என் மலர்
நீங்கள் தேடியது "district arts festival competition"
- இக்கலைச் செயல்பாடு கள், மாணவ- மாணவி களின் உள்ளார்ந்த திறமை களை வெளிக்கொண்டு வரக்கூ டி ய சூழலை உருவாக்குவதோடு, பிற கல்விச்சாரா திறன் பயிற்சிகளில் மிகவும் சுறுசுறுப்புடனும், ஆழமாகவும் ஈடுபட உதவுகிறது.
- கவின்கலை, இசை, நடனம், நாடகம், மொழித்திறன் என்ற பெரும் தலைப்புகளின் கீழ் 188 வகையான போட்டிகளில் 5,571 மாணவர்கள் பங்கு பெறுகின்றனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் அண்ணா மலையார் மில்ஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அரசு பள்ளி மாணவ- மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான கலைத் திரு விழாவினை மாவட்ட கலெக்டர் பூங்கொடி தலைமை தாங்கி இன்று தொடங்கி வைத்தார்.மேயர் இளமதி ஜோதி பிரகாஷ் முன்னிலை வகித்தார். விழாவில் கலெக்டர் பேசியதாவது:-
திண்டுக்கல் மாவட்ட த்தில் கடந்த ஆண்டு 370 அரசு பள்ளிகளிலிருந்து 80,670 மாணவ-மாணவிகள் கலைத்திருவிழாவில் பங்குப் பெற்றனர். இது மொத்த எண்ணிக்கையில் 61 சதவீதம் ஆகும். மாவட்ட அளவில் வெற்றி பெற்று, மாநில அளவிலான போட்டிகளில் 52 மாணவ-மாணவிகள் பரிசுகளை வென்றனர். இதில் செங்கட்டாம்பட்டி அரசு நடுநிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவி சிவஹரிதா வெளிநாட்டுச் சுற்றுலா செல்வதற்கு தேர்வாகி சிங்கப்பூருக்குச் சென்று வந்துள்ளார்.
இக்கலைச் செயல்பாடு கள், மாணவ- மாணவி களின் உள்ளார்ந்த திறமை களை வெளிக்கொண்டு வரக்கூ டி ய சூழலை உருவாக்குவதோடு, பிற கல்விச்சாரா திறன் பயிற்சிகளில் மிகவும் சுறுசுறுப்புடனும், ஆழமாகவும் ஈடுபட உதவுகிறது. மேலும், இவை மாணவ- மாணவிகள் துரிதமாக செயல்பட்டு உடனடியாக முடிவெடுக்கும் திறனை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல் அவர்களை தன்னம்பிக்கை கொண்ட வர்களாக மாற்றுகிறது. இதன் நீட்சியாக, இடைநின்ற மாணவர்களை மீண்டும் பள்ளிக்கு ஈர்க்கும் முயற்சி யில் கலைத் திருவிழா போட்டிகள் முக்கியத்துவம் பெறுகின்றன.
இத்தனை சிறப்பம்சங்கள் பெற்ற இக்கலைத் திருவிழா போட்டிகளில் இந்தாண்டும் பள்ளி அளவில் 61,557 மாணவர்களும், வட்டார அளவில் 16,732 மாணவர்களும், இன்றும், நாளையும் நடைபெறும் மாவட்ட அளவிலான போட்டிகளில் கவின்கலை, இசை, நடனம், நாடகம், மொழித்திறன் என்ற பெரும் தலைப்புகளின் கீழ் 188 வகையான போட்டிகளில் 5,571 மாணவர்கள் பங்கு பெறுகின்றனர்.
மாணவ- மாணவிகள் தங்களின் தனித்திறமையை வெளிக்கொண்டுவர தக்க வாய்ப்பாக இதனைப் பயன்படுத்தி மாநில அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்று, மாவட்ட த்திற்கும், பள்ளிக்கும், பெற்றோர்களுக்கும் பெருமை சேர்த்திட வேண்டும் என பேசினார்.
விழாவில் வேடசந்தூர் எம்.எல்.ஏ காந்திராஜன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்நாசருதீன், மாவட்ட கல்வி அலுவலர் (பொ) சுதாகர், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






