search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பழனி கோவிலில் ரூ.24 லட்சம் மதிப்பில் குளிரூட்டும் எந்திரம்
    X

    பழனி கோவிலில் ரூ.24 லட்சம் மதிப்பில் குளிரூட்டும் எந்திரம்

    • திருவிழா காலங்களில் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.
    • தைப்பூசத்திருவிழா வருகிற 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    பழனி:

    தமிழ் கடவுள் முருகபெருமானின் 3-ம் படை வீடான பழனியில் தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், கந்தசஷ்டி, திருக்கார்த்திகை, நவராத்திரி என வருடம் முழுவதும் திருவிழாக்கள் நடந்து கொண்டே இருக்கிறது.

    திருவிழா காலங்களில் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.

    மேலும் வார விடுமுறை நாட்களில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருவதால் கூட்ட நெரிசல் அதிகரித்து வருகிறது. தைப்பூசத்திருவிழா வருகிற 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    தற்போதே மதுரை, தேனி, திருச்சி, திண்டுக்கல், காரைக்குடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக வரத் தொடங்கி உள்ளனர். இதனால் நேற்று அடிவாரம், மலைக்கோவில், மின் இழுவை ரெயில் மற்றும் ரோப்கார் நிலையங்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. 4 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    சராசரியாக வருடத்துக்கு 1.20 கோடி பக்தர்கள் பழனி கோவிலுக்கு வருகின்றனர். நீண்ட நேரம் காத்திருக்கும் பக்தர்கள் சோர்வடையாமல் இருக்க கோவில் நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    ஏற்கனவே காத்திருக்கும் இடங்களில் மின் விசிறி வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அர்த்தமண்டபம் அருகில் மட்டும் குளிர்சாதன வசதி செய்யப்பட்டிருந்தது. தற்போது பழனி கோவிலில் கும்பாபிஷேக பணிகள் நடந்து வருகிறது. கும்பாபிஷேகத்தின்போது லட்சக்கணக்கான பக்தர்கள் குவிவார்கள். எனவே உட்பிரகாரத்தில் உள்ள தரிசன வரிசை முழுவதும் குளிர்சாதன வசதி செய்யப்பட்டுள்ளது. ரூ.24 லட்சம் மதிப்பில் லண்டனில் இருந்து பிரத்தியேகமாக குளிர்விக்கும் எந்திரம் வரவழைக்கப்பட்டு பொருத்தும் பணி தொடங்கியது. இதன் மூலம் கூட்ட நெரிசலிலும் பக்தர்களுக்கு புத்துணர்ச்சியான காற்று கிடைக்கும். இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    Next Story
    ×