என் மலர்
உள்ளூர் செய்திகள்

வழிபாட்டில் கலந்து கொண்டவர்கள்.
துர்க்கை விரத வழிபாடு
- வத்தலக்குண்டு முத்துமாரியம்மன் கோவிலில் துர்காஷ்டமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
- கோவில் உற்சவ கமிட்டியாளர்கள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
வத்தலக்குண்டு:
வத்தலக்குண்டு முத்துமாரியம்மன் கோவிலில் துர்காஷ்டமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அரசு மருத்துவமனை செவிலியர் வீருசின்னம்மாள் அண்ணாமலை குடும்பத்தார் சார்பில் நடந்த அன்னதானத்தை திருப்பணி குழு தலைவர் அன்பு, ஊராட்சி மன்ற கூட்டமைப்பு சங்கத் தலைவர் ரமேஷ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இவ்விழாவில் திருவண்ணாமலை ரெப்கோ வங்கி மேலாளர் கனகராஜ், பூசாரி கண்ணன், முத்துமாரியம்மன் கோவில் உற்சவ கமிட்டியாளர்கள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
Next Story






