என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Frost season"

    • கொடைக்கானலில் இரவிலும், அதிகாலையிலும் 7 டிகிரி செல்சியஸ் வரையிலும் வெப்பம் காணப்படுகிறது.
    • நாய்கள் குளிர் அதிகரித்து ள்ளதால் வெயில் வரும் வரை காத்திருந்து வெயில் வந்தவுடன் தார் சாலையில் படுத்து உறங்குகிறது.

    பெரும்பாறை:

    திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கடந்த 1 வாரமாக பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாகவும், இரவிலும், அதிகாலையிலும் 7 டிகிரி செல்சியஸ் வரையிலும் வெப்பம் காணப்படுகிறது. இதனால் மலைப்பகுதி முழுவதும் கடுமையான குளிர் வாட்டி வருகிறது. ஏரிகளில் மேல் பகுதியிலும், புற்களிலும் பனிப்போர்வை போர்த்தியது போல உறை பனி காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மட்டுமின்றி கால்நடைகளும் மிகுந்த பாதிப்படைந்து வருகின்றன.

    பெரும்பாறை, பண்ணை க்காடு, தாண்டிக்குடி. பூலத்தூர், மங்களம்கொம்பு, மஞ்சள்பரப்பு, குப்பமா ள்பட்டி, கே.சி.பட்டி, பெரியூர், ஆடலூர், பாச்ச லூர், பன்றிமலை போன்ற மலைக்கிரா மங்களிலும் கடந்த சில வாரங்களாக கடு மையான பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் கடும் குளிரால் அவதிப்பட்டு வருகின்றனர்.

    இப்பகுதியில் காலை 10 மணிக்கு மேல் தான் வெயில் வருகிறது. சில நேரங்களில் வெயிலே வருவதில்லை. அதே போல் மாலை 4 மணிக்கு மேல் குளிர் அதிகரிக்க தொடங்கி விடுகிறது. கடும் குளிர் காரணமாக அதிகாலை நடைப்பயிற்சி செல்வோர் எண்ணிக்கையும் குறைந்து ள்ளது. மேலும் அப்பகுதி கிராமங்களில் உள்ள நாய்கள் குளிர் அதிகரித்து ள்ளதால் வெயில் வரும் வரை காத்திருந்து வெயில் வந்தவுடன் தார் சாலையில் படுத்து உறங்குகிறது.

    இது தவிர ஆடு, மாடு போன்ற கால்நடைகளும் கடும் பனிப்பொழிவால் பாதிக்கப்பட்டு வருவதாக பொதுமக்கள் தெரிவிக்கி ன்றனர். வழக்கமாக உறை பனி சீசன் டிசம்பர் மாதத்தில் நிலவும் நிலையில் இந்த வருடம் முன்னதாகவே உறை பனி காணப்படுவதாக அவர்கள் தெரிவித்தனர்.

    ×