கு பல்கலைக்கழகத்திற்கு உரிய திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடுகள், செலவினங்கள், செயல்படுத்தப்பட வேண்டிய திட்டங்கள், ஒதுக்கிய நிதியில் செய்யப்பட்ட பணிகள் குறித்தும், இங்கு கல்வி பயிலும் மாணவ மாணவிகளின் குறைகள் பற்றியும் பல்கலைக்கழக பதிவாளரிடம் கேட்டறிந்தனர். அதன் பின்னர் அரசு ஆஸ்பத்திரியில் ஆய்வு மேற்கொண்டனர். அபுபோது நிருபர்களிடம் செல்வபெருந்தகை எம்.எல்.ஏ. கூறுகையில், கொடைக்கானல் நகராட்சி அன்னை தெரசா பல்கலைக்கழகம் மற்றும் அரசு ஆஸ்பத்திரியில் ஆய்வு மேற்கொண்டுள்ளோம். கொடைக்கானல் நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மைக்காக 2.17 மதிப்பீட்டில் வாங்கப்பட்ட எந்திரங்கள் முறையாக இயங்கவில்லை எனவும் பயன்பாட்டுக்கு முழுமையாக கொண்டு வரப்படவில்லை என்றும் மத்திய கணக்காயர்கள் கணக்கீடு செய்து கூறியிருந்தனர்.

    அந்த அறிக்கையின் படி தாமதமானதற்கு பல்வேறு காரணங்கள் கூறியிருக்கின்றனர். அன்னை தெரசா பல்கலைக்கழகத்தில் தொலைதூரக் கல்வி முறை வந்ததாலும், அரசு கலைக் கல்லூரி வந்ததாலும் 400-க்கும் மேற்பட்டவர்கள் கல்வி பயில வேண்டிய நிலையில் 200-க்கும் குறைவான எண்ணிக்கையிலேயே மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இன்னும் 400க்கும் மேற்பட்ட இடங்கள் காலியாக உள்ளதால் காலியிடங்களை பூர்த்தி செய்து கல்வித்திறனை மேம்படுத்துவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்க பரிந்துரைத்துள்ளோம். கொடைக்கானல் அரசு ஆஸ்பத்தி சுத்தமாகவும் சுகாதாரமாகவும் உள்ளது. மாவட்ட கலெக்டர் தலைமையில் சிறப்பான செயல்பாட்டில் உள்ளது. அன்னை தெரசா பல்கலைக்கழகத்தில் திறன் மேம்பாடுகளை ஊக்குவிக்கும்விதமான வரைவுத் திட்டங்களையும், கட்டமைப்பு வசதிகளையும் உருவாக்க வேண்டும். கொடைக்கானல் குளிர்பிரதேசம் என்பதால் மாணவிகளுக்கு ஸ்வெட்டர் மற்றும் துணி உலர்த்தும் எந்திரங்கள் வழங்க வேண்டும். கொடைக்கானல் குறிஞ்சி ஆண்டவர் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்துவதற்கான நடவடிக்கைகளை பரிந்துரைத்துள்ளோம்.

    கொடைக்கானல் அரசு ஆஸ்பத்திரியில் ஸ்கேன் டெக்னீசியன், பிரேதப் பரிசோதனை நிலையப்பணியாளர்களை நிரந்தரமாக நியமிப்பதற்கு மருத்துவத் துறையிடம் பரிந்துரைப்போம். மேலும் அனைத்து ஆஸ்பத்திரிகளிலும் டாக்டர்கள் மற்றும் செவிலியர் பற்றாக்குறை உள்ளது. அதற்கு பணியாளர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த குறைகளை போக்க மருத்துவத்துறை செயலாளரிடம் இது குறித்து பேசி பரிந்துரை செய்வோம்.

    மலைச்சாலைகளில் சாலை வசதி ஏற்படுத்தப்பட்டு வருகிறது. வெள்ளகவி கிராமத்துக்கு 6 கி.மீ தூரத்துக்கு சாலை அமைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 3 கி.மீ விரைவில் நிலம் கையகப்படுத்தும் பணிகள் முடிந்ததும் அமைக்கப்படும் என்றார்.

    இந்த ஆய்வின் போது கொடைக்கானல் அரசு ஆஸ்பத்திரியில் தாய்சேய் நலப்பெட்டகங்களை அவர் தாய்மார்களுக்கு வழங்கினார். இதில் மாவட்ட வருவாய் அலவலர் ஷேக் முகைதீன், கொடைக்கானல் வருவாய் கோட்டாட்சியர் ராஜா, கொடைக்கானல் நகராட்சி ஆணையாளர் சத்தியநாராயணன், நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் சங்கர், சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் அனிதாநேர்முக உதவியாளர் (கணக்கு) கணகவள்ளி, மாவட்ட சுற்றுலா அலுவலர் சுதா உள்பட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    ×