என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஒத்தக்கடை பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களை படத்தில் காணலாம்.
லாரி மோதி மின்கம்பம் சேதம்: பொதுமக்கள் சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு
- மண் லாரி மோதி மின்கம்பம் சேதமானதை கண்டித்தும் அதிவேகமாக மண் லாரிகள் வருவதை கண்டித்தும் அப்பகுதி மக்கள் கொடைக்கானல் சாலையில் திரண்டு மறியலில் ஈடுபட்டனர்.
- அதிவேகமாக செல்லும் மண் லாரி டிரைவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
பழனி:
பழனி அருகே கொடைக்கானல் சாலையில் ஒத்தக்கடை தோட்ட பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் மண் ஏற்றி வந்த லாரி ஒத்தக்கடை பகுதியில் உள்ள மின்கம்பத்தில் மோதியதில் முற்றிலும் சேதமானது. இதற்கிடையே மின்கம்பம் அருகே சிலர் நின்று கொண்டிருந்ததாக தெரிகிறது. அதிஷ்டவசமாக யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.
இந்நிலையில் மண் லாரி மோதி மின்கம்பம் சேதமானதை கண்டித்தும் அதிவேகமாக மண் லாரிகள் வருவதை கண்டித்தும் அப்பகுதி மக்கள் கொடைக்கானல் சாலையில் திரண்டு மறியலில் ஈடுபட்டனர். இதனால் பழனி-கொடைக்கானல் இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டு நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
தகவலறிந்த பழனி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத்தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
பொதுமக்கள் கூறும்போது, கடந்த சில நாட்களாக கொடைக்கானல் சாலையில் மண் லாரிகள் அதிவேகமாக செல்கிறது.
இதனால் குழந்தைகள், முதியோர்கள் சாலையில் நடந்து செல்லவே அச்சப்படுகின்றனர். எனவே அதிவேகமாக செல்லும் மண் லாரி டிரைவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.






