என் மலர்
நீங்கள் தேடியது "யோகா கலந்துரையாடல்"
- யோகா மையம் சேவை தேவைகள் பற்றிய கலந்துரையாடல் நிகழ்ச்சி பல்கலைக்கழக கூட்ட அரங்கில் நடைபெற்றது.
- விளையாட்டு இயக்குனர் சுகுமார் ஆகியோர் கிராமப்புற சூழலில் யோகாவின் பங்கு குறித்து எடுத்துரைத்தனர்.
சின்னாளபட்டி:
திண்டுக்கல் காந்திகிராம பல்கலைக்கழக தரநிலை மேம்பாட்டு செயல்பாட்டின் ஒரு பகுதியாக இந்திய தரநிலை, யோகா மையம் சேவை தேவைகள் பற்றிய கலந்துரையாடல் நிகழ்ச்சி பல்கலைக்கழக கூட்ட அரங்கில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு காந்திகிராம பல்கலைக்கழக பதிவாளர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். இந்திய தரநிர்ணய அமைவனம் மதுரை தலைவர் தயானந்த் அனைவரையும் வரவேற்றார். பல்கலைக்கழக சமூக அறிவியியல் துறை டீன் மணி, உடற்கல்வி மற்றும் விளையாட்டு இயக்குனர் சுகுமார் ஆகியோர் கிராமப்புற சூழலில் யோகாவின் பங்கு குறித்து எடுத்துரைத்தனர்.
பி.ஐ.எஸ். தர நிர்ணய இணை இயக்குனர் ஹேமலதா, துணை இயக்குனர் சந்தோஷ் ஆகியோர் தர நிலைகள் தொடர்பான கேள்விக்கு பதில் அளித்தனர். கலந்துரையாடலில் 35 யோகா வல்லுனர்கள், திண்டுக்கல் மாவட்ட யோகா சங்க உறுப்பினர்கள், யோகா மைய இயக்குனர்கள் உள்பட பல்வேறு அமைப்பினர் கலந்து கொண்டனர்.






