என் மலர்
நீங்கள் தேடியது "வன துர்க்கை அம்மன் கோவில் திருவிழா"
- முதல் நாள் காலை 5 மணிக்கு பெண்கள் மாவிளக்கு, முைளப்பாரி, எடுத்தல், காலை 9 மணிக்கு பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
- விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகளும், பொதுமக்களும் செய்திருந்தனர்.
பெரும்பாறை:
கொடைக்கானல் கீழ்மலை பெரியூர் ஊராட்சி நடுபட்டி கிராமத்தில் வனதுர்க்கையம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலிy; 2 நாள் திருவிழா நடந்தது. முதல் நாள் காலை 5 மணிக்கு பெண்கள் மாவிளக்கு, முைளப்பாரி, எடுத்தல், காலை 9 மணிக்கு பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதைத் தொடர்ந்து பக்தர்கள் தங்களது நேர்த்திக் கடன்களை செலுத்தினர்.
பின்னர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பகல் 12 மணியளவில் அன்னதானம் நடைபெற்றது. 2-வது நாள் நிகழ்ச்சியாக கொடைக்கானல் யூனியன் சேர்மன் சுவேதா ராணி கணேசன் குத்து விளக்கை ஏற்றி திருவிளக்கு பூஜையை தொடங்கி வைத்தனர்.
பின்னர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதன் பின்னர் அன்னதானம் நடைபெற்றது. இதில் மலைக்கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகளும், பொதுமக்களும் செய்திருந்தனர்.






