என் மலர்tooltip icon

    திண்டுக்கல்

    • திருநங்கை மாயா, திருநம்பி கணேஷ் ஆகிய இருவரும் அங்குள்ள விநாயகர் கோவிலில் தாலி கட்டி திருமணம் செய்து கொண்டனர்.
    • தமிழகத்தில் இதுபோன்ற திருமணங்களை பொதுமக்கள் ஏற்றுக்கொள்ள தயங்கி வருகின்றனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் வேடபட்டியை சேர்ந்தவர் மணிகண்டன்(21). இவர் ஆணாக பிறந்து திருநங்கையாக மாறி மாயா என்ற பெயரோடு வாழ்ந்து வந்தார். மதுரை தல்லாகுளம் பகுதியை சேர்ந்தவர் உமாமகேஸ்வரி(24). இவர் பெண்ணாக பிறந்து திருநம்பியாக மாறி கணேஷ் என்ற பெயரில் வாழ்ந்து வந்தார்.

    இவர்கள் 2 பேரும் திருமணம் செய்ய முடிவு செய்தனர். திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவிலில் இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகளிடம் தங்களுக்கு திருமணம் செய்து வைக்கும்படி தெரிவித்தனர். ஆனால் அதிகாரிகளோ, அர்ச்சகர்களோ இந்த திருமணத்தை நடத்தி வைக்க முன்வரவில்லை. இதனைதொடர்ந்து திருநங்கை மாயா, திருநம்பி கணேஷ் ஆகிய இருவரும் அங்குள்ள விநாயகர் கோவிலில் தாலி கட்டி திருமணம் செய்து கொண்டனர்.

    உடன் வந்த திருநங்கைகள் இந்த திருமணத்தை நடத்தி வைத்து அவர்களுக்கு அட்சதை தூவி வாழ்த்துக்களை தெரிவித்தனர். அபிராமி அம்மன் கோவிலில் நடந்த இந்த வித்தியாசமான திருமணத்தை கோவிலுக்கு வந்த பக்தர்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.

    இதுகுறித்து திருமணத்தை நடத்தி வைத்த திருநங்கைகள் தெரிவிக்கையில், தன்பாலின ஜோடிகள் சேர்ந்து வாழ உச்சநீதிமன்றமே அனுமதி வழங்கி உள்ளது. இதேபோல் திருநங்கையும், திருநம்பியும் திருமணம் செய்து கொண்டு வாழும் முறையை கேரள உள்ளிட்ட பிறமாநிலங்களில் பொதுமக்கள் மற்றும் சமூகத்தினர் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

    ஆனால் தமிழகத்தில் இதுபோன்ற திருமணங்களை பொதுமக்கள் ஏற்றுக்கொள்ள தயங்கி வருகின்றனர். சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகள் இருப்பது போல இதுபோன்ற திருமணங்களை ஏற்றுக்கொள்ளும் மனநிலையும் மாற வேண்டும். இவர்களும் மனிதர்கள் என்பதை உணர்ந்து இந்த தம்பதிகளுக்கு சமூகம் அங்கீகாரம் வழங்க வேண்டும்.

    அப்போதுதான் தாழ்வுமனப்பான்மையால் தற்கொலை போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்கும் என்றனர்.

    • மாடுகள் அவிழ்த்துவி:டுவதால் சாலையோரம் மற்றும் ரெயில் தண்டவாளங்களில் சிதறி கிடக்கும் உணவுகளை உண்பதற்காக சுற்றி திரிகின்றன.
    • கால்நடைகள் தண்டவாள த்தைக் கடக்கும் சமயத்திலும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் ரெயில் நிலையம் அருகே அனுமந்தநகர், மேற்கு மரியநாதபுரம், ரவுண்ட் ரோடு புதூர் ஆகிய பகுதிகளில் உள்ளவர்கள் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் மாடுகளை தொழுவத்தில் அடைக்காமல் அவிழ்த்து விடுகின்றனர்.

    அந்த மாடுகள் சாலையோரம் மற்றும் ரெயில் தண்டவாளங்களில் சிதறி கிடக்கும் உணவுகளை உண்பதற்காக சுற்றி திரிகின்றன. மேலும் ரெயில் நிலையம் அருகே உள்ள ரெயில்வே கூட்டுறவு பண்டகசாலையின் முன்பாக கால்நடைகள் கூட்டம் கூட்டமாக போக்கு வரத்துக்கு இடையூறாக திரிகிறது.

    இந்த நிலையில் அங்கு சிதறி கிடக்கும் உணவுகளை கால்நடைகள் உண்ணும் போது பிளாஸ்டிக் பைகளை யும் சேர்த்து உண்பதால் கால்நடைகளுக்கு உடல் சம்பந்தமான உபாதைகள் ஏற்படுகிறது. மேலும் கால்நடைகள் தண்டவாள த்தைக் கடக்கும் சமயத்திலும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

    எனவே சாலைகள் மற்றும் ரெயில் தண்டவாள ங்களில் கால்நடைகளை சுற்றி திரிய விடும் மாட்டின் உரிமை யாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து, கால்நடைகளை பறிமுதல் செய்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சாகச சுற்றுலா மையம் அமைக்கப்பட்டதால் தங்களது விவசாயம் பாதிக்கப்படுவதாகவும், இதனை தடுக்க வேண்டும் எனவும் விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
    • 50க்கும் மேற்பட்ட விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். அவர்கள் சாகச சுற்றுலா மையம் அமைக்க தங்கள் எதிர்ப்பை முழுமையாக பதிவு செய்தனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் சர்வதேச சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. இங்கு மேலும் சுற்றுலா வளர்ச்சி ஏற்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியான மன்னவனூரில் சாகச சுற்றுலா மையம் அமைக்கப்பட்டது. இதன் மூலம் அந்தரத்தில் கயிறில் செல்லும் சாகச விளை யாட்டு அமைக்கப்பட்டது.

    இது சுற்றுலா பயணிகளிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. இதற்காக விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டது. இந்நிலையில் சாகச சுற்றுலா மையம் அமைக்கப்பட்டதால் தங்களது விவசாயம் பாதிக்கப்படுவதாகவும், இதனை தடுக்க வேண்டும் எனவும் விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

    வட்டாட்சியர், கோட்டா ட்சியர் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் எவ்வித உடன்பாடும் எட்ட ப்படவில்லை. இதனைய டுத்து இன்று மாவட்ட கலெக்டர் தலைமை யில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

    அதன்படி மன்னவனூர், கவுஞ்சி பகுதிகளைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். அவர்கள் சாகச சுற்றுலா மையம் அமைக்க தங்கள் எதிர்ப்பை முழுமையாக பதிவு செய்தனர்.

    இதனால் கூட்டத்தில் எந்தவித முடிவும் எட்ட ப்படாமல் அதிகாரிகள் சென்றனர். இதனால் கூட்டத்தில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

    • ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம் ஆகும்.
    • திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபடுவர்.

    தமிழ் மாதங்களில் ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம் ஆகும். இந்த மாத செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் பழனி முருகன் கோவிலின் உபகோவிலான பெரியநாயகி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தையொட்டி லட்சார்ச்சனை விழா நடைபெற்று வருகிறது. அப்போது திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபடுவர்.

    இந்த ஆண்டுக்கான லட்சார்ச்சனை விழா, ஆடி மாதப்பிறப்பையொட்டி வருகிற 17-ந்தேதி (திங்கட்கிழமை) தொடங்குகிறது. மேலும் வெள்ளிக்கிழமை தோறும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், வழிபாடு நடைபெறுகிறது.

    விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.

    • வெங்காயத்தின் விலை படிப்படியாக உயர்ந்து இன்று உச்சகட்ட விலையாக தரமான சின்ன வெங்காயம் ஒரு கிலோ ரூ.150க்கு விற்பனையானது.
    • தக்காளி, வெங்காயத்தைப் போன்றே காய்கறிகளின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது ஏழை மற்றும் நடுத்தர மக்களை வெகுவாக பாதித்துள்ளது.

    ஒட்டன்சத்திரம்:

    திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காந்தி காய்கறி மார்க்கெட் தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற மார்க்கெட்டாகும். இந்த மார்கெட்டிற்கு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஒட்டன்சத்திரத்தைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் இருந்தும் வெளிமாநிலங்களில் இருந்தும் காய்கறிகள் இங்கு கொண்டு வரப்படுகிறது. இங்கிருந்து கேரளாவின் அனைத்து பகுதிகளுக்கும், தமிழகத்தின் பல்வேறு நகரங்களுக்கும் சில்லறை விற்பனைக்காகவும் மொத்த விற்பனைக்காகவும் ஏற்றுமதியாவது வழக்கம்.

    இதனால் தினந்தோறும் இந்த மார்க்கெட்டில் சுமார் ரூ.5 முதல் ரூ.7 கோடி வரை வர்த்தகம் நடைபெறும். இந்நிலையில் கடந்த 10 நாட்களாக மார்க்கெட்டுக்கு சின்ன வெங்காயம் வரத்து குறைந்து போன காரணத்தாலும், அதிகப்படியாக வெயிலின் தாக்கத்தாலும், ஒட்டன்சத்திரம் சுற்றியுள்ள பகுதிகளில் சின்ன வெங்காயம் வரத்து இல்லாமல் போனது.

    இதனால் வெங்காயத்தின் விலை படிப்படியாக உயர்ந்து இன்று உச்சகட்ட விலையாக தரமான சின்ன வெங்காயம் ஒரு கிலோ ரூ.150க்கு விற்பனையானது. தினந்தோறும் ஒவ்வொரு கடைகளுக்கும் 50 டன் வரக்கூடிய சின்ன வெங்காயம் தற்போது ஒரு டன் அளவு கூட வராமல் குறைந்துள்ளது. இதுவே விலை உயர்வுக்கு காரணமாக உள்ளது என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இந்த வெங்காயம் இங்கிருந்து வண்டி வாடகை, ஏற்று கூலி மற்றும் இதர செலவுகள் என சில்லறை விலையில் ரூ.200ஐ தாண்டி விற்பனையாகிறது. இதனால் அன்றாட தேவைக்கு வாங்கி பயன்படுத்தும் பொதுமக்கள் பாதிப்படையக் கூடிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

    ஏற்கனவே தக்காளி விலை உயர்வால் அதனை மொத்த விலைக்கு கொள்முதல் செய்து அரசு தற்போது ரேஷன் கடைகளில் ரூ.60க்கு விற்பனை செய்து வருகிறது. அதேபோல் சின்ன வெங்காயத்தையும் கொள்முதல் செய்து குறைந்த விலைக்கு விற்பனை செய்ய வேண்டும் என பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது. இந்த விலை உயர்வு இன்னும் ஒரு மாத காலத்திற்கு இருக்கும் என விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

    தக்காளி, வெங்காயத்தைப் போன்றே காய்கறிகளின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது ஏழை மற்றும் நடுத்தர மக்களை வெகுவாக பாதித்துள்ளது.

    • 2 முறை தற்கொலைக்கு முயன்ற நிலையில் வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • செல்போனில் நண்பரிடம் பேசிவிட்டு தற்கொலை செய்துள்ளார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டம் கசவனம்பட்டியைச் சேர்ந்த சுப்பையா மகன் சந்திரசேகர் (வயது 23). டைல்ஸ் பதிக்கும் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நள்ளிரவில் வீட்டில் சேலையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதனை பார்த்த உறவினர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் சந்திரசேகர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து கன்னிவாடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தற்கொலை செய்து கொண்ட சந்திரசேகர் ஏற்கனவே 2 முறை தற்கொலைக்கு முயன்றுள்ளார். இவரை உறவினர்கள் காப்பாற்றி உள்ளனர். இந்நிலையில் நேற்று நள்ளிரவு 1 மணிக்கு செல்போனில் ஒருவரிடம் பேசிவிட்டு, தற்கொலை செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • 100 நாள் வேலை வழங்க மறுத்ததால் ஆத்திரமடைந்த பொது மக்கள் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு திரண்டு முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.
    • இது குறித்து உரிய விசாரணை செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உறுதி அளித்ததால் மக்கள் கலைந்து சென்றனர்.

    நிலக்கோட்டை:

    திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள நக்கலூத்து ஊராட்சி அக்ரஹார ப்பட்டியைச் சேர்ந்த கிராம மக்கள் வழக்கம்போல் 100 நாள் வேலைக்கு சென்றனர். அப்போது அங்கு பணித்தள பொறு ப்பாளர்கள் சிலருக்கு வேலை இல்லை என்றும், உங்களுக்கு ஏற்கனவே உள்ள வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள கணக்குகளில் உங்கள் பெயர் இல்லை என்று கூறி வேலை வழங்க மறுத்துவிட்டனர்.

    இதனால் ஆத்திரமடைந்த பொது மக்கள் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவ லகம் முன்பு திரண்டு முற்று கைப் போராட்டம் நடத்தி னர். பின்னர் அலுவலகத்தி ற்குள் நுழைந்து தர்ணா போராட்டம் நடத்தினர். அப்போது வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) விஜய சந்திரிகா போரா ட்டம் நடத்திய கிராம மக்களை அழைத்து தற்போது பல்வேறு கணக்குகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    அதில் 100 நாள் வேலை சம்பந்தமாக எந்தவிதமான கணக்கும் எடுக்கப்பட வில்லை. இது குறித்து உரிய விசாரணை செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ள ப்படும் என்று உறுதி அளித்தார். அதனைத் தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    • 60 அடி ஆழமுள்ள கிணற்றில் பார்த்தபோது அதில் பெண் உள்ளே விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தார்.
    • தீயணைப்புத்துறையினர் விரைந்துவந்து பெண்ணை மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

    கொடைரோடு:

    திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூர் அருகே உள்ள சி.புதூர் கிராமத்தைச் சேர்ந்த விஜயன் மனைவி ராணி (வயது 37). இவர் சோலைக்குட்டம் பகுதியில் உள்ள காளவாசலில் வேலை பார்த்து வந்தார். இன்று காலை வீட்டை விட்டு வெளியே சென்றவர் மாயமானார். உடன் வேலை பார்ப்பவர்கள் அக்கம் பக்கம் தேடிப்பார்த்தனர்.

    அங்குள்ள 60 அடி ஆழமுள்ள கிணற்றில் பார்த்தபோது அதில் ராணி உள்ளே விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தார். அந்த கிணற்றில் குறைந்த அளவு மட்டுமே தண்ணீர் இருந்து சேறும் சகதியுமாக காணப்பட்டது.

    உடனடியாக இது குறித்து நிலக்கோட்டை தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நிலைய அலுவலர் விவேகானந்தன் தலைமையிலான தீயணைப்பு துறையினர் அங்கு விரைந்து வந்தனர்.

    கிணற்றில் உயிருக்கு போராடிக் கொண்டு இருந்த பெண்ணை மீட்டு திண்டு க்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து அம்மையநாயக்கனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கொடைக்கானல் அருகே கோம்பை பகுதியில் தற்காலிகமாக அமைக்கப்ப ட்ட தரைப்பாலம் அடித்து செல்லப்பட்டது.
    • நபார்டு வங்கி மூலம் ரூ.85 லட்சம் மதிப்பில் சிமெண்ட் பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் மற்றும் மலை கிராமங்களில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடர்ந்து கன மழை பெய்தது. இதனால் நகர் பகுதியில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மேலும் கொடைக்கானல் அருகே கோம்பை பகுதியில் தற்காலிகமாக அமைக்கப்ப ட்ட தரைப்பாலம் அடித்து செல்லப்பட்டது.

    கூட்டாற்றில் அதிக தண்ணீர் வரத்து இருந்ததால் ஆற்றை கடக்க முடியாமல் பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கினர்.மேலும் விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை கொண்டு செல்ல முடியவில்லை. மாணவர்களும் பள்ளிக்கு செல்லவில்லை. இதனால் தரைப்பாலத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்ைக விடுத்தனர்.

    இதனைத் தொடர்ந்து வட்டார வளர்ச்சி அலுவலர் ஜஸ்டின், தொழில் நுட்ப உதவியாளர் விஜய் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். மேலும் பொதுமக்கள் உதவியுடன் தரைப்பாலத்தை சீரமை க்கும் பணி நடைபெற்றது. மணல் மூட்டைகள் அடுக்கப்பட்டு கூட்டாறு பகுதியில் தரை ப்பாலத்தை சீரமைத்தனர். ஆற்றில் சிமெண்ட் பாலம் அமைத்து தருவதே நிரந்தர தீர்வாக இருக்கும் என கோம்பை பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    கொடைக்கானலில் பெய்த பலத்த மழையால் கூட்டாறு தரைப்பாலம் சேதம் அடைந்தது. தற்போது மணல் மூட்டைகளை வைத்து தற்காலிகமாக சீரமைக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் நபார்டு வங்கி மூலம் ரூ.85 லட்சம் மதிப்பில் சிமெண்ட் பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • வருகிற 17-ந் தேதி மற்றும் ஆகஸ்ட்டு 16-ந் தேதி ஆடி அமாவாசை ஆகிய நாட்களில் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெறும்.
    • தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் திண்டுக்கல் மூலம் சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    திண்டுக்கல்:

    தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வருகிற 17-ந் தேதி மற்றும் ஆகஸ்ட்டு 16-ந் தேதி ஆடி அமாவாசை ஆகிய நாட்களில் நடைபெற உள்ள நிகழ்ச்சிகளை முன்னிட்டு முக்கிய கோவில்களான அழகர்கோவில், அணைப்பட்டி, அனுமார்கோவில், ஆத்தூர் சடையாண்டி கோவில், தெத்துப்பட்டி ராஜகாளியம்மன் கோவில், தேனி உப்புத்துறை மாளிகைப்பாறை கருப்பசாமி கோவில்,

    ராஜபாளையம் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் மற்றும் குச்சனூர் ஆகிய கோவில்களுக்கு திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், வத்தலக்குண்டு, நிலக்கோட்டை, தேனி, சின்னமனூர், கம்பம், தேவாரம்,

    போடி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்கள் சாமி தரிசனம் செய்ய தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் திண்டுக்கல் மூலம் சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் முக்கிய கோவில் தலங்களில் பக்தர்களுக்கு உதவவும், வழிகாட்டவும் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.

    • பிறவியிலேயே 2 கண்கள் பார்வையிழந்த எனக்கு, உடல்நிலை பாதிக்கப்பட்ட மனைவியும் 2 பெண் குழந்தைகளும் உள்ளனர்.
    • அரசு எனக்கு சிறிதாகப் பெட்டிக்கடை அல்லது மளிகை கடை வைப்பதற்கு வங்கிக் கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கண்ணீர் மல்க கூறினார்.

    செம்பட்டி:

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அடுத்த சிந்துபட்டி அருகே பாண்டி யன் நகரை சேர்ந்தவர் பால்சாமி (வயது49). இவருக்கு பிறவியிலே 2 கண்களும் பாதிக்கப்பட்டு பார்வை இழந்தார். இவருக்கு பெருமாயி (45) என்ற மனைவியும், அன்னலட்சுமி (22), முத்து பெருமாயி (20) ஆகிய 2 மகள்களும் உள்ளனர். பார்வை இழந்த இவர் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக பேனா, பென்சில் விற்பனை செய்து வந்தார்.

    தற்போது சிறிய அளவிலான எடை மெஷின் வைத்துக்கொண்டு, யூனியன் அலுவலகம், தாலுகா அலுவலகம், போலீஸ் நிலையம், கல்லூரிகள் பள்ளிக்கூடங்கள், அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு சென்று பிழைப்பு நடத்தி வருகிறார். மிகவும் வறுமையில் வாடி வரும் இவரது மனைவி பெருமாயும் காக்கா வலிப்பு நோயால் அவதிப்பட்டு வருகிறார்.

    மூத்த மகள் அன்னலட்சுமி நர்சிங் படித்து வருகிறார். இளைய மகள் முத்து பெருமாயி டெய்லரிங் பயிற்சி பெற்று வருகிறார். இவருக்கு தமிழக அரசு மாதம் ரூ.1500 உதவித்தொகை வழங்கி வருகிறது. மேலும் இவர் இலவச பஸ் பாஸ் பயன்படுத்தி வெளி ஊர்களுக்கு சென்று, எடை பார்க்கும் வருமானம் ரூ.100 முதல் ரூ.150 வரை சம்பாதித்து குடும்பத்தை கஷ்டப்பட்டு நடத்தி வருவதாக கூறுகிறார்.

    செம்பட்டியில் உள்ள, ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு வந்த பால்சாமி கூறுகையில், பிறவிலே 2 கண்கள் பார்வையிழந்த எனக்கு, உடல்நிலை பாதிக்கப்பட்ட மனைவியும் 2 பெண் குழந்தைகளும் உள்ளனர்.

    தமிழ்நாடு அரசு வழங்கும் மாதம் ரூ.1500 மற்றும் தினமும் நான் சம்பாதிக்கும் ரூ.100 முதல் ரூ.150 வைத்து குடும்பத்தை நடத்த முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது. தமிழக அரசு எனக்கு சிறிதாகப் பெட்டிக்கடை அல்லது மளிகை கடை வைப்பதற்கு வங்கிக் கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கண்ணீர் மல்க கூறினார்.

    • தமிழகத்தில் பருத்தியை கொள்முதல் செய்ய மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • மோடி, அமித்ஷா பின்புலத்தில் தமிழக கவர்னர் ரவி செயல்பட்டு வருகிறார்.

    திண்டுக்கல்:

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் இன்று திண்டுக்கல் வந்தார். அப்போது நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

    தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலையின் நடைபயணம் தமிழகத்தில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது. மகளிர் உரிமை தொகை வழங்குவதில் அறிவிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். ஏழை, எளிய, நடுத்தர மக்கள் அனைவருக்கும் உதவித்தொகை முழுமையாக கிடைக்க வேண்டும். அதன்படி பயனாளர்கள் தேர்வில் கவனம் செலுத்த வேண்டும். சேலத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் பெரியசாமி சமூக விரோதிகளால் தாக்கப்பட்டது வன்மையாக கண்டிக்கத்தக்கது. சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தமிழகத்தில் பருத்தியை கொள்முதல் செய்ய மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் இதுவரை மத்திய அரசிடம் இருந்து எந்த பதிலும் கிடையாது. ஆகவே பருத்தி விவசாயிகளை காக்க தமிழக அரசு பருத்தியை கொள்முதல் செய்ய நடவடிக்கை வேண்டும்.

    மோடி, அமித்ஷா பின்புலத்தில் தமிழக கவர்னர் ரவி செயல்பட்டு வருகிறார்.

    தமிழகத்தில் தக்காளி விலை உயர்வுக்கு கடந்த சாகுபடியின்போது போதிய விலை கிடைக்காததால் தக்காளி சாகுபடி குறைந்தது. வரத்து குறைவால் தக்காளி விலை உயர்ந்துள்ளது. தமிழக அரசு நேரடியாக தலையிட்டு தக்காளியை கொள்முதல் செய்து வியாபாரம் செய்தால் மட்டுமே விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைக்கும். மேலும் பொதுமக்களுக்கும், சரியான விலையில் தக்காளி கிடைக்கும். அப்போது தான் சம நிலை ஏற்படும். ஆகவே விவசாயிகளிடம் இருந்து அரசு கொள்முதல் செய்ய வேண்டும் என தெரிவித்தார்.

    ×