என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பள்ளிகளில் சேர்த்த பெற்றோர்கள்"

    • விஜயதசமி நாளில் குழந்தைகளை பள்ளியில் சேர்த்தால் அவர்களது கல்வி, ஞானம் சிறக்கும் என்பது ஐதீகம்.
    • பின்னர் குழந்தையின் நாக்கில் தேனை தடவி நெல்மணிகளில் பிள்ளையார் சுழி போட்டு பின்னர் அகர வரிசை எழுத்துக்களை எழுத வைத்தனர்.

    திண்டுக்கல்:

    விஜயதசமி நாளில் குழந்தைகளை பள்ளியில் சேர்த்தால் அவர்களது கல்வி, ஞானம் சிறக்கும் என்பது ஐதீகம்.

    அதன்படி இன்று பெரும்பாலான ஆரம்ப பள்ளிகளில் குழந்தைகளை பள்ளியில் சேர்த்து வித்யாரம்பத்தை பெற்றோர்கள் தொடங்கினர்.

    கல்விக்கடவுளான சரஸ்வதி தேவிக்கு சிறப்பு பூஜைகள் செய்து குழந்தைகளை அதன்முன் அமரவைத்தனர். பின்னர் குழந்தையின் நாக்கில் தேனை தடவி நெல்மணிகளில் பிள்ளையார் சுழி போட்டு பின்னர் அகர வரிசை எழுத்துக்களை எழுத வைத்தனர். தாடிக்கொம்பு சாலையில் உள்ள காமராஜர் வித்யாலயா பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைவர் சவுந்திர பாண்டியன், தாளாளர் ஹரிகரன் என்ற மணி கண்டன், பொருளாளர் ஈஸ்வரன், முதல்வர் ஜெர்த் நவநீதம் மற்றும் உறவின்முறை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    தாடிக்கொம்பு நேருவித்யாலயா நர்சரி பள்ளியில் தாளாளர் சேசுதாஸ் முன்னிலையில் மாணவர் சேர்க்கை நடைபெற்றது. இதேபோல் எஸ்.எல்.வி பள்ளியில் தாளாளர் சந்திரசேகரன், செயலாளர் சரண்யா, ஸ்ரீராம், முதல்வர் ரேவதி ஆகியோர் முன்னிலையில் மாணவர் சேர்க்கை நடைபெற்றது.

    இதுமட்டுமின்றி திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் உள்பட பல்வேறு கோவில்களிலும் நெல்மணிகளில் தங்கள் குழந்தைகளை அகர வரிசை எழுத்துக்களை எழுத வைத்தனர்.

    ×