என் மலர்tooltip icon

    திண்டுக்கல்

    • பிளஸ்-2 மாணவர்களுக்கு ஜே.இ.இ மெயின்தேர்வு வருகிற 24-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை நடைபெற உள்ளது.
    • 27-ந்தேதி தேசிய நுழைவுத்தேர்வுக்கான ஜே.இ.இ மெயின்தேர்வு வருகிறது.

    திண்டுக்கல்:

    பிளஸ்-2 மாணவர்களுக்கு ஜே.இ.இ மெயின்தேர்வு வருகிற 24-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை நடைபெற உள்ளது என மத்திய தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் பிளஸ்-2 மாணவர்களுக்கு முதல் திருப்புதல் தேர்வு இன்றுமுதல் ஜனவரி 13, 19, 20, 23, 25, 27 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.

    இதில் 27-ந்தேதி தேசிய நுழைவுத்தேர்வுக்கான ஜே.இ.இ மெயின்தேர்வும் வருகிறது. இதனால் அந்த நாளில் எந்த தேர்வுக்கு தயாராவது என்பதில் மாணவர்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது.

    எனவே கல்வித்துறை அதிகாரிகள் இதுகுறித்து ஆராய்ந்து திருப்புதல் தேர்வை வேறு தேதிக்கு மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

    • வடமதுரை மற்றும் அய்யலூர் பகுதியில் மணல் பிளாண்ட் அதிக அளவில் உள்ளன. இதில் பெரும்பா லானவை அனும தியின்றி செயல்படுதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
    • கனிம வள கொள்ளையை தடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    வடமதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை மற்றும் அய்யலூர் பகுதியில் மணல் பிளாண்ட் அதிக அளவில் உள்ளன. இதில் பெரும்பா லானவை அனும தியின்றி செயல்படுதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    இங்குள்ள ஆறு, ஓடை உள்ளிட்ட இடங்களில் அதிக அளவு மணல் அள்ளப்படுவதால் ராட்சத பள்ளங்கள் ஏற்பட்டு உள்ளன. இதனால் பள்ள த்தில் சிக்கி கால்நடைகள் அடிக்கடி உயிரிழந்து வருகி ன்றன. கடந்த சில நாட்க ளுக்கு முன்பு சந்தன வர்த்தினி ஆற்றை கடக்க முயன்ற மாணவன் பள்ள த்தில் சிக்கி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியது.

    அதிக அளவில் மணல் அள்ளி தென்னந் ேதாப்பு களில் பதுக்கி வைத்து ள்ளனர். தொடர் மணல் கொள்ளையால் கனிம வளங்கள் கொள்ளை போவதாக விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

    வேடசந்தூர், எரியோடு, குஜிலியம்பாறை, பாளையம், அய்யலூர், வடமதுரை உள்ளிட்ட பகுதிகளில் 70-க்கும் மேற்பட்ட மணல் பிளாண்ட் இயங்கி வருகின்றன. அதிகாரிகள் இந்த பிளாண்ட்களில் ஆய்வு செய்து முறையான அனுமதி பெற்றுள்ளனரா என்பதை கண்காணிக்க வேண்டும். மேலும் கனிம வள கொள்ளையை தடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கடும் பனிப்பொழிவு நிலவி வருவதால் முருங்கை மரத்தில் பூக்கள் உதிர்ந்து வருவதால் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டது
    • தை மாதம் பிறந்த பிறகு முகூர்த்த நாட்கள் வந்தால் மட்டுமே காய்கறிகளுக்கு நல்ல விலை கிடைக்கும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

    ஒட்டன்சத்திரம்:

    ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் உள்ளூர் மற்றும் வெளியூர், வெளி மாநில காய்கறிகள் வரத்து தொடர்ந்து அதிகரித்து வந்தாலும் தற்போது பெரும்பாலான காய்கறிகள் வரத்து குறைந்தும் விவசாயிகளுக்கு லாபம் இல்லாத நிலை உள்ளது.

    குறிப்பாக கடந்த 2 வாரங்களாக கடும் பனிப்பொழிவு நிலவி வருவதால் முருங்கை மரத்தில் பூக்கள் உதிர்ந்து வருவதால் விளைச்சல் கடுமையாக பாதிக்க ப்பட்டது. இதனால் உள்ளூர் முருங்கை வரத்து அடியோடு குறைந்தது. நாசிக் மற்றும் பரோடா நகரில் இருந்து நாள் ஒன்றுக்கு 25 டன் முருங்கை வருகிறது.

    இவையும் கிலோ ரூ.100 முதல் ரூ.130 வரை விற்பனையாகி வருகிறது. இவ்வகை காய்கள் பெரும்பாலும் கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அடுத்து வரும் வாரங்களிலும் பனியின் தாக்கம் அதிகரி ப்பால் உள்ளூர் காய்கறி வரத்து குறைந்தே இருக்கும் என வியாபாரிகள் தெரி வித்தனர்.

    இதேபோல் சின்ன வெங்காயம் ஒரு கிலோ ரூ.80க்கும், தக்காளி 14 கிலோ கொண்ட பெட்டி ரூ.110 வரையிலும் விற்பனையாகி வருகிறது. வெங்காயம் ஓரளவுக்கு கைகொடு த்தாலும் தக்காளி விலை தொடர்ந்து விவசாயிகளை நஷ்டப்படுத்தி வருகிறது.

    இேதபோல் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பூசணிக்காய் வரத்து அதிகமாக இருக்கும். ஆனால் அதற்கும் சரியான விலை கிடைக்க வில்லை. கிலோ ரூ.5 முதல் ரூ.6 வரை மட்டுமே விற்பனையாவதால் வெளிமாநில வியா பாரிகளும் பூசணிக்காயை விற்பனைக்கு கொண்டு வராமல் தயக்கம் காட்டி வருகின்றனர்.

    தை மாதம் பிறந்த பிறகு முகூர்த்த நாட்கள் வந்தால் மட்டுமே காய்கறிகளுக்கு நல்ல விலை கிடைக்கும் என விவசாயிகள் எதிர்பா ர்க்கின்றனர்.

    • திண்டுக்கல்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தங்கம்மாபட்டி சோதனைச்சாவடியில் சந்தேகத்திற்கிடமாக சுற்றிதிரிந்த ஒரு காரை போலீசார் நிறுத்தி சோதனையிட்டனர்.
    • ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் சீனிவாசன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதிதாக இடம் வாங்குவதற்காக சென்னை பூந்தமல்லியை சேர்ந்த தீனதயாளன் என்பவரை அணுகியுள்ளார்.

    வேடசந்தூர்:

    திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே சாலையூரை சேர்ந்தவர் சீனிவாசன்(44). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவருக்கு கலையரசி என்ற மனைவியும், ராமச்சந்திரன் என்ற மகனும், தனுஸ்ரீ என்ற மகளும் உள்ளனர். கடந்த 25-ந்தேதி இவர் தொழில் விசயமாக வெளியூர் சென்றுவிட்டார்.

    அப்போது அவரது வீட்டிற்குள் புகுந்த 5 பேர் கொண்ட முகமூடி கும்பல் கத்தி முனையில் குழந்தைகளை மிரட்டி பீரோக்களை உடைத்து அதிலிருந்த 41 பவுன் நகை, ரூ.18 லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.

    இதுகுறித்து வேடசந்தூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மாவட்ட எஸ்.பி. உத்தரவின்பேரில் டி.எஸ்.பி துர்க்காதேவி, இன்ஸ்பெக்டர் பாலமுருகன் கொண்ட தனிப்படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.

    திண்டுக்கல்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தங்கம்மாபட்டி சோதனைச்சாவடியில் சந்தேகத்திற்கிடமாக சுற்றிதிரிந்த ஒரு காரை போலீசார் நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது காரில் இருந்த நபர் முன்னுக்குபின் முரணான பதில் அளித்தார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தியதில் ரியல் எஸ்டேட் அதிபர் சீனிவாசன் வீட்டில் கொள்ளையில் ஈடுபட்டதை ஒத்துக்கொண்டார்.

    ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் சீனிவாசன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதிதாக இடம் வாங்குவதற்காக சென்னை பூந்தமல்லியை சேர்ந்த தீனதயாளன் என்பவரை அணுகியுள்ளார். இவர் சர்வதேச மனிதஉரிமைகள் கழக மதுரை மண்டல பொதுச்செயலாளராக உள்ளார். மேலும் தீனதயாளனை தனது வீட்டிற்கு வரவழைத்து இடத்திற்காக ரூ.5 லட்சம் அட்வான்ஸ் கொடுத்துள்ளார். இடம் பேசி முடிப்பதற்கு முன்பாகவே ரூ.5 லட்சம் கொடுத்ததால் சீனிவாசன் வீட்டில் பணம், நகை அதிகளவு இருக்கும் என்று உறுதி செய்தார்.

    இதனையடுத்து மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகில் உள்ள உத்தப்பநாயக்கனூரை சேர்ந்த ஜோதி என்பவரிடம் இதுகுறித்து பேசியுள்ளார். இவர் மனித உரிமைகள் அமைப்பின் மதுரை மாவட்ட செயலாளராக உள்ளார். இவருக்கு பெங்களூரு, ஓசூர், பெரம்பலூர் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கொள்ளை கும்பலுடன் தொடர்பு இருந்துள்ளது. இவர்கள் எப்போதாவது சில முறை மட்டுமே ஒன்று சேர்ந்து கொள்ளையில் ஈடுபடுவதும், அதன்பிறகு பங்கை பிரித்துக்கொண்டு தனித்தனியாக சென்றுவிடுவதும் வாடிக்கையாக உள்ளது.

    அதன்படி சீனிவாசன் வீட்டில் கொள்ளையடிக்க தீனதயாளன், ஜோதி ஆகியோர் 16 பேரை தேர்வு செய்தனர். இதில் சென்னையில் போலீசாக வேலைபார்த்து நிரந்தரமாக பணிநீக்கம் செய்யப்பட்ட செல்வக்குமார், சிராஜூதீன், சதீஸ், சுரேஷ், ரகு, பாஸ்கர் உள்பட 18 பேர் கொள்ளையடிக்க முடிவு செய்தனர். இவர்கள் அனைவரும் சம்பவத்தன்று அஞ்சலி ரவுண்டானா பகுதியில் ஒன்றுகூடினர். பின்னர் அங்கிருந்து தீனதயாளன் கார் மூலம் சீனிவாசன் வீட்டிற்கு வந்தனர். வீட்டிற்குள் 5 பேர் மட்டும் சென்றுவிட மற்ற 11 பேரும் வீட்டைச்சுற்றி கண்காணித்து வந்தனர். கொள்ளையடித்த பணத்தை எடுத்துக்கொண்டு அதேகாரில் தருமத்துப்பட்டிக்கு சென்றனர். அங்கு பணத்தை பங்குபோட்டுவிட்டு சென்றுவிட்டனர். கொள்ளைநடந்த நாளில் தீனதயாளனின் கார் சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது.

    அதனைவைத்து அந்த காரை போலீசார் கண்காணித்து வந்தனர். அப்போதுதான் இவரது கார் சோதனைச்சாவடி அருகே வந்தபோது சிக்கி கொண்டது. போலீசார் இவர்களிடம் நடத்திய விசாரணையில் சென்னை கொடுங்கையூரை சேர்ந்த தொழிலதிபர் வீட்டில் ரூ.3 கோடிக்கு மேல் பணம்-நகை இருப்பது தெரிய வந்துள்ளதால் அதனை கொள்ளையடிக்க திட்டம் தீட்டியிருந்தனர். ஆனால் போலீசார் அதற்குள் அவர்களை சுற்றிவளைத்துவிடவே அந்த திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது.

    தற்போது 8 பேர் கைது செய்யப்பட்டு வேடசந்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் மற்ற 8 பேர்களையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இவர்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கொள்ளைச்சம்பவத்தில் கைவரிசை நடத்தியுள்ளது தெரியவந்துள்ளது.

    • பழனி மலைக்கோவிலில் வருகிற 27ம் தேதி குடமுழுக்குவிழா நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை இந்துசமய அறநிலைய த்துறை செய்து வருகிறது.
    • கருவறை, வேள்விச்சாலை மற்றும் குடமுழுக்கு நிகழ்ச்சி களை தமிழ் மந்திரங்கள் ஓதி அர்ச்சனை செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

    பழனி:

    அறுபடை வீடுகளில் 3ம் படை வீடான பழனி மலைக்கோவிலில் வருகிற 27ம் தேதி குடமுழுக்குவிழா நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை இந்துசமய அறநிலைய த்துறை செய்து வருகிறது.

    இந்நிலையில் தமிழ் கடவுளாக பக்தர்களால் வணங்கப்படும் முருகன் கோவிலில் நடைபெற உள்ள கும்பாபிஷேக விழாவில் சமஸ்கிருதத்திற்கு இணையாக தமிழ் மொழியி லும் குடமுழுக்கை நடத்த வேண்டும் என தெய்வ த்தமிழ் பேரவை சார்பில் வலியுறுத்தப்பட்டு ள்ளது.

    பழனி அடிவாரத்தில் உள்ள தனியார் மண்ட பத்தில் இந்த அமைப்பின் நிர்வாகிகளின் ஆலோ சனைக் கூட்டம் நடை பெற்றது. பேரவை ஒருங்கிணைப்பாளர் மணியரசன் தலைமை வகித்தார். வடகுரு மடாதிபதி குச்சனூர் கிழார், பதிணென் சித்தர்பீடம், மூங்கிலடியார், சிம்மம், சத்தபாமா அம்மையார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கொங்கு மக்கள் முன்னனியைச் சேர்ந்த கண்ணன், வீரத்தமிழர் முன்னணியைச் சேர்ந்த முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    அதன் பின் தெய்வத்தமிழ் பேரவையின் ஒருங்கி ணைப்பாளர் மணியரசன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

    பழனி தண்டாயுதபாணி சாமி கோவிலில் குடமுழுக்கு விழா வருகிற 27ம் தேதி நடைபெற உள்ளது. கருவறை, வேள்விச்சாலை மற்றும் குடமுழுக்கு நிகழ்ச்சி களை தமிழ் மந்திரங்கள் ஓதி அர்ச்சனை செய்ய வேண்டும்.

    பிராமணர் அல்லாத தமிழ் அர்ச்சகர்க ளையும் குடமுழுக்கில் ஈடுபடுத்தி தமிழில் அர்ச்சனை செய்வதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி வருகிற 20ம் தேதி பழனியில் உண்ணா விரத போராட்டம் நடத்த உள்ளோம்.

    இது அறப்போராட்டமாக வும், ஆன்மீக நிகழ்வாகவும் நடைபெறும். ஆன்மீகச் சடங்குகள் நிறைந்த நிகழ்வாக இருக்கும். 2019ம் ஆண்டு தஞ்சாவூர் கோவில் குடமுழுக்கின் போது பல்வேறு அமைப்புகள் இணைந்து உயர்நீதி மன்ற கிளையில் வழக்கு தொட ர்ந்தோம். அப்போதைய அரசு தாமாக முன்வந்து தமிழ்பாதி, சமஸ்கிருதத்தில் பாதியாக குடமுழுக்கு நடத்துவோம் என அறிவித்தது. அந்த தீர்ப்பை செயல்படுத்தி குடமுழுக்கு நடத்தப்பட்டது.

    தமிழ் மந்திர புத்தகங்களை இந்துசமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ளது. எனவே பழனி கோவிலில் குடமுழுக்கை தமிழில் நடத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    • வயல்வெளிகள், மைதானங்களில் பனி போர்வை போர்த்தியது போல காணப்படுகிறது.
    • வீட்டில் உள்ள குடிநீர் ஐஸ்கட்டி போல உறையும் நிலையும் ஏற்பட்டு வருகிறது.

    கொடைக்கானல்:

    கொடைக்கானலில் கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன் வானியல் மாற்றங்களால் புயல், மழை என பொதுமக்களை வாட்டி எடுத்து வந்தது. இதனால் வியாபாரிகள், பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் என அனைவரும் பாதிப்புக்கு உள்ளாகினர். மழைக்காலம் முடிந்தவுடன் லேசான பனிக்காலம் ஆரம்பமானது.

    கடந்த சில வாரங்களுக்கு முன் பகலில் வெயில், மாலை நேரங்களில் பனி என ஆரம்பமான உறை பனிக்காலம் தற்போது பொதுமக்களை உறைய வைக்கும் காலமாக மாறி உள்ளது. 10 டிகிரி, 8 டிகிரி என உறைந்து வந்த பனியின் நிலைமை தற்போது 5 டிகிரிக்கும் குறைவாக நிலவி வருகிறது.

    இதனால் காலை நேரங்களில் அன்றாட பணிக்கு செல்வோர் கடும் உறைபனியால் காலதாமதமாக செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மாலை நேரங்களில் விரைவாகவே சாலைகள் வெறிச்சோடி விடுகிறது. சிறுவர்கள், பெரியவர்கள் என அனைவரும் தற்போது நிலவி வரும் கடும் குளிரால் நடுநடுங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. காலை நேரங்களில் ஏரிச்சாலைப்பகுதி மற்றும் தங்கும் விடுதிகளில் தீ மூட்டி குளிர் காயும் காட்சிகள் அரங்கேறி வருகின்றன.

    பொதுமக்களும் குளிரிலிருந்து தங்களை காத்துக் கொள்ள ஸ்வெட்டர், ஜர்க்கின், குல்லா போன்ற துணி வகைகளால் மூடி பயணிக்கும் சூழலும் உருவாகி உள்ளது. இனி வரும் காலங்களில் மைனஸ் டிகிரி வெப்பநிலையை தொடும் என்பதால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு மாலை 7 மணிக்கு மேல் காஷ்மீரில் நிலவும் பனிப்பொழிவு போல் பனி சாரல் மழை போல் விழுந்ததையும் காண முடிந்தது.

    கொடைக்கானல் நகர் மட்டுமின்றி மலைகிராமங்களிலும் இதுபோன்ற நிலை நீடிப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடிங்கிப் போய்உள்ளது. சுற்றுலா பயணிகளின் வருகையும் குறைந்துள்ளதால் வியாபாரிகளும் தவித்து வருகின்றனர். வயல்வெளிகள், மைதானங்களில் பனி போர்வை போர்த்தியது போல காணப்படுகிறது. வீட்டில் உள்ள குடிநீர் ஐஸ்கட்டி போல உறையும் நிலையும் ஏற்பட்டு வருகிறது.

    • திருவிழா காலங்களில் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.
    • தைப்பூசத்திருவிழா வருகிற 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    பழனி:

    தமிழ் கடவுள் முருகபெருமானின் 3-ம் படை வீடான பழனியில் தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், கந்தசஷ்டி, திருக்கார்த்திகை, நவராத்திரி என வருடம் முழுவதும் திருவிழாக்கள் நடந்து கொண்டே இருக்கிறது.

    திருவிழா காலங்களில் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.

    மேலும் வார விடுமுறை நாட்களில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருவதால் கூட்ட நெரிசல் அதிகரித்து வருகிறது. தைப்பூசத்திருவிழா வருகிற 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    தற்போதே மதுரை, தேனி, திருச்சி, திண்டுக்கல், காரைக்குடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக வரத் தொடங்கி உள்ளனர். இதனால் நேற்று அடிவாரம், மலைக்கோவில், மின் இழுவை ரெயில் மற்றும் ரோப்கார் நிலையங்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. 4 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    சராசரியாக வருடத்துக்கு 1.20 கோடி பக்தர்கள் பழனி கோவிலுக்கு வருகின்றனர். நீண்ட நேரம் காத்திருக்கும் பக்தர்கள் சோர்வடையாமல் இருக்க கோவில் நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    ஏற்கனவே காத்திருக்கும் இடங்களில் மின் விசிறி வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அர்த்தமண்டபம் அருகில் மட்டும் குளிர்சாதன வசதி செய்யப்பட்டிருந்தது. தற்போது பழனி கோவிலில் கும்பாபிஷேக பணிகள் நடந்து வருகிறது. கும்பாபிஷேகத்தின்போது லட்சக்கணக்கான பக்தர்கள் குவிவார்கள். எனவே உட்பிரகாரத்தில் உள்ள தரிசன வரிசை முழுவதும் குளிர்சாதன வசதி செய்யப்பட்டுள்ளது. ரூ.24 லட்சம் மதிப்பில் லண்டனில் இருந்து பிரத்தியேகமாக குளிர்விக்கும் எந்திரம் வரவழைக்கப்பட்டு பொருத்தும் பணி தொடங்கியது. இதன் மூலம் கூட்ட நெரிசலிலும் பக்தர்களுக்கு புத்துணர்ச்சியான காற்று கிடைக்கும். இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • தமிழக அரசு சார்பில் பழனி முருகன் கோவில் நவபாஷாண பாதுகாப்புக்குழு அமைக்கப்பட்டிருந்தது.
    • ஓரிரு நாளில் மருந்து சாத்துதல் நிகழ்ச்சிக்கான அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பழனி:

    பழனி தண்டாயுதபாணி சாமி கோவிலில் வருகிற 27ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்கான பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. இந்நிலையில் கருவறையில் உள்ள மூலவரான நவபாஷாணத்தால் ஆன முருகன் சிலைக்கு மருந்து சாத்துதல் உள்ளிட்ட நிகழச்சிகள் நடைபெறாமல் உள்ளதால் இதுகுறித்து பக்தர்கள் சார்பில் கோரிக்கை விடப்பட்டு வந்தது.

    ஏற்கனவே தமிழக அரசு சார்பில் பழனி முருகன் கோவில் நவபாஷாண பாதுகாப்புக்குழு அமைக்கப்பட்டிருந்தது. நீதிஅரசர் பொங்கியப்பன் தலைமையில் 11 பேர் கொண்ட குழுவினர் இதில் இடம்பெற்றுள்ளனர். எம்.எல்.ஏ. செந்தில்குமார், ஸ்தபதி உள்பட 11 பேர் கொண்ட குழு ஆலோசனைக்கூட்டம் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நடைபெற்றது.

    இதனை தொடர்ந்து கும்பாபிஷேகத்திற்கு இன்னும் 2 வாரங்களே உள்ளதால் நவபாஷாண சிலைக்கு மருந்து சாத்தும் நிகழ்ச்சி நடத்துவது தொடர்பாக பாதுகாப்புக்குழு நேற்று இரவு ஆய்வு மேற்கொண்டனர். சுமார் 2 மணிநேர ஆய்வுக்கு பிறகு குழுவின் ஆலோசனைக் கூட்டம் மலைக்கோவிலில் நடைபெற்றது. இதனை தொடர்ந்து ஓரிரு நாளில் மருந்து சாத்துதல் நிகழ்ச்சிக்கான அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • திண்டுக்கல் அருகே எரியோடு ஊராட்சி மன்ற அலுவலகம் புளியம்பட்டியில் செயல்பட்டு வருகிறது.
    • சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் அங்கு முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    எரியோடு:

    திண்டுக்கல் அருகே எரியோடு ஊராட்சி மன்ற அலுவலகம் புளியம்பட்டியில் செயல்பட்டு வருகிறது. இங்கு கிழக்கு வடுகம்பாடி, மேற்குவடுகம்பாடி, பாரதிநகர், வரதராஜபுரம், பொம்மகவுண்டன்புதூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பல்வேறு தேவைகளுக்காக வருகின்றனர்.

    அங்கிருந்த பழைய அலுவலக கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய அலுவலகம் கட்ட கடந்த சில நாட்களுக்கு முன்பு அரசு அனுமதி வழங்கியது. அதன்படி புதிய கட்டிடத்திற்கு பூமிபூஜை நடத்தப்பட்டது.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் அங்கு முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். வடுகம்பட்டி ஊராட்சி அலுவலகத்தை புளியம்பட்டியில் இருந்து வடுகம்பாடிக்கு மாற்ற வேண்டும். புதிய கட்டிடம் அங்குதான் கட்டவேண்டும் எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வட்டாட்சியர் ரமேஷ் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். வருகிற 12-ந்தேதி சமூகஉடன்பாடு, அமைதிபேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. அன்று தங்கள் கோரிக்கைகள் குறித்து பேசப்படும் என்றார்.

    அப்போது வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) கற்பகம், எரியோடு போலீசார் உடனிருந்தனர். தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்ததால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. பின்னர் அதிகாரிகள் சமரசபேச்சுவார்த்தையில் தீர்வு காணப்படும் என உறுதியளித்ததால் அவர்கள் கலைந்து சென்றனர்.

    • குறிஞ்சிச்செடி அல்லது நீலக்குறிஞ்சி என்பது இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலையில் பரவலாக வளரும் ஒரு செடியாகும்.
    • கொடைக்கானல் வந்துள்ள சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்து அதன் முன்பு நின்று புகைப்படம் எடுத்து செல்கின்றனர்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானலில் அரியவகை மலரான 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சி மலர் பூப்பது அபூர்வ நிகழ்வாக உள்ளது. குறிஞ்சியில் கல் குறிஞ்சி, சிறு குறிஞ்சி, நெடுங்குறிஞ்சி, நீலக்குறிஞ்சி எனப்பல வகைகள் உண்டு. இவற்றில் நீலக்குறிஞ்சி மட்டுமே 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மலைப்பகுதிகளில் பூக்கும் மலர் ஆகும்.

    குறிஞ்சிச்செடி அல்லது நீலக்குறிஞ்சி என்பது இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலையில் பரவலாக வளரும் ஒரு செடியாகும். இதில் பூத்துக்குலுங்கும் நீல மலர்களினால் இம்மலைப் பிரதேசம் நீல நிறத்தில் தோன்றுவதால், தென்னிந்தியாவில் இம்மலைத் தொடர்ச்சிக்கு நீலகிரி மலை என்ற பெயர் வந்தது.

    30-க்கும் மேற்பட்ட இவ்வகை மலர்கள் மேற்கு தொடர்ச்சிமலைகள், நீலகிரி மற்றும் கொடைக்கானல் மலைகளில் மட்டுமே வளர்கின்றன. பழந்தமிழர்களின் நிலவகை பகுப்பில் மலையும் மலை சார்ந்த நிலமும் "குறிஞ்சி" திணையாகக் குறிக்கப்படுகின்றன. இதன்மூலம் தமிழர்களின் வாழ்வியல் முறை நிலத்தை ஒட்டியே இருந்தது என்பது உறுதியாகும்.

    கடல் மட்டத்திலிருந்து 1300 முதல் 2400 மீ. உயரத்தில் வளரும் இச்செடி, 12 வருடங்களுக்கு ஒரு முறையே பூக்கும். பொதுவாக 30 முதல் 60 செ.மீ. உயரம் வரை வளரும். இதற்கு ஏற்றத் தட்பவெட்ப சூழ்நிலை இருந்தால் 180 செ.மீ. உயரம் வரையிலும் வளரும்.

    1994-ஆம் ஆண்டில் பூத்த இச்செடி, 12 ஆண்டுகளுக்குப் பிறகு, தமிழகத்திலும் கேரளாவிலும் 2006-ஆம் ஆண்டில் பூத்தது. அதன்பிறகு 2018-ம் ஆண்டில் குறிஞ்சி மலர்கள் பூத்து குலுங்கிய நிலையில் தற்போது மற்றொரு வகையான குறிஞ்சி மலர்கள் 2023-ம் ஆண்டில் கொடைக்கானல் மற்றும் அதனை சுற்றியுள்ள மலைக்கிராமங்களில் பூத்து குலுங்கி வருகிறது.

    மணி போன்ற வடிவம் கொண்ட குறிஞ்சி மலர்கள் மலைச் சரிவுகளில் பூத்துக்குலுங்கி மலைப் பகுதிகளுக்குப் புதிய வண்ணங்களைத் தீட்டி வருகின்றன.

    இயற்கையாக வளரும் இவ்வகை செடிகளை பறித்து தனியார் தோட்டங்களிலும் சிலர் வளர்த்து வருகின்றனர். தற்போது அவ்வகை செடிகளில் பூக்கள் பூத்து குலுங்கி வருகிறது. இதனை கொடைக்கானல் வந்துள்ள சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்து அதன் முன்பு நின்று புகைப்படம் எடுத்து செல்கின்றனர்.

    • காளைகளை தயார் படுத்தும் பணியில் அதன் உரிமையாளர்கள் தீவிரமாக இறங்கி உள்ளனர்.
    • ஐல்லிக்கட்டு எந்த ஊரில் நடந்தாலும் அங்கு செல்லும் இளைஞர்களுடன் இவரும் சென்று கேலரியில் அமர்ந்து வேடிக்கை பார்ப்பதை வாடிக்கையாக கொண்டிருந்தார்.

    திண்டுக்கல்:

    தமிழகத்தில் பொங்கல் பண்டிகை சமயங்களில் மதுரை மாவட்டத்தை போலவே திண்டுக்கல் மாவட்டத்திலும் பல்வேறு கிராமங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுவது வழக்கம்.

    இதற்காக காளைகளை தயார் படுத்தும் பணியில் அதன் உரிமையாளர்கள் தீவிரமாக இறங்கி உள்ளனர். திண்டுக்கல் அருகே உள்ள புகையிலைப்பட்டியை சேர்ந்தவர்கள் ஜெயராஜ், வேளாங்கண்ணி தம்பதியர். இவர்கள் விவசாயத்தை பிரதான தொழிலாக செய்து வருகின்றனர். இவர்கள் 10-க்கும் மேற்பட்ட பசு மாடுகளை வளர்த்து வருகின்றனர்.

    இவர்களுக்கு 3 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். 3-வது மகள் ஜெயமணி அதே ஊரில் பள்ளி படிப்பை முடித்து கணினியில் டிப்ளமோ பயிற்சி முடித்த இவர் சிறுவயதிலிருந்தே ஜல்லிக்கட்டில் ஆர்வம் மிக்கவராக இருந்து வந்தார். ஐல்லிக்கட்டு எந்த ஊரில் நடந்தாலும் அங்கு செல்லும் இளைஞர்களுடன் இவரும் சென்று கேலரியில் அமர்ந்து வேடிக்கை பார்ப்பதை வாடிக்கையாக கொண்டிருந்தார்.

    ஒரு கட்டத்தில் தானும் ஜல்லிக்கட்டு காளைகள் வாங்கி வளர்த்து போட்டியில் பங்கேற்க வேண்டும் என்று முடிவு செய்தார். அதையே தனது லட்சியமாகவும் கொண்டு செயல்பட தொடங்கினார். மாடுகளை வாங்குவதற்கு பணம் தேவை என்பதால் அதற்காக பெட்ரோல் பங்கில் வேலைக்கு சேர்ந்தார். அதில் தனக்கு கிடைத்த சம்பளத்தை சேமித்துவைத்து கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு 2 ஜல்லிக்கட்டு கன்றுகளை சந்தையில் வாங்கி முறையாக வளர்த்து கண்ணும் கருத்துமாக அவற்றை பராமரிக்க தொடங்கினார்.

    ஜல்லிக்கட்டு காளைகளுக்கு காரி வெள்ளை, காரி கருப்பு என பெயரிட்டு பாசத்துடன் அவற்றை அழைத்து அகமகிழ்ந்தார். அவற்றை அழைத்துச் சென்று வாடிவாசலில் நிறுத்தி அவிழ்த்து விட்டார்.

    களத்தில் களமிறங்கும் இப்பெண்ணின் 2 காளைகளும் எந்த ஒரு காளையர்களின் பிடியிலும் சிக்காதவாறு களத்திலேயே நின்று தமது காளைகளுக்கு கண் அசைவிலும் விரல் அசைவிலும் சைகையை காட்டி அவற்றை துள்ளி விளையாடச் செய்தார்.

    களத்தில் எவரது பிடியிலும் சிக்காமல் நீண்ட நேரம் நின்று விளையாடி ரசிகர்களின் ஆதரவையும், விழாக் குழுவினர்களின் பரிசுகளையும் அள்ளிவந்தன.

    எவரது பிடியிலும் சிக்காமல் சீறிப் பாய்ந்து வெற்றியுடன் வெளியே வந்ததால் கட்டில், பீரோ, டிவி, சைக்கிள், தங்க காசு, வெள்ளி காசு, உள்ளிட்ட பல்வேறு பரிசுகளை வென்று வருவதையே ஜெயமணியின் 2 கண்களுக்கு சமமான இரு ஜல்லிக்கட்டு காளைகளும் வாடிக்கையாக வைத்துள்ளன.

    தற்போது வரக்கூடிய பொங்கல் பண்டிகையொட்டி நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டிகளை எதிர்நோக்கி தானும் தன்னுடைய காரி வெள்ளையனும், காரி கருப்பனும் வாடிவாசல் நோக்கி காத்திருப்பதாக பெருமிதத்துடன் அவர் தெரிவித்தார்.

    ஜெயமணி தனது காளைகளை ஜல்லிக்கட்டுக்கு தயார் செய்யும் விதமாக தினமும் நீச்சல் பயிற்சி, நடைபயிற்சி, மண் குத்தும் பயிற்சி, சைகை பயிற்சி உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் கொடுத்து வருகிறார்.

    மேலும் இந்த காளைகளுக்கு தினமும் ரூ.300 வீதம் மாதம் ரூ.9000 வரை செலவு செய்து வருவதாகவும் தெரிவித்தார். தனது மாடுகளுக்காகவே தான் பணிக்கு செல்வதாகவும் அதன் மூலம் வரும் வருமானத்தை தனது காளைகளுக்கு மட்டுமே செலவிடுவதாக தெரிவித்தார்.

    • கொடைக்கானல் வனக்கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் அதிக அளவு விலங்குகள் உள்ளன.
    • கர்நாடகா, கேரள மாநிலங்களிலும் இவ்வகை காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.

    கொடைக்கானல்:

    திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வனக்கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் அதிக அளவு விலங்குகள் உள்ளன. குறிப்பாக யானை, காட்டு பன்றி, மான் போன்றவை மக்கள் வசிப்பிடத்துக்கு அருகே அடிக்கடி வந்து செல்வது வாடிக்கையாக உள்ளது.

    அதிலும் காட்டுப்பன்றிகள் விளை நிலங்களை சேதப்படுத்தி செல்வதும், குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து மக்களை மிரட்டி வருவதும் அடிக்கடி நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் முதுமலை புலிகள் காப்பகத்தை ஒட்டியுள்ள பல்வேறு இடங்களில் ஆப்ரிக்கன் பன்றி காய்ச்சலால் ஏராளமான காட்டு பன்றிகள் அடுத்தடுத்து உயிரிழந்தன. இவ்வாறு உயிரிழந்த பன்றிகளை வனத்துறையினர் தீ வைத்து எரித்து வருகின்றனர். மேலும் மற்ற விலங்குகளுக்கும் இந்த நோய் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    குறிப்பாக எல்லைப்பகுதிகளில் தீவிர கண்காணிப்பை மேற்கொண்டு வெளி மாவட்டங்களில் இருந்து பன்றிகளை வாகனங்களில் கொண்டு வர தடை விதித்துள்ளனர். இந்த நோய் மனிதர்களுக்கு பரவாது என்று கால்நடைத்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தபோதிலும் பொதுமக்கள் அச்சத்துடனே உள்ளனர்.

    இந்நிலையில் கர்நாடகா, கேரள மாநிலங்களிலும் இவ்வகை காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. எனவே கொடைக்கானலில் உள்ள காட்டுப்பன்றிகளுக்கு நோய் பரவுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

    இது குறித்து கால்நடைத்துறை அதிகாரிகள் தெரிவிக்கையில், கொடைக்கானலில் காட்டுப்பன்றிகளுக்கு ஆப்பிரிக்கன் வகை காய்ச்சல் இல்லை. அவ்வாறு இருந்தால் வனப்பகுதியில் பன்றிகள் உயிரிழந்த நிலையில் இருக்கும். அதனை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். தற்போது வரை திண்டுக்கல் மாவட்டத்தில் ஆப்பிரிக்கன் பன்றிக்காய்ச்சல் இல்லை. வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பகுதியில் ஈடுபட்டு வருகின்றனர். சமூக வலைத்தளங்களில் வெளியாகும் தகவல்களை யாரும் நம்ப வேண்டாம் என்றனர்.

    ×