வடமதுரை அருகேஇறந்தவரின் உடலை எடுத்து செல்ல கிராம மக்கள் எதிர்ப்பு

அந்த நிலத்தின் உரிமையாளர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தனது தோட்டத்தை விற்பதாக கூறி கம்பி வேலி அமைத்தார்.இந்நிலையில் இறந்தவர் உடலை எடுத்துச் செல்ல எதிர்ப்பு தெரிவித்ததால் தாசில்தார் மற்றும் வடமதுரை இன்ஸ்பெக்டரிடம் புகார் அளிக்கப்பட்டது.
பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார்.
பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார்.
Published on

வடமதுரை:

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள புச்சம்பட்டியைச் சேர்ந்தவர் ஆண்டி (வயது 85). இவர் வயது மூப்பின் காரணமாக இறந்து விட்டார். இவரது உடலை பக்கத்து தோட்டத்தின் வழியாக எடுத்துச் செல்ல ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அந்த நிலத்தின் உரிமையாளர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தனது தோட்டத்தை விற்பதாக கூறி கம்பி வேலி அமைத்தார்.

இதனால் அப்போதே பொதுமக்கள் கம்பி வேலியை அடித்து நொறுக்கினர். இந்நிலையில் இறந்தவர் உடலை எடுத்துச் செல்ல எதிர்ப்பு தெரிவித்ததால் தாசில்தார் மற்றும் வடமதுரை இன்ஸ்பெக்டர் ஜோதிமுருகனிடம் புகார் அளிக்கப்பட்டது.

அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து இரு தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்ைத நடந்து கொண்டு இருந்தபோதே இறந்தவர் குடும்பத்தினர் கம்பி வேலியை தாண்டி உடலை எடுத்துச் ெசன்றனர். மேலும் அவரது உடலையும் மயானத்தில் அடக்கம் செய்தனர்.

இதனால் கடும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் நிலத்தின் உரிமையாளர் புகார் அளித்தால் அரசின் உத்தரவுப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com