என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தரைப்பாலம் சீரமைப்பு"

    • கொடைக்கானல் அருகே கோம்பை பகுதியில் தற்காலிகமாக அமைக்கப்ப ட்ட தரைப்பாலம் அடித்து செல்லப்பட்டது.
    • நபார்டு வங்கி மூலம் ரூ.85 லட்சம் மதிப்பில் சிமெண்ட் பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் மற்றும் மலை கிராமங்களில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடர்ந்து கன மழை பெய்தது. இதனால் நகர் பகுதியில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மேலும் கொடைக்கானல் அருகே கோம்பை பகுதியில் தற்காலிகமாக அமைக்கப்ப ட்ட தரைப்பாலம் அடித்து செல்லப்பட்டது.

    கூட்டாற்றில் அதிக தண்ணீர் வரத்து இருந்ததால் ஆற்றை கடக்க முடியாமல் பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கினர்.மேலும் விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை கொண்டு செல்ல முடியவில்லை. மாணவர்களும் பள்ளிக்கு செல்லவில்லை. இதனால் தரைப்பாலத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்ைக விடுத்தனர்.

    இதனைத் தொடர்ந்து வட்டார வளர்ச்சி அலுவலர் ஜஸ்டின், தொழில் நுட்ப உதவியாளர் விஜய் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். மேலும் பொதுமக்கள் உதவியுடன் தரைப்பாலத்தை சீரமை க்கும் பணி நடைபெற்றது. மணல் மூட்டைகள் அடுக்கப்பட்டு கூட்டாறு பகுதியில் தரை ப்பாலத்தை சீரமைத்தனர். ஆற்றில் சிமெண்ட் பாலம் அமைத்து தருவதே நிரந்தர தீர்வாக இருக்கும் என கோம்பை பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    கொடைக்கானலில் பெய்த பலத்த மழையால் கூட்டாறு தரைப்பாலம் சேதம் அடைந்தது. தற்போது மணல் மூட்டைகளை வைத்து தற்காலிகமாக சீரமைக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் நபார்டு வங்கி மூலம் ரூ.85 லட்சம் மதிப்பில் சிமெண்ட் பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பெய்த கன மழையின் காரணமாக பாலாற்றில் வரலாறு காணாத அளவுக்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
    • நிரந்தரமாக சீரமைத்து சாலை அமைத்து தர வேண்டும் என கிராம மக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர்.

    வாலாஜாபாத்:

    காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் பகுதி வழியாக செல்லும் பாலாற்றின் குறுக்கே வாலாஜாபாத்தையும் அவளூர் கிராமத்தையும் இணைக்கும் வகையில் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு தரைப்பாலம் உள்ளது.

    இந்த தரைப்பாலத்தின் வழியாக அவளூர், அங்கம்பாக்கம், கண்ணடியன் குடிசை, கணபதிபுரம், மல்லிகாபுரம், தம்மனூர், காம்மராசபுரம், காவாந்தண்டலம், நெய்யாடு பாக்கம், வள்ளி மேடு, இளையனார் வேலூர், உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் வாலாஜாபாத்திற்க்கு வந்து காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை, ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அன்றாட பணிகளுக்கு சென்று வருகின்றனர்.

    கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பெய்த கன மழையின் காரணமாக பாலாற்றில் வரலாறு காணாத அளவுக்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதை தொடர்ந்து வாலாஜாபாத்- அவளூர் தரைப்பாலம் சேதமடைந்தது.

    பின்னர் இந்த தரைப்பாலம் தற்காலிகமாக சீரமைக்கப்பட்டு போக்குவரத்து நடைபெற்று வந்த நிலையில், நிரந்தரமாக சீரமைத்து சாலை அமைத்து தர வேண்டும் என கிராம மக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர்.

    கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று ரூ.2 கோடியே 60 லட்சம் செலவில் வாலாஜாபாத் - அவளூர் தரைப்பாலத்தை சீரமைத்து தர நெடுஞ்சாலை துறைக்கு தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.

    அதன்படி கடந்த ஜூன் மாதம் முதல் பாலாற்றின் குறுக்கே மாற்றுப்பாதை அமைத்து வாகனங்களை திருப்பி விட்டுவிட்டு, சேதம் அடைந்த வாலாஜாபாத்-அவளூர் தரைப்பாலம் சீரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டது.

    சேதமடைந்த தரைப்பாலத்தின் பகுதிகளில் மழை வெள்ளம் செல்வதற்கு வசதியாக மிகப்பெரிய குழாய்கள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டு அதன் மீது சாலை அமைக்க வசதியாக கான்கிரீட் தடுப்புகள் அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. வடகிழக்கு பருவ மழைக்கு முன்பே தரைப்பாலம் சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க நெடுஞ்சாலை துறையினர் போர்க்கால அடிப்படையில் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    • கலெக்டர் குமாரவேல் பாண்டியன் ஆய்வு
    • ஆக்கிரமிப்பு இடம் குறித்தும் கேட்டறிந்தார்

    குடியாத்தம்:

    குடியாத்தம் நகரின் மத்தியில் உள்ள உழவர் சந்தை அருகே அரசுக்கு சொந்தமான இடத்தில் பல ஆண்டுகளாக இருக்கும் தனிநபர் ஆக்கிரமிப்பு குறித்து கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வருவாய்த்துறை வணிகவரித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

    மேலும் அந்த ஆக்கிரமிப்பு இடம் குறித்தும் தற்போதைய நிலை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

    தொடர்ந்து உழவர் சந்தைக்குள் சென்று பார்வையிட்டார் மேலும் உழவர் சந்தைக்கு வெளியே காய்கறி கடைகள் அமைந்துள்ள பகுதியில் சேர்ந்துள்ள குப்பைகளை தினந்தோறும் அகற்றுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

    நகரி நடுவே கவுண்டன்யா மகாநதி ஆறு செல்கிறது இதில் கெங்கையம்மன் கோவில் அருகே தரைப்பாலம் உள்ளது. இந்த ஆற்றில் கடந்த ஆண்டு ஏற்பட்ட பெருத்த வெள்ளப்பெருக்கின் போது கெங்கையம்மன் கோவில் தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்டது. போக்குவரத்துக்கு மிகவும் பேரு உதவியாக இருக்கும் இந்த தரைப்பாலம் வெள்ளத்தின் போது அடித்துச் செல்லப்பட்டதால் தற்காலிகமாக தரைப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

    போக்குவரத்து தடை

    ஆற்றில் வெள்ளம் செல்லும் போது தரைப்பாலத்தின் மேலே வெள்ளம் செல்வதால் போக்குவரத்து துண்டிக்கப்படுகிறது. தற்போது மழை காலம் என்பதாலும் ஆற்றில் வெள்ளம் செல்லும் போது போக்குவரத்து தடை ஏற்படாமல் இருக்க ரூ. 5 லட்சத்தில் தற்காலிகமாக கெங்கையம்மன் கோவில் தரைப்பாலத்தில் 7 இடங்களில் ராட்சத பைப்புகள் வைத்து ஆற்றில் வெள்ளம் அதில் செல்லும் வகையில் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    கலெக்டர் ஆய்வு

    அந்த தரைப்பாலத்தில் நடைபெறும் பணிகளை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

    இந்த ஆய்வின்போது நகர மன்ற தலைவர் எஸ்.சவுந்தரராசன், நகராட்சி ஆணையாளர் ஏ.திருநாவுக்கரசு, நீர்வள ஆதாரத்துறை உதவி செயற்பொறியாளர் கோபி, நகர நகராட்சி பொறியாளர் சிசில்தாமஸ், நகர மன்ற உறுப்பினர்கள் ஜி எஸ்.அரசு, ஆட்டோமோகன், என்.கோவிந்தராஜ், சி.என்பாபு, அரசு மருத்துவமனை ஆலோசனைக் குழு உறுப்பினர் எம்.எஸ்.அமர்நாத் உள்பட அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.

    ×