என் மலர்
உள்ளூர் செய்திகள்

சாணார்பட்டி பகுதிக்கு வந்த கழுதைகள்.
சாணார்பட்டி பகுதியில் கழுதை பால் விற்பனை அமோகம்
- குழந்தைகளுக்கு கழுதை பாலை கொடுத்தால் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். மேலும் கழுதை பால் சளி, இருமல், மஞ்சள் காமாலைக்கு சிறந்த மருந்தாகும்.
- சாணார்பட்டி, கோபால்பட்டி ஆகிய பகுதிகளில் கழுதையில் இருந்து பாலை கறந்து விற்பனை செய்யப்பட்டது.
குள்ளனம்பட்டி:
கடலூர் மாவட்டம் திட்டக்குடியை சேர்ந்தவர் மகாலிங்கம் (வயது 50). இவர் கழுதைகளை பராமரித்து அதில் இருந்து பால் கறந்து விற்பனை செய்து வருகிறார்.குழந்தைகளுக்கு கழுதை பாலை கொடுத்தால் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். மேலும் கழுதை பால் சளி, இருமல், மஞ்சள் காமாலைக்கு சிறந்த மருந்தாகும். இந்த நிலையில் இவர் திருச்சி, மணப்பாறை வழியாக திண்டுக்கல் வந்தார்.
பின்னர் அங்கிருந்து சாணார்பட்டி, கோபால்பட்டி ஆகிய பகுதிகளில் மகாலிங்கம் கழுதையில் இருந்து பாலை கறந்து விற்பனை செய்தார். இதை பொதுமக்கள் போட்டி போட்டு வாங்கி சென்றனர்.
இது குறித்து மகாலிங்கம் கூறுகையில்,
நான் 25 வருடத்திற்கும் மேலாக கழுதை பால் வியாபாரத்தில் ஈடுபட்டு வருகிறேன். பொதுவாக கழுதை பால் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளதாக இருப்பதால் மக்கள் அதனை விரும்பி வாங்கி அருந்துகின்றனர். ஒரு சின்ன சங்கு பால் ரூ.100க்கு விற்பனை செய்கிறேன் என்றார்.






