என் மலர்
நீங்கள் தேடியது "New flyover opens for public use"
- 3 ரெயில்வே கேட்டுகளையும் கடந்து செல்ல ஒரு மணி நேரத்திற்கு மேலாவதாலும், போக்குவரத்து நெரிசலும், ஏற்படுவதால் எளிதாக கடக்க மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
- புதிய பாலத்தை அமைச்சர்கள் இ.பெரியசாமி, அர.சக்கரபாணி, எ.வ.வேலு ஆகியோர் கலெக்டர் பூங்கொடி தலைமையில் திறந்து வைத்தனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல்லில் இருந்து மணக்காட்டூர் செல்லும் சாலையில் தொடர்ச்சியாக 3 ெரயில்வே கேட்டுகள் அடுத்தடுத்து உள்ளன. இப்பகுதியில் பல மேல்நிலை பள்ளிகள் உள்ளன. இந்த 3 கேட்டுகளையும் கடந்து செல்ல ஒரு மணி நேரத்திற்கு மேலாவதாலும், போக்குவரத்து நெரிசலும், ஏற்படுவதால் எளிதாக கடக்க மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த மேம்பாலப் பணியானது கடந்த 2016-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்ட கால தாமதம் காரணமாக பணிகளில் தொய்வு ஏற்பட்டது. தற்போது நிலம் கையகப்படுத்தும் பணியில் இருந்த சிரமங்களுக்கு சுமூகத்தீர்வு காணப்பட்டு, இடம் கையக்கப்படுத்தும் பணிகள் முடிந்து, மேம்பால பணிகள் அனைத்தும் 100 சதவீதம் நிறைவடைந்ததையடுத்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது. புதிய பாலத்தை அமைச்சர்கள் இ.பெரியசாமி, அர.சக்கரபாணி, எ.வ.வேலு ஆகியோர் கலெக்டர் பூங்கொடி தலைமையில் திறந்து வைத்தனர்.
இந்த புதிய பாலத்தின் மூலம் திண்டுக்கல்லில் இருந்து செங்குறிச்சி, அதிகாரிப்பட்டி, திருமலைகேணி மற்றும் மணக்காட்டூர் செல்லும் வாகனங்கள் மேம்பாலத்தை பயன்படுத்தி பாதுகாப்பான விரைவான போக்குவரத்து உறுதி செய்யப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில் வேலுச்சாமி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் செந்தில்குமார், காந்திராஜன், மேயர் இளமதி, துணை மேயர் ராஜப்பா, வடக்கு ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன், பாலகிருஷ்ணாபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் ரேவதி நாகராஜ், துணைத்தலைவர் பானுப்பிரியா மற்றும் வார்டு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.






