தமிழகத்தில் ஒரே நாளில் திருப்புதல், ஜே.இ.இ தேர்வு- பிளஸ் 2 மாணவர்கள் தவிப்பு

பிளஸ்-2 மாணவர்களுக்கு ஜே.இ.இ மெயின்தேர்வு வருகிற 24-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை நடைபெற உள்ளது. 27-ந்தேதி தேசிய நுழைவுத்தேர்வுக்கான ஜே.இ.இ மெயின்தேர்வு வருகிறது.
தமிழகத்தில் ஒரே நாளில் திருப்புதல், ஜே.இ.இ தேர்வு- பிளஸ் 2 மாணவர்கள் தவிப்பு
Published on

திண்டுக்கல்:

பிளஸ்-2 மாணவர்களுக்கு ஜே.இ.இ மெயின்தேர்வு வருகிற 24-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை நடைபெற உள்ளது என மத்திய தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் பிளஸ்-2 மாணவர்களுக்கு முதல் திருப்புதல் தேர்வு இன்றுமுதல் ஜனவரி 13, 19, 20, 23, 25, 27 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.

இதில் 27-ந்தேதி தேசிய நுழைவுத்தேர்வுக்கான ஜே.இ.இ மெயின்தேர்வும் வருகிறது. இதனால் அந்த நாளில் எந்த தேர்வுக்கு தயாராவது என்பதில் மாணவர்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது.

எனவே கல்வித்துறை அதிகாரிகள் இதுகுறித்து ஆராய்ந்து திருப்புதல் தேர்வை வேறு தேதிக்கு மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com