என் மலர்
நீங்கள் தேடியது "பணம் கேட்டு மிரட்டிய 2 ரவுடிகள்"
- அங்குள்ள டீக்கடைக்கு வந்த 2 பேர் தாங்கள் பெரிய ரவுடி எனக்கூறி சின்னையாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
- திண்டுக்கல்லில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம். அதற்கு பணம் வேண்டும் எனக்கூறி கத்தியை காட்டி மிரட்டினார்
வடமதுரை:
வடமதுரை அருகே பெரியகோட்டை பில்லமநாயக்கன் பட்டியை சேர்ந்தவர் சின்னையா (57). கட்டிட காண்ட்ராக்டராக தொழில் செய்து வருகிறார். அதே பகுதியில் உள்ள டீக்கடையில் நின்றிருந்தார். அப்போது அங்கு வந்த தண்டபாணி (43), தீத்தம்பட்டியை சேர்ந்த ஜெயக்குமார் (30) ஆகியோர் தாங்கள் பெரிய ரவுடி எனக்கூறி சின்னையாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மேலும் திண்டுக்கல்லில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம். அதற்கு பணம் வேண்டும் எனக்கூறி கத்தியை காட்டி மிரட்டினார். இதனால் அதிர்ச்சியடைந்த சின்னையா சத்தம் போட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஒன்று கூடினர். இதைப்பார்த்ததும் தண்டபாணி, ஜெயக்குமார் ஆகியோர் தப்பியோட முயன்றனர். ஆனால் பொதுமக்கள் அவர்கள் 2 பேரையும் மடக்கி பிடித்து வடமதுரை போலீசில் ஒப்படைத்தனர்.
சின்னையா அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் 2 பேரையும் கைது செய்து வேடசந்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.






