திண்டுக்கல்லில் மனைவியை கொல்ல முயன்ற கணவர் கைது

இன்று அதிகாலை கணவன் - மனைவிக்கு இடையே குடும்ப தகராறு காரணமாக வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரத்தில் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து மனைவியின் கழுத்தை அறுத்தார்.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

திண்டுக்கல்:

திண்டுக்கல் ஜின்னா நகரை சேர்ந்தவர் இஸ்மாயில். புரோட்டா மாஸ்டர். இவரது மனைவி ஜனா பேகம் (30). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் இன்று அதிகாலை கணவன் - மனைவிக்கு இடையே குடும்ப தகராறு காரணமாக வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரத்தில் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து மனைவியின் கழுத்தை அறுத்தார்.

இதனால் வலி தாங்காமல் ஜனாபேகம் ரத்த வெள்ளத்தில் கதறினார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். ஜனா பேகத்தை மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடம் சென்று அங்கிருந்த இஸ்மாயிலை கைது செய்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து நகர் தெற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குடும்ப தகராறில் கணவன்- மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com