என் மலர்
நீங்கள் தேடியது "damaged footbridge"
- கொடைக்கானல் அருகே கோம்பை பகுதியில் தற்காலிகமாக அமைக்கப்ப ட்ட தரைப்பாலம் அடித்து செல்லப்பட்டது.
- நபார்டு வங்கி மூலம் ரூ.85 லட்சம் மதிப்பில் சிமெண்ட் பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
கொடைக்கானல்:
கொடைக்கானல் மற்றும் மலை கிராமங்களில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடர்ந்து கன மழை பெய்தது. இதனால் நகர் பகுதியில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மேலும் கொடைக்கானல் அருகே கோம்பை பகுதியில் தற்காலிகமாக அமைக்கப்ப ட்ட தரைப்பாலம் அடித்து செல்லப்பட்டது.
கூட்டாற்றில் அதிக தண்ணீர் வரத்து இருந்ததால் ஆற்றை கடக்க முடியாமல் பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கினர்.மேலும் விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை கொண்டு செல்ல முடியவில்லை. மாணவர்களும் பள்ளிக்கு செல்லவில்லை. இதனால் தரைப்பாலத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்ைக விடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து வட்டார வளர்ச்சி அலுவலர் ஜஸ்டின், தொழில் நுட்ப உதவியாளர் விஜய் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். மேலும் பொதுமக்கள் உதவியுடன் தரைப்பாலத்தை சீரமை க்கும் பணி நடைபெற்றது. மணல் மூட்டைகள் அடுக்கப்பட்டு கூட்டாறு பகுதியில் தரை ப்பாலத்தை சீரமைத்தனர். ஆற்றில் சிமெண்ட் பாலம் அமைத்து தருவதே நிரந்தர தீர்வாக இருக்கும் என கோம்பை பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
கொடைக்கானலில் பெய்த பலத்த மழையால் கூட்டாறு தரைப்பாலம் சேதம் அடைந்தது. தற்போது மணல் மூட்டைகளை வைத்து தற்காலிகமாக சீரமைக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் நபார்டு வங்கி மூலம் ரூ.85 லட்சம் மதிப்பில் சிமெண்ட் பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.






