என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டிரான்ஸ்பார்மரை சூழ்ந்துள்ள முட்புதர்கள்"

    • கடந்த சில நாட்களாக டிரான்ஸ்பார்மர் முறையாக பராமரிக்கப்படாததால் அதனை சுற்றி முட்புதர்கள் சூழ்ந்துள்ளது.
    • போலீசார் மட்டுமல்லாது புகார் அளிக்கவரும் பொது மக்களும் இதனால் பாதிக்கப்படுகின்றனர்.

    நிலக்கோட்டை:

    நிலக்கோட்டை-பெரியகுளம் சாலையில் டி.எஸ்.பி அலுவலகம், அனைத்து மகளிர் போலீஸ் நிலையம், நிலக்கோட்டை போலீஸ் நிலையம் அமை ந்துள்ளது. இப்பகுதியில் மின்வினியோகம் செய்ய ப்படு வதற்காக டிரான்ஸ்பார்மர் அமைக்க ப்பட்டது.

    இதையொட்டி ஜார்ஜ்பு ரம் பகுதியில் இருந்து நால்ரோடு வரை சாக்கடை கால்வாய் உள்ளது. கடந்த சில நாட்களாக டிரான்ஸ்பார்மர் முறையாக பராமரிக்கப்படாததால் அதனை சுற்றி முட்புதர்கள் சூழ்ந்துள்ளது. இந்த புதர்கள் பாம்பு, விஷஜந்துகளின் கூடாரமாக உள்ளது.

    சாக்கடை கால்வாய் முறையாக தூர்வாரப்படவி ல்லை. இதனால் மழை பெய்யும்போது சாக்கடை நீர் அலுவலகத்திற்குள் புகுந்துவிடுகிறது. போலீசார் மட்டுமல்லாது புகார் அளிக்கவரும் பொது மக்களும் இதனால் பாதிக்கப்படுகின்றனர். எனவே டிரான்ஸ்பார்மரை சுற்றியுள்ள முட்புதர்களை அகற்றவேண்டும். சாக்கடை கால்வாயை முறையாக தூர்வார வேண்டும் என சமூகஆர்வலர்கள் கோரி க்கை விடுத்துள்ளனர்.

    ×