என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Weeded shopping streets"

    • ஆயுதபூஜை பண்டிகை நாளை நாடுமுழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கோவில்களில் மட்டுமின்றி வீடுகளிலும் மக்கள் பூஜை செய்து வழிபடுவார்கள்.
    • எனவே விவசாயிகள் கிராமங்களில் இருந்து வாழை கன்றுகள், மாவிலைகள் விற்பனை செய்யப்பட்டது.

    திண்டுக்கல்:

    ஆயுதபூஜை பண்டிகை நாளை நாடுமுழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கோவில்களில் மட்டுமின்றி வீடுகளிலும் மக்கள் பூஜை செய்து வழிபடுவார்கள். வீடுகளில் விவசாய கருவிகள், பிற வேலைக்காக பயன்ப டுத்தப்படும் உபகரணங்களை வைத்து பூஜை செய்வது வழக்கம்.

    அதேபோல் கடைகளில் தராசு, எடைக்கற்கள் மற்றும் அளத்தல் கருவிகள் உள்ளிட்டவற்றை சாமி படத்தின் முன்பு வைத்து வழிபாடுகள்நடக்கும். இதுதவிர தனியார் நிறுவனங்களில் அனைத்து வகை எந்திரங்கள், கருவிகளுக்கும் பூஜை செய்வார்கள். இதில் அனைத்து பணியாளர்களும் பங்கேற்பார்கள். இதுதவிர ஒர்க்ஷாப், ஆட்டோ நிறுத்தம் உள்ளிட்டவற்றில் ஆயுதபூஜை வழிபாடு உற்சாகமாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆயுதபூஜை வழிபாட்டில் முக்கிய இடம் பெறுவது அவல், பொரி, கடலை ஆகியவை ஆகும்.

    இதை முன்னிட்டு திண்டுக்கல் உழவர் சந்தை, நாகல்நகர், மெயின்ரோடு, கடைவீதி, மேற்கு ரதவீதி, ஏ.எம்.சி. சாலை, காட்டாஸ்பத்திரி உள்ளிட்ட பகுதிகளில் சாலையோரத்தில் பூஜை பொருட்கள் விற்பனை விறுவிறுப்பாக விற்பனை நடந்தது. இதற்கு அடுத்து பூஜையில் பழங்களுக்கு முக்கிய இடம் பெறுகின்றன.

    இதனால் பல இடங்களில் தற்காலிக பழக்கடைகள் அமைக்கப்பட்டு இருந்தன. அவற்றில் ஆப்பிள், மாதுளை, கொய்யா, விளாம்பழம், ஆரஞ்சு, சாத்துக்குடி உள்பட அனைத்து வகையான பழங்களும் நேற்று விற்பனை செய்யப்பட்டன. இதுதவிர ஆயுதபூஜையில் வாழை கன்றுகள், மாவிலைகள் தோரணம் கட்டப்படும். எனவே விவசாயிகள் கிராமங்களில் இருந்து வாழை கன்றுகள், மாவிலைகள் விற்பனை செய்யப்பட்டது. பொரி படி ரூ. 10க்கும், நிலக்கடலை படி ரூ. 100க்கும் விற்கப்பட்டது. அதேபோல் வாழை மரம் ஜோடி ரூ.50, அவல் படி ரூ.80க்கும் விற்கப்பட்டது.

    இதனை வாங்க மக்கள் கடை வீதிகளில் குவிந்தனர். இதனால் விற்பனை களைகட்டியது . கடந்த புரட்டாசி மாதம் முழுவதும் மந்தமாக இருந்த வியாபாரம் இன்று சூடு பிடித்து விற்பனை நடைபெற்றது.

    ×