என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இடப்பிரச்சினையில் மோதல்"

    • இருதரப்பினருக்கும் இடையே இடப்பிரச்சினை தொடர்பாக அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்துள்ளது.
    • மோதல் ஏற்பட்டதையடுத்து இருதரப்பை சேர்ந்த 8 பேர் மீதும் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்.

    வடமதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை வி.கே.எஸ்.நகர் ஏவிபட்டி ரோடு பகுதிைய சேர்ந்தவர் ராமசாமி(51). இவருக்கு சொந்தமாக அதேபகுதியில் பூர்வீகவீடு மற்றும் 4 சென்ட் நிலம் உள்ளது. அதன் அருகே நாமக்கல் மாவட்டம் விசானம் பகுதிைய சேர்ந்த சந்திரகுமார்(33) என்பவருக்கு சொந்தமான இடம் உள்ளது.

    இருதரப்பினருக்கும் இடையே இடப்பிரச்சினை தொடர்பாக அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்துள்ளது. சம்பவத்தன்று நாமக்கல்லை சேர்ந்த முருகன், செந்தில், முத்தனாங்கோட்டையை சேர்ந்த தங்கம், மூனாண்டிபட்டிைய சேர்ந்த மகாலிங்கம் ஆகியோர் சேர்ந்து ஜே.சி.பி டிரைவர் அப்புக்குட்டி மூலம் ராமசாமியின் வீட்டை இடித்து தரைமட்டமாக்கினர்.

    இதில் வீட்டில் இருந்த நகை, பணம் மற்றும் பொருட்கள் சேதமானதாகவும், மாயமானதாகவும் ராமசாமி வடமதுரை போலீசில் புகார் அளித்தார். சுமார் ரூ.2.10லட்சம் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் வீட்டை இடித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு தனது புகாரில் கூறியிருந்தார்.

    இதேபோல் சந்திரகுமார் தனக்கு சொந்தமான இடத்தை மனோகரன், ராமசாமி, சுதர்சன் ஆகியோர் சேதப்படுத்தியதாக புகார் அளித்தார். இருதரப்பை சேர்ந்த 8 பேர் மீதும் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்.

    ×