search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பழனி முருகன் கோவிலில் இன்று கார்த்திகை தீப வழிபாடு -  ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்
    X

    பழனி மலைக்கோவிலில் குவிந்த பக்தர்கள் விளக்கேற்றி வழிபட்டனர்.

    பழனி முருகன் கோவிலில் இன்று கார்த்திகை தீப வழிபாடு - ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்

    • மலைக்கோவிலில் 4 திசைகளிலும் தீபம் ஏற்றும் நிகழ்ச்சியை தொடர்ந்து மாலை 6 மணிக்கு மலைக்கோவில் தீப ஸ்தம்பத்தில் கார்த்திகை தீபம் ஏற்றும் நிகழ்ச்சி மற்றும் சொக்கபனை கொளுத்துதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
    • விடுமுறை தினம் என்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் பழனி கோவிலில் குவிந்தனர்.

    பழனி:

    தமிழ் கடவுள் முருகனின் 3-ம் படை வீடான பழனிக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். இங்கு ஆண்டு தோறும் கார்த்திகை தீபத்திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா 20ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. 6-ம் நாளான நேற்று மாலை சாயரட்சை பூைஜ நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சண்முகா ர்ச்சனை, வள்ளி- தெய்வானை சின்னகு மாரருக்கு தீபாராதனை நடைபெற்றது. பின்னர் தங்க மயில் வாகனத்தில் சின்னகுமாரர் உலா வரும் நிகழ்ச்சி மற்றும் தங்கரத புறப்பாடு நடைபெற்றது.

    இன்று பழனி முருகன் கோவிலில் தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. மதியம் 2 மணிக்கு சண்முகார்ச்சனை அதனைத் தொடர்ந்து சாயரட்சை பூஜை மற்றும் சின்னகுமாரர் தங்க மயில் வாகனத்தில் உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. மலைக்கோவிலில் 4 திசைகளிலும் தீபம் ஏற்றும் நிகழ்ச்சியை தொடர்ந்து மாலை 6 மணிக்கு மலைக்கோவில் தீப ஸ்தம்பத்தில் கார்த்திகை தீபம் ஏற்றும் நிகழ்ச்சி மற்றும் சொக்கபனை கொளுத்துதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    திருஆவினன்குடி, பெரியநாயகி அம்மன் கோவிலிலும் கார்த்திகை தீபம், சொக்கபனை கொளுத்தப்படுகிறது. கார்த்திகை தீபத்தையொட்டி இன்று தங்கரத புறப்பாடு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. விடுமுறை தினம் என்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் பழனி கோவிலில் குவிந்தனர். இதனால் அடிவாரம், கிரி வீதி, ரோப்கார், மின் இழுவை ரெயில் நிலையம், யானைப்பாைத, படிப்பாதை உள்ளிட்ட இடங்களில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. மலைக்கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    இதேபோல் திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு கோவில்களிலும் கார்த்திகை தீபம் இன்று ஏற்றப்படுகிறது. தேனி மாவட்டம் தேவ தானப்பட்டி முருகமலை பரமசிவன் கோவிலில் மாலை 6 மணிக்கு 2500 அடி உயர முருகமலையில் கார்த்திகை தீபம் ஏற்றப்படுகிறது. இதையொட்டி கழுைத மற்றும் குதிரைகள் மூலம் பூஜை மற்றும் அன்னதான பொருட்கள் மலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

    ஏராளமான பக்தர்கள் தங்கள் வீடுகளிலும் தீபம் ஏற்றி கார்த்திகை திருநாளில் வழிபாடு நடத்தினர்.

    Next Story
    ×