என் மலர்tooltip icon

    திண்டுக்கல்

    • மலைக்கோவிலில் 4 திசைகளிலும் தீபம் ஏற்றும் நிகழ்ச்சியை தொடர்ந்து மாலை 6 மணிக்கு மலைக்கோவில் தீப ஸ்தம்பத்தில் கார்த்திகை தீபம் ஏற்றும் நிகழ்ச்சி மற்றும் சொக்கபனை கொளுத்துதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
    • விடுமுறை தினம் என்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் பழனி கோவிலில் குவிந்தனர்.

    பழனி:

    தமிழ் கடவுள் முருகனின் 3-ம் படை வீடான பழனிக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். இங்கு ஆண்டு தோறும் கார்த்திகை தீபத்திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா 20ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. 6-ம் நாளான நேற்று மாலை சாயரட்சை பூைஜ நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சண்முகா ர்ச்சனை, வள்ளி- தெய்வானை சின்னகு மாரருக்கு தீபாராதனை நடைபெற்றது. பின்னர் தங்க மயில் வாகனத்தில் சின்னகுமாரர் உலா வரும் நிகழ்ச்சி மற்றும் தங்கரத புறப்பாடு நடைபெற்றது.

    இன்று பழனி முருகன் கோவிலில் தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. மதியம் 2 மணிக்கு சண்முகார்ச்சனை அதனைத் தொடர்ந்து சாயரட்சை பூஜை மற்றும் சின்னகுமாரர் தங்க மயில் வாகனத்தில் உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. மலைக்கோவிலில் 4 திசைகளிலும் தீபம் ஏற்றும் நிகழ்ச்சியை தொடர்ந்து மாலை 6 மணிக்கு மலைக்கோவில் தீப ஸ்தம்பத்தில் கார்த்திகை தீபம் ஏற்றும் நிகழ்ச்சி மற்றும் சொக்கபனை கொளுத்துதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    திருஆவினன்குடி, பெரியநாயகி அம்மன் கோவிலிலும் கார்த்திகை தீபம், சொக்கபனை கொளுத்தப்படுகிறது. கார்த்திகை தீபத்தையொட்டி இன்று தங்கரத புறப்பாடு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. விடுமுறை தினம் என்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் பழனி கோவிலில் குவிந்தனர். இதனால் அடிவாரம், கிரி வீதி, ரோப்கார், மின் இழுவை ரெயில் நிலையம், யானைப்பாைத, படிப்பாதை உள்ளிட்ட இடங்களில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. மலைக்கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    இதேபோல் திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு கோவில்களிலும் கார்த்திகை தீபம் இன்று ஏற்றப்படுகிறது. தேனி மாவட்டம் தேவ தானப்பட்டி முருகமலை பரமசிவன் கோவிலில் மாலை 6 மணிக்கு 2500 அடி உயர முருகமலையில் கார்த்திகை தீபம் ஏற்றப்படுகிறது. இதையொட்டி கழுைத மற்றும் குதிரைகள் மூலம் பூஜை மற்றும் அன்னதான பொருட்கள் மலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

    ஏராளமான பக்தர்கள் தங்கள் வீடுகளிலும் தீபம் ஏற்றி கார்த்திகை திருநாளில் வழிபாடு நடத்தினர்.

    • பவுர்ணமி திதியும், கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்து வரும் நாள் கார்த்திகை தீபத் திருநாளாக கொண்டாடப்படுகிறது.
    • அகல் விளக்குகளில் பஞ்சு திரியிட்டு, நல்லெண்ணெய் அல்லது பஞ்ச கூட்டு எண்ணெய் ஊற்றி விளக்கேற்றி வழிபாடு நடத்துவார்கள்.

    திண்டுக்கல்:

    தமிழ் மாதங்களில் ஒன்றான கார்த்திகை மாத த்தில் பவுர்ணமி திதியும், கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்து வரும் நாள் கார்த்திகை தீபத் திருநாளாக கொண்டாடப்படுகிறது. அதன்படி நாளை திருக்கா ர்த்திகை தீப திருநாள் கொண்டாடப்படுகிறது.

    அன்றைய தினம் வீடுகள் தோறும் விளக்குகள் ஏற்றி வழிபடுவது வழக்கம். அகல் விளக்குகளில் பஞ்சு திரியிட்டு, நல்லெண்ணெய் அல்லது பஞ்ச கூட்டு எண்ணெய் ஊற்றி விளக்கேற்றி வழிபாடு நடத்துவார்கள்.

    இதற்காக திண்டுக்கல் கடைவீதிகளில் சாலை யோரங்களில் அகல் விளக்கு, திரி, எண்ணெய் மற்றும் பூஜை பொருட்கள் விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது.

    அம்மன் விளக்கு, பாவை, கும்பம், விநாயகர் மற்றும் டிசைன் விளக்குகள் விற்பனைக்கு வந்துள்ளது. விளக்குகளை பொதுமக்கள் ஆர்வத்துடன் தேர்வு செய்து வாங்கி வருகின்றனர். ரூ.2 முதல் ரூ.100 வரையிலான 1 இன்ச் முதல் ஒரு அடி வரை விளக்குகள் விற்பனைக்கு வந்துள்ளது. இதனால் கடைவீதிகளில் பொதுமக்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது.

    • பாடல்கள் மூலமாகவும் பறை, சிலம்பாட்டம், கரகாட்டம் மூலம் நடித்துக் காட்டி விழிப்புணர்வினை ஏற்படுத்தினர்.
    • ந்நிகழ்ச்சி மூலம் மாணவர்கள் கரகாட்டம் மற்றும் பறையை தாமாகவே முன்வந்து மேடையில் நிகழ்த்தினர்.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் அருகே நல்லமநாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழ் கூடல் நிகழ்ச்சி நடைபெற்றது.இதற்கு தலைமை ஆசிரியர் மகேந்திரன் தலைமை தாங்கினார். முன்னதாக மாணவர் அருண்குமார் வரவேற்புரை ஆற்றினார். முதுகலை தமிழ் ஆசிரியர் மணிகண்டன் நாட்டுப்புற கலைகள் நிகழ்ச்சி பற்றி விழிப்புணர்வினை ஏற்படுத்தினார்.

    இந்நிகழ்ச்சியில் செந்திவேலன், நாட்டுப்புற கலைகள் பயிற்றுநர் தங்கப்பாண்டி ஆகியோர் அழிந்து வரும் அரிய கலைகள் பற்றிய விழிப்புணர்வினை பாடல்கள் மூலமாகவும் பறை, சிலம்பாட்டம், கரகாட்டம் மூலம் நடித்துக் காட்டி விழிப்புணர்வினை ஏற்படுத்தினர். இந்நிகழ்ச்சி மூலம் மாணவர்கள் கரகாட்டம் மற்றும் பறையை தாமாகவே முன்வந்து மேடையில் நிகழ்த்தினர்.

    மாணவர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிகளை மாணவிகள் ஜனனி, அபிஷாரணி ஆகியோர் தொகுத்து வழங்கினர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தமிழ் ஆசிரியர்கள் வீரமுத்து, தமிழ்ச்செல்வி, வினோலா செலின் ஆகியோர் செய்திருந்தனர்.இதில் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாணவி சிரில் கேத்தரின் நன்றி கூறினார்.

    • கோவிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு முன்னதாக ஹோம பூஜை, யாகசாலை பூஜைகள்உள்பட பல்வேறு பூஜைகள் நடந்தது.
    • அப்போது 6 கருடன்கள் வானில் வட்டமிட்டதால் பக்தர்கள் ஆரவாரம் செய்தனர்.

    வத்தலக்குண்டு:

    வத்தலக்குண்டு மேலமந்தை தெருவிலுள்ள பாலவிநாயகர் கோவிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு முன்னதாக ஹோம பூஜை, யாகசாலை பூஜைகள்உள்பட பல்வேறு பூஜைகள் நடந்தது.

    கும்பாபிஷேகத்தை இடைக்காட்டூர் சிவாச்சாரியார் சிவசுப்பிரமணியம் நடத்தினார். பல்வேறு புண்ணிய ஸ்தலங்களிலிருந்து கொண்டுவரப்பட்டிருந்த புனிதநீரை கொண்டு கலச பூஜை நடந்தது அப்போது 6 கருடன்கள் வானில் வட்டமிட்டதால் பக்தர்கள் ஆரவாரம் செய்தனர். கும்பாபிஷேகத்தில் ஊர் முக்கியபிரமுகர்கள், பொதுமக்கள் உள்பட ஏராளமானோர்கலந்துகொண்டனர். அன்னதானம் நடந்தது.

    கும்பாபிஷேக ஏற்பாடுகளை மேலமந்தை தெரு பொதுமக்கள் இளைஞர்கள் மற்றும் முத்துமாரியம்மன் கோவில் திருப்பணி குழுவினர் மற்றும் பலர் செய்திருந்தனர்.

    • கொசவபட்டி துணைமின் நிலையத்தில் வருகிற 28-ந் தேதி பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது

    திண்டுக்கல்:

    கொசவபட்டி துணைமின் நிலையத்தில் வருகிற 28-ந் தேதி பராமரிப்பு பணிகள் காரணமாக மின் வினியோகம் நிறுத்தப்படுகிறது. எனவே இந்த பகுதிகளுக்குட்பட்ட கிராமங்களில் அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள் ளது.

    இதே போல் செங்குறிச்சி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளிலும் அன்றைய தினம் மின் தடை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

    • 3 ரெயில்வே கேட்டுகளையும் கடந்து செல்ல ஒரு மணி நேரத்திற்கு மேலாவதாலும், போக்குவரத்து நெரிசலும், ஏற்படுவதால் எளிதாக கடக்க மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
    • புதிய பாலத்தை அமைச்சர்கள் இ.பெரியசாமி, அர.சக்கரபாணி, எ.வ.வேலு ஆகியோர் கலெக்டர் பூங்கொடி தலைமையில் திறந்து வைத்தனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல்லில் இருந்து மணக்காட்டூர் செல்லும் சாலையில் தொடர்ச்சியாக 3 ெரயில்வே கேட்டுகள் அடுத்தடுத்து உள்ளன. இப்பகுதியில் பல மேல்நிலை பள்ளிகள் உள்ளன. இந்த 3 கேட்டுகளையும் கடந்து செல்ல ஒரு மணி நேரத்திற்கு மேலாவதாலும், போக்குவரத்து நெரிசலும், ஏற்படுவதால் எளிதாக கடக்க மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த மேம்பாலப் பணியானது கடந்த 2016-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்ட கால தாமதம் காரணமாக பணிகளில் தொய்வு ஏற்பட்டது. தற்போது நிலம் கையகப்படுத்தும் பணியில் இருந்த சிரமங்களுக்கு சுமூகத்தீர்வு காணப்பட்டு, இடம் கையக்கப்படுத்தும் பணிகள் முடிந்து, மேம்பால பணிகள் அனைத்தும் 100 சதவீதம் நிறைவடைந்ததையடுத்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது. புதிய பாலத்தை அமைச்சர்கள் இ.பெரியசாமி, அர.சக்கரபாணி, எ.வ.வேலு ஆகியோர் கலெக்டர் பூங்கொடி தலைமையில் திறந்து வைத்தனர்.

    இந்த புதிய பாலத்தின் மூலம் திண்டுக்கல்லில் இருந்து செங்குறிச்சி, அதிகாரிப்பட்டி, திருமலைகேணி மற்றும் மணக்காட்டூர் செல்லும் வாகனங்கள் மேம்பாலத்தை பயன்படுத்தி பாதுகாப்பான விரைவான போக்குவரத்து உறுதி செய்யப்பட்டுள்ளது.

    நிகழ்ச்சியில் வேலுச்சாமி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் செந்தில்குமார், காந்திராஜன், மேயர் இளமதி, துணை மேயர் ராஜப்பா, வடக்கு ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன், பாலகிருஷ்ணாபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் ரேவதி நாகராஜ், துணைத்தலைவர் பானுப்பிரியா மற்றும் வார்டு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • கடை வாடகை முறையாக கொடுக்க வில்லை என பிரச்சினை எழுந்துள்ளது.
    • இதனால் கடையை காலிசெய்து பாக்கி வாடகையை கேட்டுள்ளார்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் டோபிகானல் பகுதியை சேர்ந்த அன்பழகன் மகன் அருண் குமார் (30) இவருக்கு லாஸ் காட்ரோடு பகுதியில் வணிக கடை உள்ளது. அந்தக் கடையை பீட்டர்(45) என்பவருக்கு வாடகைக்கு கொடுத்துள்ளார். வாடகை முறையாக கொடுக்க வில்லை என பிரச்சினை எழுந்துள்ளது.

    இதனால் கடையை காலிசெய்து பாக்கி வாடகையை கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பீட்டர் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் அருண்குமாரை வெட்டி யதில் காயம் ஏற்பட்டது. உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்த அப்பகுதி மக்கள் காயமடைந்த அருண்குமாரை கொடை க்கானல் அரசு ஆஸ்பத்திரி யில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பெற்று வந்த அருண்குமார் மேல்சிகிச்சை க்காக தேனி க.விலக்கு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இது குறித்து கொடைக்கானல் போலீசார் பீட்டர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • யோகா மையம் சேவை தேவைகள் பற்றிய கலந்துரையாடல் நிகழ்ச்சி பல்கலைக்கழக கூட்ட அரங்கில் நடைபெற்றது.
    • விளையாட்டு இயக்குனர் சுகுமார் ஆகியோர் கிராமப்புற சூழலில் யோகாவின் பங்கு குறித்து எடுத்துரைத்தனர்.

    சின்னாளபட்டி:

    திண்டுக்கல் காந்திகிராம பல்கலைக்கழக தரநிலை மேம்பாட்டு செயல்பாட்டின் ஒரு பகுதியாக இந்திய தரநிலை, யோகா மையம் சேவை தேவைகள் பற்றிய கலந்துரையாடல் நிகழ்ச்சி பல்கலைக்கழக கூட்ட அரங்கில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு காந்திகிராம பல்கலைக்கழக பதிவாளர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். இந்திய தரநிர்ணய அமைவனம் மதுரை தலைவர் தயானந்த் அனைவரையும் வரவேற்றார். பல்கலைக்கழக சமூக அறிவியியல் துறை டீன் மணி, உடற்கல்வி மற்றும் விளையாட்டு இயக்குனர் சுகுமார் ஆகியோர் கிராமப்புற சூழலில் யோகாவின் பங்கு குறித்து எடுத்துரைத்தனர்.

    பி.ஐ.எஸ். தர நிர்ணய இணை இயக்குனர் ஹேமலதா, துணை இயக்குனர் சந்தோஷ் ஆகியோர் தர நிலைகள் தொடர்பான கேள்விக்கு பதில் அளித்தனர். கலந்துரையாடலில் 35 யோகா வல்லுனர்கள், திண்டுக்கல் மாவட்ட யோகா சங்க உறுப்பினர்கள், யோகா மைய இயக்குனர்கள் உள்பட பல்வேறு அமைப்பினர் கலந்து கொண்டனர்.

    • மருத்துவ பரிசோதனைக்காக 3 பேரும் திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அழைத்து வரப்பட்டனர்.
    • தப்பி ஓடிய சதீஸ்குமார் தனது நண்பருக்கு உடனடி தகவல் கொடுத்து காரில் ஏறி சென்றார்.

    திண்டுக்கல்:

    தேனியில் இருந்து திண்டுக்கல்லுக்கு காரில் கஞ்சா கடத்தி வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போதைப்பொருள் கடத்தல் நுண்ணறிவுப் பிரிவு இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையிலான போலீசார் நேற்று இரவு செம்பட்டி பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தனர்.

    அப்போது தேனியில் இருந்து திண்டுக்கல் வந்த 2 கார்களை நிறுத்தி சோதனை நடத்தினர். அந்த காரில் 22 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. காரில் வந்த கம்பத்தைச் சேர்ந்த சதீஸ்குமார் (25), நவீன்குமார் (30), பாண்டீஸ்வரன் (28) ஆகிய 3 பேரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக தயார்படுத்தினர்.

    மருத்துவ பரிசோதனைக்காக அவர்கள் 3 பேரும் திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அழைத்து வரப்பட்டனர்.

    அப்போது அங்கிருந்த கூட்ட நெரிசலை பயன்படுத்தி சதீஸ்குமார் என்பவர் தப்பி ஓடினார். பாதுகாப்புக்காக நின்று கொண்டு இருந்த நுண்ணறிவு பிரிவு போலீஸ் நாகலிங்கம் (35) என்பவர் தடுக்க முயன்றபோது அவரையும் தாக்கி கீழே தள்ளி விட்டு ஓடினார்.

    இதில் நாகலிங்கம் படுகாயமடைந்தார். தப்பி ஓடிய சதீஸ்குமார் தனது நண்பருக்கு உடனடி தகவல் கொடுத்து காரில் ஏறி சென்றார். இதனைத் தொடர்ந்து அவரை தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.

    பிடிபட்ட மற்ற 2 பேர்களான நவீன்குமார் மற்றும் பாண்டீஸ்வரன் ஆகிய இருவரும் மருத்துவ பரிசோதனைக்கு பின்பு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    • ஒரு பேக்கரியில் வாடிக்கையாளர்கள் ஒரு கிலோ ஜிலேபி உள்ளிட்ட இனிப்பு பொருள்கள் வாங்கி வீட்டில் சென்று பார்த்த போது கெட்டு ப்போன உணவாக இருந்தது.
    • அந்த பேக்கரிக்கு சென்று பேக்கரி கடை கதவு ஷட்டரை மூடி விற்பனையாளரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட னர்.

    செம்பட்டி:

    செம்பட்டியில், ஓட்ட ல்கள், பேக்கரிகள், டீக்கடை கள், மளிகை கடைகள் உள்ளிட்ட பல்வேறு கடைகள் செய ல்பட்டு வருகிறது. இந்நிலை யில், இங்கு உள்ள உணவக ங்கள் மற்றும் பேக்கரிகளில், கெட்டுப்போன உணவு பொருட்களும், டிபார்ட்மெ ண்ட் ஸ்டோர், மளிகை கடைகளில் காலாவதியான உணவுப் பொருள்கள் விற்பனை செய்து வருவ தாக, தொடர்ந்து புகார் எழுந்துள்ளது.

    இந்நிலையில் செம்பட்டி பஸ் நிலையம் எதிரே உள்ள ஒரு பேக்கரியில் வாடிக்கை யாளர்கள் ஒரு கிலோ ஜிலேபி உள்ளிட்ட இனிப்பு பொருள்கள் வாங்கிச் சென்றனர். வீட்டில் சென்று பார்த்த போது கெட்டு ப்போன உணவாக இருந்தது.

    இதனால் அதிர்ச்சிய டைந்த வாடிக்கை யாளர் மற்றும் அவரது ஆதரவாள ர்கள் அந்த பேக்கரிக்கு சென்று பேக்கரி கடை கதவு ஷட்டரை மூடி விற்பனையாளரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட னர்.

    இச்சம்பவத்தால் அந்த கடை முன்பு மக்கள் கூடினர். இச்சம்பவம் குறித்து சம்பந்தப்பட்ட நிலக்கோட்டை உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் அவர்கள் கண்டு கொள்ள வில்லை என கூறப்படுகிறது. எனவே மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள் செம்பட்டியில் உள்ள உணவகங்கள் மற்றும் பேக்கரி, மளிகை கடைகளில் ஆய்வு செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • திண்டுக்கல் தொழிலதிபர் ரத்தினம் வீட்டில் இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் மீண்டும் சோதனைக்கு வந்தனர்.
    • தொழிலதிபர் ரத்தினம் வீட்டில் சோதனை நடைபெறுவதாக வந்த தகவலையடுத்து அவரது வீட்டின் முன்பு ஆதரவாளர்கள் ஏராளமானோர் குவிந்து வருகின்றனர்.

    திண்டுக்கல்:

    தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவை விட கூடுதலாக மணல் அள்ளி விற்பனை செய்ததாகவும், மணல் ஒப்பந்த குவாரிகளில் வந்த வருமானத்தை சட்ட விரோதமாக பண பரிமாற்றம் செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

    இதனைத் தொடர்ந்து சட்ட விரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த செப்டம்பர் மாதம் 12-ந்தேதி ஒரே நேரத்தில் புதுக்கோட்டை மாவட்டம் முத்துப்பட்டினத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ராமச்சந்திரன், திண்டுக்கல் ஜி.டி.என். சாலையில் உள்ள தொழிலதிபர் ரத்தினத்தின் வீடு, அலுவலகம், உறவினர் கோவிந்தன், மணல் குவாரி அதிபர் கரிகாலன் மற்றும் பொதுப்பணித்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற பொறியாளர் திலகம், நீர்வளத்துறை முதன்மை பொறியாளர் முத்தையா ஆகியோருக்கு சொந்தமான வீடுகள் மற்றும் எழிலகத்தில் உள்ள நீர்வளத்துறை அலுவலகம் என மொத்தம் 34 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர்.

    2 நாட்களுக்கு மேல் நீடித்த இந்த சோதனையில் மணல் குவாரி அதிபர் ராமச்சந்திரன், திண்டுக்கல் தொழிலதிபர் ரத்தினம், கரிகாலன் மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகளின் வீடுகள் ஆகியவற்றில் இருந்து கணக்கில் வராத பல கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்கள், ரூ.12.82 கோடி ரொக்கம், ரூ.56.86 லட்சம் மதிப்புள்ள 1024 கிராம் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

    இந்த சோதனையைத் தொடர்ந்து 10 மாவட்ட கலெக்டர்கள், நீர்வளத்துறை முதன்மை பொறியாளர் முத்தையா, ஓய்வு பெற்ற பொதுப்பணித்துறை பொறியாளர் திலகம் ஆகியோரை விசாரணைக்கு ஆஜராகும்படி அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருந்தது.

    இந்த சம்மனைத் தொடர்ந்து நீர்வளத்துறை முதன்மை பொறியாளர் முத்தையா, நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் சில முக்கிய ஆவணங்களுடன் நேரில் ஆஜராகி விளக்கமளித்தார். மேலும் மாவட்ட கலெக்டர்களுக்கு அனுப்பப்பட்ட சம்மனை எதிர்த்து தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு வருகிற திங்கட்கிழமை விசாரணைக்கு வர உள்ளது.

    இந்நிலையில் திண்டுக்கல் தொழிலதிபர் ரத்தினம் வீட்டில் இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் மீண்டும் சோதனைக்கு வந்தனர். காலை 9.15 மணிக்கு 2 கார்களில் வந்த 4 பேர் கொண்ட குழுவினர் வீட்டுக்குள் சென்று ரத்தினம் உள்ளாரா? என கேட்டனர். அவர் நேற்று இரவு வெளியூர் சென்று விட்டதாக குடும்பத்தினர் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அதிகாரிகள் தங்கள் 2-ம் கட்ட விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

    சோதனையை முன்னிட்டு அவரது வீட்டுக்கு முன்பு துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்பு படை போலீசார் நிறுத்தப்பட்டனர். ஏற்கனவே அவரது வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ஏற்கனவே நடந்த சோதனை 3 நாட்கள் வரை நீடித்த நிலையில் தற்போது எத்தனை நாட்கள் சோதனை தொடரும் என பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனிடையே தொழிலதிபர் ரத்தினம் வீட்டில் சோதனை நடைபெறுவதாக வந்த தகவலையடுத்து அவரது வீட்டின் முன்பு ஆதரவாளர்கள் ஏராளமானோர் குவிந்து வருகின்றனர்.

    • கடந்த 19-ம் தேதி சந்தனக் கருப்பு சுவாமி கோவிலில் இருந்து கன்னிமார் தீர்த்தம் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு காப்பு கட்டுதலுடன் விழா தொடங்கியது.
    • இதில் சுற்றுவட்டாரங்களிலிருந்தும், வெளி மாவட்டங்களிலிருந்தும்ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    திண்டுக்கல்:

    நத்தம் கோவில்பட்டி கீழத்தெருவில் உள்ள அய்யனார் சந்தனகருப்பு சுவாமி மற்றும் பகவதி அம்மன் கோவில்களில் கும்பாபிஷேக விழா நடந்தது. இதையொட்டி கடந்த 19-ம் தேதி சந்தனக் கருப்பு சுவாமி கோவிலில் இருந்து கன்னிமார் தீர்த்தம் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு காப்பு கட்டுதலுடன் விழா தொடங்கியது. தொடர்ந்து 22-ம் தேதி முதல் நாள் அனுக்கை, தனபூஜை, கணபதி ஹோமம், முதல் கால யாகசாலை பூஜைகள் நடந்தது.

    மறுநாள் அதே யாகசாலையில் 2-ம் மற்றும் 3-ம் கால யாக பூஜைகள் நடந்தது. நேற்று 4-ம் கால யாகசாலை பூஜைகளை தொடர்ந்து காசி, ராமேஸ்வரம், கரந்தமலை, அழகர் மலை உள்ளிட்ட பல்வேறு புனித ஸ்தலத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித தீர்த்த குடங்கள் பூஜைகளுக்கு பிறகு யாகசாலையில் இருந்து கோபுர உச்சிக்கு ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. அங்கு சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்கள் முழங்க குடம்,குடமாக கலசத்தில் புனித தீர்த்தங்கள் ஊற்றப்பட்டது.

    அப்போது வானத்தில் கருடன்கள் வட்டமிட்டன. இதில் சுற்றுவட்டாரங்களிலிருந்தும், வெளி மாவட்டங்களிலிருந்தும்ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். அவர்களுக்கு பூஜை மலர்களும், புனித தீர்த்தங்களும், அன்னதானமும் வழங்கப்பட்டன. விழாவிற்கான ஏற்பாடுகளை கீழத்தெரு ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

    ×