என் மலர்
திண்டுக்கல்
- தைப்பூசம், பங்குனிஉத்திரம், கோடைவிடுமுறை என பழனி கோவிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரித்தே காணப்படும்.
- பொது இடத்தில் சமைத்து சாப்பிட்டபின் இலை மற்றும் கழிவுகளை அதேஇடத்தில் போட்டுச்சென்று விடுகின்றனர். இதனால் அப்பகுதி சுகாதார சீர்கேடான நிலைக்கு மாறி வருகிறது.
பழனி:
முருகனின் 3-ம் படைவீடான பழனியில் வருடந்தோறும் பக்தர்கள் வருகை இருந்துகொண்டே உள்ளது. தற்போது கார்த்திகை மாதம் என்பதால் அய்யப்ப பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. இதன்பிறகும் தைப்பூசம், பங்குனிஉத்திரம், கோடைவிடுமுறை என பழனி கோவிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரித்தே காணப்படும்.
இவ்வாறு வரும் பக்தர்கள் குழுவாக வரும்போது பழனியில் சாமிதரிசனம் செய்து அடிவாரத்தில் உள்ள அய்யம்புளி சாலை, அருள்ஜோதிவீதி, கிரிவீதி மற்றும் சுற்றுலா பஸ்நிலையங்களிலும் தங்கள் வாகனங்களை நிறுத்திவிட்டு அதன் அருகிலேயே சமையல் செய்து சாப்பிடுகின்றனர்.
சாப்பிட்டபின் இலை மற்றும் கழிவுகளை அதேஇடத்தில் போட்டுச்சென்று விடுகின்றனர். இதனால் அப்பகுதி சுகாதார சீர்கேடான நிலைக்கு மாறி வருகிறது. அய்யப்ப சீசன் தொடங்கியதில் இருந்தே கோவில்நிர்வாகமும், நகராட்சி நிர்வாகமும் சாலைகளில் உணவு சமைப்பவர்களை கண்காணித்து குப்பைகளை குறிப்பிட்ட இடத்தில் போடவைப்பது, பின்னர் அந்த குப்பைகள் அதிகளவு தேக்கமடையாமல் உடனுக்குடன் அகற்றுவது போன்ற பணிகளில் ஈடுபடவேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர்.
ஆனால் அதுபோன்று எதுவும் செய்யப்படாததால் பல்வேறு ஊர்களில் இருந்து வரும் பக்தர்கள் நினைத்த இடத்தில் சிலிண்டர் மூலம் அடுப்பு வைத்து உணவு சமைத்து வருகின்றனர். கூட்டம் அதிகமாக காணப்படும் சமயங்களில் வரிசையாக பலர் இதுபோன்று உணவு சமைத்து வருவது கோவிலுக்கு முன்பு பொங்கல் வைப்பது போல உள்ளது.
பழனியில் பக்தர்கள் வருகை அதிகரிக்கும்போது சுகாதாரப்பணிகளை மேற்கொள்ள கூடுதல் ஆட்களை நியமிக்க வேண்டும். இல்லையெனில் இப்பணிகளை தனியாரிடம் ஒப்படைக்க வேண்டும். அதற்கான தொகையை கோவில் நிர்வாகம் வழங்கவேண்டும். தற்போது சீசன் தொடங்கி உள்ளதால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் பல்வேறு இடங்களில் உணவு சமைத்து கழிவுகளை விட்டுச்சென்று விடுகின்றனர்.
எனவே அவர்களுக்கு உணவு சமைப்பதற்கு தனியாக ஒரு இடம் அமைத்து அங்கேயே உடனுக்குடன் சுகாதார பணிகளையும் மேற்கொள்ள வேண்டும் என உள்ளூர் மக்கள் மற்றும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
- இருதரப்பினருக்கும் இடையே இடப்பிரச்சினை தொடர்பாக அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்துள்ளது.
- மோதல் ஏற்பட்டதையடுத்து இருதரப்பை சேர்ந்த 8 பேர் மீதும் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்.
வடமதுரை:
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை வி.கே.எஸ்.நகர் ஏவிபட்டி ரோடு பகுதிைய சேர்ந்தவர் ராமசாமி(51). இவருக்கு சொந்தமாக அதேபகுதியில் பூர்வீகவீடு மற்றும் 4 சென்ட் நிலம் உள்ளது. அதன் அருகே நாமக்கல் மாவட்டம் விசானம் பகுதிைய சேர்ந்த சந்திரகுமார்(33) என்பவருக்கு சொந்தமான இடம் உள்ளது.
இருதரப்பினருக்கும் இடையே இடப்பிரச்சினை தொடர்பாக அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்துள்ளது. சம்பவத்தன்று நாமக்கல்லை சேர்ந்த முருகன், செந்தில், முத்தனாங்கோட்டையை சேர்ந்த தங்கம், மூனாண்டிபட்டிைய சேர்ந்த மகாலிங்கம் ஆகியோர் சேர்ந்து ஜே.சி.பி டிரைவர் அப்புக்குட்டி மூலம் ராமசாமியின் வீட்டை இடித்து தரைமட்டமாக்கினர்.
இதில் வீட்டில் இருந்த நகை, பணம் மற்றும் பொருட்கள் சேதமானதாகவும், மாயமானதாகவும் ராமசாமி வடமதுரை போலீசில் புகார் அளித்தார். சுமார் ரூ.2.10லட்சம் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் வீட்டை இடித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு தனது புகாரில் கூறியிருந்தார்.
இதேபோல் சந்திரகுமார் தனக்கு சொந்தமான இடத்தை மனோகரன், ராமசாமி, சுதர்சன் ஆகியோர் சேதப்படுத்தியதாக புகார் அளித்தார். இருதரப்பை சேர்ந்த 8 பேர் மீதும் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்.
- அரசு உதவி பெறும் தனியார் பள்ளி மாணவ -மாணவிகளுக்கு சைபர்கிரைம் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
- சைபர் கிரைம் போலீசார் மாணவிகளுக்கு இணையதள குற்றங்கள் மற்றும் இணையதளங்கள் மூலம் நடைபெறும் மோசடிகள் குறித்து எடுத்துரைத்தனர்.
கொடைக்கானல்:
கொடைக்கானல் மூஞ்சிக்கல் பகுதியில் அமைந்துள்ள அரசு உதவி பெறும் தனியார் பள்ளி மாணவ -மாணவிகளுக்கு சைபர்கிரைம் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. திண்டுக்கல் சைபர் கிரைம் போலீசார் மாணவிகளுக்கு இணையதள குற்றங்கள் மற்றும் இணையதளங்கள் மூலம் நடைபெறும் மோசடிகள் குறித்து எடுத்துரைத்தனர்.
மேலும் மோசடியில் ஈடுபடுபவரிடம் சிக்கி கொள்ளாமல் தவிர்ப்பது, காவல்துறையின் இணையதளம் மற்றும் இலவச புகார் எண்ணுக்கு உடனடியாக புகார் அளிக்க வேண்டும் என தெளிவுபடுத்தினர். இணைய தளங்களில் அறிமுகம் இல்லாத நபர்களிடம் தங்களது நிகழ்வுகளை பகிர்வதை தவிர்க்க வேண்டும்.
மேலும் சம்பந்தமில்லாத, அறிமுகம் இல்லாத நபர்களிடமிருந்து வரும் அழைப்புகளுக்கு வீடியோ சாட் செய்வது போன்றவற்றை தவிர்க்க வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
- குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்ட தால் மனஉளைச்சலில் இருந்த வாலிபர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
- எரியோடு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வரு கின்றனர்.
வேடசந்தூர்:
வேடசந்தூர் அருகே மாரம்பாடியை சேர்ந்தவர் சேசுராஜ். இவரது மகன் அருள்செபஸ்தியார்(23). இவர்கள் குடும்பத்துடன் தோட்டத்து வீட்டில் தங்கி விவசாய வேலை செய்து வருகின்றனர்.
குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்ட தால் மனஉளைச்சலில் இருந்த அருள்செபஸ்தியார் கிணற்றில் குதித்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் வேடசந்தூர் நிலைய அலுவலர் ஜேம்ஸ்அருள்பி ரகாஷ் தலைமையில் தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து அவரை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
5 மணிநேர போராட்டத்திற்கு பிறகு அருள்செபஸ்தியார் பிணமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து எரியோடு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வரு கின்றனர்.
- பழனி முருகன் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா இன்று காப்பு கட்டு தலுடன் தொடங்குகிறது.
- விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
பழனி:
பழனி முருகன் கோவி லில் கார்த்திகை தீபத்திரு விழா இன்று காப்பு கட்டு தலுடன் தொடங்குகிறது.
தமிழ்க்கடவுள் முருகப்பெருமான் சரவண ப்பொய்கையில் ஆறு செந்தாமரை மலர்களில் 6 குழந்தையாய் தவழ்ந்த போது கார்த்திகை பெண்க ளால் சீராட்டி வளர்க்கப்ப ட்டார். அதனால் முருக ப்பெருமானுக்கு கார்த்தி கேயன் என்ற பெயரும் உண்டு. முருக ப்பெருமானின் அவதார சிறப்பை விளக்கும் வகையில் கார்த்திகை தீபத்திருவிழா அனைத்து முருகன் கோவில்களிலும் கொண்டாடப்பட்டு வரு கிறது.
அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலிலும் ஆண்டுதோறும் கார்த்திகை தீபத்திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்படு கிறது. இந்த ஆண்டுக்கான கார்த்திகை தீபத்திருவிழா வருகிற 30-ம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கு கிறது.
இந்த திருவிழா 7 நாட்கள் நடக்கிறது. விழாவின் 6 நாட்களும் சாயரட்சை பூஜைக்கு பின்பு சண்முகர் அர்ச்சனை, தீபாராதனை, சின்னக்குமாரர் தங்க சப்பரத்தில் புறப்பாடு நடைபெறுகிறது.
மேலும் இரவு 7 மணிக்கு சிறப்பு தீபாராதனைக்கு பின் தங்கரத புறப்பாடு நடை பெறும். 6-ம் திருநாளான 5 ம் தேதி யாகசாலையில் இருந்து பரணி தீபம் கொண்டு வரப்பட்டு மூலவர் சன்னதியில் பரணி தீபம் ஏற்றப்படும்.
7-ம் திருநாளான 6- ம் தேதி திருக்கார்த்திகையை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு நடைதிறக்கப்படும். உடன் விஸ்வரூபதரிசனம் சிறப்பு பூஜை நடைபெறும். மதியம் 12 மணிக்கு உச்சிக்கால பூஜையும், மாலை 4 மணிக்கு சாய ரட்சை பூஜையும் நடை பெறும். அதன் பின்னர் சண்முகர் அர்ச்சனை, தீபாராதனையை தொட ர்ந்து 4.45 மணிக்கு சின்னக்குமாரர் தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது.
இதையடுத்து மலை க்கோவிலில் உள்ள நான்கு திசைகளிலும் தீபம் ஏற்ற ப்படும். மாலை 6 மணிக்கு மேல் வெளிப்பிரகாரத்தில் உள்ள தீப ஸ்தம்பத்தில் மகா தீபம் ஏற்றப்பட்டு, சொக்க ப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெறும்.
அதன் பின் உபகோவி ல்களான திருஆவினன்குடி, பெரியநாயகி அம்மன், லட்சுமி நாராயண ப்பெரு மாள், பாலசமுத்திரம் அகோ பிலவரத ராஜ பெருமாள் உள்ளிட்ட கோவில்களில் கார்த்திகை தீபம் ஏற்றி சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெறும். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
- கேக் தயாரிப்பில் 13 சமையல் கலைஞர்கள் பங்கேற்றனர்.
- 15 வகையான பழங்கள் மற்றும் 5 வகையான உயர்ரக மதுபானங்களில் இருந்து 8 லிட்டர் கொண்டு கேக் தயாரிக்கும் பணி நடைபெற்றது.
கொடைக்கானல்:
உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை டிசம்பர் 25-ந்தேதி கொண்டாடப்படுகிறது. ஐரோப்பிய நாடுகளில் 45 நாட்களுக்கு முன்னதாகவே உலர்பழங்கள் மற்றும் மதுபான வகைகளை கொண்டு கிறிஸ்துமஸ் கேக் தயாரிக்கப்படுவது வழக்கம்.
அதனடிப்படையில் கொடைக்கானல் நட்சத்திர ஏரி அருகில் அமைந்துள்ள தனியார் விடுதியில் பாதாம், பிஸ்தா, முந்திரி, உலர் திராட்சை, கிறிஸ்துமஸ் பழம், அத்திப்பழம் உள்ளிட்ட 15 வகையான பழங்கள் மற்றும் 5 வகையான உயர்ரக மதுபானங்களில் இருந்து 8 லிட்டர் கொண்டு கேக் தயாரிக்கும் பணி நடைபெற்றது.
இந்த கலவை 30 நாட்களுக்கு பதப்படுத்தி வைத்து கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு 2 நாட்களுக்கு முன்பாக மேலும் சில மாவு சேர்த்து 80 கிலோ பிளம் கேக் தயாரிக்கப்பட உள்ளதாக சமையல் கலைஞர்கள் தெரிவித்தனர். இந்த கேக்குகள் விடுதிக்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கேக் தயாரிப்பில் 13 சமையல் கலைஞர்கள் பங்கேற்றனர். மேலும் விடுதியில் தங்கியிருந்த சுற்றுலா பயணிகள் மற்றும் பள்ளி மாணவ-மாணவிகள் இணைந்து கிறிஸ்துமசை வரவேற்கும் விதமாக பாடல்கள் பாடி உற்சாகம் அடைந்தனர்.
கேக் தயாரிப்பதற்கு முன்பாக ஒவ்வொரு வகை உலர் பழங்கள் மற்றும் உயர்ரக மதுபானங்கள் காட்சிபடுத்தப்பட்டு அவை ஒவ்வொன்றின் தனித்துவம் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது. சமையல் கலைஞர்கள் மட்டுமின்றி இதில் பங்கேற்றவர்கள் தங்கள் வீடுகளிலும் இதேபோன்ற கேக்கை தயாரிக்க முடியும் என்றும் அவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.
- கொடைக்கானலில் இரவிலும், அதிகாலையிலும் 7 டிகிரி செல்சியஸ் வரையிலும் வெப்பம் காணப்படுகிறது.
- நாய்கள் குளிர் அதிகரித்து ள்ளதால் வெயில் வரும் வரை காத்திருந்து வெயில் வந்தவுடன் தார் சாலையில் படுத்து உறங்குகிறது.
பெரும்பாறை:
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கடந்த 1 வாரமாக பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாகவும், இரவிலும், அதிகாலையிலும் 7 டிகிரி செல்சியஸ் வரையிலும் வெப்பம் காணப்படுகிறது. இதனால் மலைப்பகுதி முழுவதும் கடுமையான குளிர் வாட்டி வருகிறது. ஏரிகளில் மேல் பகுதியிலும், புற்களிலும் பனிப்போர்வை போர்த்தியது போல உறை பனி காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மட்டுமின்றி கால்நடைகளும் மிகுந்த பாதிப்படைந்து வருகின்றன.
பெரும்பாறை, பண்ணை க்காடு, தாண்டிக்குடி. பூலத்தூர், மங்களம்கொம்பு, மஞ்சள்பரப்பு, குப்பமா ள்பட்டி, கே.சி.பட்டி, பெரியூர், ஆடலூர், பாச்ச லூர், பன்றிமலை போன்ற மலைக்கிரா மங்களிலும் கடந்த சில வாரங்களாக கடு மையான பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் கடும் குளிரால் அவதிப்பட்டு வருகின்றனர்.
இப்பகுதியில் காலை 10 மணிக்கு மேல் தான் வெயில் வருகிறது. சில நேரங்களில் வெயிலே வருவதில்லை. அதே போல் மாலை 4 மணிக்கு மேல் குளிர் அதிகரிக்க தொடங்கி விடுகிறது. கடும் குளிர் காரணமாக அதிகாலை நடைப்பயிற்சி செல்வோர் எண்ணிக்கையும் குறைந்து ள்ளது. மேலும் அப்பகுதி கிராமங்களில் உள்ள நாய்கள் குளிர் அதிகரித்து ள்ளதால் வெயில் வரும் வரை காத்திருந்து வெயில் வந்தவுடன் தார் சாலையில் படுத்து உறங்குகிறது.
இது தவிர ஆடு, மாடு போன்ற கால்நடைகளும் கடும் பனிப்பொழிவால் பாதிக்கப்பட்டு வருவதாக பொதுமக்கள் தெரிவிக்கி ன்றனர். வழக்கமாக உறை பனி சீசன் டிசம்பர் மாதத்தில் நிலவும் நிலையில் இந்த வருடம் முன்னதாகவே உறை பனி காணப்படுவதாக அவர்கள் தெரிவித்தனர்.
- ஒட்டன்சத்திரம் அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனைக்கு அைழத்துச்செல்லப்பட்ட வாலிபர் தப்பிச்சென்றார்.
- சாலையில் சுற்றித்திரிந்த வாலிபரை போலீசார் மடக்கிபிடித்தனர்.
ஒட்டன்சத்திரம்:
ஒட்டன்சத்திரம் அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனைக்கு அைழத்துச்செல்லப்பட்ட வாலிபர் தப்பிச்சென்றார். அவரை போலீசார் மடக்கி பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஒட்டன்சத்திரம் அருகே தங்கச்சியம்மாபட்டியை சேர்ந்தவர் முனியப்பன்(27). தும்பிச்சம்பட்டியை சேர்ந்த சபரிநாத் என்பவருடன் மதுபோதையில் மார்க்கெட் பைபாஸ் சாலையில் தகராறில் ஈடுபட்டார். இருவரும் ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர். இதில் முனியப்பன் தாக்கியதில் சபரிநாத் காயமடைந்தார். அவரை தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
பின்னர் முனியப்பனை ஒட்டன்சத்திரம் அரசு ஆஸ்பத்திரிக்கு மருத்துவ பரிசோதனைக்காக போலீசார் அழைத்துச்சென்றனர். அப்போது அவர் நைசாக அங்கிருந்து தப்பிச்சென்றார். இதனைதொடர்ந்து போலீசார் அவரை தீவிரமாக தேடினர். சாலையில் சுற்றித்திரிந்த அவரை போலீசார் மடக்கிபிடித்தனர்.
- கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவிற்கு தமிழகம் மட்டுமல்லாது வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
- சி.சி.டி.வி அமைக்கப்பட்டதன் பலனாகவும், தோட்டக்கலைத் துறை தற்காலிக ஊழியர் கலைச்செல்வியின் நன்னடத்தையாலும் வட மாநில சுற்றுலா பயணி நகை மற்றும் பணம் மீட்கப்பட்டது.
கொடைக்கானல்:
கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவிற்கு தமிழகம் மட்டுமல்லாது வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
இந்நிலையில் டெல்லியில் இருந்து கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்த வட மாநில சுற்றுலா பயணி ஒருவரின் கைப்பையை பூங்காவில் தவற விட்டுச்சென்றுள்ளார். பொட்டுக்கலைத்துறை அலுவலகத்திலிருந்து பூங்கா பகுதிக்குச் சென்ற பூங்கா தற்காலிக ஊழியர் கலைச்செல்வி அந்தக் கைப்பையை கண்டெடுத்துள்ளார். அதனை பூங்கா அலுவலகத்தில் உள்ள அதிகாரியிடம் கொண்டு சேர்த்துள்ளார். அந்த பையில் தங்க வளையல்கள், பணம், செல்போன் ஆகியவை இருந்துள்ளன. பூங்காவில் உள்ள சி.சி.டி.வி காமிரா பதிவை ஆய்வு செய்தபோது கைப்பையை சுற்றுலா பயணி தவறவிட்டதை கண்டறிந்தனர்.
இந்த நிலையில் தனது கைப்பையை காணவில்லை என பூங்காவில் நுழைந்து வந்த வட மாநில சுற்றுலா பயணி கண்டறிந்து அவரிடம் அந்த கைப்பையை கொண்டு சேர்த்தனர். அவர் டெல்லியில் உள்ள பாராளுமன்ற அலுவலக முக்கிய பணியாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் பூங்கா முழுவதும் சி.சி.டி.வி அமைக்கப்பட்டதன் பலனாகவும், தோட்டக்கலைத் துறை தற்காலிக ஊழியர் கலைச்செல்வியின் நன்னடத்தையாலும் வட மாநில சுற்றுலா பயணி நகை மற்றும் பணம் மீட்கப்பட்டது.
இதை அறிந்த கொடைக்கானல் பொதுமக்கள் சமூக வலைத்தளங்களில் கலைச்செல்வியின் நன்னடத்தை குறித்து பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். மேலும் இதுபோன்ற நல்லொழுக்கம் மிக்க தற்காலிக ஊழியரை நிரந்தர பணியாளராக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
- நாடு முழுவதும் திருக்கார்த்திகை எனப்படும் தீபத்திருநாள் டிசம்பர் 6-ந் தேதி கொண்டாடப்படுகிறது
- கோவில்களில் ஏற்றப்படும் பெரிய அகல் விளக்குகள் போன்ற பல்வேறு வடிவங்களில் விளக்குகள் தயாரித்து வருகின்றனர்.
வடமதுரை:
நாடு முழுவதும் திருக்கார்த்திகை எனப்படும் தீபத்திருநாள் டிசம்பர் 6-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தீப விளக்குகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள வெள்ள பொம்மன்பட்டி யில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இதில் 4 குடும்பத்தினர் பல ஆண்டுகளாக தொடர்ந்து விளக்குகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் வீடுகளில் ஏற்றப்படும் விளக்குகள், கோவில்களில் ஏற்றப்படும் பெரிய அகல் விளக்குகள் போன்ற பல்வேறு வடிவங்களில் விளக்குகள் தயாரித்து வருகின்றனர்.
இது தவிர சாமி சிலைகள், களி மண்ணால் ஆன அடுப்பு, மண்பானைகள், சிறிய மற்றும் பெரிய பானைகளும் தயாரித்து வருகின்றனர். இந்த கிராமத்தைச் சேர்ந்த பூசாரி செல்வம் (வயது 52), ஜெகநாதன் (45) ஆகியோர் பண்டிகைக்கு குறைந்த அளவு நாட்களே இருப்ப தால் மும்முரமாக விளக்கு கள் தயாரித்து வருகின்றனர்.
இது குறித்து அவர்கள் தெரிவிக்கையில், கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பின்பு இந்த ஆண்டு கோவில்களில் வழிபாடு நடத்த முழுமை யான அனுமதி வழங்க ப்பட்டுள்ளது. இதனால் விளக்குகள் ஆர்டர் அதிகரித்துள்ளது. மேலும் சீசன் காலங்களில் மழை பெய்து வந்ததால் தயாரித்த பொருட்களை காயவைக்க முடியாத நிலை ஏற்பட்டது. தற்போது பகலில் வெயில் அடிப்பதாலும் மழையின் தாக்கம் குறைந்துள்ள தாலும் விளக்குகள் காய வைப்பதில் இருந்த சிக்கல் நீங்கியுள்ளது.
ஆனால் போதிய களிமண் கிடைக்காததால் உற்பத்தி பாதிக்கப்பட்டு வருகிறது. தமிழக அரசு இத்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு தடையின்றி களிமண் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மற்ற நாட்களில் இத்தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்க வேண்டும் என்றனர்.
- நிலக்கோட்டை மற்றும் அதன்சுற்றுப்புற கிராமங்களில் புவிசார்குறியீடு பெற்ற மல்லிகைப்பூ அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
- கடும் பனிப்பொழிவால் பூக்கள் வரத்து குறைந்துள்ளதால் இந்த விலையேற்றம் ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
நிலக்கோட்டை:
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை மற்றும் அதன்சுற்றுப்புற கிராமங்களில் புவிசார்குறியீடு பெற்ற மல்லிகைப்பூ அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இப்பகுதியில் விளையும் பூக்களுக்கு உள்ளூரில் மட்டுமின்றி வெளியூர்களிலும், வெளிமாநிலங்களிலும் நல்ல வரவேற்பு உள்ளது.
மேலும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. கடந்த சில தினங்களாக மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதனால் பூக்களை பறிக்க முடியாமல் வாடியும், கருகியும் வருகிறது. அதிகாலையில் பூக்களை பறிக்க வருவதற்கு கூலியாட்களும் பற்றாக்குறையாக உள்ளனர்.
கார்த்திகை மாதம் என்பதால் திருமண விேஷசம் மற்றும் கோவில் விழாக்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் பூக்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. குறிப்பாக மல்லிகை ஒரு கிலோ ரூ.1700-க்கு விற்பனையானது. ஜாதிப்பூ ரூ.450, முல்லை ரூ.800, அரளி ரூ.150, செவ்வந்தி ரூ.80, சம்பங்கி ரூ.40, கனகாம்பரம் ரூ.350, காக்கரட்டான் ரூ.250, செண்டுமல்லி ரூ.50, பட்டன்ரோஸ் ரூ.120, பன்னீர்ரோஸ் ரூ.120, சாதா ரோஸ் ரூ.80, கோழிக்கொண்டை ரூ.30, துளசி ரூ.30க்கு விற்பனையானது.
பூக்கள் வரத்து குறைந்துள்ளதால் இந்த விலையேற்றம் ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
- கார் மீது மோட்டார் சைக்கிளில் மோதியதில் மாணவரை சரிமாரியாக தாக்கி பைக்கை பறித்துச்சென்றனர்.
- மனஉளைச்சலில் இருந்த மாணவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கொடைக்கானல்:
கொடைக்கானல் பெருமாள்மலையை சேர்ந்த ராஜகோபால்- அங்காளஈஸ்வரியின் மகன் விஜேஸ் பாண்டியன் (வயது17). திண்டுக்கல்லில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்தார்.
தனது நண்பர் ஒருவர் இறந்து விடவே துக்கம் விசாரிப்பதற்காக கடந்த 19 - ஆம் தேதி கொடைக்கானல் வந்தார். பின்னர் அன்று இரவு சுமார் 9.30 மணி அளவில் தனது நண்பர்கள் சுபாஷ், தினேஷ் ஆகியோருடன் இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்தார்.
பெருமாள்மலை-பழனி பிரிவு அருகில் உள்ள ரேஷன் கடை ஓரமாக இருந்த மண்ணெண்ணெய் பேரல் மீது மோதி பின்னர் அருகில் நின்றிருந்த ஒரு கார் மீதும் மோதி தவறி கீழே விழுந்தார்.
இதனால் ஆத்திரமடைந்த கார் உரிமையாளர் மற்றும் அவருடன் இருந்தவர்கள் சேர்ந்து 3 இளைஞர்களையும் தாக்கியுள்ளனர். மேலும் விஜேஸ்பாண்டியனின் மோட்டார் சைக்கிளையும் பறித்துக் கொண்டு காரை சரிசெய்து கொடுத்து விட்டு பைக்கை வாங்கிச் செல்லுமாறு கூறி உள்ளனர்.
மோட்டார் சைக்கிள் பறிபோனது மட்டுமின்றி உடலில் காயங்களும் ஏற்பட்டதால் மன உளைச்சலுடன் வீட்டுக்குச் சென்றார். பின்னர் தனது அறையிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து விஜேஸ்பாண்டியனின் சகோதரர் விஷ்ணு பாண்டியன் தனது தம்பியின் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கொடைக்கானல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
இது குறித்து விசாரணை செய்த கொடைக்கானல் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்டின் தினகரன் கீழ் பெருமாள் மலையைச் சேர்ந்த வினோத் (33), தங்கம் (39) ஆகிய 2 பேரையும் கைது செய்தார். இவர்கள் மீது 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.






