என் மலர்
உள்ளூர் செய்திகள்

சிறுவன் யுவராஜ்.
நிலக்கோட்டையில் கிணற்றில் தவறி விழுந்து சிறுவன் சாவு
- துரைசாமிபுரத்தை சேர்ந்த 4 வயது சிறுவன் காளியம்மன் கோவில் பகுதியில் விளையாடிக்கொண்டிருந்த யுவராஜ் திடீரென மாயமானார்.
- சிறுவனை மீட்டு நிலக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
நிலக்கோட்டை:
நிலக்கோட்டை அருகே துரைசாமிபுரத்தை சேர்ந்த இளங்கோ மகன் யுவராஜ் (வயது4). காளியம்மன் கோவில் பகுதியில் விளையாடிக்கொண்டிருந்த யுவராஜ் திடீரென மாயமானார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை தேடினர். அப்பகுதியில்இருந்த கிணற்றில் தவறி விழுந்திருக்கலாம் என்ற சந்கேத்தில் தண்ணீரை மோட்டார் மூலம் வெளியேற்றினர்.
அப்போது அங்கு பேச்சுமூச்சின்றி யுவராஜ் இருந்தான். சிறுவனை மீட்டு நிலக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் யுவராஜ் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இது குறித்து நிலக்கோட்டை போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
இன்ஸ்பெக்டர் குருவெங்கட்ராஜ் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் மயில்ராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கிணற்றில் தவறி விழுந்து சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.






