கொடைக்கானலில் இடத்தகராறில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு

கடை வாடகை முறையாக கொடுக்க வில்லை என பிரச்சினை எழுந்துள்ளது. இதனால் கடையை காலிசெய்து பாக்கி வாடகையை கேட்டுள்ளார்.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

கொடைக்கானல்:

கொடைக்கானல் டோபிகானல் பகுதியை சேர்ந்த அன்பழகன் மகன் அருண் குமார் (30) இவருக்கு லாஸ் காட்ரோடு பகுதியில் வணிக கடை உள்ளது. அந்தக் கடையை பீட்டர்(45) என்பவருக்கு வாடகைக்கு கொடுத்துள்ளார். வாடகை முறையாக கொடுக்க வில்லை என பிரச்சினை எழுந்துள்ளது.

இதனால் கடையை காலிசெய்து பாக்கி வாடகையை கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பீட்டர் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் அருண்குமாரை வெட்டி யதில் காயம் ஏற்பட்டது. உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்த அப்பகுதி மக்கள் காயமடைந்த அருண்குமாரை கொடை க்கானல் அரசு ஆஸ்பத்திரி யில் சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த அருண்குமார் மேல்சிகிச்சை க்காக தேனி க.விலக்கு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இது குறித்து கொடைக்கானல் போலீசார் பீட்டர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com