என் மலர்
திண்டுக்கல்
- அங்குள்ள டீக்கடைக்கு வந்த 2 பேர் தாங்கள் பெரிய ரவுடி எனக்கூறி சின்னையாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
- திண்டுக்கல்லில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம். அதற்கு பணம் வேண்டும் எனக்கூறி கத்தியை காட்டி மிரட்டினார்
வடமதுரை:
வடமதுரை அருகே பெரியகோட்டை பில்லமநாயக்கன் பட்டியை சேர்ந்தவர் சின்னையா (57). கட்டிட காண்ட்ராக்டராக தொழில் செய்து வருகிறார். அதே பகுதியில் உள்ள டீக்கடையில் நின்றிருந்தார். அப்போது அங்கு வந்த தண்டபாணி (43), தீத்தம்பட்டியை சேர்ந்த ஜெயக்குமார் (30) ஆகியோர் தாங்கள் பெரிய ரவுடி எனக்கூறி சின்னையாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மேலும் திண்டுக்கல்லில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம். அதற்கு பணம் வேண்டும் எனக்கூறி கத்தியை காட்டி மிரட்டினார். இதனால் அதிர்ச்சியடைந்த சின்னையா சத்தம் போட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஒன்று கூடினர். இதைப்பார்த்ததும் தண்டபாணி, ஜெயக்குமார் ஆகியோர் தப்பியோட முயன்றனர். ஆனால் பொதுமக்கள் அவர்கள் 2 பேரையும் மடக்கி பிடித்து வடமதுரை போலீசில் ஒப்படைத்தனர்.
சின்னையா அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் 2 பேரையும் கைது செய்து வேடசந்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
- இன கலவரத்தில் இறந்தவர்களுக்காகவும், மணிப்பூரில் வாழ்வாதாரம் இழந்தவர்களின் மறுவாழ்விற்காகவும் மெழுகுவர்த்தி ஏந்தி மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
- சிறப்பு பிரார்த்தனைகளும் செய்யப்பட்டது.
கொடைக்கானல்:
கொடைக்கானல் ஒருங்கிணைந்த கிறிஸ்தவ கூட்டமைப்பின் சார்பில் மணிப்பூர் மாநிலத்தில் அமைதி திரும்பவும், அங்கு ஏற்பட்ட இன கலவரத்தில் இறந்தவர்களுக்காகவும், மணிப்பூரில் வாழ்வாதாரம் இழந்தவர்களின் மறுவாழ்விற்காகவும், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிற்காகவும், மீண்டும் அம்மா நிலத்தில் இயல்பு நிலை திரும்புவதற்காகவும் மெழுகுவர்த்தி ஏந்தி மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
கொடைக்கானல் முன்னாள் நகர் மன்ற தலைவர் டாக்டர் குரியன் ஆபிரகாம் தலைமை தாங்கினார். கொடைக்கானல் நகர் மன்ற தலைவர் செல்லத்துரை, துணை தலைவர் மாயக்கண்ணன், முன்னாள் நகர் மன்ற தலைவர் முகமது இப்ராஹிம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் முஸ்லிம் ஜமாத்தைச் சேர்ந்தவர்களும், சி.எஸ்.ஐ. போதகர்கள் ஜெகதீஷ் கிருபாகரன், வேத முத்து, பிரசாத், கத்தோலிக்க சகோதரிகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டார்கள்.
சிறப்பு பிரார்த்தனைகளும் செய்யப்பட்டது.
- பல்வேறு புனித ஸ்தலங்களிலிருந்து கொண்டுவரப்பட்ட புனித தீர்த்த குடங்கள் ஊர்வலமாக கோபுர உச்சிக்கு எடுத்து செல்லப்பட்டது.
- சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்கள் முழங்க புனித தீர்த்தம் குடம் குடமாக ஊற்றப்பட்டு பூஜைகளும், தீபாராதனைகளும் நடந்தது.
நத்தம்:
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தாலுகா செந்துறை அருகே மணக்காட்டூர் கிராமத்தில் பாலமுருகன், பால விநாயகர் திருக்கோவில் நூதன ஆலய அஷ்டபந்தன் மஹாகும்பாபிஷேக விழா இன்று நடந்தது. இதில் கலசங்களில் புனித நதிகளின் புனிதநீர் கொண்டு வரப்பட்டு தீர்த்த குடங்கள் மற்றும் முளைப்பாரி வலம் வருதல், நிலத்தேவர் வழிபாடு, புனித மண் எடுத்தல், முளைபாலிகை இடுதல், திருக்குடத்துக்குள் எழுந்தருள செய்தல்,வேள்விச்சாலையில் நுழைதல் முதற்காலயாக வேள்விகள், கனி, மூலிகை வேள்வி, திருமுறை விண்ணப்பம், நிறையவி அளித்தல், பேரொளி பிரசாதம் வழங்குதல், ஸ்ரீருத்ர ஜெயம், வேத பாராயணம், சுக்ரஹோரையில் கோபுர கலசங்கள் ஸ்தாபித்தல், தொடர்ந்து பால விநாயகர், பாலமுருகனுக்கு 4ம் காலயாக வேள்விகள் தொடங்கியது.
ருத்ரஜெயம் வேத பாராயணம், கோபூஜை, சுமங்கலிபூஜை, கன்னியா பூஜை, வடுகபூஜை, தொட்டு துலக்குதல்,உயர் ஊட்டுதல் பூஜைகள் நடைபெற்றது.
இன்று பூர்ணாகுதி, தீபாராதனையை தொடர்ந்து மேளதாளம் முழங்க ஏற்கனவே யாகசாலையில் வைக்கப்பட்டிருந்த அய்யனார் அருவி, அழகர்மலை, கரந்த மலை, காசி, ராமேசுவரம், வைகை, உள்ளிட்ட பல்வேறு புனித ஸ்தலங்களிலிருந்து கொண்டுவரப்பட்ட புனித தீர்த்த குடங்கள் ஊர்வலமாக கோபுர உச்சிக்கு எடுத்து செல்லப்பட்டது.
அங்கு சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்கள் முழங்க புனித தீர்த்தம் குடம் குடமாக ஊற்றப்பட்டு பூஜைகளும், தீபாராதனைகளும் நடந்தது. இதில் கோவிலை சுற்றி ஏராளமான பக்தர்கள் நின்று சாமி தரிசனம் செய்தனர். அப்போது வானத்தில் கருடன் வட்டமிட்டது. தொடர்ந்து பக்தர்களுக்கு பூஜை மலர்களும், புனித தீர்த்தமும், அன்னதானமும் வழங்கப்பட்டது.
விழாவில் முன்னாள் எம்.எல்.ஏ.ஆண்டிஅம்பலம், நத்தம் ஒன்றியக்குழு தலைவர் ஆர்.வி.என்.கண்ணன், நத்தம் பேரூராட்சி சேர்மன் சேக்சிக்கந்தர் பாட்ஷா, தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் ரெத்தினகுமார், பழனிச்சாமி, அ.தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளர் மணிகண்டன், நகரசெயலாளர் ராஜ்மோகன், குடகிப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரிஅழகர்சாமி, தி.மு.க. ஒன்றிய கவுன்சிலர் பாக்கியலட்சுமி சிவஞானம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழா ஏற்பாடுகளை மணக்காட்டூர் விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
- அரசின் வழிகாட்டுதல் முறைப்படி கடைப்பிடிக்கபடுகிறதா என்பது குறித்து கண்காணிக்க அதிகாரிகளுக்கு உணவு கடத்தல் தடுப்பு பிரிவு மதுரை மண்டல காவல் கண்காணிப்பாளர் சினேக பிரியா உத்தரவிட்டார்.
- இரு முறை கொதி நிலைக்கு உட்பட்டு அரவை செய்யப்படுகிறதா என்று ஆய்வு செய்தனர். அப்போது அரசின் வழிகாட்டுதல் முறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்று அறிவுரை வழங்கினர்.
திண்டுக்கல்:
பொதுமக்களுக்கு ரேசன் கடைகளில் வழங்கும் அரிசி, அரவை மில்களில் 2 முறை கொதிகலன்களில் அரைத்து வழங்கப்பட்டு வருகிறது. அரசின் வழிகாட்டுதல் முறைப்படி கடைப்பிடிக்கபடுகிறதா என்பது குறித்து கண்காணிக்க அதிகாரிகளுக்கு உணவு கடத்தல் தடுப்பு பிரிவு மதுரை மண்டல காவல் கண்காணிப்பாளர் சினேக பிரியா உத்தரவிட்டார்.
அதன்படி டி.எஸ்.பி. ஜெகதீசன் தலைமையில், இன்ஸ்பெக்டர் கீதா, சப்- இன்ஸ்பெக்டர் கார்த்திக்கேயன் மற்றும் குழுவினர் நந்தவனப்பட்டி மற்றும் பெரிய பள்ளப்பட்டி ஆகிய பகுதியில் அரசின் நேரடி நெல் கொள்முதல் அரவை மில்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இரு முறை கொதி நிலைக்கு உட்பட்டு அரவை செய்யப்படுகிறதா என்று ஆய்வு செய்தனர். அப்போது அரசின் வழிகாட்டுதல் முறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்று அறிவுரை வழங்கினர். மேலும் நெல், அரிசி மற்றும் ஆவணங்களை சோதனை செய்தனர்.
- வத்தலக்குண்டு புனித தோமையார் பங்கு ஆலய திருவிழா கொடி பவனி, கொடியேற்றத்துடன் தொடங்கி நேற்று இரவு அலங்கரிக்கப்பட்ட தேரில் புனித தோமையார் பவனி நடைபெற்றது.
- இந்நிகழ்ச்சியில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்
வத்தலகுண்டு:
வத்தலக்குண்டு- திண்டுக்கல் சாலையில் உள்ள பழமையான புனித தோமையார் ஆலய பங்குத் திருவிழாவின் 9-ஆம் நாளில் தேர் பவனி நடந்தது.
வத்தலக்குண்டு புனித தோமையார் பங்கு ஆலய திருவிழா கொடி பவனி, கொடியேற்றத்துடன் தொடங்கி திருப்பலி, ஒப்புரவு அருட்சாதனம், திருப்பலி நற்கருணைஆசீர், திருவிழா திருப்பலி மற்றும் அதனைத் தொடர்ந்து நேற்று இரவு அலங்கரிக்கப்பட்ட தேரில் புனித தோமையார் பவனி நடைபெற்றது.
முக்கிய வீதிகள் வழியாக வந்த தேர் பவனி மீண்டும் புனித தோமையார் ஆலயம் வந்தடைந்தது. இந்நிகழ்ச்சியில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை புனித தோமையார் ஆலய நிர்வாகிகள் செய்திருந்தனர்.
- துரைசாமிபுரத்தை சேர்ந்த 4 வயது சிறுவன் காளியம்மன் கோவில் பகுதியில் விளையாடிக்கொண்டிருந்த யுவராஜ் திடீரென மாயமானார்.
- சிறுவனை மீட்டு நிலக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
நிலக்கோட்டை:
நிலக்கோட்டை அருகே துரைசாமிபுரத்தை சேர்ந்த இளங்கோ மகன் யுவராஜ் (வயது4). காளியம்மன் கோவில் பகுதியில் விளையாடிக்கொண்டிருந்த யுவராஜ் திடீரென மாயமானார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை தேடினர். அப்பகுதியில்இருந்த கிணற்றில் தவறி விழுந்திருக்கலாம் என்ற சந்கேத்தில் தண்ணீரை மோட்டார் மூலம் வெளியேற்றினர்.
அப்போது அங்கு பேச்சுமூச்சின்றி யுவராஜ் இருந்தான். சிறுவனை மீட்டு நிலக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் யுவராஜ் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இது குறித்து நிலக்கோட்டை போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
இன்ஸ்பெக்டர் குருவெங்கட்ராஜ் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் மயில்ராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கிணற்றில் தவறி விழுந்து சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- கடந்த சில நாட்களாகவே அரசு ஆஸ்பத்திரியில் ்நோயாளிகளின் பொருட்கள் அதிக அளவில் திருடுபோயி உள்ளது.
- தொடர்ந்து உள்நோயாகளிடம் பணம், செல்போன் திருடப்படுவது தொடர்கதையாகி வருகிறது. எனவே மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு தினசரி ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற வருகின்றனர்.மேலும் அங்கு தங்கி ஏராளமானோர் பல்வேறு பரிசோத னைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அங்கிருக்கும் நோயாளிகளுக்கு உதவியாக அவர்களது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் தங்குகின்றனர். கடந்த சில நாட்களாகவே அரசு ஆஸ்பத்திரியில் ்நோயாளிகளின் பொருட்கள் அதிக அளவில் திருடுபோயி உள்ளது.மேலும் வெளி ஆட்களின் அட்டகாசத்தால் நோயாளிகள் அச்சம் அடைந்துள்ளனர். குறிப்பாக பைக் சாகத்தில் ஈடுபடும் நபர்கள் மற்றும் குடிபோதையில் ரகளை செய்பவர்கள் தொல்லை அதிகரித்துள்ளது. கடந்த வாரம் காவலாளி தாக்கப்பட்டார்.
திண்டுக்கல் அருகே காமலாபுரம் சக்கைய நாயக்கனூரை சேர்ந்தவர் வேளாங்கண்ணி மகன் அருள் சகாயராஜ் (23). குடும்ப பிரச்சினை காரணமாக விஷம் குடித்த இவர் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் இன்று அதிகாலையில் இவரது செல்போனை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். தொடர்ந்து உள்நோயாகளிடம் பணம், செல்போன் திருடப்படுவது தொடர்கதையாகி வருகிறது. எனவே மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நத்தம்:
நத்தம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (10ந் தேதி) திங்கட்கிழமை நடைபெற இருப்பதால் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும்.
நத்தம், கோவில்பட்டி, செல்லப்பநாயக்கன்பட்டி, பொய்யாம்பட்டி, மூங்கில்பட்டி, ஊராளிபட்டி, சேத்தூர், அரவங்குறிச்சி, சமுத்திராப்பட்டி, கோட்டையூர், சிறுகுடி, பூசாரிபட்டி, பூதகுடி, பன்னியாமலை, உலுப்பகுடி, காட்டுவேலம்பட்டி, ஆவிச்சிபட்டி, தேத்தாம்பட்டி மற்றும் ஒடுகம்பட்டி ஆகிய பகுதிகளில் மின்சாரம் வினியோகம் தடை செய்யப்படும் என நத்தம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் வெங்கடேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
- வார விடுமுறையான இன்று பழனி முருகன் கோவிலில் தரிசனம் செய்ய பக்தர்கள் குவிந்தனர்.
- அடிவாரத்தில் இருந்து மலைக்கோவிலுக்கு செல்லும் பிரதான வழிகளான படிப்பாதை, யானைப்பாதை வழியாகவும் மின் இழுவை ரெயில் நிலையம் உள்பட பல இடங்களில் பக்தர்கள் கூட்டம் இருந்தது.
பழனி:
அறுடை வீடுகளில் 3ம் படை வீடான பழனி முருகன் கோவில் உலக பிரசித்தி பெற்ற கோவிலாகும். இங்கு தினமும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்கின்றனர். நேர்த்திக்கடனாக முடி காணிக்கை செலுத்தி மயில்காவடி, தீர்த்தகாவடி எடுத்தும் பக்தர்கள் வழிபடுகின்றனர்.
திருவிழா காலங்கள், பண்டிகை காலங்கள், சுபமுகூர்த்த நாட்கள் மற்றும் வார விடுமுறை நாட்களில் கூட்டம் அதிகமாக காணப்படும். அந்த வகையில் வார விடுமுறையான இன்று பழனி முருகன் கோவிலில் தரிசனம் செய்ய பக்தர்கள் குவிந்தனர்.
மலைக்கோவில் மட்டுமின்றி அடிவாரம், கிரிவீதி உள்ளிட்ட பகுதிகளில் அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் இருந்தது. கூட்டம் காரணமாக பொது, கட்டணம் உள்ளிட்ட தரிசன வழிகள், அன்னதானக்கூடம் ஆகிய இடங்களில் வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
அடிவாரத்தில் இருந்து மலைக்கோவிலுக்கு செல்லும் பிரதான வழிகளான படிப்பாதை, யானைப்பாதை வழியாகவும் மின் இழுவை ரெயில் நிலையம் உள்பட பல இடங்களில் பக்தர்கள் கூட்டம் இருந்தது.
பழனிக்கு வெளியூர் பக்தர்கள் கார், வேன்களில் அதிகமாக வந்திருந்தனர். இதனால் அடிவாரம் ரோடு, கிரிவீதி, பூங்காரோடு, அய்யம்புள்ளிரோடு ஆகிய பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சாலையோரங்களில் கார்களை நிறுத்திச் சென்றதால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டது. இதனால் பக்தர்கள், பொதுமக்கள் கடும் சிரமம் அடைந்தனர்.
சாமி தரிசனம் செய்த பின்பு சொந்த ஊருக்கு திரும்புவதற்காக பழனி பஸ் நிலையத்தில் பக்தர்கள் குவிந்தனர். இதனால் பஸ்களிலும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
- நத்தத்தில் இருந்து துவரங்குறிச்சி செல்லும் நான்குவழிசாலையில் 20 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.
- இந்த கேமராக்கள் கடந்த சில நாட்களாக செயல்படவில்லை. இதனால் 4 வழிச்சாலை பகுதியில் நடைபெறும் வாகன விபத்து, திருட்டு சம்பவங்களில் ஈடுபடுவோரை கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்படுகிறது.
நத்தம்:
மதுரையில் இருந்து நத்தம் வழியாக துவரங்குறிச்சிக்கு 4 வழிச்சாலை அமைக்கபட்டுள்ளது. இதில் நத்தத்தில் இருந்து துவரங்குறிச்சி செல்லும் நான்குவழிசாலையில் 20 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.
இந்த கேமராக்கள் கடந்த சில நாட்களாக செயல்படவில்லை. இதனால் 4 வழிச்சாலை பகுதியில் நடைபெறும் வாகன விபத்து, திருட்டு சம்பவங்களில் ஈடுபடுவோரை கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்படுகிறது.
இதனால் செயல்படாத கேமராக்களை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கொடைக்கானலில் தொடர் மழை பெய்வதால் குளுமையான கால நிலை நிலவி வருகிறது.
- இன்று வார விடுமுறை என்பதால் பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்கா, பைன் பாரஸ்ட் உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
கொடைக்கானல்:
இயற்கை எழில் கொஞ்சும் அழகும், கண்ணைக் கவரும் மலை முகடுகளும், தலையை முட்டும் மேகக் கூட்டங்களும் இருப்பதால் கொடைக்கானலை மலைகளின் இளவரசி என்று அழைப்பர். வருடம் முழுவதும் இங்கு இதமான சீதோஷ்ணம் நிலவுவதால் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.
தற்போது கொடைக்கானலில் தொடர் மழை பெய்வதால் குளுமையான கால நிலை நிலவி வருகிறது. அவ்வப்போது பெய்யும் சாரல் மழையால் சுற்றுலா பயணிகள் உற்சாகம் அடைந்து வருகின்றனர்.
வெள்ளி நீர் வீழ்ச்சி, வட்டக்கானல் அருவி, பியர் சோழா அருவி போன்ற அருவிகளை கண்டு ரசித்து அருகில் நின்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
இன்று வார விடுமுறை என்பதால் பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்கா, செட்டியார்பூங்கா, கோக்கர்ஸ் வாக், மன்னவனூர், சூழல் சுற்றுலா மையம், பேரிஜம் ஏரி, பசுமை பள்ளத்தாக்கு, தூண்பாறை, பைன் பாரஸ்ட் உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
மேலும் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்து சுற்றுலா பயணிகள் மகிழ்ந்தனர். இதனைத் தொடர்ந்து ஏரிச்சாலையில் குதிரை சவாரி செய்தும், சைக்கிள் சவாரி செய்தும் மகிழ்ச்சியடைந்தனர்.
சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர். இனி வரும் காலங்களில் கூட்டம் அதிகமாக காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- மண் லாரி மோதி மின்கம்பம் சேதமானதை கண்டித்தும் அதிவேகமாக மண் லாரிகள் வருவதை கண்டித்தும் அப்பகுதி மக்கள் கொடைக்கானல் சாலையில் திரண்டு மறியலில் ஈடுபட்டனர்.
- அதிவேகமாக செல்லும் மண் லாரி டிரைவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
பழனி:
பழனி அருகே கொடைக்கானல் சாலையில் ஒத்தக்கடை தோட்ட பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் மண் ஏற்றி வந்த லாரி ஒத்தக்கடை பகுதியில் உள்ள மின்கம்பத்தில் மோதியதில் முற்றிலும் சேதமானது. இதற்கிடையே மின்கம்பம் அருகே சிலர் நின்று கொண்டிருந்ததாக தெரிகிறது. அதிஷ்டவசமாக யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.
இந்நிலையில் மண் லாரி மோதி மின்கம்பம் சேதமானதை கண்டித்தும் அதிவேகமாக மண் லாரிகள் வருவதை கண்டித்தும் அப்பகுதி மக்கள் கொடைக்கானல் சாலையில் திரண்டு மறியலில் ஈடுபட்டனர். இதனால் பழனி-கொடைக்கானல் இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டு நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
தகவலறிந்த பழனி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத்தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
பொதுமக்கள் கூறும்போது, கடந்த சில நாட்களாக கொடைக்கானல் சாலையில் மண் லாரிகள் அதிவேகமாக செல்கிறது.
இதனால் குழந்தைகள், முதியோர்கள் சாலையில் நடந்து செல்லவே அச்சப்படுகின்றனர். எனவே அதிவேகமாக செல்லும் மண் லாரி டிரைவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.






